ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 工具 帮助

日志


"கோட்டை அமீர்" விருது பெற்ற MMS அப்துல்வஹாப் அவர்களின் சில புகைபடங்கள் மற்றும் வீடியோ

Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket Photobucket    

கல்வித்தந்தை எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுத்தீன்

கல்வித்தந்தை எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுத்தீன்.

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனரும்,தாளாளருமாகிய ஹாஜி எஸ்.எம்.எஸ் அவர்கள் தம் இளைக்காலத்தில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைப் பட்டுக்கோட்டை சென்று கற்று வந்தார்கள்.வெளியூர் சென்று கல்வி கற்று வருவதின் இடர்பாடுகளை இளமையிலே அனுபவித்த தாளாலர் அவர்கள்,அக்காலத்திலேயே எதிர்காலத்தில் இத்தகைய இடையூர்கள் நீக்கப்பட்டு இளைஞர்கள் எல்லோரும் அதிரை நகரத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என உறுதி பூண்டார்கள் அதை அவர்களின் நண்பர்களிடமும் வெளிபடுத்தினார்கள்.

பின்னர் 1949ம் ஆண்டில் காதிர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியை  நிறுவித் தம் இளமைக்காலக் கனவை நினைவாக்கினார்,பின்னர் 1955ம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார்.

இடைக்காலத்தில் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் போற்றப்படாமையால் வருவாயின்றி வளங்குன்றி இருந்தன. முறையான நிர்வாகயின்மையால் அரசுப் பாதுகாவலர் நியமிக்கப்பெற்று இருந்தனர்.1955ம் ஆண்டு தாளாலர் அவர்களின் தந்தையாரும் இந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பையும் அரசுப் பாதுகாவலரிடமிருந்து பெறும்போது,ரூபாய் 900 கையிருப்பு தொகையாக ஒப்படைக்கப்பட்டது.

1954ல் கல்லூரி தொடங்கப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.நிறுவனத்தின் அன்றைய பொருள் தொகையாகிய  ரூபாய் 900 கொண்டு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் ஆனால் எப்படியும் தொடங்கிவிட வேண்டுமென்ற உறுதியும் ஏற்பட்டது.அதிரை நகரைச் சேர்ந்த பெரு மக்கள் சிலரின் ஒத்துழைப்பு நம் தாளாளர் அவர்களுக்குப் பெறும் துணையாக அமைந்திருந்தது.

1955‍‍ல் கல்லூரிக்குக் கட்டிடம் கட்டப் பொருள் திரட்டுவதற்காகக் கொழும்புப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தாளாளரின் தந்தையார் முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயர் அவர்கள் தலைமையில் நால்வர் அடங்கிய குழு இலங்கைப் பயணம் மேற்கொண்டது.அதற்கு முன்னரே கல்லூரிக் கட்டிடத்திற்கு
அடத்தளம் அமைக்கப்பட்டுவிட்டது.அப்போது காடு போன்ற காட்சியளித்த இடத்தில் கல்லூரிக் கட்டிடத்திற்கு பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அடித்தளம் அமைக்கப்பட்டது. இலங்கைப் பயணம் மூலம் திரட்டப்பட்ட தொகையே அன்றையக் கல்லூரிக் கட்டிடம் உருவாவதற்கு பெறும் துணையாக அமைந்தது.

1955 ல் கல்லூரி தொடங்கிய பிறகு,பொருள் திரட்டுவதற்கு சிங்கப்பூர் பயணமும் மேற்கொள்ளப்பட்டது.அப்பயணம் ஹாஜி.எம்.எம்.நெய்னா மரைக்காயார் அவர்கள் தலைமையில் புறப்பட்டது.இப்பயணம் மூலம் திரட்டப்பட்ட தொகையும் கல்லூரிக் கட்டிடத்திற்கே செலவிடப்பட்டது.

அன்றைய கலைஞர்களான ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,டணால் தங்கவேலு,நடனமணிகள் நடராஜ்‍ சகுந்தலா போன்ற பெருங்கலைஞர்கள் நாடகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கல்லூரி வளர்ச்சிக்கு ஒரளவு நிதி திரட்டித் தந்தார்கள்.

நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் பல காலம் உரிய முறையில் பேணிக் காக்கப்படாமையால் சீரழிந்து கிடந்தன.கல்லூரி தொடங்குவதற்கு முந்திய ஆண்டும்,தொடங்கிய மறு ஆண்டும் வீசிய கடும்புயலில் நிறுவனத்தின் தென்னந்தொப்புகள் பேரழிவுக்கு உள்ளாயின.அப்பொழுது நிறுவனத்திற்கு வருவாய் தந்த பேரூற்று அடைப்பட்டது. மற்றொரு பக்கம் அரசின் புதிய புதிய சட்டங்களாலும் அப்பொழுது இந்நிறுவனம் மேல செல்ல முடியாமல் இருந்தது.

கல்லூரி தொடங்கி எழெட்டு ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையும்,பயிற்றும் பாடங்களும் காலத்தின் தேவைக்குத் தகப் பாடங்களும் காலத்தின் தேவைக்குத் தகப் பெருகியது.பொருள்களின் தேவையும்,நிதிச் சுமைகளும் அதிகமாகி கொண்டு போனது.ஆசிரியர்களின் ஊதியம் மாதந்தோரும் பெருந்தொகை தேவைப்பட்டது.தரிசாகக் கிடந்த பரந்த நிலங்களில் தென்னை பயிர் செய்யப்பெற்று வருவாயைப் பெருக்க தாளாளர் அவர்கள் வழி செய்தார்கள்.

1976 க்குப் பிறகு தான் ஆசிரியர்களுக்குரிய ஊதியத்தை முழுவதையும் வழங்க அரசு முன்வந்து கைகொடுத்தது.இதற்கு முன்னர் தன் சொந்த நிதியில் இருந்து தான் ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டது.

குறைந்த வருவாயில் அதிகமான வளர்ச்சி அடைந்த நிறுவனம் நமதூர் எம்.கே.என் மதரஸசா ஆகும் இதற்கு முழுவதும் உழைத்த பெருமை ஹாஜி எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்களையே அனைத்து பெருமைகளும் சேரும்.அன்றைய காலங்களில் கிழக்கு கடற்கரைச் சாலையில் நாகை மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வரை எந்த கல்லூரியும் கிடையாது.ஆனால் நமதூரில் அன்றைய கால கட்டத்தில் கல்லூரி இருந்துள்ளது பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.

குறிப்பாக பொருளதாரத்தில் பிந்தங்கிய மாணவர்களுக்காக பயன் பெறும் தக்க இக்கல்லூரி இருந்துள்ளது.அன்றைய காலங்களில் தாளாலர் அவர்கள் கல்லூரிக்கு அனைத்து வேலை நாட்களிலும் வருகை தந்து அங்கு நடைபெறும் கல்லூரியில் கட்டுமான பணிகளை பார்வை இடுவது வழக்கமாக கொண்டு இருந்தார்கள், தாளாலர்களுடன் ஏ.எஸ்.எம்.ரஹமதுல்லா ஹாஜியார்,இராதா நாயக்கர்,சாமிநாதசர்மா போன்றோர்கள் கூட வருவார்கள் தாளாளர்கள் அவர்கள்.கடந்த 30ஆண்டுகளாக மேலாக கல்லூரி ஆண்டு விழாவுக்கு நீதிமன்ற நீதிபதிகளை அழைக்கப்பட்டு பெருமை படுத்தப்பட்ட கல்லூரி காதிர் முகைதீன் கல்லூரி ஆகும்.

1985 ஆம் ஆண்டில் வணிகவியல் முதுகலை வகுப்பும்,1986 ஆம் ஆண்டு வேதியியல் முதுகலை வகுப்பும்,1987 ஆம் ஆண்டு உயிரியல் முதுகலை வகுப்பும் அடுத்த வந்த ஆண்டுகளில் அனைத்து முதுகலை மற்றும் இடைநிலை , ஆராய்ச்சி வகுப்புகள் அடுத்தடுத்து துவங்கப்பெற்றது.

தாளாலர் அவர்களின் நினைப்பு எல்லாம் அனைத்தும் நிறுவன வளர்ச்சிக்கு பெருமை சேர்த்தது.அவர்களின் கனவுகள் எல்லாம் கல்விப்பணிகளாக இருந்து வந்துள்ளது.

1962 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் ஊராட்சி மன்றதலைவராகவும்,தமிழ்நாடு வக்ப் வாரியம்,ஒய்வு பெற்ற நீதிபதி ஜனாப் ஷர்ப்புதீன் சாகிப் அவர்கள் தலைமையில் இயங்கிய பொழுது தஞ்சாவூர் மாவட்ட சார்பாக வக்ப் வாரிய உறுப்பினராக இருந்து நல்ல முறையில் செயல் ஆற்றி வந்தார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடனும்,நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களுடனும்,மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களுடனும் இதுபோன்ற பெருந்தலைவர்களுடன் தொடர்புடையவர் நமது தாளாளர் அவர்கள். எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்கள் கல்லூரி அமைத்து சிறப்பாக நடத்தி வருவதை முன்னாள் காங்கிரஸ் தலைவராகிய காலம் சென்ற கிருஷ்ணசாமி வாண்டையார் கூறியதாக காங்கிரஸ்காராரான கடையநல்லூர் எஸ்.எம்.அப்துல் மஜீத்,முன்னாள் அமைச்சர் கூறினார்கள்.

தம்பிக்கோட்டை சுந்தரேசத்தேவர் முன்னாள் காங்கிரஸ்காரர்கள் இவர்களுடனும்
வாண்டையார்,மூப்பனார்,பட்டுக்கோட்டை வி.என்.எஸ் போன்றவர்களின் குடும்ப நண்பர்களாக இன்று வரையும் உள்ளார்கள்.

இவர் காலத்தில் தான் பட்டுக்கோட்டையில் காதிர் முகைதீன் என்ற பெரிய பள்ளி வாசல் ஒன்று பட்டுக்கோட்டை நகருக்கு பெருமைசேர்க்கும் வகையில் முதல் பள்ளி வாசல்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்காலத்தில் தான் உயர்நிலைப்பள்ளியாக இருந்த காதிர் முகைதீன் பெண்கள்,ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதேபோல் ஷாதுலிய்யா தொழிற்பயிற்சி கல்வி நிறுவனமும்,ஷாதுலிய்யா நர்சரி பாலர் பள்ளியும் துவங்கி பெறும் சேர்த்தது.

இப்பொழுது இக்கல்லூரிகளும்,பள்ளிகளும் பல சாதனைகள் படைத்து வருவதை நாம் எல்லாம் அறிவோம்.இந்நிறுவனத்திற்கு பாடுபட்டு வந்த கல்வித்தந்தை அவர்கள் 2.10.1986 வியாழக்கிழமை அன்று தாளாளர் அவர்கள்
இவ்வுலக வாழ்வைத்துறந்தார்கள்.3.10.1986 வெள்ளிக் கிழமை மாலை அசர் தொழுகைக்குப் பிறகு தக்வா பள்ளியில் மர்ஹும்.ஹாஜி காதிர் முகைதீன் அவர்களும், மர்ஹும்  முஹம்மது அபுல் ஹசன் அவர்களும்,தாளாளர் அவர்களின் தந்தையாரின் அடக்கவிடத்தருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இப்பொழுது தாளாளர்களின் அவர்களின் பெயரால் ஆசிரியர் பயிற்சி மையம் திறம்பட செயல்பட்டுவருகிறது.ஆனால் பாலர் பள்ளி மட்டும் சில ஆண்டுகளாக இயங்கமால் உள்ளது.

கல்விக்கு உயிர்ரீந்த வள்ளல் காதிர் முகைதீன்

கல்விக்கு உயிர்ரீந்த வள்ளல் காதிர் முகைதீன்

அளவிலா அருளும் நிகரில்லாப் பொருளும் பெற்ற செந்தமிழ் நாட்டில் செங்கோலோச்சினோர் பலர்.அவர்களுள் அதிரை தந்த அறத்துறை வேந்தர் இறை வழிகொடை வள்ளல்,அல்ஹாஜ் வள்ளல் காதிர் முஹையித்தீன் மரைக்காயாரும் ஒருவராவார்கள் எனில் அது மிகையாகாது.

பிறப்பு வள்ளல் பெருந்தகை 1835 ஆம் ஆண்டு,ஜனாப் முஹம்மது முஹைதீன் மரைக்காயாருக்கும் ஜனாபா செய்யது அஹமது நாச்சியாருக்கும் அதிராம்பட்டினத்தில் பிறந்தார்கள்.
கல்லாமை எனும் அறியாமையை மக்களிடமிருந்து அகற்றி அறிவுச்சுடராக அறிவொளி பரப்ப ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக 1901ஆம் ஆண்டு 85 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள நன்செய்.புன்செய் நிலங்களை ஈந்து,கல்விப்பாதையை திறந்தார்கள்.அந்த நீண்ட பாதை இன்று இராஜபாட்டையாக அரும்புகழை அடைந்து வருகின்றது.

காதிர் முகைதீன் உயர்நிலைப்பள்ளி கன்னியத்திற்குரிய ஹாஜி ஜனாப்,காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இவர்கள் நீட்டிய நேசக் கரத்தால் இப்பள்ளிக்கு நல்லதொரு வளர்ச்சியினை பெற்றது.தற்போது மேல்நிலைப்பள்ளியாக நல்ல வளர்ச்சி பெற்று திறம்பட இயங்கி வருகின்றது.

காதிர் முகைதீன் கல்லூரி

வள்ளல் பரம்பரையின் சந்ததியினர் மேலும் மேலும் இந்த அந்நிறுவனம் உயர்ந்து சிறப் பெய்தி புகழ்பெற வேண்டும் என்ற நன்நோக்கத்தை அடிப்படையாகப் கொண்டு,ஜூன் திங்கள் 5ஆம் தேதி,1955 ஆம் ஆண்டு,அப்போது தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் அவர்களைக் கொண்டு,வள்ளல் அவர்களின் பெயரால் காதிர் முகைதீன் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது.இன்று உள்நாட்டு,பிற மாநில மாணவர்களும்,வெளிநாட்டு மாணவர்களும் கல்வி பெற்று இருக்கிறார்கள்,பெற்று கொண்டு இருக்கிறார்கள்.கல்வி பெற்றுவரும் பல்கலைக்கழக கூடமாக சிறந்து புகழ்பெற்று இக்கல்லூரி கட்டிடம் கம்பீரமாக‌ காட்சி தருகின்றது. அதிராம்பட்டினத்திற்கு பெருமை சேர்க்கும் கல்லூரியாகவும் சிறந்து விளங்கி வருகிறது.

ஏழைக்குமர்கள் ஏற்றம் பெறுதல்

கருணைமிக்க காதிர் முகைதீன் வள்ளல் அவர்கள் ஈதலின் இலக்கணமாக பல இரகசியக் கொடைகள் புரிந்துள்ளார்கள்.ஏழைக்குமர்கள் இவர்களின் அறத்தால் ஏற்றம் பெற்றனர்.இவர்கள்,இறை இல்லங்களில் இரவு நேரங்களில் மண்டிக்கிடந்த காரிருளை நீக்க சுடர்விடும் விளக்கொளி ஈந்து சிறப்பினைப் பெற்ற‌ார்கள்.அதிரையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விளக்கொளி பரப்ப,வள்ளல் அவர்கள் ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள்.(அதன்படி,அதிரையின் பள்ளிவாசல்களுக்குரிய மின் கட்டணங்களை இவ்வள்ளல் பரம்பரையினரின் சந்ததியினரே செலுத்தி வருகின்றனர்).

சட்ட நூலின்(பிக்ஹுமாலை கொடை நாயகர்)

இஸ்லாமிய சட்ட ஞானங்களை நுணுக்கத்தோடு எடுத்துப்பகரும் சட்டநூல் பிக்ஹுமாலை என்பது இதனை இயற்றியவர்,அதிராம்பட்டினம் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார்     வழித்தோன்றல்,'நவரத்தினகவி'காதிர் முஹைதீன் அண்ணாவியார் அவர்கள்,
இந்நூலுக்கு கொடை நாயகராக விளங்கியவர்கள் வள்ளல் காதிர் முகைதீன் அவர்கள்.

மார்க்க சட்ட உரை தந்து உதவியவர்கள் அதிரையிலே பெரிய ஆலிம்சாகிப் என்று பெயர் பெற்று அனைவராலும் போற்றப்பெற்ற அப்துல் காதிர் ஆலிம் சாகிப் என்ற மார்க்க மேதையாவார்கள்.உரை தந்தவர்கள் குலாம் காதிறு நாவலர் ஆவார்கள்.பிக்ஹுமாலை சம்பந்தப்பட்ட இவர்கள் அனைவரின் பெயர்களும் காதிர் என்றே அமைந்திருக்கும் அற்புதத்தை என்னென்போம்.

உலகக் கல்வியும்,ஆன்மீகக் கல்வியும்

இன்று ஆன்மீகக் கல்வியிலும் பட்டம் பெற்று உலகக் கல்வியிலும் பட்டம் பெற்றுவருகின்றனர்.அந்தவகையில் காதிர் முகைதீன் கல்லூரியும்,ஆன்மீகக் கல்வியான மதரஸத்துஸ் ஸலாயிய்யா கல்லூரியும் ஒரே நிர்வாகத்தில் ஒரே வளாகத்தில் இயங்கி வருவது நாமெல்லாம் பெருமைப்படத்தக்க ஒன்று.

முன்பு  ஒருசில வகுப்புகளை(ஜும்ராக்களை)மட்டும் பாடமாக ஸலாயிய்யா மதரஸா நடத்தி வந்தது.தற்போது ஆலிம்களை உருவாக்கி அவர்களுக்கு பட்டம் என்ற ஸனதும் வழங்கி வருகிறது.

இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக விளங்கியவர்கள்,வள்ளல் காதிர் முகைதீன் மரைக்காயார் எனும்போது நம்மால் அவர்களின் அறப்பணி குறித்து விளக்காமலிருக்க முடியவில்லை.இவர்கள் தம் இறுதிக்காலத்தில் தம் தமையனாரோடு திரு மக்காமா நகர் சென்று ஹஜ் கடைமையையும் நிறைவு செய்து  மீண்டார்கள்.

இப்படி அறத்திற்கும்,ஆண்டவன் வழிபாட்டிற்கும் குடும்பத்தினருக்கும் கிளையினருக்கும் வழித்தோன்றல்களுக்குமாக,உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் ஈந்து ஜுன் 20ஆம் நாள் 1905ஆம் ஆண்டு,இவ்வுலக வாழ்வைத் துறந்தார்கள்.(இன்னாலில்லாஹி)இறந்தச் இறவாச் சிறப்பெய்தி பெரும் புகழ் பெற்றார்கள்.

அதிராம்பட்டித்தில் உள்ள பெருமை மிக்க குடும்பத்தில் உதித்தவர் காதிர் முகைதீன் என்ற கருணையர்.அவர் வழித்தோன்றல்கள் நிறுவியது தான் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் கல்லூரி,ஸலாயிய்யா அரபிக் கல்லூரி ஆகும்.இப்பகுதி மக்களெல்லாம் என்றும் காதிர் முகைதீன் பரம்பரைக்கும், நன்றிக்கடன்பட்டவர்கள்.

வள்ளலின் வழித்தோன்றர்களான அல்ஹாஜ் எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்கள், மர்ஹும் காதிர் முகைதீன் அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்வதோடு,கல்விப் பணியை விரிவுபடுத்தியதை அடுத்த கட்டுரைகளில் விரிவாக காண்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)