ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 ![]() | 帮助 |
|
|
உலக வலு தூக்கும் போட்டி: தஞ்சாவூர் பிஎஸ்என்எல் ஊழியர் சிறப்பிடம்தில்லியில் நவம்பர் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்ற 2009-ம் ஆண்டிற்கான
39-வது உலக வலு தூக்கும் போட்டியில் தஞ்சாவூர் பிஎஸ்என்எல் விளையாட்டுப் பிரிவு உதவியாளரும்,
மன்னார்குடி பிஎஸ்என்எல் ஊழியருமான எஸ். விமல்ராஜா, 60 கிலோ எடை பிரிவில் ஸ்குவாட்
முறையில் நடைபெற்ற போட்டியில் 260 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாம்
இடத்தையும், ஒட்டுமொத்த தரவரிசையில் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளார். அகில உலக வலு தூக்கும்
சம்மேளனம், இவருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது
தஞ்சை, நாகையில் மீன்பிடி சீசன் 2,500 படகுகளில் கடலுக்கு சென்றனர்தஞ்சை, நாகையில் மீன்பிடி சீசன் 2,500 படகுகளில் கடலுக்கு சென்றனர்
தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், ஏரிப்புரக்கரை, கீழத்தோட்டம், கொள்-ளுக்-காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், மனோரா-காலனி, வள்ளவன் பட்-டினம், சோமநாதபட்டி-னம் உட்பட 37 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. 2,000 நாட்டுப்படகுகளும், 201 விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடு-பட்டுள்ளன. கடந்த வாரம் மீன் சீசன் தொடங்-கியது. வரும் பிப்ரவரி மாதம் வரை சீசன் நீடிக்கும். சீசன் தொடக்கத்திலேயே மீன்-கள், இறால்கள் அதிக-ளவில் காணப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி-யடைந்துள்ளனர். தற்-போது நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து பைபர் படகு-களும், விசைப்படகுகளும் தஞ்சை கடற்பகுதிக்கு வந்துள்ளன. இதுகுறித்து மீனவர் முத்து பொதியன் கூறு-கையில், தஞ்சை கடற்-பகுதி-யில் மீன் சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனில் வாளை-மீன், சாளை மீன், வாவல் மீன், கற்றாலை மீன், திருக்கை மீன் மற்றும் இறால்கள் அதிகளவில் கிடைக்கும் என்றார். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன். தூத்துக்குடி, ராமேஸ்-வரம், கன்னியாக்குமரி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்-கான மீனவர்கள் தங்கி-யிருந்து மீன்பிடிப்பதற்-காக நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்-கரை வந்துள்ளனர். கடந்த 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல-வில்லை. நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்-கியதால் கோடியக்கரை-யில் இருந்து 450 மீன-வர்கள், ஆறுகாட்டுத் துறையில் இருந்து 180 மீனவர்கள் விசைப்பட-கில் கடலுக்கு சென்றனர். கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 27-ம் தேதி முதல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. மாநிலத்திலேயே மிக அதிக பட்சமாக சீர்காழியில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதர இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பெய்துள்ள மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): பொன்னேரி 40, மயிலாடுதுறை 30, தாம்பரம், உத்திரமேரூர், பரங்கிப்பேட்டை, பாம்பன், ராமநாதபுரம், ராமேசுவரம், குன்னூர், சூளூர்பேட்டை (ஆந்திரம்) 20, மதுராந்தகம், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, தரங்கம்பாடி, நாங்குனேரி, சாத்தான்குளம், வந்தவாசி, ஆரணி, போளூர், வாழப்பாடி, திருவாடானை 10.சென்னையில்...: சென்னையில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. நகரில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும். பலத்த மழை எச்சரிக்கை: வங்கக் கடலில் தமிழகம்- இலங்கை இடையே தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுத்து வருகிறது. இதனால், அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும். தமிழகத்தின் உட்பகுதி மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும். அதிரை தாலுகா உதயமாகவேண்டும்.Adirampattinam New taluk -----இந்து ஆங்கில நாளிதழில் வெளியானது
Adirampattinam is the largest and fast-developing Town Panchayat in Thanjavur district. Formation of a new taluk with Adirampattnam as its headquarters is one of the long-awaiting demands of the people residing in and around the town. It may be done by bifurcating Pattukkotai Taluk. Some areas of Sethubavachatram Panchayat Union of Peravurani Taluk might also be joined to the new taluk. This will help to cater to the growing needs of the people and eventually get more amenities. Hence, the administrative authorities of the State government may consider creating a new taluk of Adirampattinam. Pro.A. Haja Abdul Khader KMC (CS) Adirampattinam. முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இருஇளைஞர்களும் இறந்தார்கள்19-10-2009 anduru maalai சுமார் 6.00 மணியளவில் முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் அதிரை- முத்துப்பேட்டை ரோட்டில் பல்சர் என்னும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இருஇளைஞர்களும் இறந்தார்கள். முத்துப்பேட்டை குண்டான்குளத்தெரு புரோஸ்கான்(28),ஆஸாத்நகர் மரைக்கான்(22). இருசக்கர வாகனத்தில் சென்றால் நமது இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.அன்பான நண்பர்களே..எனது வாசகர்களே...நமது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள்,பிள்ளைகள்,நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தயவுசெய்து மெதுவாக செல்ல சொல்லி அன்புடன் எச்சரிக்கை செய்யுங்கள்.ஏனென்றால் இன்றைய விபத்தில் ஒரு சகோதரரின் உடல் ஊறுப்புகள் தனித்தனியாக அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தது .
navas Kahan <navas_nsn@yahoo.co.in தஞ்சாவூர் மாவட்டத்தில் 31 ஆயிரம் ரேஷன் கார்டுகள் போலியானவைதஞ்சாவூர் கலெக்டர் சண்முகம் கூறியதாவது:இம்மாவட்டத்தில் ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 484 ரேஷன் கார்டுகள், ஆயிரத்து 79 ரேஷன் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் வரை நடந்த ரேஷன் கார்டு சரி பார்ப்பு பணியில் 31 ஆயிரம் ரேஷன் கார்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டு, அவற்றுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கார்டுகளில் எவரேனும் வெளியூர் சென்று இருத்தல், சோதனைக்கு வந்தபோது வீட்டில் ஆட்கள் இல்லாமல் இருத்தல் போன்ற நியாயமான காரணங்களால் ரேஷன் கார்டு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். ரேஷன்கார்டில் உள்ள முகவரியில் அவர்கள் குடியிருப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்து அந்த கார்டுகளுக்கு மீண்டும் பொருட்கள் வழங்க அனுமதி வழங்குவார்கள்.மற்ற போலி கார்டுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். இப்பணி இன்னும் ஓரிரு நாளில் 100 சதவீதம் நிறைவடையும். அதன்பின், மாவட்ட அளவில் எவ்வளவு போலி ரேஷன் கார்டுகள் உள்ளன என்ற விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார். அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு எம்.எல்.ஏ.ரெங்கராஜன் தகவல்.அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு எம்.எல்.ஏ.ரெங்கராஜன் தகவல்.
காந்தி நகர் கடற்கரை சாலைக்கு மின்விளக்கு அமைக்க 2 லட்சம்,மாரியம்மன் கோயில் தெரு 5 வது வார்டில் பொது வினியோகம் கட்டிடம் அமைக்க 2.80 லட்சம்,மேலத்தெரு சவுக்கு கொல்லை பகுதியில் தார்சாலை அமைக்க 1.75 லட்சம்,ஹாஜா நகர் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க 2 லட்ச ரூபாயும்,புதுத்தெரு வடபுறம் தார்சாலை அமைக்க 1.50 லட்சம் மொத்தம் 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ,என்.ஆர்.ரெங்கராஜன் ஒதுக்கீடு செய்துள்ளார்.எம்.எல்.ஏ அவர்களுக்கு பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர்,வார்டு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அதிராம்பட்டினம் அல்மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாஅதிராம்பட்டினம் அல்மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று 01/08/2009,காலை 9 மணி அளவில் நடைபெற்றது.இவ்விழாவில் மார்க்க அறிஞர்களும்,அரபிக்கல்லூரியின் உஸ்தாது மார்களும் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.இதில் ஏரளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை அரபிக்கல்லூரியின் மாணவர்கள் மற்றும் அரபிக்கல்லூரி டிரஸ்ட் ஆகியவை செய்திருந்தது.மேலும் நமதூரி வருகிற அதாவது நோன்புக்கு பிறகு கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள்,வியாபாரிகள்,வேலை செய்பவர்கள் ஆகிய அனைவருக்கும் சிறப்பு இஸ்லாத்தினை முழுமையாக அறிந்து கொள்வதற்காக சிறப்பு வகுப்புகள் நடைபெற இருக்கிறது.இதில் அனைவரும் தங்களினை உட்படுத்தி கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது அல்மதரஸத்தூர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி அதிராம்பட்டினம்.
புனித மிக்க பராஅத் இரவு ஷாபான் மாதம் பிறை 15 ஷபே பராஅத் இரவு ஆகும்.இன்ஷா அல்லாஹ் இந்த புனித மிக்க ஷபே பராஅத் முன்னிட்டு 06/08/2009 வியாழக்கிழமை பின்நேரம் வெள்ளி இரவு சரியாக மஃரீபு தொழுகைக்கு பிறகு நமதூரி பெரிய ஜும்மாபள்ளியின் மூன்று யாசின் ஓதி துவாச் செய்வதுடன்,நமக்கு முன்னால் மரணித்த் முஸ்லீம்களுக்கும் துவா செய்யப்படுகிறது. இஷா தொழுகைக்கு பின் ஆயுளில் ஒரு முறையாவது தொழ வேண்டிய தஸ்பிஹ் தொழுகையும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும்.துஆவுக்கு பிறகு தப்ரூக் வழங்கப்படும்.
சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துபவர்: ஹாபீஸ் காரி மெளலவி எச்.அப்துல் ரஹமான்,பாகவி,தேவ்பந்த். பேராசிரியர்: ஜாமியா மிஸ்பாஹுல்ஹுதா,அரபிக்கல்லூரி,நீடூர்.
அதிராம்பட்டினம் ஸலாஹியா அரபிக்கல்லூரியின் 110வது பட்டமளிப்பு விழாஅதிராம்பட்டினம் ஸலாஹியா அரபிக்கல்லூரியின் 110வது பட்டமளிப்பு விழா இன்று 30/07/2009,காலை 9 மணிக்கு ஆரம்பமாகி லுஹர் தொழுகையுடன் முடிவுடைந்தது.இதில் கண்ணியத்திற்குரிய மெளவிகள்,உலமாக்கள்,மார்க்க அறிஞர்கள்,ஊர் பொதுமக்கள் மற்றும் பட்டம் பெறும் ஸலாஹியா அரபிக்கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இப்பட்டமளிப்பு விழாவினை ஸலாஹியா அரபிக்கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
''சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்தே ஆகவேண்டும். வராவிட்டால் மழையின்றி தஞ்சாவூர் பாலைவனமாகும்''''சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்தே ஆகவேண்டும். வராவிட்டால் மழையின்றி தஞ்சாவூர் பாலைவனமாகும்'' என்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் நெல்லைப் பேராசிரியர் ஒருவர். ``சேதுக் கால்வாயை எதிர்ப்பவர்கள் தமிழ்த் துரோகிகள்!'' என்றும் சாடியிருக்கிறார் அவர். - அ.துரைசாமி தஞ்சை மாவட்ட அளவிலான இஜ்திமாதஞ்சை மாவட்ட அளவிலான இஜ்திமா வருகிற 20ந்தேதி சுபுஹ் தொழுகை முதல் 21தேதி அஸர் தொழுகையுடன் நடைபெற உள்ளது.
இடம் : ராஜகிரி அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். அதிராம்பட்டினம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரிராஜமடம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இக்கல்லூரியில் அமைவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.இதில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அதிராம்பட்டினம் பள்ளிகளின் நிலவரம்10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அதிராம்பட்டினம் பள்ளிகளின் நிலவரம்.
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
இப்பள்ளியில்
தேர்வு எழுதிய மாணவிகள் 144 பேர், தேர்ச்சி 141 பள்ளியின் சதவிகிதம் : 98% பள்ளியின் முதல் மாணவி : பர்ஹானா 479/500
இரண்டாம் இடம் : பாத்திமா 472/500 மூன்றாம் இடம் : ஜபீன் 471/500 மெயின் ரோடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி
பள்ளியின் சதவிகிதம் : 98% பள்ளியின் முதல் மாணவி : கோகிலா மற்றும் பிரியங்கா முறையே 464/500
இரண்டாம் இடம் : சங்கீதா 456/500 மூன்றாம் இடம் : சமீமா 434/500 காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
இப்பள்ளியில்
தேர்வு எழுதிய மாணவர்கள் 191 பேர், தேர்ச்சி 156 பள்ளியின் சதவிகிதம் : 80% பள்ளியின் முதல் மாணவர் : இணியவன் 461/500
இரண்டாம் இடம் : அப்துல் சமது 418/500 புதுக்கோட்டைஉள்ளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்தலில் வெற்றி பெற்ற விபரம்
தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றிதஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 101787 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவர் 408343 ஓட்டுகள் பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரைபாலகிருஷ்ணன் 306556 ஓட்டுகள் பெற்றுள்ளார். தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி.
அதிராம்பட்டினம் பள்ளிகளின் +2 தேர்வின் தேர்ச்சி நிலவரம்காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு முடிவுகள் நிலவரம் தெரிந்த வரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் மதிப்பெண் பிரபு 1092/1200,
இரண்டாம் இடம் ஆசிக் அகமது 1014/1200,
மூன்றாம் இடம் ஹாஜாமுகைதீன் 943/1200.
பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் 97%
அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு முடிவுகள் பின்வருமாறு:
தேர்வு எழுதியவர்கள் ; 169
தேர்ச்சி பெற்றோர் : 152
பள்ளி அளவில் முதல் மதிப்பெண் நஜிமுனிஷா 1053/1200
இரண்டாம் இடம் : ஜென்னத்துனிஷா 1042/1200 மூன்றாம் இடம் : மும்தாஜ் 1027/1200 பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் 90%
பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளியின் +2 தேர்வு முடிவுகள்
விக்னேஷ் 1175/1200
இரண்டாம் இடம் : வெங்கடஷ் 1172/1200
மூன்றாம் இடம் : விக்னேஷ்ராம் 1165/1200
பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98% அதிராம்பட்டினம் பேருந்து நிலைய அல் அமீன் பள்ளி பிரச்சனை சுமூகமாக முடிந்ததுகடந்த 2 வருடங்களாக அல் அமீன் பள்ளிக்கும் தேர்வு நிலை தேரூராட்சிக்கும் பிரச்சனை இருந்து வந்தது.அதனை ஓட்டி இப்பொழுது நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்க கூடாது என்று தீர்மானம் போட்டனர் அல் அமீன் பள்ளி நிர்வாகத்தினர்.அதனை ஊரில் உள்ள் மக்களையும் பள்ளிக்கு பிரச்சனை என்று கூறி திசை திருப்பி திமுகவிற்கு ஆதரவு இல்லாமல் பொதுமக்களை திசை திருப்பினர்.
இத்தருணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுகவிற்கு ஆதரவு என்று தலைமை அறிவித்தபடி அதிரையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளூர் திமுகவிற்கும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இத்தகவலை அறிந்த அல் அமீன் பள்ளி நிர்வாக்த்தினர் தவ்ஹீத் ஜமாத்தும் திமுகவும் சேர்ந்து பள்ளி கட்ட தடையாய் உள்ளனர் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் திமுக நகர செயலாளர் குணசேகரனை அவர்கள் சந்தித்து ஏன் பள்ளி கேட் பூட்டி இருக்கிறீர்கள் மற்றும் வாயில் அமைத்துள்ள போர் பிளம்பர் ஆகியவற்றை பள்ளியின் வாயில் இடைஞ்சலாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்றும் பள்ளி வாயில் கேட்டை திறந்து விட்டு போர் பிளம்பரை மாற்றி அமைக்கும்படியும்,போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்கவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.அதனை அவர் பார்த்து விட்டு தற்பொது தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷனில் எதிர்கட்சினர் புகார் அளிப்பார்கள் தேர்தல் கமிஷன் இத்தருணத்தில் எதையும் செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்று திமுக செயலாளர் குணசேகரன் அவர்கள் கூறினார்கள்.தேர்தல் முடிந்த பின்பு அனைத்தைது குறைகளையும் சுமூகமாக தீர்த்து கொள்ளலாம் என்று எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் உறுதிமொழி அளித்துள்ளார்கள்.
இத்தகவலை அல் அமீன் பள்ளி நிர்வாகத்தினரிடம் திமுக செயலாளரால் எழுத்தப்பட்ட கடிததின் ஒரு காப்பியினை தவ்ஹீத் ஜமாத்தினர் அளித்துள்ளனர் பள்ளி நிர்வாகத்தினரிடம்,பள்ளி நிர்வாகத்தினர் அக்கடித்தினை பற்றியும் தவ்ஹீத் ஜமாத் கூறிய வழிமுறைகளை அவர்கள் ஒத்துகொள்ளவில்லை.அரசியல் உள்நோக்கம் காரணமாக தான் என்று அப்பொழுது புரிந்தது.
அதன் பிறகு தெருவாரியாக சென்று திமுகவினருக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் இதற்கு ஆதரவாக உள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் கெட்ட பெயரினை மக்களின் மத்தியில் புகுத்தவும் இவர்கள் தெரு தெருவாக சென்று திமுகவுக்கு ஆதரவு ஓட்டு போட வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தனர்.மக்களை பிளவுபடுத்தி இனகலவரம் மற்றும் மதகலவரத்தினை ஏற்படுத்த இவர்கள் இருக்கிறார்கள் என்று கவலை அடைந்தனர் பொதுமக்கள்.பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது பள்ளி நிர்வாகத்தினர் மீது
அல்அமீன் பள்ளி நிர்வாகத்தினரின் அரசியல் ஆதாயத்திற்காக செய்யும் அவர்களின் முகத்திரையை கிழிக்கவும் அவர்களின் அரசியல் எப்படி செய்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு விளக்கவும் 09.05.09 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மைகுழு உறுப்பினர்,பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் விளக்க உரை நிகழ்த்தினார்கள் அதுமட்டும்மின்றி அதிரை பல அரசியல் கட்சிகளும் தெருமுனை பிரச்சாரம் செய்து அவர்களின் முகத்திரையினை கிழிப்பதற்கு பல வழிகளில் கூட்டணி கட்சியினர் முடிவு செய்தனர்.
பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் இப்பள்ளியின் நிலையின் அரசியல் குறுக்கீடுகளை பற்றி அவர்கள் பொதுமக்களுக்கு பேருந்து நிலையத்தில் விளக்கி கூறினார்கள்.அதிரை வாக்காளர்களை தெரிவு பெறச்செய்தார்கள்.அதற்கு அடுத்த நாள் அல் அமீன் பள்ளி நிர்வாகத்தினர் பி.ஜெய்னுல் ஆப்தீன் பேசியதற்கு எதிராகவும்,அவர் பேசியதற்கு மாறகவும் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர்,எஸ்.எம்.பாக்கர் அவர்களை பேச ஏற்பாடு செய்தனர் அப்பள்ளி நிர்வாகத்தினர்.
இதனால் பொதுமக்களின் அப்பள்ளியின் நிர்வாகத்திறமையை பார்த்து முகம் சுழிக்கவும்,பள்ளி நிர்வாகத்திற்கு பேச ஆரம்பித்தனர்.ஊரில் அனைத்து முஹல்லா வாசிகளும் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தினை ஆதரித்தனர் மற்றும் பள்ளி நிர்வாகம் தவ்ஹீத் ஜமாத்தினரிடம் சுமூகமாக பேச அழைப்பது போல் அவர்களிடம் நீங்கள் ஒத்து போனால் என்ன என்று மக்கள் கேள்வி கேட்க நிர்வாகத்திற்கு எதிராக அனைவரும் பேச ஆரம்பித்ததால் இந்திய தவ்ஹீத் ஜமாத் எஸ்.எம்.பாக்கர் அவர்களின் மீட்டிங் போடவேண்டாம் என்று பொதுமக்களிடம் எதிர்ப்பு குரல் மற்றும் அனைத்து தெருக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த்தால் ஊரில் உள்ள அனைத்து அமைப்புகளிடம் இருந்து அனைவரிடம் இருந்து நீங்கள் அப்படி பாக்கரின் மீட்டிங் போட்டால் யாரும் ஒத்துழைப்பு தற மாட்டோம் என்று அனைவரும் கண்டிப்புடன் கூறினார்கள்.(பாக்கர் அவர்களின் மீட்டிங் கிடையாது என்று தெரிந்தவுடன் அப்பள்ளி நிர்வாக்த்தினரிடம் பொதுமக்கள் கேட்டவுடன் அவர்கள் கூறிய பதில் மைக் செட்கிடைக்கவில்லை என்றும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்ற உப்புக்கு சப்பாக கூறினார்கள் மக்களுக்கு தெரியும்)அதனை அப்பள்ளி நிர்வாகத்தினர் ஏற்று கொண்டனர்.
அதன் அடிப்படையில் 11.05.09 நடுத்தெரு ஆயிசா மகளிர் அரங்கில் வக்கீல் ரஜாக் தலைமையில்,அல் அமீன் பள்ளி நிர்வாகத்தினர்,பேரூராட்சி உறுப்பினர்கள்,தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மற்றும் ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரு சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து அல் அமீன் பள்ளி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இம்முயற்சியில் சில குழப்பாவாதிகள் மற்றும் அரசியல் ஆதாயம் தேடும் அந்நபர்களுக்கு இடமில்லாமல் போனாது.கடைசியில் யார் சொன்னது நடந்தது என்று பொதுமக்களாகிய நீங்கலே தெரிந்து கொள்ளுங்கள் இவர்களின் கபட நாடகத்தின் உச்ச கட்டத்தினை.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!! |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|