ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 工具 帮助

日志


30 Daily RamadanPrayers



RAMADAN KAREEM! - Below are 30 Daily Ramadan Prayers (duas), reposted from 2007. Inshallah, they will make the fast easier, enlighten the mind, and ennoble the heart in this blessed month.
Ramadan Dua: DAY 1
ALLAH, on this day make my fasts the fasts of those who fast (sincerely), and my standing up in prayer of those who stand up in prayer (obediently), awaken me in it from the sleep of the heedless, and forgive me my sins , O God of the worlds, and forgive me, O one who forgives the sinners.
Ramadan Dua: DAY 2
ALLAH, on this day, take me closer towards Your pleasure, keep me away from Your anger and punishment, grant me the opportunity to recite Your verses (of the Qur’an), by Your mercy, O the most Merciful.
Ramadan Dua: DAY 3
ALLAH, on this day, grant me wisdom and awareness, keep me away from foolishness and pretension, grant me a share in every blessing You send down, by You generosity, O the most Generous.
Ramadan Dua: DAY 4
ALLAH, on this day, strengthen me in carrying out Your commands, let me taste the sweetness of Your remembrance, grant me, through Your graciousness, that I give thanks to You. Protect me, with Your protection and cover, O the most discerning of those who see.
Ramadan Dua: DAY 5
ALLAH, on this day, place me among those who seek forgiveness. Place me among Your righteous and obedient servants, and place me among Your close friends, by Your kindness, O the most Merciful.
Ramadan Dua: DAY 6
ALLAH, on this day, do not let me abase myself by incurring Your disobedience, and do not strike me with the whip of Your punishment, keep me away from the causes of Your anger, by and Your power, O the ultimate wish of those who desire.
Ramadan Dua: DAY 7
ALLAH, on this day, help me with its fasts and prayers, and keep me away from mistakes and sins of the day, grant me that I remember You continuously through the day, by Your assistance, O the Guide of those who stray.
Ramadan Dua: DAY 8
ALLAH, on this day, let me have mercy on the orphans, and feed [the hungry], and spread peace, and keep company with the noble-minded, O the shelter of the hopeful.
Ramadan Dua: DAY 9
ALLAH, on this day, grant me a share from Your mercy which is wide, guide me towards Your shining proofs, lead me to Your all encompassing pleasure, by Your love, O the hope of the desirous.
Ramadan Dua: DAY 10
ALLAH, on this day, make me, among those who rely on You, from those who You consider successful, and place me among those who are near to you, by Your favor, O goal of the seekers.
Ramadan Dua: DAY 11
ALLAH, on this day, make me love goodness, and dislike corruption and disobedience, bar me from anger and the fire, by Your help, O the helper of those who seek help
Ramadan Dua: DAY 12
ALLAH, on this day, beautify me with covering and chastity, cover me with the clothes of contentment and chastity, let me adhere to justice and fairness, and keep me safe from all that I fear, by Your protection, O the protector of the frightened.
Ramadan Dua: DAY 13
ALLAH, on this day, purify me from un-cleanliness and dirt, make me patient over events that are decreed, grant me the ability to be pious, and keep company with the good, by Your help, O the beloved of the destitute.
Ramadan Dua: DAY 14
ALLAH, on this day, do not condemn me for slips, make me decrease mistakes and errors, do not make me a target for afflictions and troubles, by Your honor, O the honor of the Muslims.
Ramadan Dua: DAY 15
O Allah, on this day, grant me the obedience of the humble, expand my chest through the repentance of the humble, by Your security, O the shelter of the fearful.
Ramadan Dua: DAY 16
ALLAH, on this day, grant me compatibility with the good, keep me away from patching up with the evil, lead me in it, by Your mercy, to the permanent abode, by Your Godship, O the God of the worlds.
Ramadan Dua: DAY 17
ALLAH, on this day, guide me towards righteous actions, fulfill my needs and hopes, O One who does not need explanations nor questions, O One who knows what is in the chests of the (people of the) world. Bless Muhammad and his family, the Pure.
Ramadan Dua: DAY 18
ALLAH, on this day, make me love goodness, and dislike corruption and disobedience, bar me from anger and the fire [of Hell], by Your help, O the helper of those who seek help.
Ramadan Dua: DAY 19
ALLAH, on this day, multiply for me its blessings, and ease my path towards its bounties, do not deprive me of the acceptance of its good deeds, O the Guide towards the clear truth.
Ramadan Dua: DAY 20
ALLAH, on this day, open for me the doors of the heavens, and lock the doors of Hell from me, help me to recite the Qur’an, O the One who sends down tranquility into the hearts of believers.
Ramadan Dua: DAY 21
ALLAH, on this day, show me the way to win Your pleasure, do not let Shaytan have a means over me, make Paradise an abode and a resting place for me, O the One who fulfills the requests of the needy.
Ramadan Dua: DAY 22
ALLAH, on this day, open for me the doors of Your Grace, send down on me its blessings, help me towards the causes of Your mercy, and give me a place in the comforts of Paradise, O the one who answers the call of the distressed.
Ramadan Dua: DAY 23
ALLAH, on this day, wash away my sins, purify me from all flaws, examine my heart with (for) the piety of the hearts, O One who overlooks the shortcomings of the sinners.
Ramadan Dua: DAY 24
ALLAH, on this day, I ask You for what pleases You, and I seek refuge in You from what displeases You, I ask You to grant me the opportunity to obey You and not disobey You, O One who is generous with those who ask
Ramadan Dua: DAY 25
ALLAH, on this day, make me among those who love Your friends, and hate Your enemies, following the way of Your last Prophet, O the Guardian of the hearts of the Prophets.
Ramadan Dua: DAY 26
ALLAH, on this day, make my efforts worthy of appreciation, and my sins forgiven, my deeds accepted, my flaws concealed, O the best of those who hear.
Ramadan Dua: DAY 27
ALLAH, on this day, bestow on me the blessings of Laylatul Qadr, change my affairs from (being) difficult to (being) easy, accept my apologies, and decrease for me [my] sins and burdens, O the Compassionate with His righteous servants.
Ramadan Dua: DAY 28
ALLAH, on this day, grant me a share in its nawafil (recommended prayers), honor me by attending to my problems, make closer the means to approach You, from all the means, O One who is not preoccupied by the requests of the beseechers.
Ramadan Dua: DAY 29
O ALLAH, on this day, cover me with Your mercy, grant me in it success and protection, purify my heart from the darkness of false accusations, O the Merciful to His believing servants.
Ramadan Dua: DAY 30
O ALLAH, on this day, make my fasts worthy of appreciation and acceptance, according to what pleases You, and pleases the Messenger, the branches being strengthened by the roots, for the sake of our leader, Muhammad, and his purified family. Praise be to ALLAH, the Lord of the worlds.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
Regards,
 
AL YAHYA
East Street
Adirampattinam
Thanjure Dist

ரமளானின் மகிமை

ரமளானின் மகிமை

( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )

 

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=144

 

  புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.

  ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.

  இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

  நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:

’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’

’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’

’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’

’’ சுவனலோகத்தில்ரய்யான்என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’

  நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.

‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’

 ‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’

‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’

  எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே  தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!

           நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை

  நோன்பு நோற்பது ஃபர்ளுகட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.

  நோன்பு நோற்பது ஃபர்ளுகட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.

              நோன்பின் நிய்யத்

  நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.

  தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:

  நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா

  இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

  உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.

  நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

                ஸஹர்நோன்புபிடிப்பது

  ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.

  ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.

             இஃப்தார்நோன்பு திறப்பது

  சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

  மேகத்துடைய காலங்களில் இஃப்தார்நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர்நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.

  நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.

  இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததிபின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

  இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.

                நோன்பு திறக்கும் துஆ

  அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

 ’’யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

              நோன்பின் முறித்தல்கள்

1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல.    10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.

  வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பைகளாசெய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.

  நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.

  தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.

  நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.

            நோன்பை முறிக்காதவைகள்

1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது.   2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, , கொசு தொண்டையினுள் செல்லுவது.      6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்ஷன்டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.

              நோன்பின் மக்ருஹ்கள்

1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது.        3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது.        4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.

  இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.

            நோன்பு வைக்காமலிருப்பதற்கு  

             அனுமதிக்கப்பட்டவர்கள்

1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனைகளாசெய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனைகளாசெய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனைகளாசெய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

  பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.

5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.

6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனைகளாசெய்யவேண்டும்.

7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனைகளாசெய்வது கட்டாயமுமாகும்.

8) ஹைள்மாதவிடாய் , நிபாஸ்பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர்களாசெய்வது கட்டாயமாகும்.

               தராவீஹின் சட்டங்கள்

  புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.  

  எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவதுகுர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.

  குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.

  இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.

  வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.

  தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.

  ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.

  குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப்மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.

                இஃதிகாப்

  புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.

  ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.

  இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.

  இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.

  ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.

  1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.

  2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.

  அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல்            குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
 
இப்னு அப்பாஸ் (ரலி)
 
 நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
 
நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில்
மரணமடைந்தார்கள். 
 
 இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.
 
ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். -
 
புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

'ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். - புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).

பிரிவு: அல்ஹதீஸ்

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம்.
 அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது  கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும்.  சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ்.
கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.
இறை வாக்குகள்

1. (நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் 38:29)

குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை, அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.

ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக்கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!.

2. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.    

3. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

4. நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் – அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)

இந்த வசனத்திற்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.)

ஷஃகானி(ரஹ்) அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.

5. என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் 25:30)

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: குர்ஆனின் கருத்தை உணராமல் படிப்பது அதை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்குவதாகும்.

இப்னுல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனை புறக்கணிப்பது பல வகையாகும், அதில் நான்காவது வகை கருத்துணர்ந்து படிப்பதை விட்டுவிடுவதாகும். 

நபி மொழிகள்1. அல்லாஹ்வின் வீடுகளில் நின்றும் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தார் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை அவர்கள் (விளங்கி) படித்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி இறங்குகின்றது, இன்னும் அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்கின்றது, இன்னும் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றார்கள், அல்லாஹ் தன்னிடமுள்ள (மலக்குகளிடம்) அவர்களை (புகழ்ந்து) கூறுகின்றான். ஆதாரம்: முஸ்லிம் இந்த நபிமொழியில், குர்ஆனை, விளங்கி ஓதுபவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் கிடைப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாம் இந்த நபிமொழியின் ஒரு பகுதியைத்தான் செயல் படுத்துகின்றோம். (அதாவது குர்ஆனை அரபு மொழியில் மாத்திரம் ஓதுகின்றோம்) அதை கருத்துணர்ந்து படிப்பதில்லை. காரணம் கருத்துத் தெரிந்து ஓதுவதினால் அதிகமாக ஓத முடியாது என்பது பலரின் எண்ணம். ஆனால் இது முற்றிலும் தவறாகும். நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவு சூரத்துல் மாயிதாவின் 118 ஆம் வசனத்தை மட்டும் ஓதிக்கொண்டே அன்றைய இரவின் தொழுகை எல்லாம் தொழுது முடித்திருக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத் 

இதோ நபி(ஸல்) அவர்கள் அதிகம் ஓதுவதை விட சிந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கி ஒரு வசனத்தை மட்டும் ஒரு இரவு முழுக்க ஓதியிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

2. நான் ஒரு நாள் இரவு நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். முதல் ரக்அத்தில் ”அல்பகரா” ஸுராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறு வசனங்கள் வந்ததும் ருகூவுக்கு செல்வார்கள் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். பின்னர் அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அந்த ஸுராவை ஓதி முடித்து ருகூவுக்குப் போவார்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். பின்னர் ”அன்னிஸா” அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி, தெளிவாக ஓதினார்கள். ‘தஸ்பீஹ்’ உள்ள வசனத்தை ஓதும் பொழுது அவர்கள் தஸ்பீஹ் செய்வார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவதின் வசனத்தை ஓதும் பொழுது அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடும் வசனங்களை ஓதினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். அதில் ”ஸுப்ஹான ரப்பியல் அளீம்” எனக் கூறினார்கள். அவர்களது ருகூவு அவர்களது நிலையின் அளவைப் போன்றிருந்தது. பின்னர் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு, ரப்பனா லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் சென்றார்கள். (ஸஜ்தாவில்) ”ஸுப்ஹான ரப்பியல் அஃலா” எனக் கூறினார்கள். அவர்களது ஸஜ்தா நிலையின் அளவுக்கு நெருக்கமாக இருந்தது.அபூ அப்தில்லாஹ் ஹுதைபா பின் யமான்(ரலி), ஆதாரம்: முஸ்லிம் மேற்கண்ட நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை நிறுத்தி, நிறுத்தி ஓதியது மட்டுமல்லாமல் அல்லாஹ்வை துதிக்கும் வசனத்தை ஓதும்போது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள். அல்லாஹ்விடம் கேட்கும் (சுவர்க்கம்) தொடர்புடைய வசனங்கள் வந்தால் அதை அல்லாஹ்விடம் கேட்பார்கள், நரகம் பற்றிய அல்லது அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட சமுதாயம் பற்றியுள்ள வசனம் வந்தால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். கருத்துணர்ந்து நபி(ஸல்) அவர்கள் ஓதவில்லையென்றால் எவ்வாறு இந்தப் பிரார்த்தனைகளைச் செய்திருப்பார்கள்.  நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை கருத்துணர்ந்து ஓதியிருக்கின்றார்கள் என்பதற்கு இது பெரும் உதாரணமாகும். 3. மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதுபவர் அதை விளங்கமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: திர்மிதி, தாரமிமேற்கண்ட நபிமொழியில் மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். காரணம் அதைவிடவும் குறைந்த நாளில் ஓதினால் குர்ஆனை  விளங்க முடியாது. இதிலிருந்து குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கம் அதை கருத்துணர்ந்து படித்து அதை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாகி விட்டது. ஆகவே நாமும் திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி அதன் கருத்துக்களை உணர்ந்து அதன்படி நடந்து பிறருக்கும் எத்திவைத்து ஈருலக வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! 

மைந்தனை தியாகம் செய்யத் தூண்டிய கனவு

முஸ்லிம்கள் இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்: 1. ஈதுல்ஃபித்ர் எனும் ஈகைத் திருநாள். இதுவே ரமலான் எனப்படும். 2.ஈதுல் அள்ஹா எனப்படும் தியாகத் திருநாள். யூத நெறி, கிறிஸ்தவ நெறி, இஸ்லாமிய நெறி என்ற மூன்று பேராறுகளுக்கும் மூல ஊற்றாகத் திகழ்பவர் இறைத் தூதர் இப்ராஹிம். யூதரும் கிறிஸ்தவரும் அவரை ஏப்ரஹாம் என்பர். உண்மையில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பவை வெவ்வேறாக இன்று காணப்பட்டாலும் அடிப்படையில் இவை ஏகத்துவ நெறி எனப்படும் ஒரே நெறியைச் சார்ந்தவையே.


இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில், அவர் தம் அருமந்த மைந்தன் இஸ்மாயில் அவர்களை இறைவனுக்காக பலியிடுவதைப் போல் கண்டார். இறைத் தூதர்களுடைய கனவுகள் மற்ற மனிதர்கள் காணும் கனவு போன்றவையல்ல. அவை கடவுளின் கடிதங்கள். இறைவன் அவருடைய புதல்வர் இஸ்மாயில் அவர்களைத் தனக்குப் பலியிடுமாறு ஆணையிடுவதாகவே இப்ராஹிம் கருதினார்.


இஸ்மாயில், இப்ராஹிம் தம் 86வது வயதில் தவமிருந்து பெற்ற பிள்ளை. அவர் மீது இப்ராஹிம் தம் உயிரையே வைத்திருந்தார். இருப்பினும், இறைவனின் ஆணையைத் தலைமேல் ஏற்றுத் தம் அருமந்த மைந்தனை இறைவனுக்காகத் தியாகம் செய்யத் துணிந்துவிட்டார். இப்ராஹிம் தம் புதல்வரைக் கத்தியால் அறுக்கத் தொடங்கிய போது இறைவன், "இப்ராஹிமே! எனக்காக உம் அருமந்த மைந்தனையே பலி கொடுக்கத் துணிந்த உம்தியாகவுணர்வை ஏற்றுக் கொண்டேன். உம் மகனைப் பலியிட வேண்டாம். நீர் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டீர். உம் மகனுக்குப் பகரமாக ஓர் ஆட்டைப் பலியிடுவீராக' என்று கூறினார். இப்ராஹிமும் அதன் படியே ஓர் ஆட்டைப் பலியிட்டார்.


உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தே தியாகத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். அப்போது ஆடு, மாடு, ஒட்டகம் எதையேனும் இறைவனுக்காகப் பலியிடுகின்றனர். இது தியாக உணர்வுக்கான பயிற்சி.


எல்லாமே இறைவன் கொடுத்தவையே. எனவே, மனிதன் அவனுக்காகத் தன் உடல், பொருள், ஆவி மட்டுமின்றித் தம்மால் மிகவும் நேசிக்கப்படும் மனைவி, மக்களைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இத்திருநாள் போதிக்கிறது.


பலியிடப்பட்ட பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதியாகப் பங்கு போட்டு, ஒரு பங்கை ஏழை எளியவருக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினருக்கும் வழங்கிவிட்டு ஒரு பங்கைத் தான், தம் உபயோகத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.


ஏழைகளும் வயிறார உண்டு, பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.


புனிதப் பயணம் (ஹஜ்): இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் ஹஜ் என்ற புனிதப் பயணமும் ஒன்று. இது வசதியுடையவர்களுக்கு மட்டுமே கடமை. அரேபிய நாட்டில் மக்கா என்ற ஊரில் உள்ள கஅபா என்ற இறையில்லத்திற்குச் சென்று வழிபாடுகள் செய்து வருவதே ஹஜ் எனப்படுகிறது. கஅபா இந்த உலகில், ஏக இறைவனுக்குக் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமாகிய ஆதம் (அலை) அவர்கள் அவ்விடத்தில் வழிபட்டிருக்கின்றனர். இப்ராஹிம் (அலை) அவர்கள் மண்மேடாக இருந்த அந்த இடத்தில் இருந்த ஆதம் அவர்கள் கட்டிய ஆலயத்தின் அடித் தளத்தின் மீதே புதிய ஆலயமொன்றைக் கட்டினர். இஸ்மாயில் (அலை) அவர்களும் இத்திருப்பணியில் தந்தைக்கு உதவியாக இருந்தார்.


கஅபா: அரபியில் "கஅபா' என்றால் ஆறு சமசதுரங்கள் கொண்ட கன உருவம் (ஞிதஞஞு) என்று பொருள். கஅபா ஆலயம் இவ்வடிவிலேயே கட்டப் பட்டுள்ளது. இவ்வாலயம் எல்லாப் படைப்புகளையும் பற்றிய கொள்கைகளை இணைத்து, உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. வேதியல், பௌதீகம், பிரபஞ்சவியல், எரிகல் இயல், மருத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையிலும் கஅபா கட்டப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் கஅபா அண்டத்தின் பிண்டம். வானியல்படி எத்திசையிலிருந்தும் வீசும் காற்றுகளை எதிர் கொள்ளும் படி ஆலயம் அமைந்திருக்கிறது. கஅபாவின் நீள் சதுர அச்சு சூரியன் பூமிக்கு நெடுந்தொலைவில் இருக்கும் காலத்தில் வரும் கோடைக் காலச் சூரியோதயத்திற்கும், குளிர் காலச் சூரிய அஸ்தமனத்திற்கும் இணைவாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இடம் சுற்றல்: புனிதப் பயணிகள் கஅபாவை ஏழு முறை சுற்றி வரவேண்டும் என் பது முக்கியமான வழிபாடு. பயணிகள் ஆலயத்தை இடப்புறமாகக் கொண்டு சுற்றி வருவர். இது ஒரு குறியீட்டு நிகழ்ச்சி. சூரியனை மையமாகக் கொண்டு கிரகங் கள் சுற்றுவது போல, (கிரகங்களும் இடம் சுற்றுகின்றன) இறைவனை மையமாகக் கொண்டு சகல உயிர்களும் சுற்றி வருகின்றன. மையமே, உயிர்களை இயக்குகிறது. மையமில்லையேல், உயிர்கள் இல்லை என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது.


சஃபா மர்வா: சஃபா, மர்வா என்ற இரு சிறு குன்றுகள் கஅபாவுக்கு அருகில் இருக்கின்றன. புனிதப் பயணிகள் இக்குன்றுகளுக்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் செய்ய வேண்டும். இது இப்ராஹிம் (அலை) அவர்களுடைய துணைவியார் ஹாஜரா தம் கைக் குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்கள் தாகம் தணிக்கத் தண்ணீர் தேடி, சஃபா, மர்வா குன்றுக்களுக்கிடையே ஓடிய நிகழ்ச்சியை நினைவு கூர்வதாகும்.


ஜம் ஜம்: ஜம் ஜம் என்பது கஅபாவில், இருக்கும் புனித தீர்த்தமாகும். இஸ்மாயில் (அலை) சிறு குழந்தையாக இருந்த போது, தாகத் தால் அழுதார். அவர் கால்களை உதைத்துக் கொண்டு அழுதபோது, பூமியே தாய்ப்பாசம் கொண்டு பால் சுரந்தது போல், தரையிலிருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுப் பெருகியது. இதுவே ஜம் ஜம். இப்போது, இது சிறு கிணறாக இருக்கிறது. ஜம் ஜம் ஓர் அற்புதம். இது சகல ரோக நிவாரணி. ஒவ்வொரு ஹஜ்ஜுக்கும் முப்பதிலிருந்து நாற்பது லட்சம் பயணிகள் கஅபாவுக்கு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்நீரே குளிக்கவும் குடிக்கவும் பயன்படுகிறது. கேன் கேனாக ஊர்களுக்கும் கொண்டு செல்கின்றனர். மக்கா, மதீனா என்ற இரு நகரங்களுக்குக் குடிநீரும் இது தான். ஜம் ஜம் வற்றாமல் சுரந்து கொண்டே யிருக்கிறது. அருகில் எந்த இடத்தைத் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை.


அரஃபா: புனிதப் பயணிகள் அரஃபா என்ற பெருவெளியில் கூடி வழிபடுவர். இது ஹஜ்ஜின் கடமைகளுள் முக்கியமானது. பயணிகள் முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களிலும் தங்கி வழிபடுவர்.


ஹஜ்ருல் அஸ்வத்: கஅபாவின் தென் கிழக்கு மூலையில் ஒரு கருங்கல் பதிக்கப் பட்டிருக்கிறது. இது ஹஜ்ருல் அஸ்வத் எனப்படுகிறது. இக்கல் புனிதக் கல்லாக மதிக்கப்படுகிறது புனிதப் பயணிகள் இக்கல்லை முத்தமிடுவர். நபிகள் நாயகம் இவ்வாறு செய்தார் என்பதனாலே பயணிகளும் முத்தமிடுகின்றனர். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர், முஸ்லிம்கள் கஅபாவில் கல்லை வணங்குகின்றனர் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். கல்லை மட்டுமல்ல படைப்புகளில் எதை வணங்கினாலும் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. இறைவனைத் தவிர வேறு யாரையும், எதையும் இறைவனாகக் கருதி வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இதில் சமரசத்திற்கே இடமில்லை.


ஒன்றே குலம் ஒருவனே தேவன்: பல நாடுகளிலிருந்து பல மொழி பேசும் பல இன மக்கள் வேறுபாடின்றி ஹஜ்ஜில் ஒரே உடையணிந்து, ஒரே இறைவனை வணங்குகின்றனர். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற கொள்கையை செயலால் உரத்துச் சொல்லும் வழிபாடே ஹஜ்ஜாகும். கஅபா இதயம் போன்றது. அங்கே அசுத்த ரத்தமாகச் செல்லும் புனிதப் பயணிகள் சுத்த ரத்தமாகித் திரும்புகின்றனர்.


கவிக்கோ அப்துல் ரகுமான்

Eid ul Adha Mubarak!

EID MUBARAK

                     


Wish you and your family

A very happy Eid
regards, 

AHAMED MUNASKHAN
 

 

 

"Hold fast to dreams. For if dreams die, life is a broken-winged bird that cannot fly"


ஹஜ் நேரடி ஒலிபரப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும்.அல்லாஹ்வின் பேரருளால் ஹஜ் வணக்க கிரியைகள் தற்போது பீஸ் டிரைன் பிளாகில் நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இதை தாங்கள் காண்பதோடு,மற்ற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.நன்றி

http://www.peacetrain1.blogspot.com/

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹ்.


பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.
1.( மக்களே! )
நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!
இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'
நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.

மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
(
ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்

 

 

அன்புடன், சகோ. அபூஃபைஸல்

ஹஜ் புனித பயணம் ஜெட்டாவுக்கு 4 விமானம்

தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக, சென்னை-ஜெட்டா இடையே, வரும் 28ம் தேதியில் இருந்து நான்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது: ஏர்-இந்தியா நிறுவனம், 200 இருக்கைகள் கொண்ட நான்கு விமானங்களை இயக்குகிறது. முதல் விமானம் (எண் ஏ1-2259), வரும் 28ம் தேதி காலை 8.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இரண்டாவது விமானம் (எண் ஏ1-2261), 29ம் தேதி காலை 8.05 மணிக்கும், மூன்றாவது விமானம் (ஏ1-2263) 30ம் தேதி காலை 8.25 மணிக்கும், நான்காவது விமானம் (எண் ஏ1-2265) டிசம்பர் 1ம் தேதி காலை 8.05 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும்.

மும்பையில் உள்ள மத்திய ஹஜ் குழு, இந்த பயணத்திற்கான விமான ஒதுக்கீட்டை வழங்குகிறது. தமிழகத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளவர்கள், தமிழ்நாடு பைத்துல் ஹூஜ்ஜாஜ், ஹஜ் இல்லம், எண் 3, டிமெல்லோஸ் சாலையில் (சூளை) உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தற்காலிக அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக வந்து, புனித பயணத்திற்கான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


வெளிமாவட்டங்களைச் சேர்ந்த புனிதப் பயணிகளுக்கு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி சார்பில், சென்னையில் தங்கும் இடம் இலவசமாக அளிக்கப்படும். இது தொடர்பாக மேலும் தகவல் பெற விரும்புவோர், 044-28227617, 28252519 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

'ஹஜ்' கேள்வி - பதில்

கேள்வி - பிறருக்காக ஹஜ் செய்யலாமா... உஸ்மான் - யாஹூமெயிலில்,

ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.

அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)

இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.

இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் , இப்னுமாஜா )

பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ... என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.

மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.

தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)

ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)

ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அஹ்மத் - நஸயி)

இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது.


181 கேள்வி - நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ். வருடந்தோறும் என் கம்பெனியின் மூலமாக ஒவ்வொரு நபரை ஹஜ்ஜூக்கு அனுப்புகிறார்கள்; இந்தமுறை என்னை அனுப்புவதாக உள்ளார்கள். இதுப்போல என்னிடம் வசதி இருந்தும் மற்றவர்கள் பொருளாதாரத்தில் ஹஜ் செய்யலாமா? இதில் ஏதும் தவறு உள்ளதா? தஞ்சை யூசுப் - ஹாட்மெயில் வழியாக.

கஃபா சென்றுவர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தகுதியைப் பெற்றிருப்பவர்கள் பிறருடைய பொருளாதாரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் இவருடைய ஹஜ் கடமை நிறைவேறி விடும் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் கம்பெனிகள் வருடந்தோரும் ஆட்களை தேர்வு செய்து அனுப்பினாலும் சென்றுவரும் சக்தியில் இவருடைய பங்கீடு முழுமைப் பெறாததால் அவர் அந்த கடமையை அவர் சார்பில் நிறைவேற்றியவராக ஆகமாட்டார். சக்தி இல்லாவர்கள் கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டால் அதன் பலன் கம்பெனி மற்றும் தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய இருவருக்கும் கிடைத்து விடும்.


182 கேள்வி - பெண்கள் ஹஜ் செய்யும் முறை.... அப்துல் சாபுர் - யாஹூமெயில் வழியாக.

பெண்களின் ஹஜ்

இறைவனின் தூதரே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) போரிட தேவையில்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமை என்று கூறி அதுதான் ஹஜ்ஜூம் - உம்ராவும் என்றார்கள். (ஆய்ஷா(ரலி) அஹ்மத் - இப்னுமாஜா)

சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமை என்ற வாக்கியத்தில் சக்திப் பெற்றுள்ள பெண்களும் அடங்கத்தான் செய்வார்கள். ஆனாலும் ஒரு பெண் சக்திப் பெற்றவளாக கருதப்பட வேண்டுமானால் அவள் கூடுதலாக ஒரு சட்டத்திற்கு உட்பட வேண்டும். அது பயணத்தில் இருக்க வேண்டிய ஆண்துணை.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய பெண் மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயண தொலைவிற்கு தந்தையுடனோ - கணவனுடனோ - சகோதரனுடனோ இல்லாமல் செல்லக் கூடாது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) நஸயி - இப்னுமாஜா)
தக்க ஆண்துணை இருந்தால் தான் பெண்களுக்கு ஹஜ் கடமையாகும்.

மாதவிடாய்

நபி ஸல் அவர்களுடன் ஹஜ் செய்வதற்காக அன்னை ஆய்ஷா ரலி அவர்கள் செல்கிறார்கள் வழியில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடுகிறது. இதை அறிந்த நபி ஸல் அவர்கள் ' ஹஜ் உடைய எல்லா காரியங்களையும் செய், தூய்மையாகும் வரை கஃபத்துல்லாஹ்வை நெருங்காதே ' என்று கூறிவிட்டார்கள். இந்த கட்டளைப்படி ஆய்ஷா ரலி அவர்கள் கஃபத்துல்லாஹ்வை வலம் வரவுமில்லை, ஸபா மர்வாவில் ஓடவுமில்லை. மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடன் தன் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்துவந்து கஃபாவை வலம் வந்த செய்தி பிரபல்யமான ஹதீஸ் நூல்கள் எல்லாவற்றிலும் - குறிப்பாக புகாரியில் பல இடங்களில் - எண் 1556, 1650 - வருகின்றது.


182 a பெண்கள் உம்ரா மற்றும் ஹஜ்ஜில் முடியை சிறிது வெட்ட வேண்டுமா? சில பெண்கள் உம்ரா முடித்த உடன் முடி வெட்டுகிறார்கள்;. இவ்வாறு செய்யவேண்டுமா.? இதற்கு அனுமதி அல்லது தடை உள்ளதா.? ஜித்தாவிலிருந்து உம்மு யஹ்யா - யாஹூ மெயில் வழியாக.

தலைமுடி

ஹஜ் உம்ரா செய்பவர்கள் தலையை முழுவதுமாக மழித்து விடுவது அதிக ஆர்வமூட்டப்பட்ட செயலாகும். ஆனாலும் இது ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.

பெண்கள் தங்கள் தலைமுடியை மழிப்பதை நபி(ஸல்) தடைசெய்துள்ளார்கள். (அலி(ரலி) திர்மிதி)
ஆண்களை போல் மழிப்பதற்கு தடையுள்ளதால் தங்கள் சடையிலிருந்து சிறிதளவு வெட்டி அந்த மார்க்க அடையாளத்தை பூர்த்தி செய்யலாம்.

தலையை மழிப்பது பெண்களுக்கு கிடையாது. குறைத்துக் கொள்வது அவர்களுக்கு போதும் என்பது நபிமொழி ( இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் - தாரகுத்னி)

உம்ரா மட்டும் செய்பவராக இருந்தால் முடியை குறைத்துக் கொள்வதுடன் உம்ரா நிறைவுக்கு வந்து விடும். ஹஜ்ஜையும் சேர்த்து செய்பவராக இருந்தால் மினாவில் ஜம்ரத்துல் அகபாவில் ஏழுமுறை கல்லெறிந்து பிறகு குர்பானி கொடுத்து விட்டால் அதன் பின் (ஆண்கள்) தலையை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இப்போது உடலுறவைத் தவிர இஹ்ராமின் மற்ற சட்டங்களிலிருந்து விடுபட்டு விடலாம்.


183 கேள்வி - ஹஜ் மற்றும்; உம்றா செய்வதற்கு முன்னால் களையும் அக்குள் முடிகளை இஹ்ராம் கட்டும் இடத்தில் தான் களைய வேண்டுமா அல்லது வீட்டிலிரூந்தே அதை செய்யலாமா? தயவு செய்து விளக்கவும். ஷேக் மீரான் - ஹாட்மெயில் வழியாக.

இஹ்ராம் என்பது அதற்காக நியமிக்கப்பட்டுள்ள இடத்தை கடந்த பிறகு சில காரியங்களை செய்யக்கூடாது என்று தடுப்பதாகும். அந்தந்த எல்லையில் நின்றுதான் குளிக்கவேண்டும், முடி களைய வேண்டும், இஹ்ராம் துணி அணிய வேண்டும் என்பதல்ல சட்டம். வசதி வாய்ப்புகள் இருந்தால் தங்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே இவை அனைத்தையும் நாம் செய்துக் கொள்ளலாம். அந்த எல்லைகளை கடந்தப் பிறகு இவைகளை செய்யக் கூடாது என்பதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த எல்லைகளை அடையுமுன் எந்த இடத்திலும் இவற்றை செய்துக் கொள்ளலாம்.


184 கேள்வி - ஜம்ஜம் நீரை நின்றுகொண்டு, பிஸ்மில்லா சொல்லாமல் தான் குடிக்க வேண்டும் ஹாஜரா(அலை) அப்படித்தான் செய்தார்கள் என்று கூறப்படுவது உண்மையா? ஜம்ஜம் நீரை குடிப்பதற்கென்று விசேஷமான முறை எதுவும் உண்டா? ரிஸ்வான் அஹ்மத் - யாஹூமெயிலில்.

பொதுவாக உண்ணும் போதோ குடிக்கும் போதோ தலையை மூடிக் கொள்ள வேண்டும் என்ற எந்த சட்டமும் இஸ்லாத்தில் இல்லை. தலை திறந்த நிலையில் சாப்பிடுவதில் எந்த குற்றமும் இல்லை. இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தலையை திறந்திருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும் தான்) என்பது சட்டம். எனவே அந்த நேரத்தில் தலை திறந்த நிலையில் தான் ஸம் ஸம் நீரை குடிக்க வேண்டும். பெண்கள் முகத்தையும் கைகளையும் தவிர மற்ற பாகங்களை இஹ்ராமில் மூட வேண்டி இருப்பதால் அவர்கள் தலை திறந்து ஸம் ஸம் நீரை குடிக்க முடியாது - குடிக்கக் கூடாது.

நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ - பிஸ்மில்லா சொல்லாமல் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


185 கேள்வி - ஹஜ்ஜூக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ஊர் மக்கள் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள் இது முறையா... போகும் போது மாலை போடுதல் அல்லது வந்த பிறகு மாலை போடுதல் என்ற பூமாலை நிகழ்ச்சியும் நடக்கின்றது. ஹஜ் சென்று வந்த பின் தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்கிறார்கள். இப்படி போட்டுக் கொள்ளலாமா...? ஜின்னா - யாஹூமெயில் வழியாக.

நாம் பிற மனிதர்களுக்கு இழைக்கும் குற்றங்கள் - தவறுகள் இவற்றிர்க்கு நாம் மரணிக்கும் முன்பே சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதி. இந்த பொதுவான அடிப்படையில் - இந்த நோக்கத்திற்காக - ஹஜ்ஜை அறிவித்து உள்ளங்களை தூய்மைப்படுத்திக் கொண்டால் தவறில்லை. ஏனெனில் ஹஜ் செய்ய போகும் இடத்தில் மரணம் நிகழ்ந்து விடலாம். பிறகு இறைவன் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் மக்களிடம் பிழை பொருக்க சொல்லி விட்டு செல்லலாம். (பொதுவாக இது எல்லா பயணத்திற்கும் பொருந்தும்)

இதை விடுத்து இதர நோக்கங்களுக்காக ஹஜ் அறிவிக்கப்படுமானால் அது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும். இன்று பல ஊர்களில் இந்த நோக்கத்திற்கு மாற்றமாகத்தான் ஹஜ் விளம்பரப் படுத்தப்படுகிறது. போஸ்டர் அடித்து ஒட்டி ஏக - போக பந்தாவாக ஹஜ்ஜூக்கு கிளம்புவதை பார்க்கலாம். மக்கள் தனது ஹஜ்ஜை அறிந்து தன்னைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பரவலாக ஹஜ்ஜை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் தான் பூமாலையெல்லாம் போட்டு விழாக்கோலமாக்கப்படும். இந்த பந்தா - விழாக் கோலத்தின் பிரதி பலிப்புதான் ஹஜ் முடித்துவிட்டு வந்த பிறகு தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஹஜ் செய்தவர் அல் ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வதாகும். (தனக்கு வரும் திருமண அழைப்பிதழில் ஹாஜி என்று போடாமல் வந்து விட்டால் அதற்காக சண்டைப் போடும் விளம்பர ஹாஜிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்)

இது முழுக்க - முழுக்க இஸ்லாமிய வணக்கத்திற்கும் அது எதிர்பார்க்கும் உள்ளத்தூய்மைக்கும் மாற்றமான செயலாகும்.

இறைவனுக்காக செய்யப்படும் அமல்கள் எது ஒன்றிர்க்கும் முழு உரிமையாளனும் அதற்கு கூலி கொடுப்பவனும் அவனேயாவான். இந்த அமல்கள் வேறு நோக்கங்களுக்காக செய்யப்பட்டால் அந்த அமல் இறைவனின் பார்வையில் வெறும் குப்பைக் கூளமாக்கப்பட்டு விடும்.
மக்கள் தன்னை பெரும் வணக்கசாலி என்று கூறி புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் அமல் செய்பவர்கள் நாளை நரகில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்கள் எதிர்பார்த்த புகழ் உலகிலேயே கிடைத்து விட்டது என்று இறைவன் கூறுவான் என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள் (ஹதீஸ் சுருக்கம்) (முஸ்லிம்)

இறைவனுக்காக செய்யப்படும் எந்த ஒரு காரியத்திற்கும் புகழுக்கான விளம்பரம் கூடாது என்று இந்த ஒரு நபிமொழியே எச்சரித்து விடுகிறது.

தினமும் தவறாமல் தொழும் ஒருவர் தன் பெயருக்கு முன்னால் 'முஸல்லி' என்று (உதாரணமாக 'முஸல்லி அப்துல் காதர்' அதாவது தொழுகையாளி அப்துல் காதர்) என்று போட்டுக் கொள்வதில்லை.
'நோன்பாளி அப்துல் அளீம்' என்று யாரும் தன் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் தர்மம் செய்யும் ஒருவர் - ஜகாத் கொடுக்கும் ஒருவர் தன்னை 'கொடை வள்ளல்' என்று விளம்பரப்படுத்துவதும், ஹஜ் செய்தவர் தன்னை ஹாஜி என்று விளம்பரப்படுத்துவதும் (சில ஆலிம்?கள் உம்ரா செய்து விட்டு வந்து தன்னை உம்ரி என்றும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்) இறைவனுக்கு உகந்த செயல்தானா என்று விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

(நபியே) நீர் கூறும் மெய்யாக என் தொழுகையும் என் குர்பானியும் (ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அமல்) என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களில் இறைவனான அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இப்படித்தான் நான் ஏவப்பட்டுள்ளேன். (அல் குர்ஆன் 162, 163)

'இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்' என்ற ஏவலின் பிரகாரமே நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டினார்கள். அவர்களோ - அவர்களை சார்ந்த நபித்தோழர்களோ இந்த விளம்பரங்களை கண்டு அஞ்சினார்கள். இதனால் நாளை இறைவனிடம் கூலி கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அதை வெறுத்து ஒதுக்கினார்கள். இந்த மன நிலை இறைவனுக்காக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வர வேண்டும்.


186 கேள்வி - ஒரே இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்கிறார்களே இது கூடுமா...? ஜமால் - ஹாட் மெயில் வழியாக.

மீகாத் என்றால் எல்லை என்றுப் பொருள். ஹஜ் உம்ரா செய்யும் நோக்கோடு வெளியிலிருந்து மக்கா வருபவர்களுக்கு குறிப்பிட்ட எல்லைகளை இஸ்லாம் தீர்மானித்துள்ளது. அந்த எல்லைக்குள் நுழையும் போது இஹ்ராத்துடன் நுழைய வேண்டும். இஹ்ராம் இல்லாமல் நுழைந்தால் அவர்களால் ஹஜ்ஜோ - உம்ராவோ செய்ய முடியாது.

இவ்வாறு இஹ்ராம் பூண்டு உம்ராவை நிறைவேற்றினால் அந்த உம்ராவிற்குறிய எல்லை முடிந்துப் போய்விடும். அதாவது உம்ரா செய்வதற்காக ஒரு எல்லை வழியாக நுழையும் ஒருவர் உம்ராவை நிறைவேற்றி விட்டால் அதோடு அந்த எல்லைக்கும் உம்ராவிற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடுகிறது. அவர் மீண்டும் உம்ரா செய்வதாக இருந்தால் மீண்டும் தனக்குறிய எல்லையிலிருந்து இஹ்ராத்துடன் வர வேண்டும். ஒரே இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்யலாம் என்றால் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது அர்த்தமில்லாமல் போய்விடும்.

சிலர் உம்ரா செய்து விட்டு மீண்டும் இஹ்ராம் கட்டுவதற்கு மக்காவிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஆய்ஷா மஸ்ஜித் என்ற பள்ளிக்கு சென்று இஹ்ராம் கட்டி வந்து அடுத்த உம்ரா செய்வதை பார்க்கிறோம். ஆய்ஷா பள்ளி என்பது இஹ்ராத்திற்குறிய இடம் தான் என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் அது பொதுவான எல்லையல்ல. வெளியிலிருந்து வரும் போது அந்தந்த எல்லையில் இஹ்ராம் கட்டி உள்ளே நுழைபவர்களுக்கு எதிர்பாராத தடங்கள் ஏற்பட்டு உம்ரா செய்ய முடியாமல் போய் இஹ்ராத்திலிருந்து விடுபடும் சூழ்நிலை உருவானால் அவர்களுக்காக நியமிக்கப்பட்ட இடமாகும் அது.

இஹ்ராத்துடன் உள்ளே நுழையும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது. இந்த சந்தர்பத்தில் அவர்களால் கஃபாவை நெருங்க முடியாது. அவர்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரை இஹ்ராத்திலிருந்து விடு பட வேண்டும். தூய்மை அடைந்ததும் ஆய்ஷா பள்ளி என்ற மீகாத் - எல்லைக்கு சென்று இஹ்ராம் ஆகி கொள்ளலாம். அதே போன்று இஹ்ராத்துடன் உள்ளே வருபரவர்கள் நோய்க்கு ஆட்பட்டு இஹ்ராத்திலிருந்து விடுபட்டால் அவர்களுக்கும் ஆய்ஷா பள்ளி தான் எல்லையாகும். குறிப்பாக சொல்லப் போனால் இஹ்ராத்துடன் உள்ளே நுழைபவர்கள் ஏதோ தடங்களால் உம்ரா செய்ய முடியாமல் இஹ்ராத்திலிருந்து விடுபடுகிறார்கள். இவர்கள் உம்ரா செய்ய இலகுவாக்கப்பட்ட எல்லைதான் ஆய்ஷா பள்ளி என்று அறியப்படும் 'தன்யீம்' என்ற இடமாகும்.
நான் இஹ்ராத்துடன் மக்கா வந்ததும் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. என்னால் கஃபாவை நெருங்க முடியவில்லை. இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உன் தலையை அவிழ்த்து சீவி ஹஜ்ஜூக்கு மட்டும் இஹ்ராம் கட்டு. உம்ராவை விட்டு விடு என்றார்கள். நான் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் 'தன்யீம்' என்ற இடத்திற்கு என்னை அனுப்பினார்கள். அங்கு உம்ராவிற்காக இஹ்ராத்துடன் வந்து உம்ராவை முடித்தேன். (ஆய்ஷா(ரலி) புகாரி - திர்மிதி)

நாம் மேலே விளக்கியவற்றிர்க்கெல்லாம் இந்த ஹதீஸில் ஆதாரம் கிடைத்து விடுகிறது. இது தவிர ஒரு இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்வதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

''எவ்வளவோ தொலைவிலிருந்து வருகிறோம் எங்களால் மீண்டும் அந்தந்த எல்லைக்கு சென்று இஹ்ராம் அணிவது சிரமம் அதனால் ஆய்ஷா பள்ளிக்கு சென்று வருகிறோம்'' என்று சொல்லக் கூடிய மக்களைப் பார்க்கிறோம்.

ஒரு காரியத்தை செய்வதில் சிரமம் இருக்கிறது என்பதற்காக நாமாக ஒரு முடிவு எடுத்து அதன்படி செயல்பட்டு அதற்கு நியாயம் கற்பிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. சிரமத்திற்கேற்ற கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதலில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மக்கா என்பது உம்ராவிற்கு மட்டும் கூலி கிடைக்கும் இடமல்ல. தவாபிற்கும் - தொழுகைக்கும் கூட அங்கு ஏராளமான கூலி கிடைத்து விடும். அங்கு எவ்வளவு வேண்டுமானாலும் தவாப் செய்யலாம் (தவாப் செய்வதற்கு எந்த தனி சட்டமும் இல்லை) எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம். அவரவர் எல்லைக்கு சென்று மீண்டும் இஹ்ராம் கட்டி வர முடியாதவர்கள் தவாப் - தொழுகை போன்றவற்றின் மூலம் நிறைய நன்மைகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்பதால் இந்த வழியை தேர்ந்தெடுப்பதே அறிவுடமையாகும்.

'இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்' என்பதை ஒரு முஸ்லிம் ஒப்புக் கொண்டால் அவனின் அமல்களை விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டான் என்பதில் இரண்டாவது கருத்து வர வாய்ப்பே இருக்காது.

புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம் Part2

பாதுகாப்பு ஏற்பாடுகள்
தற்காலிக கூடாரங்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடற்து கொண்டிருந்தன. தனித்தனியாக கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளை வைத்து அவரவர் சொந்தமாக சமையல் செய்துக் கொண்டிருந்ததால், இவ்விதம் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதையொட்டி, கூடாரங்களில் சமையல் செய்வதை சவூதி அரசு முதலில் தடை செய்தது.
அதற்குப் பகரமாக, அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், பாதுகாப்பான தனி இடங்களில், சுகாதார முறைப்படி உணவைத் தயார் செய்து - விநியோகிக்கும் பொறுப்பைப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் உணவுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது.
சில ஆண்டுகளுக்கு முன், துணிகளால் அமைக்கப்படும் கூடாரங்களை அறவே தவிர்த்து விட்டு, சவூதி அரசு அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், நவீன வசதிகளுடன் கூடிய தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம், அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.
மினாவில் ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப் படுகின்றன. தடையின்றி அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவரவர் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே, பல நூற்றுக் கணக்கான கழிவறை வசதி, ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர், தீ விபத்துக்களிலிருந்து ஹாஜிகளைப் பாதுகாக்க, சகல விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இரவும் பகலும் கண்காணிக்கின்றனர்.
கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் தீயணைப்புக் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் எந்த நேரமும் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.
மருத்துவ வசதி
மினாவில் ஹாஜிகளுக்கு, சகல விதமான அதி நவீன மருத்துவ வசதிகளுடன், மிகப் பிரம்மாண்டமான, அரசு மருத்துவ மனை நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. பல நூறு படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம் மருத்துவ மனையில், அவசர சிகிச்சைப் பிரிவும் இயங்குகிறது. உடனுக்குடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எல்லா வகையான மருத்துவ சேவைகளும் இலவசமாகவே செய்யப்படுகின்றன.
பல் வேறு நாடுகளின் தூதரகங்களும், தத்தம் நாட்டினருக்காக மருத்துவ சேவை மையங்கள் அமைத்து சேவை புரிகின்றன. பல் வேறு தனியார் மருத்துவ மனைகள் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார், நடமாடும் மருத்துவ ஊர்திகள், முதலுதவி வசதிகளுடனும், மருத்துவர்கள் மற்றும் ஆண் பெண் செவிலியர்களுடனும், எப்போதும் மினாவைச் சுற்றி வருகின்றன.
ஒவ்வொரு வருடமும், இந்தியா பாகிஸ்தான், உட்பட பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கில் மருத்துவர்களும், உதவியாளர்களும், வரவழைக்கப் பட்டு மருத்துவப் பணியில் ஈடுபடு;த்தப் படுகின்றனர்.
சவூதி செம்பிறைச் சங்கத்தின் மருத்துவச் சேவைகள் மறக்க முடியாதவை. பல்வேறு இடங்களில் தற்காலிக சேவை மையங்கள் அமைத்து செம் பிறைச் சங்கம் ஹாஜிகளுக்கு இலவச மருத்துவச் சேவை செய்கின்றது.
ஆபத்தான நிலையில் இருப்போரை- அருகில் உள்ள மக்காவின் பெரிய மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல செம் பிறைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்களும், பல நூற்றுக் கணக்கில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் எப்போதும் தயார் நிலயில் நிற்கின்றன.
சாரணர் படை
சவூதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உயர் நிலைப் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளிலிருந்து வந்து குவிந்துள்ள சாரணர் படை மாணவர்களின் பணி மகத்தானது. பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஹாஜிகளுக்கு வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும், சீருடை அணிந்து சிறப்பப் பணி செய்கின்றனர்.
இயலாத மற்றும் வயது முதிர்ந்த ஹாஜிகளை அரவணைத்து அழைத்துச் செல்வதும், தமது இருப்பிடங்களுக்குச் செல்ல வழி தெரியாமல் தவிப்பவர்களை அவர்களிடம் உள்ள அடையாள அட்டைகளைக் கொண்டு - இருப்பிடத்தை அறிந்து - உரிய இடங்களுக்குக் கொண்டு போய் சேர்த்தும் உபகாரம் செய்கின்றனர்.
மினாவில் மட்டுமின்றி - ஹாஜிகள் அடுத்தடுத்தக் கடமைகளை நிறைவேற்றச் செல்லும், முஸ்தலிபா, அரபா, போன்ற புண்ணியத் தலங்கள் அனைத்திலும், சாரணர் படை மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பணி புரிகின்றனர்.
தொலைத் தொடர்பு வசதி
தபால் தந்தித் துறை, மினாவின் பல்வேறு இடங்களில் அஞ்சல் மற்றும் தந்தி வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. தொலை பேசித் துறையினரின் சேவை மிகவும் பாராட்டத் தக்கது. மினாவிலும் மற்றும் புனிதத் தலங்கள் அனைத்திலும், நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன தொலை பேசி மையங்கள்.
உலகின் 180க்கும் அதிகமான நாடுகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளத் தக்க இம் மையங்களின் மூலம் நாளொன்றுக்கு பல இலட்சக் கணக்கான தொலை பேசி அழைப்புகள் செய்யப் படுவதாக சவூதி தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.
அவரவர் நாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொண்டு - புனித ஹஜ்ஜை இனிய முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள - மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
காவல் துறையினரின் கண்காணிப்பு
ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான ஹாஜிகள் ஒன்று கூடும் புனித ஹஜ்ஜில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, காவல் துறை எல்லா வகையானக் கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
பொதுவாகவே முஸ்லிம்கள் ஒன்று கூடும் எந்த ஒரு விழாவிலும் காவல் துறைக்கு எந்த வேலையும் இருக்காது.நியாய உள்ளம் படைத்த எத்தனையோ காவல் துறை அதிகாரிகள் இதற்கு சாட்சி பகர்வர்.
கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடமையாகக் கொண்டவர்கள்-அதிலும் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வந்த புண்ணிய சீலர்கள்- எவ்வளவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
காவல் துறையும், ராணுவமும், தீயணைப்புப் படையினரும், சாரணர் படையும், தரையில் தங்கள் கண்காணிப்பைத் தொடர, ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள்- அனைத்தையும் கண்காணித்தபடி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல்- அத்தனை இலட்சம் ஹாஜிகளும், இறை வணக்கத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவரவர் தம் சொந்த ஊர்களில் மாட மாளிகைகளில் வசித்தவர்கள்- சுக போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், இங்கே மினாவில் வந்து கூடாரங்களில் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.
மறு உலகின் நிரந்தர வாழ்க்கைப் பயணத்தில்- சற்றுத் தங்கி இளைப்பாறுவது தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வுலக வாழ்கைப் பயணத்தில் சற்றுத் தங்கி இளைப்பாறுவது போல் மினாவில் இந்த சின்னஞ்சிறு கூடாரங்களில் தங்கி ஹாஜிகள் இளைப் பாறுகின்றனரோ!
இல்லை. இவர்கள் இங்கு இளைப்பாற வரவில்லை! பொன்னான பொழுதை வீணில் போக்க இங்கு வரவில்லை! காட்சிகளைக் கண்டு களிப்படைய வரவில்லை! இறைவனின் அழைப்பை ஏற்று வந்திருக்கின்றனர். இறைவனுக்காக இங்கு வந்திருக்கின்றனர். இறை வணக்கத்துக்காக இங்கு வந்திருக்கின்றனர்.
குழுக்களாகவும், தனித்தனியாகவும், அமர்ந்து இன்றைய தினத்தை இறை வணக்கத்தில் கழிக்கின்றனர். இறை தியானத்தில் கழிக்கின்றனர். இயன்றவரை திரு மறையை ஓதுவதிலும், நபிலான தொழுகைகளிலும், பிரார்த்தனையிலும் திக்ருகளை மொழிவதிலும் கழிக்கின்றனர்.
துல் ஹஜ் எட்டாம் நாள்- ஹஜ்ஜின் முதல் நாளாகிய இன்றைய தினத்தின் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும் இங்கேயே நிறைவேற்றுகின்றனர்.
இன்றைய தினத்தின் இரவுப் பொழுதும் இங்கேயே இறை தியானத்தில் கழிகின்றது. இரவுப் பொழுதிலும் இங்கு உறக்கமா வரும்? உறங்கவா இங்கு வந்தோம்? என்ற எண்ணம் இதயத்தில் எழ- சிறிது நேரமே கண்ணயர்ந்தவர்கள் கூட - நடு நிசித் தொழுகையான தஹஜ்ஜஜுத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.
மினாவில் லுஹர், அஸர், இஷா ஆகிய, நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது சிறந்ததாகும்.
மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அச்சமற்ற நிலையிலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் இருந்த போது நான் நபி (ஸல்) அவர்களுடன் (நான்கு ரக்அத் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். என்று ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதியில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் எண் 808)
நான் நபி (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன்.அபூ பக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் துவக்க காலத்திலும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். என்று இப்னு மஸ்வூத் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மறு நாள், துல் ஹஜ் 9 ஆம் நாள் அதிகாலை பஜ்ருத் தொழுகையையும்- இங்கு மினாவிலேயே நிறை வேற்றி விட்டு - அடுத்தக் கடமையை நிறைவேற்ற அரபாத்தை நோக்கி ஹாஜிகள் புறப்படுகின்றனர்.
துல் ஹஜ் 9 ஆம் நாள்- ஹஜ்ஜின் 2 ஆம் நாள்;. இன்று தான் ஹஜ்.
'ஹஜ் என்பது அரபாவாகும்' என்பது நபி மொழி
இது வரை ஹாஜிகள் செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள். உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான். அந்தப் புனித நாள் இன்று தான்.
அரபாத் மைதானம் என்பது, பல மைல் சுற்றளவு கொண்ட பரந்து விரிந்த ஒரு பாலைவனத் திடல். ஆனால் இப்போது இந்தப் பாலைவன மைதானம் முழுதும் மரங்கள் வளர்த்து சோலைவனமாக மாற்றப் பட்டுள்ளது. மினா அளவுக்கு முழுக்க முழுக்க கூடாரங்கள் அமைக்கப் படாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பெரும் பாலானவர்கள் மரங்களின் நிழல்களில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.
கடும் கோடைக் காலங்களில்- ஹாஜிகளுக்கு வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக- அரபாத் மைதானம் முழுவதும் குழாய்களைப் பொருத்தி, குளிர்ந்த தண்ணீரை நீராவி மாதிரி சன்னமாகத் தெளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பரந்து விரிந்த பாலைவனத் திடல் முழுவதையும் இயற்கையாகவும் செயற்கையாகவும் குளிர வைத்திருக்கிறார்கள். ஹாஜிகளின் மனங்களையும் தான்.
புனித ஹஜ்ஜுக்காக, புண்ணிய பூமிக்கு வந்தவர்கள், வந்த நோக்கத்தில் கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது, கடும் வெப்பம் கூட ஒரு பொருட்டாகத் தெரியாது. என்றாலும் ஹாஜிகளின் உடல் நலனைப் பேண- சகல ஏற்பாடுகளும் சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன என்றால் அது மிகையில்லை.
உணவு ஏற்பாடுகளும், மருத்துவ உதவிகளும், தாராளமான தண்ணீர் வசதியும், மினாவைப் போலவே அரபாத்திலும் அழகான முறையில் மிகுந்த அக்கரையுடன் செய்யப் பட்டுள்ளன.
எண்ணற்ற தனியார் நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நிறுவனங்களின் உணவுப் பொருள் தயாரிப்புகளை- பெரும் பெரும் வாகனங்களில் கொண்டு வந்து வைத்துக் கொண்டு 'ஃபீ ஸபீல்' (இறைவனின் பாதையில் இலவசம்) என்று கூவிக் கூவி அழைத்து வாரி வழங்குகின்றனர்.
பழங்கள், பழச்சாறுகள், ரொட்டிகள், குளிர் பானங்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், இப்படி இலவச விநியோகப் பொருட்களின் பட்டியல் நீள்கிறது. தனி நபர்களும் அவரவர் தம்மால் இயன்றதைக் கொண்டு வந்து- வல்ல இறைவனுக்காக அள்ளி வழங்குகின்றனர்.
சவூதி மன்னர் பஹத் அவர்கள் சார்பாக- ஒவ்வொரு நாளும் ஒரு கோடிக்கும் அதிகமான குளிர்ந்த குடி நீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப் படுகிறது. மன்னர் பஹத்- திருக் குர்ஆன் வளாகத்தில் அச்சிடப் பட்ட திருக் குர்ஆன் பிரதிகள், உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், மற்றும் ஒலி- ஒளி நாடாக்கள்,
ஹஜ் மற்றும் அறநிலையத் துறை சார்பாக, பல்வேறு மொழிகளில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல்கள், 'இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்' சார்பாக, இஸ்லாமிய கொள்கை விளக்க சிற்றேடுகள், தமிழ், மலையாளம், போன்ற இந்திய மொழிகள் உட்பட பல்வேறு மொழிகளில் மார்க்க விளக்க நூல்கள், இவை அனைத்துமே இலவசமாக வழங்கப் படுகின்றன. இவற்றை ஹாஜிகள் அவரவர் நாடுகளுக்குக் கொண்டு செல்லும்போது, பல கோடி மக்கள் படித்துப் பயன் பெறுகின்றனர்.
லுஹரையும்அஸரையும் சேர்த்துத் தொழுதல்
அரபாத் மைதானத்தில் அமைந்துள்ளது, 'மஸ்ஜிதுன்னமிரா' என்னும் மாபெரும் பள்ளிவாசல். ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்தவர்கள், பக்குவமாகப் பள்ளியின் உட்பகுதிக்குச் சென்று விட்டனர். பல இலட்சம் பேர் பள்ளிக்கு வெளியே அணிவகுத்து நின்று விட்டனர்.
இன்றைய தினம், லுஹரையும் அஸரையும் ஒன்றாக சேர்த்து, லுஹருடைய நேரத்தில் இரண்டிரண்டு ரக்அத்கள் மட்டும் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அப்படித் தான் தொழுதார்கள்.
இப்னு சுபைர் (ரலி) உடன் தாம் போர் தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ஜாஜ், இப்னு உமர் (ரலி) இடம், 'அரபாவில் தங்கும் போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு ஸாலிம், நீர் நபி வழியைப் பின்பற்ற நாடினால், அரபா நாளில் நடுப் பகலில் தொழுவீராக! என்றார். அப்போது, இப்னு உமர் (ரலி) 'ஸாலிம் கூறியது உண்மை தான் (நபித் தோழர்கள் அரபாவில்) லுஹரையும், அஸரையும், நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்' என்றார்.
நான் 'நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளர்களா?' என ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், இந்த விஷயத்தில் நபி வழியைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலை நீங்கள் பின் பற்றுவீர்கள்? எனக் கேட்டார். அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் (ரலி) ஆதாரம்: புகாரி (1662)
மஸ்ஜிதுன்னமிராவிலும்- அதன் வெளிப் பகுதியிலும் இடம் பிடித்துக் கொண்டவர்கள், இமாமுடன் சேர்ந்து, லுஹரையும், அஸரையும், ஒன்றாகச் சேர்த்து இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதுக் கொள்கின்றனர். அரபாவின் பிற பகுதிகளில் தங்கியிருப்போர், அவரவர் தங்கியுள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஜமாஅத்துடன் தொழுகைகளை நிறை வேற்றுகின்றனர்.
மஸ்ஜிதுன்னமிராவில் இமாம் குத்பா உரை நிகழ்த்துகிறார். ஹஜ்ஜின் நிகழ்ச்சிகள் அனைத்தையும்- தொலைக் காட்சியில் நேரடி ஒளி பரப்பு செய்யப் படுகின்றது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நேரடி ஒளி பரப்பைக் கண்டு களிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும், இந்த உரையை உலகமே உன்னிப்பாகக் கவனிக்கின்றது. இந்தப் பிரசங்கம் உடனுக்குடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்- அரபாத் பெருவெளியில் நிகழ்த்திய இறுதிப் பேருரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உரையாகும்.
அதோ! தூரத்தில் தெரிகிறதே! அது தான் 'ஜபலுர் ரஹ்மத்' என்னும் அருட்கொடை மலை. இம் மலையடிவாரத்தில் தான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் போது தங்கியிருந்தார்கள்.
அங்கு சென்று சிறிது நேரமேனும் நிற்க ஆசைப்பட்டு ஹாஜிகள் கூட்டம் அலை மோதுகிறது. ஆர்வத்தின் காரணமாக, சிலர் தட்டுத் தடுமாறி மலையின் மீது ஏறுகின்றனர். மலை முழுதும் மனிதத் தலைகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது மனிதக் குவியல் போல் தெரிகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இந்த மலையின் அடிவாரத்தில் தான் தங்கியிருந்தார்கள். ஆர்வம் என்ற பெயரில் அறியாமையால் மக்கள் மலையின் மீது ஏறுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.
அந்திச் சூரியன் அஸ்தமிக்கும் வரை, இந்த அரபாத் பெருவெளியில் நின்று- இறைவனை வணங்க வேண்டும்.
மாலைப் பொழுது நெருங்க நெருங்க, தல்பிய்யா முழக்கம் எட்டுத் திக்கும் எதிரொலிக்கிறது. தனித் தனியாக, சிறு சிறு குழுக்களாக, எப்படியெல்லாம் இறை தியானத்தில் ஈடுபட முடியுமோ அப்படியெல்லாம் அமர்ந்து பிரார்த்தித்த வண்ணம், இந்தப் பொன் மாலைப் பொழுதில் ஹாஜிகள்- பெறற்கரியப் பேற்றைப் பெறுகின்றனர். இதயம் திறந்து இறைவனிடம் மன்றாடுகின்றனர். இனியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும்? இதுவே இறுதி வாய்ப்பாகி விடுமோ? இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
அவரவர் மொழிகளில் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்கள். இரு கண்களும் கண்ணீர் மல்க இரு கரங்களும் ஏந்தி நின்று இறைஞ்சுகிறார்கள். இந்த அரபாத் பெருவெளியில் கோடாணு கோடிப் பேர்களுடன் கூடி நின்று இறைஞ்சும் பெரும் பேற்றைப் பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதயங்கள் அழுகின்றன. கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. கல் நெஞ்சங்கள் கூட இங்கே கரைந்து போகின்றன.
மஹ்ஷர் மைதானத்தில்- நிராயுத பாணிகளாக நிற்கப் போகும் நாளை நினைத்து அழுகிறார்கள். வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு, கரங்களைப் பேசவும், கால்களை சாட்சி சொல்லவும் வைக்கப்படும்- அந்த ஒரு நாளை நினைத்து அழுகிறார்கள்.
அறியாமையால் வாழ்க்கையில் செய்து விட்ட தவறுகளை நினைத்து அழுகிறார்கள். மறுமையில் வலக்கரத்தில் பட்டோலை வழங்கப்பட வேண்டுமே என்று வேண்டி அழுகிறார்கள். அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களை நினைத்து அழுகிறார்கள். அழுதழுது பாவமன்னிப்புக் கேட்கிறார்கள்.
அருகில் உள்ளவர் அழுகின்றார்;. அல்லாஹ்விடம் ஏதோ கேட்கின்றார். ஆப்கானிய மொழி நமக்குப் புரியவில்லை. கதறி ஒருவர் அழுகின்றார். கருப்பு நிறத்து ஹபஷி அவர். பக்கத்தில் ஒருவர் பிரார்த்திக்கிறார். பாகிஸ்தானிய ஹாஜி அவர். உருது மொழியில் கேட்கின்றார். அங்கே ஒருவர் அழுகின்றார். அரபி மொழியில் இறைஞ்சுகிறார். இங்கே ஒருவர் அழுகின்றார். இனிய தமிழில் இறைஞ்சுகிறார்.
எல்லோரும் இறைஞ்சுகிறார்கள். எல்லோருக்காகவும் இறைஞ்சுகிறார்கள். தமக்காக இறைஞ்சுகிறார்கள். தம் பெற்றோருக்காக இறைஞ்சுகிறார்கள். உடன் பிறந்தவர்களுக்காக, உற்றார், உறவினர்களுக்காக, உலக முஸ்லிம்களுக்காக இறைஞ்சுகிறார்கள்.
பரந்து விரிந்த இந்த அரபாத் பெருவெளி முழுவதும் ஏங்கிய நெஞ்சங்களும், ஏந்திய கரங்களும், அழுத கண்களும், பிரார்த்தித்த வாய்களும் தான்.
இத்தனை மனிதர்களின், இத்தனை மொழிப் பிரார்த்தனைகளையும் ஒரே நேரத்தில், ஒரே ஒருவன் கேட்கின்றான். பாவமன்னிப்புக் கேட்டவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அருட் கொடைகளைக் கேட்டவர்களுக்கு அள்ளி வழங்குகிறான். இப்புனித நன்னாளில், இப்புனித இடத்தில், இப்புனித நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்பதில் எள்ளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஹலாலான உணவுண்டு, ஹலாலான உடையுடுத்தி, ஹலாலான முறையில் ஈட்டிய பொருளில் செலவு செய்து வந்தவர்களின் நேரிய பிரார்த்தனைகளும், நியாயமான கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்படும் என்பதில் கடுகளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கமே கூலி என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வாக்கில் நமக்கு அணுவளவும் சந்தேகம் இல்லை.
இன்று முதல்- இந்த நேரம் முதல்- தூய்மையானவர்களாக- பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக- கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக- குறைகள் மறைக்கப் பட்டவர்களாக- குற்றங்கள் நீக்கப் பட்டவர்களாக- இவர்களை இறைவன் ஆக்கியருள்வானாக. ஆமீன்.
துல் ஹஜ் 9 ஆம் நாள்- அரபா நாளாகிய இன்றைய தினம், சூரியன் உச்சியை விட்டு சாய்ந்ததிலிருந்து- மறையும் வரை- எவர் சிறிது நேரமேனும், இந்த அரபாத் பெருவெளியில் நிற்க வில்லையோ- அவருக்கு ஹஜ் இல்லை.
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயலே- இந்த நேரத்தில்- இந்தத் திடலில் நின்று பிரார்த்திப்பது தான். ஏனெனில், 'ஹஜ் என்பது அரபாவாகும்' என்பது நபி மொழி.
திரு மறை குர்ஆனின்- சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இன்றைய தினத்தில் இந்த அரபாத் பெருவெளியில் தான் அருளப்பட்டது.
....இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல் வறுமையின் காரணமாக நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 5:3)
அரபாத்தை விட்டுப் புறப்படுதல்
மஃரிபுடைய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரேபியப் பாலையில், அரபாத் பெருவெளியில்- ஆதவன் தனது அரும் பணியை நிறைவு செய்து விட்டு- அந்திவானத்தில் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. விலை மதிக்கவொன்னா பொன் மாலைப் பொழுது முடியப் போகிறது. வாழ்வில் கிடைத்தற்கரிய இச்சந்தர்ப்பத்தின் இறுதி நேரம் வரை ஹாஜிகள் பிரார்த்தனையில் ஈடு படுகின்றனர்.
சிலர் அவசரப்பட்டு, அரபாவை விட்டுப் புறப்படத் தயாராகின்றனர். சூரியன் நன்றாக மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்பட வேண்டும். மஃரிபுடைய நேரம் முடியும் வரை இருந்து விட்டு, மஃரிபைத் தொழாமல் இங்கிருந்து புறப்பட வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்று- மஃரிபையும் இஷாவையும்- இஷாவுடைய நேரத்தில் முஸ்தலிபாவில் தொழவேண்டும். இது தான் நபி வழி.
இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) ஆதாரம்: புகாரி (1674)
இப்னு உமர் (ரலி) முஸ்தலிபாவில் (மஃரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளை ஒரு இகாமத் கூறி சேர்த்துத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர் கூறினார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: திர்மிதி (813)
இதோ மாலைக் கதிரவன் மறைந்து விட்டான். புனித ஹாஜிகளும் அரபாவை விட்டு விடை பெறுகின்றனர். அழுதழுது கேட்ட பாவமன்னிப்பை அடையப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் பேரருள் கிடைக்கப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் நேசர்கள் அனைவரும் புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி!
புனித ஹாஜிகளாக- புண்ணிய சீலர்களாக புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி!
கூட்டம் கூட்டமாக மக்கள்- குதூகலத்துடன் முஸ்தலிபாவை நோக்கி!
வரிசை வரிசையாக வாகனங்கள்- அனைத்துமே முஸ்தலிபாவை நோக்கி!
திக்கெட்டும் கேட்கிறது தல்பிய்யா முழக்கம்.
மஷ்அருல் ஹராம்
மஷ்அருல் ஹராம் என்பது முஸ்தலிபாவில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும். புனித ஹாஜிகள் முஸ்தலிபா வரும்போது இந்த இடத்தில் நின்று இறைவனை நினைவு கூறுகிறார்கள். ஏனெனில் இது இறைவனின் கட்டளையாகும்.
....அரபாத் பெரு வெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள். அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் நீங்கள் வழி தவறி இருந்தீர்கள். (திருக் குர்ஆன் 2:198)
மஷ்அருல் ஹராம் என்னும் மகிமை மிக்க இடத்தில் இறைக் கட்டளைப்படி- இறைவனை நினைவு கூர்ந்த ஹாஜிகள், முஸ்தலிபாவுக்கு வந்து-
இந்த இரவுப் பொழுதை இங்கேயே கழிக்கிறார்கள். இரவின் பிற்பகுதியில், எங்கு நோக்கினும் பாங்கு சப்தம். இது தஹஜ்ஜுத் என்னும் நடுநிசித் தொழுகைக்கான பாங்கு. தனித்தனியாகவும், கூட்டமாகவும் நடுநிசித் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.
பொழுது புலரப் போகின்றது. அதற்கு முன் மறுபடியும் பாங்கோசை. ஆம் இது வழக்கம் போல் பஜ்ர் என்னும் அதிகாலைத் தொழுகைக்கான பாங்கு சப்தம்.
களைப்புத் தீர சற்று நேரம் உறங்கி ஓய்வெடுத்தவர்கள் ஆர்வத்துடன் எழுகின்றனர். பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.
இங்கே முஸ்தலிபாவிலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள் அனைத்தும் சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளன. பஜ்ருத் தொழுகையை முடித்து விட்டு இனி அடுத்தடுத்தக் கடடைகளை நிறைவேற்ற அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர்.
முஸ்தலிபாவில், பஜ்ருத் தொழுகையை அதன் முன் நேரத்திலேயே தொழுது விட வேண்டும். இது தான் நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை. இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று (முஸ்தலிபாவில்) மஃரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதது. இன்னொன்று பஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிபாவிலேயே) தொழுதது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆதாரம்: புகாரி (1682)
பஜ்ருத் தொழுகையை சீக்கிரமே முடித்து விட்டு சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவை விட்டு புறப்பட வேண்டும் என்பதால் ஹாஜிகள் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர் மினாவை நோக்கி!
நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (819)
பெண்கள், குழந்தைகள், இயலாத முதியோர்கள், சற்று முன் கூட்டியே புறப்பட்டுச் செல்வது தவறில்லை. அப்படியே முன் கூட்டியே மினா சென்றடைந்தவர்கள்- சூரியன் உதிக்கும் வரை கல்லெறியக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். 'சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம்' எனவும் கூறியனுப்பினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (817)
துல் ஹஜ் 10 ஆம் நாள்- ஹஜ்ஜின் 3 ஆம் நாள்
உலகம் முழுலதும் வாழும் முஸ்லிம்களுக்கு, இன்று தான் ஹஜ்ஜுப் பெருநாள். ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திரு நாள். உலக முஸ்லிம்கள் இன்று பெருநாள் தொழுகைத் தொழுவார்கள். ஆனால் ஹஜ் செய்பவர்களுக்கு இன்று பெருநாள் தொழுகை கிடையாது. இன்று காலை பஜ்ருத் தொழுகையை, முஸ்தலிபாவில் முடித்து விட்டு மினாவுக்குச் செல்கின்றனர்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தம் அருமந்த மைந்தர், இஸ்மாயீல் அவர்களை- அல்லாஹ்வின் ஆணைப்படி அறுத்துப் பலியிடுவதற்காக அழைத்துச் சென்ற போது, ஷைத்தான் வழி மறித்து தடுக்கப் பார்த்தான். உறுதியான உள்ளத்துடன் சென்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், அவன் மீது கல் வீசி விரட்டினார்கள். அதன் நினைவாக- ஹஜ்ஜுக்கு வருபவர்கள், அந்த இடத்தில் இன்றளவும் கல் எறிகின்றனர். இது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும்.
இன்றைய தினம், ஹாஜிகள் முற் பகல் நேரத்தில் கல் எறிகிறார்கள். இன்று 'ஜம்ரத்துல் அகபா'வில் மட்டும் கல்லெறிய வேண்டும். இந்த ஜம்ரத்துல் அகபாவுக்கு 'ஜம்ரத்துல் ஊலா' என்றும் சொல்லப்படும்.
பத்தாம் நாளில் முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்தார்கள். அதன் பிறகுள்ள நாட்களில் சூரியன் உச்சியிலிருந்து விலகிய பின் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (818)
ஏழு பொடிக் கற்களை எறிய வேண்டும். அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
அத்தனை இலட்சம் ஹாஜிகளும் கல் எறிகிறார்கள். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும்- செருப்புகளையும் வீசுகிறார்கள். இது தவறு. கல் எறியும் கடமைக்கு இவை முரணானதாகும்.
நபி (ஸல்) அவர்கள், சுண்டி விளையாடும் அளவு சிறிய கற்களையே எறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி ) ஆதாரம்: திர்மிதி (821)
கல் எறியும் இடத்தில் நெரிசல் அதிகம். அரபா, மினா, முஸ்தலிபா ஆகிய இடங்கள் பரந்து விரிந்த மாபெரும் திடல்கள். அத்தனை இலட்சம் ஹாஜிகளும் பரந்தத் திடலில் தங்கியிருப்பதில் சிரமம் இல்லை. ஆனால், ஜம்ரா என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அத்தனை இலட்சம் பேரும் கல் எறிய வேண்டும் என்பதால் இங்கு நெரிசல் அதிகம்.
கல்லெறியும் இடத்துக்கு செல்லும் போது- கையில் பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் செல்லக் கூடாது. கூட்ட நெரிசலில் தவறிவிட வாய்ப்புண்டு. கையில் இருக்கும் பொருள் தவறி கீழே விழுந்து விட்டால்- குனிந்து எடுக்க முயலக் கூடாது. முன்னேறி வரும் கூட்டம் கீழே தள்ளிவிடலாம்.
கூட்டத்தை சமாளிக்க- 'கல்லெறியும் இடம்' இப்போது, மக்கள் போவதற்கும், வருவதற்குமாகத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப் பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர்; பலமானத் தடுப்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனர்.
பல் வேறு வருடங்களில்- கூட்ட நெரிசலில் இந்த ஜம்ராவில் தான் விபத்துக்கள் நடந்துள்ளன. சில சமயங்களில் உயிர்ச் சேதங்களும் கூட ஏற்பட்டதுண்டு. இப்போது நெரிசலின்றி மக்கள் சென்று வர பல் வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டம் கூட்டமாகச் சென்று- ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து திரும்புகின்றனர் ஹாஜிகள்.
கல்லெறி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுவரை முழங்கிக் கொண்டிருந்த தல்பிய்யாவை நிறுத்தி விடுகின்றனர். இதுவே நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிகின்றவரை தல்பிய்யா கூறிக் கொண்டே இருந்தார்கள்.அறிவிப்பவர்: பள்ல் பின் அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1685)
குர்பானி கொடுப்பது
இனி அடுத்த செயல், அறுத்து பலியிடுவதாகும்.
ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'தல்பிய்யாவை உரத்த குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து பலியிடுவதும்,' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ பக்ர் (ரலி) ஆதாரம்: புகாரி (757)
தனியொரு நபர் ஒரு ஆட்டையோ, அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.
ஹுதைபிய்யா வருடத்தில் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் அறுத்துள்ளோம் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (828)
ஹாஜிகள் குர்பானி கொடுக்கும் இடத்திற்கு வந்து குர்பானிக்காகப் பிராணிகளை வாங்கி அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (திருக் குர்ஆன் 22:37)
ஆண்டு தோறும்- வெளி நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், ஒட்டகங்களும், இறக்கு மதி செய்யப் படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பிராணிகளும், கால் நடை மருத்துவர்களால், முறையாகப் பரிசோதிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன.
ஹாஜிகள் நேரடியாகச் சென்று, பிராணியைத் தேர்ந்தெடுத்து, விலை கொடுத்து வாங்கி அவரவர் தம் கரங்களால் அறுக்கின்றனர். இயலாதவர்கள், அடுத்தவர்களை நியமித்து அறுக்கச் செய்கின்றனர்.
இது போக, ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து- வங்கிகளில் கூப்பன்கள் விற்கப்படுகின்றன. வங்கிகளில் பணம் செலுத்திவிட்டால், துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாளன்று பிராணிகள் அறுக்கப் பட்டு உரிய முறையில் பக்குவப் படுத்தப்பட்டு- வெளி நாடுகளில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அரசு கண்காணிப்பில், பல்வேறு இஸ்லாமிய சங்கங்கள் இப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றன.
புனிதத் தலங்கள் அனைத்திலும், சிறப்புக் கிளைகளை அமைத்து அல்ரஜ்ஹி வங்கி குர்பானி கூப்பன்களை விற்க ஏற்பாடு செய்துள்ளது. ஹாஜிகளுக்காக இச்சேவையை அல்ரஜ்ஹி வங்கி இலவசமாகச் செய்கிறது.
ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான டன் இறைச்சி- பதப்படுத்தப்பட்டு- இந்த முறையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எத்தனையோ நாடுகளில் வாழும் ஏழை முஸ்லிம்கள் இதனால் பயன் பெறுகின்றனர்.
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டு- அளப்பெறும் நன்மையை அடைந்த புனித ஹாஜிகள், தமது அடுத்த செயலாகிய- தலை முடியைக் களையத் தயாராகின்றனர்.
தலை முடி களைதல்
ஆண்கள் தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்ளவோ, கத்தரித்துக் கொள்ளவோ செய்யலாம், தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்வதே சிறந்தது.
நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!' எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்' என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!' என்று பிரார்த்தித்தபோது தோழர்கள், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்' என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும், அதைக் கூறிய போது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1728)
தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொண்டோ, அல்லது குறைத்துக் கொண்டோ, ஹாஜிகள் இஹ்ராமிலிருந்து விடுபடுகின்றனர். இது வரை அணிந்திருந்த இஹ்ராம் உடைகளைக் களைந்து விட்டு- வழக்கமாக அணியும் ஆடைகளை அணிந்துக் கொள்கின்றனர்.
இனி அடுத்தக் கடமை 'தவாபுஸ் ஸியாரா' செய்வதாகும்.
தவாபுஸ் ஸியாரா
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயல்களில் இந்தத் தவாபுஸ் ஸியாராவும் ஒன்று. இந்தத் தவாபைச் செய்யாதவரை ஹஜ் நிறைவு பெறாது.
ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து, குர்பானி கொடுத்து, தலை முடி நீக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்ட ஹாஜிகள், தவாபுஸ்ஸியாராச் செய்வதற்கு கஃபத்துல்லாஹ்வை நோக்கி புறப்படுகின்றனர்.
இன்றைய தினம் செய்யும் இந்தத் தவாபுஸ்ஸியாரா என்பது மிகவும் சிரமமானது தான். இது நாள் வரை ஹாஜிகள், எத்தனையோ முறை- புனிதக் கஃபாவை தவாப் செய்திருக்கலாம். அப்போதுள்ள கூட்ட நெரிசலே அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இன்று பெரும்பாலும் அத்தனை இலட்சம் ஹாஜிகளும், தவாபுஸ்ஸியாராவை நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து விடுகின்றனர்.
இன்றைய தினம், மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. சுப்ஹானல்லாஹ்! இன்று தவாபை முடித்து வெளியில் வருவது என்பது இலேசான காரியமல்ல.
கஃபா என்னும் இறையாலயத்தை- இன்றைய தினம் புனித ஹாஜிகள் சுற்றி வரும் காட்சியை- மஸ்ஜிதுல் ஹராமின் இரண்டாவது- மூன்றாவது தளங்களில் நின்று பார்த்தால்- பார்த்துக் கொண்டே இருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி!
ஏறக் குறை இருபது இலட்சம் பேர் சுற்றுகிறார்கள். கடல் அலையைப் போல் - மனித வெள்ளம் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றது.
ஏழுச் சுற்றுக்களை முடித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். புதிதாக நுழைபவர்கள் தங்கள் சுற்றுக்களைத் தொடங்குகின்றனர்.
இன்று காலை முதல் தொடங்கிய நெரிசல்- இன்று பகல் முழுவதும் நீடிக்கின்றது. இரவு முழுவதும் தொடர்கின்றது.
உணவை மறந்து, உறக்கத்தை மறந்து, எப்படி இவர்கள்- கொஞ்சம் கூடக் களைப்பு இல்லாமல் சுற்றுகிறார்கள்.
இன்றைய தினம் காலையிலிருந்து ஒவ்வொரு செயலாகச் செய்து முடித்து விட்டு- எவ்வளவு சுறுசுறுப்பாக தவாபும் செய்கின்றனர்! இயலாமையும் சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போக- இளமையும் வலிமையும் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?
இறைவனின் கட்டளையை சிரமேற் கொண்டு வந்தவர்களுக்கு, உற்சாகமும், உத்வேகமும் தாமாக வந்து விடுமோ!
இன்றைய தினத்தின் செயல்களை, தவறுதலாகவோ, அறியாமையாலோ, முன் பின் மாற்றிச் செய்து விட்டாலும் குற்றமில்லை.
நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!' என்றார். இன்னொருவர் எழுந்து 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்! கல்லெறிவதற்கு முன் பலியிட்டு விட்டேன்.' என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே, நபி (ஸல்) அவர்கள், 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்' என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்' என்றே கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) ஆதாரம்: புகாரி (1737)
துல் ஹஜ் 11 ஆம் நாள் - ஹஜ்ஜின் 4 ஆம் நாள்
தவாபுஸ்ஸியாராவை முடித்த ஹாஜிகள். ஏற்கனவே 8 ஆம் நாள் மினாவில் தங்கியிருந்த கூடாரங்களுக்கு- மறுபடியும் வந்து சேருகின்றனர்.
இன்று முதல், மூன்று தினங்கள், ஒவவொரு நாளும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு- மூன்று ஜம்ராவுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாளில் (தல் ஹஜ் 10 ஆம் நாள்) முற்பகல் நேரத்தில் கல்லெறிந்தார்கள்.மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: புகாரி (பாடம் 134)
ஹாஜிகள் அவரவர் தம் கூடாரங்களிலிருந்து, ஜம்ராவுக்குச் சென்று கல்லெறிகிறார்கள். இன்று முதல், மூன்று தினங்களுக்கு தினமும் ஜம்ரத்துஸ் ஸுக்ரா, ஜம்ரத்துல் உஸ்தா, ஜம்ரத்துல் அகபா, ஆகிய மூன்று ஜம்ராக்களிலும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும் போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்று கைகளை உயர்;த்தி துஆச் செய்வார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு இடது பக்கமாகப் பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள் பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். அறிவிப்பவர்: ஸுஹ்ரி (ரலி) ஆதாரம்: புகாரி (1753)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்துக் காட்டிய அதே முறையைப் பின்பற்றி ஹாஜிகள் ஜம்ராக்களில் கல் எறிகிறார்கள். முதல் நாள் இருந்த அளவுக்கு மக்கள் நெரிசல் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. அவரவர் தம் வசதிப்பட்ட நேரங்களில் வருவதால்- கூட்டம் சற்று குறைவாகத் தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் கல்லெறிந்து விட்டு மினாவில் அவரவர் கூடாரங்களில் சென்று ஹாஜிகள் ஓய்வெடுக்கின்றனர். கிடைக்கின்ற நேரமெல்லாம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழிக்கின்றனர்.
மினாவில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் அந்தந்த நாட்டு ஹஜ் கமிட்டியினராலும்- தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலம் வந்தவர்களுக்கு அந்தந்த நிறுவனத்தினராலும், தனித்தனியே கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
ஒவ்வொரு நாட்டினருக்காகவும், அமைக்கப்பட்டுள்ள கூடாரப் பகுதிகளில் அந்தந்த நாட்டு தேசியக் கொடி அடையாளத்துக்காக பறக்கவிடப்பட்டுள்ளது.
உள் நாட்டிலிருந்து தனிப்பட்ட முறையில் வந்தவர்கள் கூடாரங்களை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கின்றனர்.
கூடாரங்கள் கிடைக்கப் பெறாதவர்கள், தங்குவதற்கென- நீண்ட பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில் இலவசகமாகத் தங்கிக் கொள்ளலாம். எல்லா இடங்களிலும் தாராளமாகத் தண்ணீர் வசதியும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
துல் ஹஜ் 12 ஆம் நாள்- ஹஜ்ஜின் 5 ஆம் நாள்
முன் தினத்தைப் போலவே - இன்றும் ஹாஜிகள் சூரியன் உச்சியை விட்டு சாய்ந்த பிறகு தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டு மூன்று ஜம்ராக்களிலும், முறையே ஏழு கற்கள் வீதம் எறிகின்றனர்.
முதியவர்கள் மற்றும், இயலாதவர்களுக்குப் பகரமாக மற்றவர்கள் கல்லெறியலாம். பகரமாக எறிபவர்கள், முதலில் தமக்காக எறிந்துக் கொள்ள வேண்டும். பிறகு தம்மைப் பகரமாக நியமித்தவர்களுக்காக எறிய வேண்டும்.
வழக்கம் போல் ஹாஜிகள் ஒவ்வொரு கல்லாக எறிகின்றார்கள். ஒவ்வொரு கல் எறியும் போதும் தக்பீர் கூறுகிறார்கள். முதல் இரண்டு ஜம்ராக்களிலும் நின்று துஆச் செய்து விட்டு மூன்றாவது ஜம்ரவாகிய ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்ததும், நின்று துஆச் செய்யாமல் திரும்பி விடுகின்றனர்.
துல் ஹஜ் 13 ஆம் நாள்- ஹஜ்ஜின் 6 ஆம் நாள்
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.(இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்! (திருக் குர்ஆன் 2:203)
11 ஆம் நாளும், 12 ஆம் நாளும் ஆகிய இரு தினங்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் புறப்படலாம். ஆனால் மஃரிபுக்கு முன் புறப்பட்டு விட வேண்டும். இன்று மினாவில் தங்கினால், 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டுத் தான் புறப்படவேண்டும்.
இரண்டு நாட்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் 13 ஆம் நாளும் கல்லெறிந்து பூரணமாகத் தங்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி விட்டுத் தான் புறப்படுகின்றனர்.
இனறைய தினத்துடன் புனித ஹஜ்ஜின் அனைத்து செயல்களும் நிறைவடைகின்றன.
எந்தப் புனிதக் கடமையை நிறைவேற்ற- இப்பூவுலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும்- இப்புனித பூமிக்கு வந்தனரோ! அந்தப் புனிதக் கடமையின் அனைத்து செயல்களும் இன்றோடு முடிவடைந்து விட்டன.
அல்ஹம்து லில்லாஹ்
புறப்படத் தயாராகின்றனர்- புனித ஹாஜிகள்
புனித ஹஜ்ஜின் அனைத்துக் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றி- புண்ணியம் பெற்ற புனித ஹாஜிகள்- ஒரு சில தினங்கள் புனித மக்காவில் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட விடுதிகளில் வந்து தங்கி இளைப்பாறுகின்றனர்.
புனித மக்காவின் கடை வீதிகள் நிரம்பி வழிகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்- புனித மக்காவின் கடைகள் முழுதும் குவிந்துக் கிடக்கின்றன.
புனித ஹாஜிகள்- ஹஜ்ஜை முடித்து தம் இல்லங்களுக்குத் திரும்பும்போது- தம்மை அன்புடன் எதிர் பார்த்து காத்திருக்கும்- உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
திரு மறை குர்ஆன் பிரதிகள், தொழுகை விரிப்புகள், வாசனைத் திரவியங்கள், சுவையான பேரீத்தம் பழங்கள், புனித ஹஜ்ஜின் நினைவாக- காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க- பல்வேறு பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
உறவினர்களுக்கு வழங்க - ஜம்ஜம் தண்ணீரையும் தேவையான அளவு எடுத்து வைக்கத் தவறவில்லை.
(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. (திருக் குர்ஆன் 2:198)
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ், ஆகியவை அறியாமைக் காலத்தில் கடை வீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை (2:198) என்ற வசனம் இறங்கியது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: புகாரி (2050)
எனவே புனித ஹாஜிகள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதில் தவறில்லை.
'தவாபுல் விதா' எனும் பயணத் தவாபு
யாரேனும் ஹஜ் செய்தால், அவரது கடைசிக் காரியம் பைத்துல்லாஹ்வில் (தவாபு செய்வதாக) அமையட்டும். மாதவிடாய் ஏற்பட்டவர்களைத் தவிர, என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (866)
பயணத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டு- பயணத் தவாபு செய்வதற்கு ஹாஜிகள் தயாராகி விட்டனர்.
மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து- ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்திலிருந்து தவாபைத் தொடங்கி- ஏழு முறை கஃபாவை வலம் வந்து- மகாமே இப்ராஹீமில் தொழுது- ஜம்ஜம் நீரருந்தி- தங்கள் பயணத் தவாபை நிறைவு செய்கின்றனர்.
புனிதக் கஃபாவிடமிருந்து பிரியா விடை பெறுகின்றனர். கஃபாவைக் காணக் காண ஹாஜிகளின் கண்கள் குளமாகின்றன. கண்களிலிருந்து குற்றால அருவியெனக் கொட்டுகிறது கண்ணீர். 'இந்தக் கஃபாவை விட்டுப்பிரியப் போகின்றோமே' என்பதை நினைக்க நினைக்க, இனிய இறை நேசர்களின் இதயங்கள் அழுகின்றன. கண்குளிர- உளம் மகிழ- இந்தக் கஃபாவைக் கண்டுக் கொண்டே- இங்கேயே இருந்துவிட மாட்டோமா? என்று இந்த இனியவர்களின் இதயங்கள் ஏங்குகின்றன.
அழிகின்ற இந்த உலகத்தை- இதில் வாழும் மனிதர்களை- அநாச்சாரங்களும், அநியாயங்களும், அட்டூழியங்களும், நிறைந்த சமூகத்தினரையெல்லாம், கண்டு அலுத்துப் போன இதயங்களுக்கு இத்தனை நாட்களும் இங்கே அமைதி கிடைத்தது. ஆறுதல் கிடைத்தது. இதை விட்டுச் செல்லப் போகின்றோம் எனும் போது- கல் நெஞ்சமும் கரையத்தானே செய்யும்.
புனித ஹஜ்ஜை இனிதே நிறைவேற்றும் பெரும் பேற்றைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளாய் இங்கிருந்து செல்கின்றனர்.
பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக- பரிசுத்த மனதோடு- பக்தி நிறைந்த உள்ளத்தோடு- நல்ல இன்பத்தின் பொலிவோடு- இதயத்தின் வலிவோடு- ஈமானின் நிறைவோடு- புனித ஹாஜிகளாய்- புண்ணிய சீலர்களாய்- இந்தப் புண்ணிய பூமியை விட்டுப் புறப்படுகின்றனர்.
ஹாஜிகள் தாயகம் திரும்ப- தத்தம் வாகனங்களில் ஏறி அமர்ந்து விட்டனர்.தரை வழியாக வந்த வாகனங்கள், சிங்காரச் சாலைகளில் சீறிப் பாய்ந்த வண்ணம் புறப்படுகின்றன.
நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தக் கப்பல்கள், நீரைக் கிழித்த வண்ணம்- இஸ்லாமியத் துறைமுகத்திலிருந்து மிதக்கத் துவங்கி விட்டன.வான் வெளிப் பாதையில் வந்திறங்கிய விமானங்கள் - ஜித்தாவின், மன்னர் அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமானத் தளத்திலிருந்து, திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டன.ஹாஜிகள் மனத் திரையில் படக் காட்சிகளைப் போல் ஒவ்வொரு காட்சிகளாக வந்து போகின்றன.
அவரவர் தம் இல்லங்களிலிருந்து ஆர்வத்துடன் புறப்பட்டதும்-
இஹ்ராம் உடை தரித்து- இனிய ஹஜ்ஜுக்காகத் தயாரானதும்-
மக்கத் திரு நகரில் மகிழ்ச்சியுடன் இறங்கியதும்-
மஸ்ஜிதுல் ஹராமில் மனம் குளிர நுழைந்ததும்-
மாண்புடன் கஃபாவைத் தவாபு செய்ததும்-
மகாமே இப்ராஹீமில் தொழுததும்-
ஜம்ஜம் நீரருந்தியதும்-
ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடியதும்-
புனித உம்ராவை இனிதே நிறைவேற்றியதும்-
மக்காவைச் சுற்றி ஒரு மகிழ்ச்சிப் பயணம் செய்ததும்-
மதீனத் திரு நகரில் நுழைந்ததும்-
மஸ்ஜிதுன்னபவியில் தொழுததும்-
மாநபியின் மண்ணறையை மாண்புடன் தரிசித்ததும்-
மதீனாவைச் சுற்றி மனம் குளிரக் கண்டதும்-
மீண்டும் புறப்பட்டு மக்காவை வந்தடைந்ததும்-
புனித ஹஜ்ஜுக்கு ஆயத்தமானதும்-
மினாவின் கூடாரங்களில் தங்கியதும்-
அரபாத் பெருவெளியில் நின்றதும்-
அழுதழுது பாவமன்னிப்புக் கேட்டதும்-
முஸ்தலிபாவில் முழு இரவைக் கழித்ததும்-
ஜம்ராவுக்குச் சென்றதும்-
மூன்று நாட்கள் கல்லெறிந்ததும்-
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டதும்-
தலை முடிக் களைந்ததும்-
தவாபுஸ்ஸியாராச் செய்ததும்-
இறுதியாக இன்றைய தினம் பிரியா விடை பெற்று பயணத் தவாபுச் செய்ததும்-
பசுமரத்தாணி போல் பதிந்து விட்டநினைவுகளை அசை போடுகிறார்கள் அல்லாஹ்வின் நேசர்கள்.
ஆண்டாண்டு காலமாக வந்து சென்ற- அத்தனை கோடி ஹாஜிகளின்- அங்கீகரிக்கப் பட்ட ஹஜ்ஜுக்கு சாட்சி கூறும் அரபாத் பெருவெளியும்-உண்மை விசுவாசிகளின் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு மௌன சாட்சி கூறும் முஸ்தலிபா நிலப் பரப்பும்-அடுத்தடுத்த ஆண்டுகளில் வரப் போகின்ற அல்லாஹ்வின் நேசர்களுக்காகக் காத்திருக்கின்றன.
இலட்சோப லட்சம் மக்கள் தங்கிச் சென்ற மினாவின் கூடாரங்கள் வெறிச் சோடிக் கிடக்கின்றன. வரும் ஆண்டுகளில் வரவிருக்கும் புனிதர்களுக்காகக் காத்திருக்கின்றன.
இறையில்லம் கஃபாவைச் சுற்றுதல் மட்டும் எப்போதும் எப்போதும் தொடர்;ந்துக் கொண்டே இருக்கும். சங்கிலித் தொடரான இச்சுற்றுதல் சதா சர்வ காலமும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். தினந் தோறும் வருகின்;ற- ஏராளமான மக்கள்- என்றென்றைக்கும் இந்த இறையில்லத்தை சுற்றிக் கொண்டே இருப்பர்.அண்டம் அழியும் வரை, மண் மாயும் வரை, யுகம் முடியும் வரை ஓயாது ஒழியாது சுற்றிக் கொண்டே இருப்பர்.
நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ்ஜிலிருந்தோ, உம்ராவிலிருந்தோ, திரும்பும் போது- பூமியில் உயரமான பகுதியில் ஏறினால், மூன்று தடவை தக்பீர் கூறுவார்கள். பிறகு
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, ஸாயிஹூன, லிரப்பினா ஹாமிதூன, ஸதகல்லாஹு வஃதஹு, வ நஸர அப்தஹுவ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (873)
எளிய முறையில் ஹஜ் செய்ய
சில அரிய ஆலோசனைகள்
பலர் சேர்ந்து தவாப் செய்ய வந்தால், தவாப் சுற்றத் தொடங்கும் போது, தொடங்குவதற்கு முன் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியின் உட் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் வைத்துக் கொண்டு, 'தவாபை முடித்து இந்த இடத்தில் வந்து சேர்ந்துவிடவேண்டும்' என்று நிர்ணயம் செய்துக் கொள்ளுங்கள்.
கூட்ட நெரிசலில் உடன் வந்தவர் தவறிவிட்டால், மீதியுள்ள சுற்றுக்களை மன நிம்மதியுடன் சுற்ற முடியாது. இவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயம் செய்துக் கொண்டு தவாப் சுற்றத் தொடங்கினால், இடையில் பிரிய நேர்ந்தாலும், ஏழு சுற்றுக்களை நிறைவு செய்த பின் மீண்டும் மற்றவர்களுடன் இணைந்துக் கொள்ளலாம்.
மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைய, பல வழிகள் உண்டு. ஒவ்வொரு நுழை வாயிலுக்கும் பெயர்கள் உண்டு. அனைத்து பெரிய, மற்றும் சிறிய நுழைவாயில்களுக்கும் எண்கள் உண்டு.பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி- பார்ப்பதற்கு எல்லா இடங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றும். எனவே நுழைவாயில் எண்களை நினைவு வைத்துக் கொள்ளலாம்.
தவாப் சுற்றத் தொடங்கும் போதும், ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடத் தொடங்கும் போதும் இதே முறையைப் பின்பற்றுங்கள். கடமைகளை நிம்மதியாக நிறைவேற்றலாம்.
உங்கள் தங்குமிடங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரும்போது, ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள நுழைவாயில் வழியே வருகின்றீர்கள். மறுபடியும் திரும்பிச் செல்லும் போது அதே நுழைவாயில் வழியே வெளியேறினால் தான் உங்கள் தங்குமிடங்களுக்கு எளிதாகச் சென்றடைய முடியும்.
பள்ளியின் உள்ளே உங்கள் கடமைகளை முடித்து வெளியே வரும்போது- தவறுதலாக வேறு வழியாக வெளியே வந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உள்ளே நுழைந்த குறிப்பிட்ட நுழைவாயிலைத் தேடி, பள்ளியின் வெளிப் புறம் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். மிக நீண்ட தூரம் சுற்ற வேண்டியிருக்கும். வந்த வழியே மறுபடியும் உள்ளே சென்று, பள்ளியின் உட்பகுதியில் நுழைவாயில் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து- அதன் வழியே வெளியேறுங்கள். இது தான் எளிதாக இருக்கும்.
தவாப் சுற்றும்போது- தொழுகைக்கான பாங்கு சொல்லப் பட்டுவிட்டால், உடனடியாக தவாபை அப்படியே நிறுத்திவிட்டு- தொழுவதற்கு வசதியான இடத்தைத் தேடி நின்று விடுங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் நின்று தொழ இடம் கிடைப்பது சிரமமாகிவிடும்.
ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு, தவாபின் மீதியுள்ள சுற்றுக்களை பூர்த்தி செய்துக் கொள்ளலாம். மறுபடியும் முதல் தவாபிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை.
தவாப் சுற்றும் போது நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில், ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுத்தான் ஆக வேண்டும், என்று அவசியமில்லை. ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது சுன்னத் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முதியவர்களையும், பெண்களையும் இடித்துத் தள்ளி இடையூறு செய்வது ஹராம் ஆகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காகப் பல ஹராம்களைச் செய்யக் கூடாது. தூரத்திலிருந்தே ஹஜருல் அஸ்வதை நோக்கி சைகை செய்து தக்பீர் கூறினால் போதுமானது.
தவாபின் முதல் சுற்றுக்காக ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடிக்கவும், ஒவ்வொரு சுற்றின் போதும் சுற்றுக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளவும், சிரமப்படத் தேவையில்லை. ஹஜருல் அஸ்வத் இருக்கும் பகுதிக்கு நேராகத் தரையில் கருப்புக் கோடு அடையாளமிடப்பட்டுள்ளது. தரைப் பகுதியை கவனித்துக் கொண்டே சுற்றினால் எளிதில் அடையாளம் காண முடியும்.
ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடும்போது- ஒரு குறிப்பிட்டப் பகுதியில் ஆண்கள் சற்று வேகமாக ஓட வேண்டும். அந்தக் குறிப்பிட்டப் பகுதியை அடையாளம் காண பச்சை விளக்குகள் எந்த நேரமும் எரிந்துக் கொண்டே இருக்கும்.
தவாப் சுற்றும் போதும், ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடும் போதும், சிலர் கைகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு, அவற்றில் எழுதப்பட்டுள்ள குறிப்பிட்ட துஆக்களைத் தான் ஓத வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எதுவுமில்லை.
இந்தப் புனிதமான நேரங்களில் நமக்குத் தெரிந்த, அண்ணல் நபி (ஸல்) கற்றுத் தந்த எளிமையான திக்ருகளை ஓதலாம். பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனைகள் அவரவர் தாய் மொழியிலேயே கூட இருக்கலாம்.
தவாப் சுற்றும் போதும், தொங்கோட்டம் ஓடும் போதும், அடுத்தவர் மீது இடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். நம்மைவிட விரைவாகச் செல்பவர்களுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டும். மெதுவாகச் செல்பவர்கள் ஓரமாகச் செல்லலாம்.
தவாப் சுற்றும் போது, ஹிஜ்ர் இஸ்மாயீல் எனப்படும் அரை வட்டச் சுவற்றின் உட்பகுதியில் சுற்றக் கூடாது.ஏனெனில் அதுவும் கஃபாவின் ஒரு பகுதியாகும்.
தவாப் செய்து முடித்த பிறகு, மகாமே இப்ராஹீம் இருக்கும் இடத்திற்கு அருகில் தான் தொழ வேண்டும் என்பதில்லை. அந்த இடத்தில் நின்று தொழுவது- தவாப் சுற்றுபவர்களுக்கு இடையூறாக இருக்கும். தொழுகையையும் முழுமையாக நிறைவேற்ற முடியாது. மஸ்ஜிதுல் ஹராமின் எந்தப் பகுதியிலும் தொழுதுக் கொள்ளலாம்.
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில் சிலர், மேலும் மேலும் உம்ராக்களைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். ஆர்வத்தின் காரணமாக இவ்வாறு செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவ்வாறு செய்வது விரும்பத் தக்கதல்ல. பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இதை அங்கீகரிக்கவில்லை.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் தவாப் செய்யலாம். மார்க்க வல்லுனர்களும் மாமேதைகளும் இதையே வலியுறுத்துகின்றனர்.
தமத்துவ் வகை ஹஜ் செய்பவர்கள், ஹஜ்ஜுடைய நாள் வந்ததும், தன்யீம் அல்லது ஆயிஷாப் பள்ளி என்ற இடத்துக்குச் சென்று தான் இஹ்ராம் அணிய வேண்டும் என்பதில்லை. மக்காவில் அவரவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் பின் வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல் ஹுலைபாவையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும், யமன் வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ணையும் நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும், ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும், உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள் தாம் வசிக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்;: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1529)
தனிப்பட்ட முறையில் ஹஜ்ஜுக்கு வரும் சிலர்- மினாவிலும், அரபாவிலும், முஸ்தலிபாவிலும், தங்க வேண்டிய சமயங்களில்- கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, இந்தப் புனிதத் தலங்களின் எல்லைகளைத் தாண்டிச் சென்று விட வாய்ப்பு உண்டு.
ஒவ்வொரு பகுதியிலும் கடைசி எல்லையைக் குறிப்பிட்டு மாபெரும் அறிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைகளைத் தாண்டிச் சென்று விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.உதாரணமாக, ஹஜ் என்பது அரபாத் எல்லையில் இருப்பது தான். அரபாத் எல்லைக்கு வெளியே சென்று தங்கினால் ஹஜ் கூடாது. எனவே மிகுந்த கவனம் தேவை.
அரபா தினத்தில், சூரியன் மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் சூரியன் மறைவதற்குமுன் புறப்படக் கூடாது.அரபாவில் மஃரிபைத் தொழாமல்- முஸ்தலிபா சென்றடைந்த பிறகு தான், இஷாவுடைய நேரத்தில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழ வேண்டும்.
ஜம்ராவில் எறிய வேண்டிய கற்களை, முஸ்தலிபாவில் தான் பொறுக்க வேண்டும் என்பதில்லை. எந்தப் பகுதியிலும் பொறுக்கிக் கொள்ளலாம். கற்களைத் தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
கல்லெறியும் போது, சுண்டி விளையாடும் அளவுக்கு சிறிய கற்களையே எறிய வேண்டும். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும், செருப்புகளையும் வீசுகின்றனர். இது தவறாகும். கல்லெறியும் கடமைக்கு முரணானதாகும்.கல்லெறியும் போது ஏழு கற்களையும் ஒன்றாகச் சேர்த்து எறியக் கூடாது.ஒவ்வொரு கல்லாகத் தான் எறிய வேண்டும். அதுவும் தக்பீர் கூறி எறிய வேண்டும்.
இறையில்லம் கஃபாவைத் தவாபு செய்யும் போது, அதன் உள்ளே அல்லாஹ் இருக்கின்றான் எனக் கருதக் கூடாது. அல்லாஹ்வை வணங்க உலகில் கட்டப்பட்ட முதல் இல்லம் இது. அவ்வளவு தான்.
கஃபாவைப் பிரிந்து வரும்போது, சிலர் பின்னோக்கி வருகின்றனர். கஃபாவை நோக்கி முதுகுப் புறத்தைக் காட்டக் கூடாது எனக் கருதுகின்றனர். இது போன்ற மூட நம்பிக்கைகள் மார்க்கத்தில் இல்லை.
கஃபாவை தவாப் சுற்றுவது போல், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தைச் சுற்றி வருவதோ, தொட்டு முத்தமிடுவதோ கூடாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் முன்னர் நின்று அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டுமே தவிர, அவர்களிடம் கையேந்திப் பிரார்த்திப்பதோ, தமது தேவைகளை நிறைவேற்றித் தரும்படிக் கேட்பதோ கூடாது. இது ஷிர்க் ஆகும். ஷிர்;க்கை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்.
உஹது மலையடிவாரம், ஹிரா குகை, ஆகிய இடங்களிலும், மற்றும் மக்கா மதீனாவின் பிற இடங்களிலும் உள்ள மண்ணைப் புனிதம் என்றுக் கருதி அள்ளி வைத்துக் கொள்வதோ, எடுத்து வருவதோ கூடாது. மக்கா மதீனா நகரங்கள் புனிதமானவை தான். அதில் சந்தேகமில்லை.அதற்காக அங்குள்ள கல்லும் களிமண்ணும் புனிதமானவை என்று பொருள் அல்ல.
புனிதஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன்
புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயண்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள்.
கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவுர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.
புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள்.
வசதிக்காக அதிகமான உடமைகளை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சென்று திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். குறைவான உடமைகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.
அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும்.
குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.
புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.
உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
புறப்படுவோம் வாருங்கள்
இஸ்லாத்தின் இறுதிக் கடமையாம், புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான பொருள் வளமும், உடல் நலமும், பெற்றவர்களே!
இனியும் உங்கள் பொன்னான வாய்ப்பைத் தவற விடாதீர்கள். 'அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்துக் கொள்ளலாம்' என்று காலம் கடத்தாதீர்கள். அது வரை இருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?
இன்றைய தினமே இறந்து போய்விட்டால், வங்கிக் கணக்குகளும், வாங்கிவைத்த சொத்துக்களும் உங்களுடையதல்ல. பங்கு போட்டுக் கொள்ள பங்காளிகள் பத்து பேர் தயாராக நிற்கின்றனர். அரும்பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை அப்படியே போட்டுவிட்டு போகப் போகின்றீர்கள். அதற்கு முன் அல்லாஹ் உங்களுக்கு விதித்த கடமையைச் செய்து விட்டு, மறுமைப் பயணத்துக்குத் தயாராகுங்கள்.
வயோதிகத்தை அடைந்த பிறகு ஹஜ்ஜுக்குச் செல்வதை விட, நல்ல உடல் வலிமை இருக்கின்ற போதே செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் தள்ளாத வயதில், ஹஜ்ஜுடையச் செயல்களை- முறையாக- முழுமையாகச் செய்வது சிரமமாக இருக்கும்.
இளமையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், இருக்கும் இப்போதே ஹஜ்ஜுக்குச் செல்வது- ஹஜ்ஜின் எல்லாக் கடமைகளையும் சிறப்பாகச் செய்ய வசதியாக இருக்கும்.
புனித ஹஜ்ஜின் நேர் முக வர்ணனையாக நாம் எழுதியிருப்பது மிகவும் குறைவு. நேரடியாக நீங்கள் அனுபவித்துப் பாருங்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதப் பேரின்பம் பெறுவீர்கள்.அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றுக் கொள்ள 'புனித ஹஜ்ஜுக்குப் போகவேண்டும்' என்னும் ஆர்வம் இன்னுமா உங்கள் இதயத்தில் எழவில்லை?
புறப்படுவோம் வாருங்கள்
புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்.

புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம் Part1

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஹஜ் என்ற அந்த பெரும் கடமையை நிறைவேற்றிய நண்பர் எ- அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் ஹஜ் செய்பவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் விதத்தில் அந்தப் பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாக தொகுத்து 'நேர்முக வர்ணனை'யாக வழங்குகிறார். கட்டுரையின் பெயரிலேயே இந்த அனுபவக் கட்டுரை பல ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகமாகவும் வந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. (எடிட்டர்)

சமத்துவ மார்க்கம் இஸ்லாம்
இஸ்லாம் ஓர் உலக மார்க்கம். இதன் அனைத்து வணக்க வழிபாடுகளும் உலகளாவிய அளவில் மனித குலத்தை ஒன்றுபடுத்துவதாக இருக்கும். திருமறை குர்ஆனின் போதனைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் செயல் பாடுகளும் இந்த இனிய மார்க்கத்தின் வழிகாட்டிகள்.
இந்த இனிய இஸ்லாம் இவ்வுலகிற்கு சமத்துவத்தைத் தந்தது. சகோதரத்துவத்தை போதித்தது. முழு மனித சமுதாயத்தையும் ஓரணியில் ஒன்றுபடுத்தும் உன்னத வழியைக் காட்டியது.
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை, வெறும் குனிதலையும், சிரம் பணிதலையும், உதட்டளவில் மந்திரங்கள் மொழிவதையும், கொண்ட சடங்கு அல்ல. நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம், படைத்த இறைவனை வணங்க பள்ளிவாசலில் ஒன்று கூடும்போது - அங்கு
ஏழை, செல்வந்தன் என்னும் ஏற்றத் தாழ்வு களையப் படுகின்றது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் வேற்றுமை வேரறுக்கப் படுகின்றது. முதலில் வந்தவர் முதலில். அடுத்தடுத்து வந்தவர் அடுத்தடுத்த வரிசைகளில். அரசனும் ஆண்டியும் அருகருகில். அவரவர் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் ஒன்று கூடும்போது அங்கே ஒரு சமத்துவம்.
வாரம் ஒருமுறை வெள்ளிக் கிழமைத் தொழுகையில் ஊரே ஒன்று கூடும்போது அதைவிட சற்று சூ9; அதிக சமத்துவம்.
ஆண்டுக்கு ஒரு முறை புனித மக்காவின் அரபாத் பெருவெளியில், உலக முஸ்லிம்கள் ஒன்று திரளும்போது மாபெரும் சமத்துவம். இதைவிடப் பெரிய சமத்துவம் இப்பாருலகில் வேறு எங்குமே இல்லை.வேறு எதுவுமே இல்லை. இது தான் ஹஜ்.
இனத்தால், குலத்தால், நிறத்தால், தேசத்தால், உண்ணும் உணவால், உடுத்தும் உடையால், பேசும் மொழியால், பின்பற்றும் கலாச்சாரத்தால், வேறு பட்ட அனைவரும்,ஒரே இடத்தில் ஒன்று திரண்டு, ஒரே உடை அணிந்து, ஒரே மறையைப் பின்பற்றி, ஒரே இறையை இறைஞ்சும் உன்னதப் பண்பாடு. இது தான் ஹஜ்.
உலகின் அனைத்து கண்டங்;களும் இங்கே சங்கமம்.
உலகின் அனைத்து நாடுகளும் இங்கே சங்கமம்.
உலகின் அனைத்து மொழிகளும் இங்கே சங்கமம்.
உலகின் அனைத்து நிறங்களும் இங்கே சங்கமம்.
உலகின் அனைத்து மனிதர்களும் இங்கே சரிசமம்.
ஆம் இது தான் ஹஜ்.
புண்ணிய சீலர்கள் வருகை
மக்காவில் 'கஃபா' என்னும் புனித இறையாலயத்தை இறைவனின் தோழர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் அருமந்த மைந்தர், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் புணர் நிர்மாணம் செய்து முடித்த போது, புனித ஹஜ்ஜூக்குப் புறப்பட்டு வருமாறு மக்களை அழைக்கும் படி, இறைவன் கூறினான்.
'மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் உம்மிடம் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்' என்று கூறினோம். (திருக் குர்ஆன் 22 27)
நடந்தும், ஒட்டகங்களில் சவாரி செய்தும் வந்திறங்கிய காலம் போக- இப்போது- கார்களிலும் பஸ்களிலும் தரை மார்க்கமாக-கப்பல்களில் கடல் மார்க்கமாக- விமானங்களில் ஆகாய மார்க்கமாக-
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற, உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்துக் கொண்டிருக்கின்றனர். துல் கஅதா மாதம் தொடங்கிவிட்டால் போதும், நாளுக்கு நாள் இறைவனின் விருந்தினர்கள் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே போகின்றது.
ஜித்தா 'இஸ்லாமியத் துறைமுகம்' கப்பல்களால் நிரம்பி வழிகின்றது. தீவுகளே இடம் பெயர்ந்து, நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தனவோ! என வியக்கும் வண்ணம், பெரும் பெரும் கப்பல்களில் புண்ணிய சீலர்கள் வந்திறங்குகின்றனர்.
ஜித்தா, மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான தளத்தில், ஆகா! இவையென்ன? பறவைகளின் அணிவகுப்பா? இல்லை இல்லை. பறந்து சூ9; வந்த விமானங்களின் அணிவகுப்பு.
அகில உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவிலிருந்து -
ஒரு காலத்தில் சூரியனே அஸ்தமிக்காத நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்திலிருந்து -
காணும் இடமெல்லாம் காடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவிலிருந்து -
காரல் மர்hக்ஸின் சித்தாந்தக் கற்பனையில் மூழ்கிப்போன கம்யூனிஸ தேசங்களிலிருந்து -
முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தோனேசியாவிலிருந்து மனங்குளிரும் மரியாதைக்குப் பேர் போன மலேசியாவிலிருந்து -
செல்வச் செழிப்பு மிக்க சிங்கப்பூரிலிருந்து -
இதயம் கவரும் பசுமை நிறைந்த இலங்கையிலிருந்து -
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிலிருந்து-
பச்சைப் பிறைக் கொடி பாகிஸ்தானிலிருந்து -
பங்காளி நாடாம் வங்காள தேசத்திலிருந்து -
இன்னும் இவை போன்ற எண்ணற்ற தேசங்களிலிருந்து -
வண்ண வண்ணப் பறவைகளாய் வானவெளிப் பாதையில் பறந்து வந்த விமானங்களிலிருந்து - இலட்சக் கணக்கான இலட்சிய வாதிகள் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்திறங்குகின்றனர்;;
திக்கெட்டும் தல்பிய்யா முழக்கம்
செங்கடலின் மணமகள்' என வார்த்தைகளால் வர்ணிக்கப் படும் ஜித்தா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் வந்திறங்கிய ஹாஜிகள், பயணக் களைப்புத் தீரச் சற்று ஓய்வெடுத்து விட்டு, புனித மக்காவை நோக்கி பயணிக்கின்றனர்.
ஜித்தாவுக்கும் புனித மக்காவுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 65 கிலோ மீட்டர். அகன்று விரிந்த அதிவிரைவுச் சாலைகளில் கார்களும் பஸ்களும் சீறிப் பாய்கின்றன.
அண்டை நாடுகளாம் அரபு நாடுகளின் அனைத்து சாலைகளும் மக்காவை நோக்கி! அகன்ற சாலைகளில் அணி அணியாக வந்துக் கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் மக்காவை நோக்கி!
தரை மார்க்கமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் - அலை கடலெனத் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற ஹாஜிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம், கூடிக் கொண்டே போகின்றது. நூறுகள் ஆயிரங்களாக, ஆயிரங்கள் இலட்சங்களாக, கணிப் பொறியின் கணக்கு கூடிக் கொண்டே போகின்றது. அத்தனை இலட்சம் பேரையும் ஆண்டு தோறும் அரவணைக்கின்றது மக்கத் திரு நகரம்.
அனைவரின் இதயங்களிலும் ஆண்டவனின் பக்தி!
அனைவரின் முகங்களிலும் ஹஜ் செய்யும் மகிழ்ச்சி!
அனைவரின் நாவுகளிலும் தல்பிய்யா என்னும் மந்திரம்!
லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்
லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்
இன்னல் ஹம்த- வந் நிஃமத்த லக வல் முல்க்
லா ஷரீக்க லக்
என்பது நபி (ஸல்) அவர்களின் தல்பிய்யாவாக இருந்தது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (755)
இலட்சக் கணக்கான ஹாஜிகளின் திரு வாய்கள் அனைத்தும், இரவும் பகலும், இருபத்து நான்கு மணி நேரமும் முழங்கிக் கொண்டிருக்கும் மூல மந்திரத்தின் பொருள் இது தான்.
வந்தேன் இறைவா! வந்தேன் இறைவா!
உன் அழைப்பை ஏற்று இதோ வந்தேன் இறைவா!
உனக்கு நிகரானவர் எவருமில்லை
அருளும் ஆட்சியும் புகழும் உனக்கே!
உனக்கு நிகரானவர் எவருமில்லை.
ஆகா! இந்தத் தாரக மந்திரத்தை ஹாஜிகள் உச்சரிக்கும் போது அவர்களின் உள்ளங்கள் குளிர்கின்றன. கேட்கும் போது நம் செவிகள் குளிர்கின்றன.
ஒரு முறையா? இரு முறையா? ஓராயிரம் முறையா? இல்லை. இதற்கு எண்ணிக்கையே இல்லை. புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து, பகலிலும், இரவிலும், காலையிலும், மாலையிலும், நிற்கும் போதும் நடக்கும் போதும் வாய் மொழிகின்றது. உறங்கும் போது கூட உள்ளங்கள் மொழிகின்றனவோ?
அவரவர் இல்லங்களிலிருந்து, புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டது முதல் மொழியத் தொடங்கிய 'தல்பிய்யா' முழக்கம், புனித மக்காவுக்கு வருகின்ற வழி நெடுகிலும், வந்து சேர்ந்த பின்னரும், புனித ஹஜ்ஜின் புண்ணியத் தலங்கள் முழுவதும், எட்டுத் திக்கும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது.
ஹஜ்ஜின் வகைகள்
ஹஜ் கடமையை மூன்று வகையாக நிறைவேற்றலாம்.
1.ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல். (இது இப்ராத் எனப்படும்)
2.ஹஜ்ஜுடன் உம்ரா என்னும் கடமையையும் சேர்த்து ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுதல்.(இது கிரான் எனப்படும்)
3.முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன் மக்காவில் தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும், மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.(இது தமத்துவ் எனப்படும்)
இஹ்ராம் உடையுடுத்திய ஏந்தலர்கள்
ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித மக்காவுக்கு வரும்போது ஒவ்வொரு வழியிலும் ஒரு எல்லையை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த எல்லைக்கு 'மீக்காத்' என்று பெயர்.
ஹஜ் அல்லது உம்ராச் செய்ய வருபவர்கள், இந்த எல்லையை அடையும் போது 'இஹ்ராம்' உடை அணிந்து தான் நுழைய வேண்டும்.
ஆகாய மார்க்கமாக வருபவர்கள், 'மீக்காத்' எல்லையைக் கடந்தே வரவேண்டியிருப்பதால், புறப்படும் இடத்திலிருந்தே குளித்து இஹ்ராம் அணிந்து வந்து விடுகின்றனர்.
கடல் மார்க்கமாக, கப்பலில் வருபவர்கள், 'மீக்காத்' எல்லையை அடையும் போது, கப்பல் நிறுத்தப் பட்டு அறிவிப்பு செய்யப் படுகின்றது. ஹாஜிகள் கப்பலிலேயே குளித்து இஹ்ராம் உடை அணிந்து தயாராகி விடுகின்றனர்.
தரை மார்க்கமாக வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள 'மீக்காத்' எல்லையில் குளித்து இஹ்ராம் அணிய வசதியாக, ஒவ்வொரு 'மீக்காத்' எல்லையிலும், பல நூற்றுக் கணக்கில், நவீன வசதிகளுடன் கூடிய குளியலறைகள் கட்டப் பட்டு, வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
உள் நாட்டிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக ஹஜ்ஜின் நாட்களுக்கு முன்னதாகவே புனித மக்காவுக்கு வரும் ஹாஜிகள் இந்த எல்லையை அடைந்ததும் குளித்து இஹ்ராம் உடை தரித்து, முதலில் உம்ராச் செய்வதற்கு தயாராகின்றனர்.
எல்லையைக் கடந்து வரும் எல்லோரும் இது வரை அணிந்திருந்த ஆடம்பர ஆடைகளைக் களைந்து 'இஹ்ராம்' என்னும் இரு வெண் துணிகளை ஆண்கள் அணிந்துக் கொள்கின்றனர். (பெண்கள் அவரவர் வழக்கமாக உடுத்தும் உடைகளை உடுத்திக் கொள்ளலாம்)
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்காக தையல் இல்லாத ஆடையை அணிந்ததை நான் பார்த்துள்ளேன்.மேலும் (இஹ்ராமுக்கு முன்னால்) குளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் தாபித் (ரலி) ஆதாரம்: திர்மிதி (760)
இஹ்ராம் உடையை அணிந்தவர்களாக-
இவ்வுலக இன்பங்களைத் துறந்தவர்களாக-
நித்திய வாழ்க்கையை நினைத்தவர்களாக-
இறை பக்தியை இதயத்தில் தேக்கியவர்களாக-
இறைவனின் அருளுக்கு ஏங்கியவர்களாக-
ஈருலக நற்பேற்றுக்கு இறைஞ்சியவர்களாக-
இறைவனிடம் இரு கரம் ஏந்தியவர்களாக-
புறப்பட்டு விட்டனர், புண்ணிய சீலர்கள், புனித மக்காவை நோக்கி! மீள ஒலிக்கிறது 'தல்பிய்யா' முழக்கம், முன்னை விட பன்மடங்கு உயர்ந்த தொணியில்.
லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்
லப்பைக்- லா ஷரீக்க லக லப்பைக்
இன்னல் ஹம்த வந் நிஃமத்த லக வல் முல்க்
லா ஷரீக்க லக்.
'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து தல்பிய்யாவின் போதும், இஹ்ராம் கட்டும் போதும், உரத்த குரலில் கூறுமாறு என் தோழர்களுக்குக் கட்டளையிடக் கூறினார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் (ரலி) ஆதாரம்: திர்மிதி (759)
மக்காவை நோக்கி வரும் மாபெரும் சாலைகளில் வாகனங்கள் அசுர வேகத்தில் பறக்கின்றன. வாகனங்களின் வேகத்தை விட, வந்திருப்போரின் இதயத்தின் வேகம் இப்போது அதிகம்.
மக்காவை நோக்கி வரும் அனைத்து பிரதான சாலைகளிலும் மக்கா நகர எல்லைக்கு வெளியே பரிசோதனை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் நிறுத்தப் பட்டு அனைவரும் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளனரா? என பரிசோதிக்கப் படுகின்றனர்.
சமீப காலம் வரை உள் நாட்டிலிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் அவரவர் தம் சொந்த வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். இதனால் மக்கா நகரின் சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
மக்கா நகரப் போக்கு வரத்துத் துறை - சகல வசதிகளையும் செய்திருந்தாலும் கூட, பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் ஒரே சமயத்தில் மக்காவின் உள்ளே நுழைந்தால் கட்டுப் படுத்துவது கடினமானக் காரியம் அல்லவா?
எனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, சவூதி அரசு ஒரு புதிய ஏற்பாட்டை நடை முறைக்குக் கொண்டு வந்தது. அதன்படி மக்கா நகர எல்லைக்கு வெளியே ஒவ்வொரு வழியிலும்'கார் நிறுத்துமிடங்கள்' அமைத்து சிறிய வாகனங்கள் அனைத்தும் இங்கேயே நிறுத்திவிட ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்தக் கார் நிறுத்துமிடங்களில் அனைத்து சிறிய வாகனங்களும் வரிசை வரிசையாக ஒரு ஒழுங்கு முறையுடன் நிறுத்தப் பட்டு, உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் படுகின்றது. ஹஜ்ஜின் அனைத்து செயல்களையும் முடித்து விட்டு இங்கு வந்து, தமது அடையாள அட்டையைக் காண்பித்து உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தத் தீவுத் திடல் முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்கள் மயம். உலகின் அனைத்து நாட்டுத் தயாரிப்புக் கார்களும், அனைத்து மாடல்களும், இங்கே அணிவகுத்து நிறுத்தப் பட்டிருக்கும் அழகே அழகு.
இந்த இடத்திற்கு அப்பால், பெரிய வாகனங்கள்- பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறிய வாகனங்களில் வந்து - தங்களது வாகனங்களை இங்கே நிறுத்தியவர்கள் - இங்கிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் மக்காவை நோக்கிப் பயணிக்கின்றனர்.
மீண்டும் தொடங்குகிறது பயணம்!
மீள ஒலிக்கிறது தல்பிய்யா முழக்கம்!
லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்
லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்
இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக வல் முல்க்
லா ஷரீக்க லக்.
மக்கத் திரு நகரில்
'இறைவனின் விருந்தினர்களை வரவேற்பதில் மக்கத் திரு நகரம் மகிழ்ச்சி அடைகிறது' என்னும் 'உம்முல் குரா' பல்கலைக் கழக அலங்கார வளைவு, ஹாஜிகள் புனித மக்காவில் நுழைந்து விட்டனர் என்பதை உணர்த்துகிறது.
எந்த நகரைச் சிறப்பித்து இறைவன் தன் திரு மறையில் இயம்பினானோ!
இறைவனை வணங்க, உலகின் முதல் இறையாலயம் எழுப்பப்பட்டச் சிறப்பு எந்த நகருக்குக் கிடைத்ததோ!
எந்த நகரில், ஈருலக வேந்தர் இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் அவதரித்தார்களோ!
இஸ்லாம் என்னும் கதிரவனின் ஒளிக் கதிர்கள், எந்த நகரிலிருந்து ஒளி வீசத் தொடங்கியதோ!
உடலுக்கு இதயத்தைப் போல உலகுக்கு இதயமான கஃபாவை எந்த நகர் தன்னகத்தே கொண்டு திகழ்கிறதோ!
அந்த மக்கத் திருநகருக்குள் ஹாஜிகள் நுழைந்து விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமுக்கு மிக அருகில் சென்று வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன.
கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மஸ்ஜிதுல் ஹராமைக் கண்ட வண்ணம், புனித மண்ணில் அடியெடுத்து வைக்கின்றனர் புண்ணிய ஹாஜிகள். விண்ணோக்கி உயர்ந்த மினாராக்களிலிருந்து கம்பீரமாகக் கேட்கிறது பாங்கொலி.
கணக்கிலடங்கா பள்ளிகளில் காலமெல்லாம் கேட்ட சப்தம் தான். இந்தப் பள்ளியின் ஒலி பெருக்கியில் மட்டும் எப்படி இத்தனை ஒரு கம்பீரம்! ஆர்ப்பரித்து எழும் கடல் அலை படிப்படியாக இறங்குவது போல் செவிகளில் ஓர் உணர்வு.
'பாலைகளில், காடுகளில், பணிபடர்ந்த நாடுகளில், சோலைகளில், தீவுகளில்,' இந்தப் பாங்கோசைக் கேட்காத இடமில்லை இப்பாருலகில். இறைவனை வணங்க உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அழைப்பு. இஸ்லாத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு.
மொழி தெரிந்தவர்- தெரியாதவர்- பொருள் புரிந்தவர்- புரியாதவர்- எல்லோருக்கும் தெரியும், இது 'அல்லாஹ்வை வணங்க அனைவரும் வாருங்கள்' என விடுக்கும் அழைப்பு.
நாள் ஒன்றுக்கு ஐவேளைத் தொழுகை. நானிலமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில், நாள் தவறாமல் நடக்கும் இந்த இறை வணக்கத்திற்காக, நாள் ஒன்றுக்கு ஐந்து முறை அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு தொழுகையின் நேரமும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடும். ஒவ்வொரு தொழுகைக்கும் அழைக்கப்படும் இந்தப் பாங்கோசை உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் கேட்டுக் கொண்டே இருக்கும். யுக முடிவு நாள் வரை இந்த சங்க நாதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
மனங்கவரும் மஸ்ஜிதுல் ஹராம்
புனித ஹாஜிகள் தாங்கள் வந்த நோக்கத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் அனைத்து வாசல் வழியாகவும் அணி அணியாக ஆர்வத்துடன் நுழைகின்றனர். இந்த மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியில் ஒரு ரக்அத் தொழுவது மற்றப் பள்ளிகளில் ஒரு இலட்சம் ரக்அத்கள் தொழுவதற்குச் சமம்.
திருக் கஃபாவை உள்ளடக்கிய இப் புனிதப் பள்ளி, பல்வேறு கால கட்டங்களிலும், விரிவு படுத்தப் பட்டு வந்திருக்கிறது.இறுதியாக, இப்போதைய ஆட்சியாளர்களால், மிகப் பிரம்மாண்டமான அளவில் விரிவு படுத்தப் பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன், அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ முடியும். கட்டடக் கலையின் சகல விதமானத் தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப் பட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும் பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் - எந்த நேரமும் ஒவ்வொரு பகுதியிலும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
மஸ்ஜிதுல் ஹராமின் மையப் பகுதியில் இதோ நம் கண்களைப் பறிக்கின்றதே! இது தான் கஃபா!
கஃபா என்னும் முதல் இறையாலயம்
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.(திருக் குர்ஆன் 3: 96)
கஃபா. சொல்லுக்கடங்காத புகழுக்குரிய இறையில்லம். இறைவனை வணங்க, உலகில் முதன் முதல் உருவாக்கப்பட்ட இறையாலயம். உலகில் இப்போது வாழும் 120 கோடி முஸ்லிம்களின் ஒரே இதயம். ஐயாயிரம் ஆண்டுகளாக அத்தனை புயல்களையும் மழைகளையும் எதிர்த்து நின்று காலத்தால் அழியாமல் அப்படியே நிமிர்ந்து நிற்கும், அல்லாஹ்வின் அருள் இல்லம்.
அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 2:125)
ஆம்! உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தை பாதுகாப்பு மையமாக இறைவன் அறிவித்து 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும், அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
1400 ஆண்டுகளுக்கு முன் அப்ரஹா என்னும் அரசன் யானைப் படையுடன், இப்புனிதக் கஃபாவை அழிக்க வந்த போது 'அபாபீல்' என்னும் சின்னஞ்சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாத்தான். திரு மறையின் 105 ஆவது அத்தியாயம் இச்சம்பவத்தை அழகாக எடுத்தியம்பு கின்றது.
அது போலவே, எல்லாக் கால கட்டத்திலும், எதிரிகளிடமிருந்தும், இயற்கையின் தாக்குதல்களிலிருந்தும். இதனை இன்று வரை இறைவன் காப்பாற்றி வருகிறான்.
கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்களாகக் காலண்டர் அட்டைகளில் மட்டுமே கண்டு களிப்படைந்தக் கஃபாவை இதோ கண் முன்னே ஹாஜிகள் காண்கின்றனர். களிப் பேருவகைக் கொள்கின்றனர். கற்பனையில் கூடக் கண்டிராதக் காட்சியைக் கண்டு கண்கள் அகல விரிகின்றன. இதயம் நடுங்குகிறது. மெய் சிலிர்க்கிறது. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர் உணர்வு. பன்னூலாசிரியர் ஆசுஆ அப்துற்றஹீம் அவர்கள் பாணியில் சொல்வதானால், 'உச்சியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்குகிறது.'
இந்தக் கஃபா, விலையுயர்ந்த கருப்புத் திரையால் மூடப் பட்டுள்ளது. திரை முழுவதும் தங்க இழைகளால் திருமறை வசனங்கள் தீட்டப் பட்டுள்ளன. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது.
தவாபுல் குதூம் என்னும் முதல் தவாப்
பொதுவாக எந்தப் பள்ளியில் நுழைந்தாலும், முதலில் 2 ரக்அத் நபில் தொழுவது சிறந்தது. ஆனால் மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைந்ததும் கடமையான ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் முதலில் தவாப் செய்வதே சிறந்தது. அதுவே முறையும் கூட.
ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித மக்காவுக்கு வரும்போது முதலில் செய்யும் தவாபுக்கு 'தவாபுல் குதூம்' என்று பெயர். கஃபாவை ஏழு முறை சுற்றி வருவது ஒரு தவாப் ஆகும்.
மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஏராளமான நுழைவாயில்கள் உள்ளன. எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம். அவரவர் வந்து சேரும் வழிகளில் உள்ள நுழைவாயில் வழியே உள்ளே நுழைகின்றனர். அவரவர் தம் தவாபுல் குதூமை அழகாகத் தொடங்குகின்றனர்.
'நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்தார்கள். ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். பின்பு வலப்புறமாக (கஃபாவை) சுற்றலானார்கள்.மூன்று சுற்றுக்கள் விரைவாகவும் நான்கு சுற்றுக்கள் சாதாரணமாகவும் நடந்து சுற்றினார்கள். பிறகு மகாமே இப்ராஹீம் எனும் இடத்திற்கு வந்தார்கள். மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (2:125) என்ற வசனத்தை ஓதிவிட்டு, தமக்கும் கஃபாவுக்கும் இடையே மகாமே இப்ராஹீம் இருக்குமாறு 2 ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ஹஜருல் அஸ்வதுக்கு வந்து அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள். 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும் (திருக் குர்ஆன் 2: 158) என்ற வசனத்தை அவர்கள் ஓதியதாக எண்ணுகிறேன்' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (784)
ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் இடத்திலிருந்து ஹாஜிகள் தவாபைத் தொடங்குகின்றனர். இயன்றால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமி;ட்டும், இயலாவிட்டால் தூரத்திலிருந்தே கைகளால் சைகை செய்தும் தவாபைத் தொடங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து தவாப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதுக் கருகே வந்த போது அதை நோக்கி சைகை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (793)
'ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கறுப்பாக்கி விட்டன' என்று நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: திர்மிதி (803)
கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும், பேசும் நாவு கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை (அல்லாஹ்) எழுப்புவான். யார் இதை முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: திர்மிதி (884)
தவாபின் ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை முத்தமிடவோ அல்லது அதை நோக்கி சைகை செய்யவோ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஃபாவை தவாப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1612)
ஹாஜிகள் தவாபைத் தொடங்குகிறார்கள். ஒரே சீராக, ஒழுங்கு முறையுடனும், மிகுந்த கட்டுப்பாட்டுடனும் சுற்றி வருகிறார்கள். இலட்சக் கணக்கான மக்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இரவும் பகலும் இடைவிடாது சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
அரசர்களும், ஆண்டிகளும், ஆட்சி செய்யும் அதிகாரிகளும், முதலாளிகளும், தொழிலாளிகளும், ஏழைகளும், செல்வந்தர்களும், ஏற்றத் தாழ்வின்றி சுற்றுகிறார்கள்.
படித்தவர்களும், பாமரர்களும், பாகுபாடின்றி சுற்றுகிறார்கள். ஆண்களும். பெண்களும், சிறியோரும், பெரியோரும், வாலிபர்களும், வயோதிகரும் அனைத்து வகை மனிதர்களும் அழகாகச் சுற்றுகிறார்கள்.
தள்ளாத வயதில் பெற்றோரைத் தம் முதுகில் சுமந்தபடி-
தாம் பெற்றக் குழந்தைகளைத் தம் தோளில் சுமந்தபடி-
வளரும் சிசுக்களைத் தம் வயிற்றில் சுமந்தபடி-
மறுமை பயத்தைத் தம் மனதில் சுமந்தபடி-
இறையச்சத்தைத் தம் இதயத்தில் சுமந்தபடி-
திருமறை குர்ஆனைத் தம் கரங்களில் சுமந்தபடி-
திக்ருகளைத் தம் நாவுகளில் மொழிந்த படி-
பாவ மன்னிப்புக் கேட்டுத் தம் கைகள் ஏந்தியபடி-
கவலையுடன் அழுதழுது கண்ணீர் சொரிந்தபடி-
சுற்றுகிறார்கள். சுற்றுகிறார்கள். சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.1400 ஆண்டுகளாக, ஆயிரமாயிரம் கோடிப் பேர்கள் சுற்றினார்கள். இந்தக் கணப் பொழுதிலும் இலட்சக் கணக்கானோர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறுதி நாள் வரை இன்னும் எத்தனை எத்தனை கோடிகளோ! எண்ணிக்கை எந்த எண்ணிலும் அடங்காது. ஏட்டிலும் அடங்காது.
ஏழு முறை கஃபாவைச் சுற்றுவது ஒரு தவாப் ஆகும். ஏழு சற்றுக்களை நிறைவு செய்தவர்கள், எவ்வளவு இதமுடன் வெயியேறுகின்றனர்! தவாபை முடித்தவர்கள், சிறுகச் சிறுக வெளியேற - தவாபைத் தொடங்குபவர்கள் பக்குவமாக நுழைகின்றனர். சங்கிலித் தொடராக இந்தச் சுற்றுக்கள் தொடர்கின்றன.தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
முதல் தவாபில் முதல் மூன்று சுற்றுக்களில் மட்டும் தோள்களைக் குலுக்கியவாறு கொஞ்சம் வேகமாக (ஆண்கள்) ஓட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்.(மீதமுள்ள) நான்கு சுற்றுக்களில் நடந்து செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி (1604)
தவாபை முடித்ததும், அடுத்த செயல் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்த போது கஃபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமே இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல் ஓடுவத)ற்காகப் புறப்பட்டார்கள்.'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது' என இறைவன் கூறுகிறான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி(1627)
மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (திருக் குர்ஆன் 2:125)
தவாபை நிறைவு செய்த ஹாஜிகள், மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று இரண்டு ரக்அத் தொழுகின்றனர்.
மகாமே இப்ராஹீமுக்கு மிக அருகில் தான் நின்று தொழ வேண்டும் என்பதில்லை.
நபி (ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். தவாப் செய்யாத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'சுப்ஹூத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டவுடன் மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாப் செய்துக் கொள்' எனக் கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன். இதனால் (இரண்டு ரக்அத்துகளை) பள்ளிக்கு வெளியே வந்த பிறகே தொழுதேன். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) ஆதாரம்: புகாரி(1626)
மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று தொழுவது, தவாபு சுற்றுபவர்களுக்கு இடையூறாக இருக்கும். நெரிசலில் சிலர் அவசர அவசரமாக, ருகூவு செய்யவும் முடியாமல், ஸஜ்தாச் செய்யவும் முடியாமல், சிரமப்பட்டு தொழுவதைக் காணலாம். தொழுகை என்பது நிறுத்தி நிதானமாகச் செய்ய வேண்டிய ஒரு வணக்கமாகும்.
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப் படுத்த மாட்டோம் (திருக் குர்ஆன் 23:62) என்று அல்லாஹ்வின் திருமறை கூறுகிறது. எனவே கடுமையான சிரமத்துக்கு மத்தியில் அந்த மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹராமின் எந்தப் பகுதியிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
விபரம் அறிந்த ஹாஜிகள், தவாபின் இரண்டு ரக்அத் தொழுகையை மஸ்ஜிதுல் ஹராமில் வசதிப் பட்ட இடங்களில் நிறைவேற்றுகின்றனர்.
கஃபாவின் வட பகுதியில் அரை வட்டத்துக்குச் சிறிய சுவர் ஒன்று எழுப்பப் பட்டுள்ளது. இதற்கு ஹிஜ்ர் இஸ்மாயீல் என்று பெயர்.
நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து, ஆலயத்தின் உள்ளே நுழைய விரும்பினால் இங்கே தொழுவாயாக1 ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப் படுத்திவிட்டனர்.' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்:திர்மிதி: (802)
ஹாஜிகளில் பலர், இந்த ஹிஜ்ருக்குள் நுழைந்து தொழுதுக் கொள்கின்றனர். இங்கு நின்று பிரார்த்திக்கின்றனர். கஃபாவின் மேற்குப் பகுதியில் மழை நீர் வடிவதற்காகக் குழாய் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 'மீஜாபுர் ரஹ்மத்' என்று பெயர். இதுவும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும். ஹாஜிகள் இந்த இடத்திலும் நின்று பிரார்த்திக்கின்றனர்.
ஜம் ஜம் கிணறு
இப்போது மக்கா நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப் படி இங்கே குடியமர்த்தினார்கள்.
குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி, ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தை தணிக்க எண்ணினார்கள். அதற்கிடையே அல்லாஹ், குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான்.
எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
(ஆதாரம்: திருக் குர்ஆன் தமிழாக்கம். மௌலவி. பி.ஜைனுல் ஆபிதீன்)
தோண்டுகின்ற இடமெல்லாம் எண்ணெய்க் கிணறுகள் தோன்றுகின்ற இந்தப் பாலைவன மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம்.
நாள் தோறும் வருகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும், ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம் அனுதினமும் நீர் வெளியேற்றப் படுகிறது. அள்ள அள்ளக் குறையாத இப்பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவன் பேராற்றலுடையவன்.
சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகளால் அரண் அமைத்து பாதுகாக்கப் பட்டுள்ள இக்கிணற்றின் மிக அருகில் சென்று பார்க்கும் ஹாஜிகள் இறைவனின் மாபெரும் அற்புதத்தை எண்ணி வியக்கின்றனர். இந்த ஜம்ஜம் கிணறு இருக்கும் பகுதியும், பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இடங்களில் ஒன்றாகும்.
தரைப் பகுதியில் படிகள் அமைத்து உள்ளே சென்று பார்க்கவும், தண்ணீர் அருந்தவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித் தனியாக பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன.
தவாபை முடித்து - தொழுகையையும் நிறை வேற்றிய ஹாஜிகள், கூட்டம் கூட்டமாகச் சென்று தண்ணீர் அருந்துகின்றனர். பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இந்த கிணற்றடியில் நின்று பிரார்த்திக்கின்றனர்.
வயிறும் மனதும் நிறைந்தவர்களாக- ஹாஜிகள் அடுத்த செயலை நிறைவேற்ற அவசரமாகச் செல்கின்றனர்.
இனி அடுத்தக் கடமை ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஸயீ என்னும் ஓட்டம்.
ஸயீ என்னும் தொங்கோட்டம்
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன். அறிந்தவன்.(திருக் குர்ஆன் 2:158)
அன்று நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னையார் தண்ணீர் தேடி ஓடியதை நினைவு கூறும் விதமாக இன்றளவும் ஹஜ்ஜுக்கு வரும் அனைவரும் ஓடுகின்றனர்.
ஸஃபா, மர்வா என்பது இரு சின்னஞ்சிறு மலைக் குன்றுகளின் பெயர். இப்போது அந்த இடங்களில் மலைக் குன்றுகள் இல்லை. சற்று உயரமான இடத்தில்- மலைக் குன்றுகளை நினைவு படுத்தும் விதமாகக் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஸஃபா, மர்வா இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி, நீண்ட அரங்கம் போல் அமைக்கப் பட்டு, குளு குளு வசதி செய்யப் பட்டுள்ளது. ஆங்காங்கே மாபெரும் மின் விசிறிகள் காற்றோட்டத்தை ஏற்படுத்துகின்றன.
அடுக்கடுக்காக மூன்று தளங்கள், ஹாஜிகள் சிரமமின்றி ஓடுவதற்கு வசதியாக அமைக்கப் பட்டுள்ளன. போவதற்கும், வருவதற்குமாக இரு தனித்தனிப் பாதைகள். ஓட இயலாதவர்களைத் தள்ளு வண்டியில் வைத்து, தள்ளிக் கொண்டு செல்வதற்கும் நடுவில் தனிப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
ஓட்டத்தை, ஸஃபாவில் துவக்க வேண்டும். ஸஃபாவிலிருந்து மர்வா சென்று சேருவது ஒரு ஓட்டம்.மீண்டும் மர்வாவிலிருந்து புறப்பட்டு ஸஃபா வந்து சேருவது இரண்டாவது ஓட்டம். இவ்விதம், ஸஃபாவில் தொடங்கிய முதல் ஓட்டம், ஏழாவது ஓட்டத்துடன் மர்வாவில் நிறைவு பெறும்.
ஸஃபாவிலிருந்து மர்வா வரை வேகமாக ஓட வேண்டும் என்று அவசியமில்லை. நடந்து சென்றால் போதும். இடைப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் ஆண்கள் சற்று வேகமாக ஓட வேண்டும். இந்த இடத்திற்கு 'மீலைனில் அக்லரைன்' என்று பெயர். இந்த இடத்திற்கு அடையாளமாக இரு புறமும் பச்சை விளக்குகள் எரிகின்றன.
நபி (ஸல்) அவர்கள் முதல் தவாப் செய்யும் போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள். நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா மர்வாவுக்கிடையே தவாப் செய்யும் போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி (1644)
ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே, மனித வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஹஜ் அல்லது உம்ராச் செய்ய வந்த அத்தனை இலட்சம் புனிதர்களும் ஓடுகிறார்கள். ஒருவரையொருவர் இடிக்க வில்லை. வீண் பேச்சுக்கள் இல்லை. உலக நினைவுகள் இல்லை. மெதுவான குரலில் துஆக்கள் ஓதுவதைத் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை.
மரணத்தை நினைத்து ஓடுகிறார்கள்!;
மறுமையை நினைத்து ஓடுகிறார்கள்!
மஹ்ஷரை நினைத்து ஓடுகிறார்கள்!
மண்ணறை வாழ்வை நினைத்து ஓடுகிறார்கள்!
கால்கள் ஓடுகின்றன!
கண்கள் அழுகின்றன!
நாவுகள் பிரார்த்திக்கின்றன!
ஸஃபாவில் முதல் ஓட்டத்தைத் தொடங்கிய ஹாஜிகள், தமது ஏழாவது ஓட்டத்தை மர்வாவில் நிறைவு செய்து - தங்கள் முதல் கடமையான - புனித உம்ராவை இத்துடன் இனிதே நிறைவு செய்கின்றனர்.
'ஒரு உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி (855)
தமத்துவ் என்னும் ஹஜ் செய்ய நிய்யத் செய்தவர்கள், தலைமுடி நீக்கி அல்லது கத்தரித்து இஹ்ராமிலிருந்து விடுபடுகின்றனர். கிரான் என்னும் ஹஜ் செய்ய நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்தவர்கள் - இதே இஹ்ராமுடன் ஹஜ்ஜை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்.
புனித மதீனாவுக்குப் புறப்படுதல்
உம்ராவை இறையருளால் இனிதே நிறைவேற்றிய புனித இறைநேசர்கள்- மக்காவில் தங்குவதற்காக- அவரவர் வழிகாட்டிகளால், ஏற்பாடு செய்யப் பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்குச் சென்று ஓய்வெடுக்கின்றனர்.
ஹரம் ஷரீபுக்கு மிக அருகிலேயே தங்குமிடம் கிடைக்கப் பெற்றவர்கள் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஹரம் ஷரீபுக்கு வந்து - தங்கள் வாழ்வில் கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். சற்றுத் தொலைவில் தங்கியிருப்பவர்களும் முன் கூட்டியே ஹரம் ஷரீபுக்கு வந்து ஜமாஅத் தொழுகையின் பாக்கியத்தை அடைந்துக் கொள்கின்றனர்.
புனித ஹஜ்ஜை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கும் புண்ணிய சீலர்கள், மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில் வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களைக் கண்டு, கடந்த கால இஸ்லாமிய வரலாற்றை நினைவு கூறுகின்றனர்.
புனித ஹஜ்ஜுக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால்- அதற்குள் புனித மதீனாவுக்குப் போய் வரலாமே! ஹஜ்ஜை முடித்தபின் மதீனாவுக்குச் செல்வதென்றால் - அங்கேயும் அதிக மக்கள் நெரிசலாக இருக்கும்.அதுமட்டுமின்றி ஹஜ்ஜின் அனைத்து செயல்களையும் செய்து முடித்து களைப்பு அடைந்து விடலாம் என்பதால் பெரும் பாலானவர்கள் இப்போதே புனித மதீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
மதீனா நோக்கி ஒரு மகிழ்ச்சிப் பயணம்
உம்ராவை இனிதே நிறைவேற்றிய இறைவனின் விருந்தினர்கள், புனிதப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக புண்ணிய மதீனா நன்னகர் நோக்கி இதோ புறப்பட்டுவிட்டனர்.
14 நூற்றாண்டுகளுக்கு முன் - இறைவனின் தூதுச் செய்தியை, ஓரிறைக் கொள்கையை, உன்னத இஸ்லாத்தை, மக்கத் திருநகரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த போது- அவர்களும், அவர்களின் சத்தியக் கொள்கையை ஏற்றுக் கொண்டோரும், மக்கத்துக் குறைஷிக் கெடுமதியாளர்களால், பல்வேறு துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும், ஆளாக்கப் பட்டார்கள்.
பொறுமையின் சிகரமான பூமான் நபி (ஸல்) அவர்கள் பொறுத்துப் பொறுத்து - இதற்கு மேலும் சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது- இறைவனின் ஆணைப்படி- அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் ஆருயிர்த் தோழர் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், தாங்கள் பிறந்து வளர்ந்த மக்காவைத் துறந்து புறப்பட்டனர்.
'யத்ரிப்' என்னும் இனிய நகரம், அவ்விருவரையும் இரு கரம் நீட்டி வரவேற்றது. அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் சத்தியக் கொள்கைக்கும், புத்துணர்வு தந்தது. பண்டைய வரலாற்றில் 'யத்ரிப்' என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்த நகரம் தான், பின்னாளில் 'மதீனத்துன்னபி' (நபியின் நகரம்) என்று மரியாதைப் பெற்று, அதுவே இப்போது 'மதீனா' என்று அழைக்கப்படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இடம் பெயர்ந்து சென்ற அந்த நிகழ்ச்சி 'ஹிஜ்ரத்' எனப்படுகிறது.இஸ்லாமிய ஆன்டு இந்த நாளிலிருந்து தான் தொடங்குகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளை யிடப்பட்டேன்! அது தான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கி விடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றி விடும்' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1871)
பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல், ஈமான்(இறை நம்பிக்கை) மதீனாவில் அபயம் பெறும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1876)
இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக! அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1885)
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த மதீனா, இன்று அனைவருக்கும் பிடித்தமான நகரமாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நபி (ஸல்) அவர்களின் துஆவின் மகிமை இன்றளவும் இந்த மதீனா நகரத்தில் பிரதிபலிக்கிறது.
சிந்தைக்கினிய செழுமை மிக்க மதீனா நகர் நோக்கி புறப்பட்டு விட்டனர் ஹாஜிகள்.
வழி நெடுகிலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாலைவனமும், இடையிடையே இருபுறமும் மலைக் குன்றுகளும், அரபு நாட்டு இயற்கை அப்படியே பிரதிபலிக்கிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் அருமைத் தோழர் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், கரடு முரடான பாதைகளில் ஒட்டகத்தின் மீதேறி நாட்கணக்கில் கடந்த தூரத்தை, இப்போது சில மணி நேரங்களில், அகன்று விரிந்த வழவழப்பான சாலைகளில், அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களில் ஹாஜிகள் சென்றடைகின்றனர்.
இதோ! மதீனா முனவ்வராவின் எல்லைப் பகுதி.
அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப் படுகின்றன. மதீனா நகரின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் இவ்விதம் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடையான அட்டைகள் சரி பார்க்கப்பட்ட பின்னர், அனைத்து ஹாஜிகளும் அகம் குளிர, முகம் மலர, மதீனா நகரில் நுழைகின்றனர்.
இதயம் கவரும் பசுமை நிறைந்த, இங்கித நகரில் நுழைகின்றனர். மாநபிகள் வாழ்ந்த மதீனத் திரு நகரில் நுழைகின்றனர்.
மதீனா நகரின் மையப் பகுதியை நெருங்க நெருங்க, மஸ்ஜிதுன்னபவியின் வானளாவிய மினாராக்களை வெகு தொலைவிலிருந்தே காண முடிகிறது.
நள்ளிரவு நேரத்திலும், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது இப்புனிதப் பள்ளி. சமீப காலம் வரை மஸ்ஜிதுன்னபவியைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரும் பெரும் அடுக்கு மாடிக் கட்டடங்கள் கூட, உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து அப்புறப்படுத்தப்பட்டு இப்போது மிகப் பெரிய அளவில் பள்ளி வளாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வெளிப்புற வளாகத்தின் பெரும் பகுதியில் தரை மட்டத்திற்குக் கீழ் கார் நிறுத்துமிடமும், கழிவறைகளும், அமைக்கப்பட்டுள்ளன.
எல்லா நுழைவாயில்களுக்கு அருகிலும்- அடித்தளப் பகுதியில் உலூச் செய்யும் குழாய் வசதிகளும், கழிவறைகளும் அமைக்கப்பட்டு - உள்ளே சென்று வர தானியங்கிப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இயலாதவர்களும். முதியவர்களும் கூட எளிதில் சென்று வர முடியும்.
பள்ளியின் வெளிப்புற வளாகத்திலேயே, பல இலட்சம் பேர் நின்று தொழ முடியும். பளீரென்ற வெள்ளைப் பளிங்குக் கற்களால் தரை முழுவதும் இழைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டுப் பெருகி வரும் கூட்டத்திற்கு ஏற்றபடி - பள்ளி மிகவும் விசாலமாக இப்போது வடிவமைக்கப் பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் எந்நேரமும் - பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். தரையை சுத்தம் செய்வதற்காகவே சிறப்பான முறையில் வடிவமைக்கப் பட்ட இயந்திரங்கள் சுத்தம் செய்துக் கொண்டே இருக்கின்றன.
பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப் பட்டு, கடும் கோடையிலும் கூட இதமான குளுமையை அனுபவிக்க முடிகிறது. உட்பகுதியின் ஒரு பக்கம் மாபெரும் தானியங்கிக் குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் இந்த ராட்சதக் குடைகள் விரிந்துக் கொள்ளும். மற்ற நேரங்களில் குடைகள் சுருங்கி காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
மற்றொரு பக்கம்- காங்கிரீட் மேற் கூரை- தனித்தனிப் பகுதிகளாக அப்படியே நகர்ந்து- திறந்துக் கொள்ளும். வெயில் மற்றும் மழை நேரங்களில் மூடிக் கொள்ளும். கற்பனைக் கெட்டாத கட்டடக் கலையின் அற்புத வடிவமைப்புகள் காண்போரை பிரமிக்கச் செய்கின்றன.
பள்ளியின் உட்பகுதி முழுவதும்- பல்லாயிரக் கணக்கில் குடி நீர் பிளாஸ்குகள் வைக்கப்பட்டு, மக்காவிலிருந்து ஜம்ஜம் நீர் கொண்டு வந்து தினந்தோறும் நிரப்பப்படுகிறது.
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், இரவும் பகலும் மக்கள் கஃபாவைத் தவாபு செய்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த மஸ்ஜிதுன்னபவியில், இரவு இஷாத் தொழுகை முடிந்ததும், அனைவரும் வெளியேற்றப் படுகின்றனர். பள்ளியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் இரவில் யாரையும் உறங்க அனுமதிப்பதில்லை.
இஷாத் தொழுகை முடிந்து அடைக்கப்பட்ட பள்ளியின் கதவுகள், தஹஜ்ஜுத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டவுடன் திறக்கப்படுகின்றன.
எல்லா நாட்களிலும் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்ற ஹாஜிகள் ஆர்வத்துடன் வந்து விடுகின்றனர். பஜ்ருத் தொழுகை வரை இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனையப் பள்ளிகளில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1190)
இந்த ஹதீஸின் கருத்தை உணர்ந்த ஹாஜிகள், தஹஜ்ஜுத் தொழுகையைக் கூடத் தவற விடுவார்களா? மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் மஸ்ஜிதுன்னபவியில் அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட்டு நன்மைகளை சேர்ப்பதில் கவனமாக இருக்கின்றனர்.
இன்றைய தினம் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றி விட்டு மக்கள் கூட்டம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை ஜியாரத் செய்ய அலைமோதுகிறது.
பள்ளியின் உட்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகருகின்றனர். இதோ! முதலில் தெரிவது 'சுவர்க்கப் பூங்கா'
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது வீட்டிற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்டப் பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.' அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1195)
இந்த இடத்திற்கு அடையாளமாக, அழகான பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபி மொழி அரபியில்
'மா பைன பைத்தீ வ மிம்பரீ ரவ்லதன் மின் ரியாலில் ஜன்னா' என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் நின்று தொழவைத்த இடமும் (மிஹ்ராபுன்னபி) பிரசங்கம் செய்வதற்காக நின்ற மேடையும், அருகருகே அமைந்துள்ளன. பாக்கியம் பெற்ற இந்த இடங்களுக்கருகில் நிற்கவும், நின்று தொழவும் ஹாஜிகள் அலைமோதுகின்றனர்.
அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துயில் கொண்டுள்ள புனித அடக்கத்தலத்தை நோக்கி!
இதோ! தூய நபியவர்கள் துயில் கொண்டுள்ள தூய்மைத் தலம். உண்மை நபியவர்கள் உறங்கும் உன்னத அடக்கத் தலம். மனங்கவரும் இஸ்லாத்தை மனங்குளிர போதித்த மனித குல மாணிக்கத்தின் மறைவிடம்.
புவியெங்கும் மக்கள் புகழ் பாடிக் கொண்டாடும், புனிதரின் பூத உடல் இங்கே தான். யுகம் யுகமாய் திருந்தாதக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை, இருபத்து மூன்றே ஆண்டுகளில் இகமே போற்றும் இனிய தோழர்களாய் மாற்றியமைத்த இனியவரின் புனித உடல் இங்கே தான்.
கண்கள் காணக் காண, நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்- அகிலம் முழுவதும், அநியாயமும், அட்டூழியமும், தலை விரித்தாடியபோது, அகிலத்தின் அருட்கொடையை, அரேபியப் பாலையில் அல்லாஹ் அவதரிக்கச் செய்தான்.
தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே தந்தையை இழந்து, தமது ஆறாம் வயதில், தாயையும் இழந்து, பாட்டனார் அப்துல் முத்தலிபின் பராமரிப்பில் வளர்ந்து,
'அல் அமீன்' என்றும் 'அஸ்ஸாதிக்' என்றும் அன்புடன் அழைக்கப் பட்ட நம்பிக்கைக்குரிய இளைஞராக-
செல்வச் சீமாட்டி கதீஜாவின் சிறப்பு மிகு வணிகராக-
இருபத்தைந்தாம் வயதில் எழில் மணம் புரிந்து-
நாற்பதாம் வயதில் இறைத்தூதராக நபித்துவம் பெற்று- மக்கத்துக் குறைஷிகளால் பலவித துன்பங்களுக்குள்ளாகி-
53 ஆம் வயதில், இறைவனின் ஆணைப்படி
தாம் பிறந்து வளர்ந்த மக்காவைத் துறந்து-
மதீனத் திரு நகருக்கு மாண்புடன் ஹிஜ்ரத் செய்து-
மதீனத்து அன்ஸாரிகளின் மதிப்புக்கு உரியவராக-
மன்னாதி மன்னர்களும் தமக்கு முன்னே அணிவகுத்து நிற்கும் அளவுக்கு மாண்பையும் மரியாதையையும் பெற்று-
மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை மதீனாவில் நிறுவி-
ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரவச் செய்து-
தமது 63 ஆம் வயதில் - அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று- இம் மண்ணுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு - மறுமை நாள் வரை துயில் கொண்டுள்ள தூய இடம் இது தான்.
கண் இமைக்கும் நேரத்தில்- வள்ளல் நபியின் வாழ்க்கைச் சரிதம் நம் கண் முன்னே தோன்றி மறைகிறது. இந்தப் புனித அடக்கத்தலத்தைக் காணக் காண, அனைவரின் கண்களும் கண்ணீர் வடிக்கின்றன. அனைவரின் நாவுகளும் அழகாக ஸலாம் உரைக்கின்றன.
நபியே ஸலாம் உண்டாக!
இறைவனின் தூதரே ஸலாம் உண்டாக!
அனைவரும் ஸலாம் கூறுகிறார்கள். அமைதியாக ஸலாம் கூறுகிறார்கள்.
இதன் உள்ளே கல்லறை கட்டப்படவில்லை. கண்ணைப் பறிக்கும் அலங்காரம் இல்லை. 'எண்ணெய் விளக்கு' எரியவில்லை. உண்டியல் இல்லை. ஊது பத்தி- சாம்பிரானி இல்லை. மயிலிறகு இல்லை. மலர் வளையம் இல்லை. ஏமாற்றும் இடைத் தரகர்கள் இல்லை.பாத்திஹா ஓத யாரும் இல்லை. பைத்தியங்கள் சங்கிலிகளால் பிணைக்கப் படவில்லை. பூமாலைக் கட்டி போடமுடியாது. போர்வை வாங்கி போர்த்த முடியாது. சந்தனம் பூச முடியாது. கொடியேற்றம் இல்லை. கூத்தும் கும்மாளமும் இல்லை. பாட்டுக் கச்சேரியும் இல்லை. பரத்தையர் நாட்டியமும் இல்லை.
'எனது கப்ரை திரு விழா நடத்தும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளிச் சென்ற வார்த்தை இன்றளவும் இங்கே பேணப் படுகின்றது.
அர்ச்சனைகளிலிருந்தும், ஆராதனைகளிலிருந்தும், அனைத்து வகை அநாச்சாரங்களிலிருந்தும், ஆடல் பாடல் கச்சேரிகளிலிருந்தும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை அல்லாஹ் காப்பாற்றி விட்டான்.
அறியாiயால் சிலர், கையேந்தி பிரார்த்திக்கவும், அடக்கத்தலத்தின் சுவர்களைத் தொட்டு முத்தமிடவும் முயற்சிக்கின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாகத் தான் இவ்வாறு செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மார்க்கத்தில் அதற்கு அனுமதி இல்லை என்பதை இவர்கள் உணரவில்லை.
காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும், அறிவிற் சிறந்த ஆன்றோரும், அருகில் நின்று கண்காணிக்கின்றனர். அறியாமையால் அநாச்சாரங்களில் ஈடுபட முனைவோரைத் தடுக்கின்றனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், கப்ர் ஜியாரத் எப்படிச் செய்யவேண்டும் என்று மொழிந்தார்களோ! அவர்களின் அடியொற்றி நடந்த ஸஹாபாக்கள் எவ்விதம் ஜியாரத் செய்தார்களோ! அந்த முறை தான் இன்றளவும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைத்தபடியே, மக்கள் கூட்டம் மெதுவாக நகருகின்றது.
அவர்களுக்கு அடுத்து அடக்கம் செய்யப் பட்டிருக்கும், அண்ணலாரின் அருமைத் தோழர், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு துன்ப துயரத்திலும் பங்கு கொண்ட பண்பாளர், அண்ணலாருடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்யும் பேறு பெற்ற பெருந்தகை, நபிமார்களுக்குப் பின் மனிதர்களில் சிறந்தவர் என்று புகழப்பட்ட புண்ணிய சீலர், அண்ணல்நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களின் அரசியல் தலைமையை அலங்கரிக்கும் பொறுப்புக்கு அனைவராலும் ஏகோபித்து அங்கீகரிக்கப் பட்ட அருந்தவ ஞானி, அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு ஸலாம் உரைக்கின்றனர்.
மக்கள் கூட்டம் மேலும் முன்னோக்கி நகருகின்றது.
அவர்களை அடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ள, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர், வீரத்தின் விளை நிலம், இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் இரண்டாவது கலீபா, நீதி மிக்க ஆட்சிக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய நீதி மான், உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுக்கு ஹாஜிகள் ஸலாம் உரைக்கின்றனர்.
ஜியாரத்தை முடித்து வெளியில் வந்த ஹாஜிகள், வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேற்றைப் பெற்றதற்காக ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஹஜ்ஜுடைய காலங்களில், மஸ்ஜிதுன்னபவியில் உள்ளே நுழைந்து ஜியாரத்தை முடித்து வெளியே வருவது என்பது சிரமமான காரியம் தான். நின்று காண்பதற்கு நேரம் இல்லை. கடல் அலையைப் போல் ஹாஜிகள் கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துக் கொண்டே வருகின்றது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை தரிசிக்கும் பேறு பெற்றோம் என்னும் மகிழ்ச்சிக்கு முன்னால்- அதற்காகப் பட்ட சிரமங்கள் யாருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
புண்ணியம் கிடைக்கப் பெற்றவர்களின் திரு முகங்களில் புன்னகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மதீனத் திரு நகரில் தங்கியிருக்கும் நாட்களிலெல்லாம், இன்னும் ஒரு முறை, இன்னும் ஒரு முறை - எவ்வளவு சிரமங்கள் இருந்தாலென்ன? இன்னும் ஒரு முறை - மறுபடியும் இந்த பொன்னான வாய்ப்பு எப்போது கிடக்கும்? எனவே இன்னும் ஒரு முறை ஜியாரத் செய்ய வேண்டும் என்னும் ஆசையே அனைவரின் மனதிலும் மேலோங்குகிறது.
இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தம் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இனிய இதயங்களுக்கு இப்படி ஓர் ஆர்வம் ஏற்படுவதில் வியப்பில்லை.
புனித அடக்கத்தலத்தை ஜியாரத் செய்து முடித்த புண்ணிய சீலர்கள் இதோ மஸ்ஜிதுன்னபவிக்கு அருகில் இருக்கும் ஜன்னத்துல் பகீஃ என்னும் புனிதர்களின் பூஞ்சோலை நோக்கி புறப்பட்டு விட்டனர்.
ஜன்னத்துல் பகீஃ
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியரில் பலரும், அருமைத் தோழர்களில் பல்லாயிரக் கணக்கானோரும், இங்கு தான் அடக்கப் பட்டுள்ளனர்.
திரு மறைiயின் முழுமையான மூலப் பிரதியை உருவாக்கித் தந்தவரும், மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் இப்னு அப்பான் (ரலி) அவர்கள்,
பெருமானாரின் எண்ணற்ற பொன் மொழிகளை அகிலத்திற்கு அறிவித்த, அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள்,
அண்ணலாருக்கு அமுதூட்டிய அருமை அன்னை, ஹலீமா ஸஃதிய்யா (ரலி) அவர்கள், அண்ணலாரின் அருமந்த மைந்தர், இப்ராஹீம் (ரலி) அவர்கள், பிக்ஹுச் சட்டங்களை இயற்றிய பெருமேதை, இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், திருத்தமுடன் திரு மறையை ஓதுவதில் தனிச் சிறப்புப் பெற்ற காரி, இமாம் நாபிஃ (ரஹ்) அவர்கள்,
ஆகியோரும், இன்னும் ஏராளமான நபித் தோழர்களும், இறை நேசர்களும், ஆன்றோரும், சான்றோரும், இந்தப் புனித மண்ணில் தான் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
திரளாகக் கூடி நின்று, ஹாஜிகள் இந்தப் புனித மண்ணில் அடக்கப் பட்டிருப்பவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர்.
இந்த அடக்கத் தலத்திலும், இன்னும் இங்குள்ள எந்த அடக்கத் தலங்களிலும் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. ஏனெனில்,
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி
இந்த ஜியாரத்தை முடித்துக் கொண்டு, ஹாஜிகள் மதீனாவைச் சுற்றியுள்ள, சரித்திரப் புகழ் பெற்ற இடங்களைப் பார்த்து வரப் புறப்படுகின்றனர். மதீனாவைச் சுற்றிலும் பார்க்க வேண்டிய இடங்களை - அவரவர் தம் வழிகாட்டிகளின் வழிகாட்டுதலின்படி சென்று பார்த்து வருகின்றனர்.
மதீனாவின் மகத்துவத்தையும், மாண்பையும் பறை சாற்றிக் கொண்டு- வரலாற்று ஆதாரங்களாக நிலைத்து நிற்கும் இடங்களையும், சரித்திரச் சான்றுகளையும், காணுகின்ற கண்கள் பேறு பெற்றவை.
அண்ணல் நபி (ஸல்) அவர்களை வரவேற்று உபசரித்து, அகிலமெங்கும் இஸ்லாம் பரவ, அடித்தளம் அமைத்துக் கொடுத்த - மதீனத் திரு நகரை மகிழ்;ச்சியுடன் தரிசிக்கும் உள்ளங்கள் பேறு பெற்றவை.
அண்ணல் நபி (ஸல்) அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகுத் திரு நகரில் தங்கி - ஆத்ம திருப்தி அடையும் இதயங்கள் பேறு பெற்றவை.
இந்தப் புனித மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் இயன்றவரை மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து, ஜமாஅத்துடன் தொழுது அளப்பெரும் நன்மைகளை அடைகின்றனர் ஹாஜிகள்.மனம் குளிர மஸ்ஜிதுன்னபவியில் தொழுது, மன நிறைவடைந்த மாண்பாளர்கள், இதோ புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றப் புறப்பட்டு விட்டனர்.
புறப்பட்டுப் போகின்ற இறுதி நேரத்திலும் கூட மீண்டும் ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத் தலத்தை ஜியாரத் செய்யத் தவறவில்லை. உயிரினும் மேலான உண்மை நபியவர்களுக்கு ஸலாம் உரைத்து, புறப்பட்டு விட்டனர் புனித மக்கா நன்னகர் நோக்கி!
துல் ஹஜ் எட்டாம் நாள்- ஹஜ்ஜின் முதல் நாள்
புண்ணிய சீலர்கள், எந்த நோக்கத்திற்காக அவரவர் இல்லங்களிலிருந்து புறப்பட்டு வந்தார்களோ! அந்த ஹஜ் இன்று தான் ஆரம்பம்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்- உள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புனித ஹஜ்ஜை நிறைவேற்று வதற்காக வந்து, மக்காவின் பல்வேறு இடங்களிலும் தங்கியிருந்த ஹாஜிகள்- ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்து இன்று மினா வந்து சேருகின்றனர்.
'இப்ராத்' எனும் வகை ஹஜ் செய்ய, இறுதி நேரத்தில் வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள 'மீக்காத்' எல்லையில் குளித்து இஹ்ராம் அணிந்து நேரடியாக மினா வந்து சேருகின்றனர்.
மினாவில் சமீப காலம் வரை அனைத்து ஹாஜிகளும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் தான் தங்க வைக்கப்பட்டனர். ஹஜ்ஜின் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மினாவில், மணலையும் மலைகளையும் தவிர வேறு எதுவுமே இருக்காது.

!!!!! Be careful with this book!!!!!!

Dear All Brother-in-Islam,

!!!!!  Be careful with this book!!!!!! This thing has to be spread to the

whole world.   We must fight this nasty which was created by Christians!!!

* DO NOT let them to convert many more MUSLIM to CHRISTIANITY ,  Na'udzubillahimindzalik....

* DO NOT JUST KEEP this mail in your mailbox. FORWARD TO ALL OUR MUSLIMS..

The things they do to lead Muslims astray is unbelievable. May Allah

protect us all. Let all your relatives/friends know that this book

do exist and a copy of it was already sent to MUIS for action.

 

 

790b54.jpg 

 

 

 

 

790b68.jpg 

 

 

 

 

790b72.jpg 

 

 

 

 

 

READ THIS AND SPREAD IT PLEASE.....!!!
 

 
 

cid:image001.jpg@01C902A6.03E51020
Above: 'The True Furqan'

You Cant Ignore this or send it to as many muslims as u can.

The new AMERICAN Quran: a dangerous trick.

A new Quran is being distributed in  Kuwait, titled 'The True Furqan'.
It is being described as the ayats of the Shaytan and Al-Furqan weekly
 magazine has found out that the two American printing Companies;  
'Omega 2001' and 'Wine Press' are involved in the publishing of 'The True Furqan',
a book which has also been titled 'The 21st Century Quran'!
It has over 366 pages and is in both the Arabic and English languages...it is being
distributed to our children in Kuwait in the private English schools! The book contains 77 Surats,
which include Al-Fatiha, Al-Jana and Al-Injil. Instead of Bismillah, each Surat begins with a
longer vesion of this incorporating the Christian belief of the three spirits.

And this so called Quran opposes many Islamic beliefs. in one of its ayats it describes

having more than one wife as fornication, divorce being non-permissible and it uses
a new system for the sharing out of the will, opposing the current one. It states that
Jihad is HARAAM.

This book even goes as far as attacking Allah, Subhanahu wa Tahala!

All this is poisoning our children at approx. price of US $3.

Brothers and Sisters, it is up to you whether you all want to forward this message or not!  

 
But if this is true and you do forward it, it will benefit all those who read it. 
 
 
saudi kayan saudi kayan
 
saudi kayan
 
saudi kayan
 


திருக்குர்ஆன் வசனம் அழைப்பிதழ்

அல்லாஹ் கூறுகிறான்....

அவன் எத்தகையவனென்றால், எழுது கோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.(96:4)

இன்று இந்த அத்தியாயத்தில் எல்லா வசனங்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்


தமிழ் புத்தக கடல்.காம்  

Non- Halal Chocolates

Dear All,


All the below Masterfood Company Chocolate Products (Mars) are no longer Halal. They started using Animal product rennet(pork) in it for products that have expiry date after 1 st of October 2007.

Check this article from BBC News

http://news. .bbc.co.uk/ 1/hi/business/ 6653175.stm
And this from the Vegetarian Society

http://www.vegsoc. org/news/ 2007/mars. html

·
   Bounty
·
    Celebrations
·
    Dove Chocolate
·
   Flyte
·
    Galaxy
·
    Kudos (North America)
·
    Lockets
·
    M-Azing (North America)
·
    Maltesers
·
    M&M's
·
   Mars Bar
·
    Mars Delight
·
    Milky Way
·
    Minstrels (UK only)
·
    Mars Planets (newly inroduced in UK)
·
    Skittles
·
    Snickers (The top-selling candy bar in the United States. Known in the UK as Marathon until 1990.)
·
   Starbur st (Originally Opal Fruits in the UK .)
·
    3 Musketeers ( North America )
·
    Topic
·
    Twix
·
    Snicker's Marathon Energy Bar
·
    AquaDrops

Please forward this message to your friends.


 
 
 
 
 
  
 
 

மனு தர்மம்

ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.

ஆனால் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விஷயம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களாலும், அனைத்து மதங்களாலும் கடைபிடிக்கப்படும் கொள்கை கோட்பாடுகள் மனு தர்மத்தின் அடிப்படையில், மனு நீதியின் அடிப்படையில் கற்பனை செய்யப்பட்டவையே என்ற பேருண்மையை விவரிப்பதாகும்.

உதாரணமாக இன்று நாம் கடை பிடித்து வரும் இந்திய அரசியல் சாசனம் யாரால் உருவாக்கப்பட்டது? இந்தியா சுதந்திரமடையும் போது அன்று ஆதிக்க சக்தியினராக இருந்தவர்களால் சரி கண்டு உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் சாசனம். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர் ஆங்கிலேயே ஆதிக்கச் சக்தியினரால் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களே நம் தாய்நாடான இந்தியாவை ஆட்டிப் படைத்தன. இப்படி இன்று உலகில் காணப்படும் அனைத்து நாடுகளும், அந்தந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டே அந்தந்த அனைத்து நாடுகளிலுமுள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆக ஆட்சியாளர்களின் மனிதக் கற்பனையில் உருவான சட்ட திட்டங்களே - அதாவது மனு தர்மமே- மனு நீதியே அனைத்துலக மக்களையும் ஆட்டிப்படைக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அரசியலின் பெயரால் மனிதக் கற்பனைகளைக் கொண்டு உருவான அரசியல் சாசனம் என்ற பெயரால் மக்களை ஆட்டிப் படைப்பது போல், இன்னொரு பக்கம் ஆன்மீகத்தின் பெயரால் மதவாதிகளிடையே ஆதிக்கம் செலுத்தும் மத குருமார்களின் கற்பனையில் உருவான மதச் சட்டங்களும் மக்களை காவு கொள்கின்றன, அரசியல், ஆத்திகம் இவற்றின் நிலை இதுவென்றால் அடுத்து நாத்திகத்தின் பெயராலும் மனிதக் கற்பனையில் உருவான மனிதக் கருத்துக்களே கோலோச்சுகின்றன.

அரசியலின் பெயரால் ஆட்சியாளர்களின் மனிதக் கற்பனைகள், ஆத்திகம் - மதத்தின் பெயரால் இந்து, பெளத்தம், யூதம், கிறிஸ்தவம், முஸ்லிம் மதவாதிகளின் மனிதக் கற்பனைகள், நாத்திகத்தின் பெயரால், டார்வின், மார்க்ஸ், இங்கர்சால், பெரியார், அண்ணா, கலைஞர், போன்றோரின் மனிதக்கற்பனைகள் என அனைத்துத்துறைகளிலும் மனிதக் கற்பனைகளே- மனு தர்மமே, மனு நீதியே கோலோட்சுகின்றன.

மனிதக் கற்பனையில் உருவான ஒரு சட்டம் என்றால், நிச்சயமாக அது அந்தச் சட்டத்தை உருவாக்கிய மனிதனுக்குச் சாதகமாகவே இருக்கும். சமீபகால உச்சநீதிமன்றத் தீர்ப்புகளே இந்த எமது கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிலைநாட்டப் போதுமானதாக இருக்கிறது. மேலும் நமது இந்திய நாட்டை வெள்ளையன் ஆளும்போது சட்டங்கள் அவனுக்குச் சாதகமாகவே இருந்தன. இன்று ஜனநாயகத்தின் பெயரால் நமது நாட்டை நாமே ஆண்டாலும், ஆதிக்க மேல் ஜாதியினருக்கு சாதகமாகத்தான் நமது இந்திய நாட்டுச் சட்டங்கள் இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆன மனிதனே மனிதனுக்குரிய சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டால் அது நேர்மையான - நீதியாக ஒரு போதும் இருக்காது என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவையா? ஒரு அதி நுட்பக் கருவியை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே அதை இயக்கும் முறையை தெளிவு படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? இருக்க முடியாது. மனிதன் இதுவரை படைத்த கருவிகளை எல்லாம் விட அதி நுட்பமானது மனிதக் கருவி. இந்த மனிதன் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளவில்லை. மனிதனை மீறிய ஒரு மாபெரும் சக்தியே மனிதனை உருவாக்கியுள்ளது. எனவே அந்த மாபெரும் சக்தியே மனிதனுக்குரிய சட்டதிட்டங்களை வகுத்துத் தர வேண்டும்.

அந்த வாழ்க்கை நெறியே நீதியாகவும், நியாயமாகவும், தர்மமாகவும் இருக்க முடியும். இந்த அடிப்படை உண்மைகளை பகுத்தறிந்து உணராதவன் தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை. உண்மையில் அவன் ஐயறிவு மிருகத்தை ஒத்தவனாக மட்டுமே இருக்க முடியும். மனிதனையும், மற்றும் படைப்புகளையும் படைத்த அந்த மாபெரும் சக்தியை எனக்குக் காட்டுங்கள்; அதைப் பார்த்தால் தான் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது தான் போலி பகுத்தறிவு வாதியின் வாதம், கேவலம் பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட அற்பமான பார்வையை உடைய தன்னுடைய கண்ணின் பார்வையில் கட்டுப்படும் ஒன்று எப்படி ஒரு மாபெரும் சக்தியாக இருக்க முடியும்? என்ற அற்பமான பகுத்தறிவும் இல்லாதவன் மட்டுமே இந்த வாதத்தை வைக்க முடியும்.

ஒரு மதிப்புக்குரிய மனிதன் இன்னொரு மனிதனைச் சந்தித்து, நாளை நமது வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்; அவசியம் வந்து கலந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். அழைப்பு விடப்பட்ட மனிதன் நாளை நடக்க இருக்கும் விருந்தின் அம்சம் எதையும் இன்று தன் கண்ணால் பார்க்க முடியாது; விருந்தளிப்பவரின் வீட்டுக்குப் போய் தன் கண்ணால் பார்த்தாலும் விருந்தின் அம்சம் எதையும் பார்க்க முடியாது. ஆயினும் தன் அறிவை முறையாகப் பயன்படுத்தி அழைப்பு விடுபவர் ஒரு கண்ணியமான மனிதர், ஏமாற்றுபவர் அல்ல; நிச்சயமாக அவர் சொல்படி நாளை விருந்து உண்டு என்று பரிபூரணமாக நம்பி அடுத்த நாள் அவர் வீட்டுக்குப் போய் பார்த்தால் விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருப்பதை அப்போது தான் பார்க்க முடியும்.

ஆனால் இதே போல், ஒரு ஐயறிவு மிருகத்திடம் உனக்கு ஒரு உயர்தரமான உணவு இங்கே வீட்டினுள் வைத்திருக்கிறேன்; வந்து சாப்பிடு என்று கூவி கூவி அழைத்தாலும் அந்த மிருகம் வருமா? நிச்சயமாக அந்த அழைப்பை ஏற்காது. வரவே வராது. அதே சமயம் அந்த உணவை கையிலே எடுத்து அதன் கண்ணிலே காட்டினால் உடனே விழுந்தடித்து ஓடோடி வரும். ஐயறிவு மிருகத்தின் நிலை இதுதான். மனிதனைப் படைத்த மாபெரும் சக்தியை எனது கண்ணால் கண்டே ஏற்பேன் என்று வாதிப்பவனும் இந்த ஐயறிவு மிருகத்தின் நிலையிலேயே இருக்கிறான் என்பதை முறையாகப் பகுகத்தறிகிறவர்கள் மறுக்க முடியுமா?

சர்வத்தையுயம் படைத்துப் பரிபாலிக்கும் அந்த மாபெரும் சக்தியை நாத்திகர்கள் விதண்டவாதமாகவே மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் கண்ணால் பாாக்க முடியாத அவர்களின் உயிர். காற்று, மின்சாரம் இன்னும் இவை போல் பலவற்றைத் தங்களினன் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் அவற்றின் செயல்பாடுகளால் ஏற்பவர்கள், அண்ட சராசரத்தின் அனைத்து கோள்களின் செயல்பாடுகள், வானத்தின் கீழுள்ள அனைத்துப் படைப்புகள், அவற்றின் இயக்கங்கள் மூலம் அவற்றை இயக்கும் அந்த மாபெரும் சக்தியை உணராமல் மறுக்கிறார்கள் என்றால் அது விதண்டாவாதம் தானே?

ஒரு மரத்தலிருந்து தானாக ஒரு படகு உருவாகி அது ஆற்றுக்குத் தானாக வந்து மக்களை இக்கரையிலிருந்து அக்கரைக்குக் கொண்டு சேர்த்தது என்று யாராவது சொன்னால் அதை ஏற்க மறுக்கும் நாத்திகர்கள், அப்படிச் சொல்கிறவனை வடிகட்டிய மூடன் என்று சொல்கிறவர்கள், வானவெளியில் காணப்படும் அனைத்து கோள்களும் சூரியன், பூமி, சந்திரன் முதல் கொண்டு அனைத்தும் தானாக இயங்குகின்றன. பூமியில் காணப்படும் அனைத்தும் தானாகவே உருவாகின என்று சொல்கிறார்கள் என்றால் அவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? அவர்களை உண்மையான பகுத்தறிவாளர்களாக ஏற்க முடியுமா?

இந்த பகுத்தறிவுவாத நாத்திகர்களுக்கு இப்படிப்பட்ட மயக்கம் ஏற்பட ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. இன்று உலகில் காணப்படும் அனைத்து மதங்களிலும் இஸ்லாம் உட்பட கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மத குருமார்கள் புகுந்து கொண்டு தங்களின் மனிதக் கற்பனைக் கருத்துக்களை மனுதர்மத்தை - மனுநீதியை மதச் சட்டமாக்கி மக்களை ஏமாற்றி, அவர்களிடையே ஏற்றத்தாழ்வை உண்டாக்கி (இதுவே பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாதியாக உருவாகிறது) கடவுளின் பெயரால் மக்களை சுரண்டி வாழ்வதைப் பார்த்து வருந்தும் சுய சிந்தனையாளர்களே நாத்திக பகுத்தறிவாளர்களாக மாறுகிறார்கள். இந்திய நீதி மன்றங்களில் “முஹம்மடன் லா” என்ற பெயரில் இஸ்லாத்தின் பெயரால் அமுல் படுத்தப்படும் சட்டங்கள், உண்மையில் முஸ்லிம் மதப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான மனுதர்மமே - மனுநீதியே அல்லாமல் இறைவனின் இறுதி வழிகாட்டல் நெறிநூல் சொல்லும் இறைச் சட்டங்கள் அல்ல.

அரபு நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்று பெருமையாகப் பேசிக் கொள்ளும் அந்த முஸ்லிம் நாடுகளிலும், அரசியல், மதச் சட்டங்களாக இருப்பவற்றில் மிகப் பெரும்பாலானவை மனிதக் கற்பனையில் உருவான மனிதச் சட்டங்களே - மனு தர்மமே - மனு நீதியையேயாகும்.

சுருக்கமாகச் சொன்னால் இன்று உலகில் காணப்படும் அனைத்து நாடுகளும், அவற்றிலுள்ள ஆத்திகர்கள், நாத்திகர்கள் அனைவரும் மனிதக் கற்பனையில் உருவான மனிதச் சட்டங்களை - மனு தர்மத்தை - மனு நீதியையே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே நாட்டுக்கு நாடு மோதல், மதத்திற்கு மதம் மோதல், மொழிக்கு மொழி மோதல், நிறத்திற்கு நிறம் மோதல், மாநிலத்திற்கு மாநிலம் மோதல், பிரதேசததிற்கு பிரதேசம் மோதல் என மோதல்களே உலகை ஆட்டிப் படைக்கின்றன.

உலகையே சீரழிக்கும் ஆபாச அசிங்கக் காட்சிகள், வன்முறைகள் நிறைந்த சினிமாத்துறை, மது, சூது, விபச்சாரம் இவை அனைத்தும் ஆட்சியாளர்களாலேயே போற்றி வளர்க்கப்படுகின்றன. இன்று நீக்கமறக் காணப்படும், தினசரி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதச் செயல்கள், குண்டுவெடிப்புகள் , அழிவு நாசம் அத்தனைக்கும் இன்றைய சினிமா துறையே முழு முதல் காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணருகின்றார்களா? இல்லையே! அரசுகளும் மக்களின் பலகீனத்தை, சரீர இச்சையை, காமத்தைப் பயன்படுத்தி காசு சேர்ப்பதில் குறியாக இருக்கின்றனவே அல்லாமல், மக்களின் நலவாழ்வில் அக்கறைச் செலுத்தும் ஆட்சியாளர்கள் இன்று உண்டா? மக்கள் எக்கேடு கெட்டாலும் தாங்களும், தங்களின் குடும்பமும் பல தலைமுறைக்குச் சொத்து சேர்த்து சொகுசாக வாழ வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருக்கிறது. இவை அனைத்தும் மனுதர்மம் -மனுநீதியின் விளைவே. இன்று முஸ்லிம்கள் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் மீது நாத்திக பகுத்தறிவாளர்களுக்கு நல்லெண்ணம் இல்லை. காரணம் இன்று முஸ்லிம்களும் இறைவன் இறக்கியருளிய தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறியை நடைமுறைப்படுத்தவில்லை. முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ள முஸ்லிம் மத குருமார்கள் - மதப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான மனிதச் சட்டங்களையே - மனுதர்மத்தையே - மனுநீதியையே இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்துகிறார்கள். எனவே முஸ்லிம்களிடையேயும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள் , சம்பிரதாயங்கள், தர்கா அடிப்படையில துணைக் கடவுள்கள், அவற்றிற்கு கத்தம்பாத்திஹா, கந்தூரி, வஸீலா என இறைவனுக்கு இணை வைக்கும் மூடச் சடங்குகள் மலிந்து காணப்படுகின்றன.

இவற்றைப் பார்த்து சிந்திக்கும் நாத்திகப் பகுத்தறிவாளர்கள் இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு சாராரின் கற்பனையில் உதித்தவை கடவுள் நம்பிக்கை என முடிவுக்கு வந்து விடுகின்றனர். ஆக கடவுள் என்பதே இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து மக்களை ஏமாற்றுவதாகும் என முடிவுக்கு வந்து கடவுளை மற, மனிதனை நினை, கடவுளை கற்பிப்பவன் காட்டு மிராண்டி, கடவுளை வணங்குகிறவன் முட்டாள் என்கின்றனர். அதே சமயம் பெரியார், அண்ணா சிலைகளை செதுக்கி அவற்றிற்கு மாலை மரியாதை செய்து அவர்களை வணங்கி வருவதை உணர்கிறவர்களாக இல்லை. இல்லை நாங்கள் அவர்களுக்கு மரியாதை தான் செய்கிறோம் என சப்பைக் கட்டு கட்டுவார்கள். இன்றைய இந்த மரியாதைதான் நாளை வணக்கமாக மாறுகிறது; சமீபத்தில் சிறு பான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி பேசிய கலைஞர், ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களின் சமாதிகளை நோக்கி வணங்குவோம் என கைகூப்பிய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இந்த எமது கூற்றை மறுக்க மாட்டார்கள். இன்று காணப்படும் பெரும் பாலான சாமி சிலைகள் இப்படி மரியாதை என்ற பெயரால் ஆரம்பித்துதான் இன்று சிலை வணக்ககமாக ஆகியுள்ளது என்பதை நாத்திகர்கள் உணர்வதாக இல்லை. ஆக மனிதக்கற்பனைகள், அவை ஆட்சியாளர் தரப்பிலிருந்து வந்தாலும், ஆத்திகர் தரப்பிலிருந்து வந்தாலும், நாத்திகர் தரப்பிலிருந்து வந்தாலும் அவை அனைத்தும் மனிதக் கற்பபனைகளே, மனு தர்மமே, மனு நீதியே! அவை மனித சமுதாயத்தை வழிகேட்டில், அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

அப்படியானால் மனிதனின் செயல்பாடுகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்? மனிதனைப் படைத்த அந்த ஓரிறைவனின் வழிகாட்டல்படியே இருக்க வேண்டும். அவன் மனிதக் கற்பனைகளில் உருவான பொய்க் கடவுள்களின் பட்டியலில் உள்ளவன் அல்ல. அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த ஒரே இறைவன்; அவனல்லாது வேறு இறைவனோ, கடவுளோ இல்லவே இல்லை,

தூய இஸ்லாத்தை ஏற்கும் ஒருவர் மொழியும் உறுதி மொழியின் ஆரம்ப உறுதிப்பாடு என்ன தெரியுமா? அது அரபியில் “லா இலாஹ்” என்பதாகும். அதைத் தமிழில் புரோகித மத குருமார்கள் “வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை” என தவறாக மொழி பெயர்ப்பார்கள். இந்த உறுதி மொழியில் ஆரம்பத்தில் காணும் “லா” என்பதே இல்லை என்பதாகும். “இலாஹ்” என்பது தெய்வம் - கடவுள் - இறைவன் என்பதாகும். “அதாவது கடவுளே இல்லை” என்பதாகும். அதாவது இன்று நாத்திகர்கள் கொண்டிருக்கும் கொள்கை தூய இஸ்லாத்தை ஏற்பவர் கூறும் உறுதி மொழியின் முதல் பாதியாகும். அதன் அடுத்த பாதியான “இல்லல்லாஹ்” - அரபியில் அல்லாஹ் என்று சொல்லும் ஒரேயொரு இறைவனைத் தவிர என்பதே அதன் பொருளாகும்.

உலகில் தோன்றிய பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள், மக்களுக்குப் போதித்தது அகிலத்தையும் படைத்த ஓரிறைவனைத்தவிர வேறு தெய்வமே இல்லை என்பதேயாகும். ஆனால் தூய வாழ்க்கை நெறியை மதமாக்கி - அதைப் பிழைப்பாக்கி, வயிறு வளர்க்கும் அனைத்துத் தரப்பு மத குருமார்களின் கற்பனையில் உண்டானவை தான் பல வடிவங்களிலுள்ள பொய்க் கடவுள்கள்; ஓரிறைவனை நெருங்கச் செய்யும்,அந்த இறைவனிடம் பரிந்து பேசுவதாக கற்பனை செய்துள்ள துணைக் கடவுள்கள். இந்த புரோகிதர்களின் கற்பனை கடவுள்களை ஒழிக்க முற்பட்ட நாத்திக சகோதரர்கள் உண்மையான ஒரே ஒரு கடவுளையும் மறுப்பது அவர்களின் அறியாமையாகும். பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாமல், ஐயறிவுக்குள் கட்டுண்டவர்கள் அவர்கள்.

மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குரிய வாழ்க்கை நெறி முறைகளைக் காலத்திற்குக் காலம் தனது தூதர்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருந்தான். ஆனால் முன்னர் கொடுக்கப்பட்ட வழிகாட்டல் அறிவிப்புகள் முழுமையாகாமல் தற்காலிகமானவையாக இருந்ததால், அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. இறைவன் அவ்வாறு கட்டளையிடவில்லை. எனவே அவை அனைத்தும் அந்த இறை தூதர்களுக்குப் பின்னால், இந்தப் புரோகிதர்களின் கரம் பட்டு மாசடைந்து அவற்றின் தூய நிலையை இழந்து விட்டன. அவை இறக்கப்பட்ட மூலமொழிகளும் நடைமுறையில் இல்லாமல் அழிந்து போயின். மேலும் இந்திய அரசாலேயே முன்னர் வெளிவிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது போல், இறைவனும் முன்னைய வழிகாட்டல் நூல்களை செல்லாமல் ஆக்கி, உலகம் அழியும் வரை முழுமை பெற்ற இறுதி வழிகாட்டல் நூல் இதுதான் என அனைத்துலக மக்களுக்குமாக “அல்குர்ஆனை” நெறிநூலாக ஆக்கித் தந்துள்ளான். அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; அனைத்துலக மக்களுக்கும் சொந்தமானது அல்குர்ஆன். புரோகிதர்கள் சொல்வது போல் அல்குர்ஆன் வேதமோ, நடைமுறைச் சாத்தியமில்லா வேதாந்தமோ அல்ல; மாறாக அது நேர்வழி காட்டல் நூல் ஆகும். அது கடந்த சுமார் 1450 ஆண்டுகளாக புரோகிதர்களின் கரம்பட்டு மாசுபடாமல், அதன் தூயநிலை ஒரு புள்ளி அளவேணும் மாறுபடாமல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இறக்கியருளப்பட்ட அரபி மொழியும் இன்று வரை செத்த மொழியாகாமல், அதிகமான மக்கள் பேசும் மொழியாக இருந்து வருகிறது.

முன்னைய இறைதூதர்களுக்கு அருளப்பட்ட நெறிநூல்கள் மனிதக்கரம் பட்டதால் மனுதர்மம் - மனுநீதி ஆனது போல், இறுதி வழிகாட்டல் நுால் மனிதக்கரம் படாத நிலையில், அன்று போல் இன்றும் வாழ்க்கை நெறி நூலாகவே இருந்து வருகிறது; உலகம் அழியும் வரை பாதுகாத்து வரப்படும். இது அந்த ஒரே இறைவனது உறுதி மொழியாகும். இறைவனால் இறக்கியருளப்பட்ட எண்ணற்ற வழிகாட்டல் நூல்களில் மனிதக் கரம்பட்டு மாசுபட்டு, வேதமாகி, வேதாந்தமாகி, மனுதர்மமாகி, மனுநீதியாகி மக்களை மனிதக் கற்பனைகள் கொண்டு வழி கெடுக்காமல் நேர்வழி காட்டும் நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே.

இது காலம் வரை ஒரே இறைவனால் இறக்கியருளப்பட்ட நெறிநூல்களிலேயே தங்களின் கைவரிசையைக்காட்டி, அவற்றை மனு தர்மமாக - மனு நீதியாக ஆக்கிய புரோகித வர்க்கத்தினர், இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாமல் திகைத்தனர். மாற்று வழிக்காக அலைமோதினர். இறுதியில், அல்குர்ஆனுக்கு செயல் விளக்கமாக இருக்கும் இறுதித் தூதரின் நடைமுறைகள் (ஹதீஸ்கள்) உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படாததால், அவற்றில் தங்களின் கைவரிசையைத் காட்டத் துணிந்தனர். அந்த நடைமுறைகள் அல்குர்ஆன் வசனங்களைப் போல் சுமார் 6000 மட்டுமே உள்ள நிலையில் பல லட்சக்கணக்கான பொய் ஹதீஸ்களை இட்டுக்கட்டி தங்களின் புரோகிதப் பிழைப்புக்கு மாற்று வழி கண்டனர்.

ஆயினும் இறையச்சமுடைய நல்லடியார்கள், அவை அனைத்தையும் ஆய்வு செய்து அந்தப் பொய் ஹதீஸ்களையும் அடையாளம் காட்டினர். பின்னர் அல்குர்ஆனுக்கு விரிவுரை (தப்ஸீர்) ஹதீஸுக்கு விரிவுரை என்ற பெயரால் தங்கள் கற்பனைக் கதைகளைப் புகுத்தி மனுதர்மத்தை, மனுநீதியை தூய இஸ்லாமிய மார்க்கத்திலும் நுழைத்து விட்டனர். அவையே இன்று இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த வழிகேட்டைப் பார்த்துத்தான் நாத்திகப் பகுத்தறிவாளர்கள் தூய இஸ்லாத்தையும் மனுதர்மத்தை, மனு நீதியை போதிக்கும் இதர மதங்களோடு இணைத்துப் பேசுகின்றனர். ஒரே இறைவன் கொடுத்த, அமைதி நிறைந்த சாந்தியை நிலைநாட்டும் தூய வாழ்க்கை நெறியை கண்டறிய தவறி விட்டனர்.

முன்னர் விவரித்தது போல், இறையருளிய வழிகாட்டு நெறிநூல் போதனைகளில் அல்குர்ஆனைத் தவிர இதரவை அனைத்தும் கலப்படமாகி மாசுபட்டு மனுதர்மமாக, மனு நீதியாக ஆகிவிட்டன. இறைவனும் அவற்றை ரத்து செய்து செல்லாதவை ஆக்கிவிட்டான்.இன்று மனித வர்க்கத்திற்கு வழிகாட்டக் கூடிய நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே. அதில் மனிதக் கருத்துக்களே இல்லை. எனவே ஆதிக்க சக்திகள் தங்கள் நலனுக்கு ஏற்றவாறு மனிதக் கருத்துக்களைப் புகுத்தும் வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அல்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது தான் நேர்வழி. அதற்கு மேல் விளக்கம் - சுய விளக்கம் கொடுக்கும் அதிகாரம் உலகில் எந்த ஆலிமுக்கும் - அறிஞனுக்கும் இல்லை. இருப்பதை உள்ளபடி எடுத்துச் சொல்வதே அனைவரது கடமையாகும். அதில் செயல்படுத்த வேண்டிய முஹ்க்கமாத் வசனங்களுக்கு இரண்டாவது பொருளுக்கு இடமே இல்லை. ஆனால் உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மவ்லவி புரோகிதர்கள் விதவிதமான மேல் விளக்கங்களைப் கொடுத்து மனுதர்மமாக்கி மக்களை வழிகெடுப்பார்கள்.

அல்குர்ஆனில் அற்பமான மனித அறிவுக்கு எட்டாத மறைவான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் முறையான பகுத்தறிவுக்குப் பொருத்தமற்ற விஷயங்களைப் பார்க்க முடியாது. அல்குர்ஆனைப் படித்துப் பார்த்த நாத்திகப் பகுத்தறிவாளர்களில் சிலர் அதில் அறிவுக்குப் பொருந்தாத விஷயங்கள் இருப்பதாக வாதிடலாம். மனு தர்மத்தை இஸ்லாத்தில் புகுத்தி மதமாக்கிய முஸ்லிம் மதப் புரோகிதர்கள் கூறுவதுதான் அல்குர்ஆனில் இருக்கிறது என்ற தவறான கண்ணோட்டத்துடன் நாத்திகர்கள் அல்குர்ஆனை அணுகுவதால் இந்தத் தப்பெண்ணம் ஏற்படுகிறது. அல்குர்ஆனை முறையாக நடுநிலையோடு உள்வாங்கி சிந்தித்து அவர்கள் சொல்லுவதில்லை. நுனிப்புல் மேய்ந்துவிட்டு சொல்லும் கருத்தே அது. காரணத்தை ஒரு உதாரணம் மூலம் விளங்கலாம்.

ஒரு பாத்திரம் நிறைய சாராயம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பாத்திரத்தில் தூய்மையான பாலை ஊற்றினால் அப்பாத்திரம் அப்பாலை கொள்ளுமா? கொள்ளாது; அது வழிந்து வெளியேறிவிடும். உள்ளே சென்றதும் சாராயத்துடன் கலப்படமாகி சாராயமாகத்தான் இருக்கும். பாலாக ஒரு போதும் இருக்காது. இதுபோல் இந்த நாத்திகர்களின் உள்ளத்தில் கடவுள் மறுப்புக் கொள்கை நிறைந்து போயிருக்கும் நிலையில், புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க் கடவுள்களை விட்டு வேறுபட்டுள்ள உண்மையான, அனைத்தையும் படைத்த ஒரே ஒரு இறைவனை ஏற்கும் நிலையில் நாத்திகர்களின் உள்ளம் எப்படி இருக்கும்?

ஆத்திரத்தோடு அணுகினால் சரியும் தவறாகப்படும். அனுதாபத்தோடு அணுகினால் தவறும் சரியாக்கப்படும். இது இயற்கை நிலை. கடவுள் மறுப்பக் கொள்கை வெறியோடு - ஆத்திரத்தோடு அல்குர்ஆனை படிப்பவர்களுக்கு அதில் தவறுகள் இருப்பதாகவே படும். இது அவர்களின் அணுகு முறையிலுள்ள கோளாறே அல்லாமல் அல்குர்ஆனிலுள்ள கோளாறு அல்ல. மனிதக் கரங்களால் செதுக்கப்பட்டு மனிதக் கற்பனையால் கடவுளாக மதித்து வணங்குகின்றவர். பெரிய அறிவாளியாக இருந்தாலும், அது வெறும் சிலைதான்; கடவுள் அல்ல என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையே! காரணம் அந்தச் சிலை கடவுள் தான் என்ற எண்ணம் அவரது உள்ளத்தில் நிறைந்திருப்பதால், அதற்கு மாற்றமான கருத்து அவரது உள்ளத்தின் உள்ளே செல்வதாக இல்லை. இது இயற்கை நிலை.

அந்த ஒரே இறைவன் தனது தூதர்களாக மெத்தபடித்த மேதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த படிப்பறிவற்ற சாதாரணமாக இருந்தவர்களையே தூதர்களாகத் தேர்ந்தெடுத்தான். காரணம் அவர்களின் உள்ளங்கள் காலியாக இருந்ததால் இறையறிவிப்புகளை அப்படி ஏற்று, அவற்றில் கூடுதல் குறைவு செய்யாமல் அப்படியே மக்களிடம் எடுத்துச் சொல்லும் எதார்த்த நிலையைப் பெற்றிருந்ததுதான்.

எனவே நாத்திகப் பகுத்திறிவாளர்கள் தங்களின் உள்ளங்களில் நிறைந்து காணப்படும் ஓரிறை மறுப்புக் கொள்கையை அல்குர்ஆனை படிக்கும் போதாவது அகற்றி விட்டு, அல்குர்ஆனை நடுநிலையோடு படித்துப் பார்ப்பார்களேயானால் அதிலுள்ள மறுக்க முடியாத உண்மைகள் தெரிய வரும்.

ஒரு முன்மாதிரி : டாக்டர் மாரிஸ் புகைல் என்பவர் ஒரு கிறிஸ்தவ திரியேகத்துவக் கொள்கை அவரது உள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது. ஆயினும் பைபிளை ஆராய்ந்ததுடன் அல்குர்ஆனையும் ஆராய்ந்தார். பைபிளில் காணப்படும் விஞ்ஞானத்திற்கு முரண்பட்ட அனைத்து விஷயங்களையும் பட்டியலிட்டதோடு, அது போல் விஞ்ஞானத்திற்கு முரண்பட்ட ஒரு விஷயம் கூட அல்குர்ஆனில் இல்லை என்பதைக் கண்டறிந்து ஆச்சரியப்பட்டார். யேசுவுக்கு (ஈசா) அருளப்பட்ட இன்ஜீல் (பைபிள்) மனிதக் கரம்பட்டு மாசுபட்டுவிட்டதால், அதில் அன்றைய மூட நம்பிக்கைகள் அனைத்தும் நுழைக்கப்பட்டு மனுதர்மமாகி விட்டது. ஆயினும் அல்குர்ஆன் இறக்கப்பட்ட காலகட்டத்தில் விஞ்ஞானம் பற்றி பல மூட நம்பிக்கைகள் மக்களிடையே காணப்பட்டாலும், அவற்றை அல்குர்ஆனில் நுழைத்து அதை மாசுபடுத்தி - மனு தர்மமாக்க வழி இல்லாமல் போய்விட்டது.

அல்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதுடன், அது அந்த இறைவனால் மனிதக்கரம்பட்டு மனுதர்மம் ஆகாமல் பாதுகாக்கப்பட்டதால், அதிலுள்ள பல விஞ்ஞான உண்மைகளை இன்று மனிதன் கண்டு பிடித்து வெளியிடுகிறான். அல்குர்ஆன் அந்த ஒரே இறைவனின் கலாம் - சொல்; விஞ்ஞானம் அந்த ஒரே இறைவனின் ஃபிஅல் - செயல். எனவே இறைவனின் சொல்லும் - செயலும் ஒரு போதும் முரண்படாது என்ற பேருண்மையைக் கண்டறிந்து இஸ்லாத்தைத் தழுவினார்.

அவர் ஆங்கிலத்தில் எழுதிய “THE BIBLEE THE QURAN AND SCIENCE” என்ற நூல் தமிழில் “விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்” என்றும் வந்துள்ளது. அதைப் படித்துப் பார்ப்பவர்கள் 1450 ஆண்டுகளுக்கு முன்னர் மனித அறிவுக்கே எட்டாத விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருந்தால், அது ஒரே இறைவனால் அருளப்பட்டதாக மட்டுமே இருக்க முடியும் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.

கோபதாபமோ, விருப்பு வெறுப்போ, ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு அல்குர்ஆனைப் படித்து அதிலுள்ள கருத்துக்களை உய்த்து உணர்கிறவர்கள், அது மனித அறிவு கொண்டு எழுதப்பட்டதல்ல; மனிதனைப் படைத்த ஒரே இறைவனால் இறக்கியருளப்பட்ட, மனித வாழ்க்கை நெறிநூல் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அவர்களே பாக்கியசாலிகள்.

இன்று நடைமுறையில் இருக்குகம் ஜனநாயகமோ, கம்யூனிஸமோ, இதர எந்த சித்தாந்தமோ, கொள்கையாக இருந்தாலும் அவை அனைத்தும் மனிதக் கற்பனையில் உதித்தவையே. மனுதர்மத்திற்கு உட்பட்டவையே. அவை பக்க சார்புள்ளவையாகத் தான் இருக்க முடியும். நடுநிலையோடு மனித சமுதாயம் முழுமைக்கும் நீதி வழங்குவதற்காக ஒரு போதும் இருக்க முடியாது. மனிதனையும், மற்ற அனைத்துப் படைப்புகளையும் படைத்து நிர்வகித்து வரும் அந்த ஒரே இறைவன் மனித சமுதாயத்திற்கு அமைதியையம், சாந்தியையும் பெற்றுத் தரும் வாழ்க்கை நெறியை விவரமாக விளக்கும் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதிலுள்ளவற்றை உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பதால் மட்டுமே உலகில் நீதி நிலைநாட்டப்படும்.

மதப் புரோகிதர்கள் பின்னால் சென்று அவர்கள் தங்களின் சுயநலனுக்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்துள்ள மனுதர்ம அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று செயல்படும் ஹிந்து, பெளத்த, யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் சகோதரர்களே, மனிதக் கற்பனையில் உருவானபொய்க் கடவுள்களைக் காரணம் காட்டி, அனைத்தையும் படைத்த ஒரே இறைவனையும் மறுத்து, டார்வின், ரஸ்ஸல், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களின் மனிதக் கருத்துக்ககளான மனுதர்ம அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று செயல்படும் நாத்திக சகோதரர்களே, நீங்கள் இரு சாரரும் அழிவுப்பாதையில் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை மெய்யாக அறிந்து கொள்ளுங்கள். மனித வெற்றிக்கு, ஈடேற்றத்திற்கு மனிதனே சட்டங்கள் அமைத்து அதன்படி நடந்து கரை காண முடியவே முடியாது. அனைத்துலகையும், மனிதனையும், மற்றும் படைப்புகளையும் படைத்த இணை, துணை இல்லாத, எவ்வித தேவையும் இல்லாத அந்த ஒரேயொரு இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனை ஏற்று அதில் உள்ளதை உள்ளபடி சுயவிளக்கமோ, மேல் விளக்கமோ இல்லாமல் நடைமுறைப்படுத்துவது கொண்டு மட்டுமே இவ்வுலகம் இழந்துவிட்ட அமைதி, சாந்தி, சமாதானம் இவற்றை மீண்டும் நிலை நாட்ட முடியும் என்பதை உணர முன் வாருங்கள்.

உலகில் தோன்றிய பல்லாயிரக்கணக்கான இறைதூதர்கள், மக்களுக்குப் போதித்தது அககிலத்தையும் படைத்த ஓரிறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதேயாகும். ஆனால் தூய வாழ்க்கை நெறியை மதமதாக்கி - அதைப் பிழைப்பாக்கி, வயிறு வளர்க்கும் அனைத்து தரப்பு மத குருமார்களின் கற்பனையில் உண்டானவைதான் பல வடிவங்களிலுள்ள பொய்க் கடவுள்கள். ஓரிறைவனை நெருங்கச் செய்வதாகவும், அந்த இறைவனிடம் பரிந்து பேசுவதாகவும் கற்பனை செய்துள்ள துணைக் கடவுள்கள். இந்த புரோகிதர்களின் கற்பனை கடவுள்களை ஒழிக்க முற்பட்ட நாத்திக சகோதரர்கள் உண்மையான ஒரே ஒரு கடவுளையும் மறுப்பது அவர்களின் அறியாமையாகும். பகுத்திறிவை முறையாகப் பயன்படுத்தாமல், ஐயறிவுக்குள் கட்டுண்டவர்கள் அவர்கள்.

மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குரிய வாழ்க்கை நெறி முறைகளைக் காலத்திற்குக் காலம் தனது தூதர்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருந்தான். ஆனால் முன்னர் கொடுக்கப்பட்ட வழிகாட்டல் அறிவிப்பகள் முழுமையாகாமல் தற்காலிகமானவையாக இருந்ததால் அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. இறைவன் அவ்வாறு கட்டளையிடவில்லை, எனவே அவை அனைத்தும் அந்த இறைத் தூதர்களுக்குப் பின்னால், இந்தப் புரோகிதர்களின் கரம்பட்டு மாசடைந்து அவற்றின் தூய நிலையை இழந்து விட்டன. அவை இறக்கப்பட்ட மூல மொழிகளும் நடைமுறையில் இல்லாமல் அழிந்து விட்டன. மேலும் இந்திய அரசாலேயே முன்னர் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது போல், இறைவனும் முன்னைய வழி காட்டல் நூல்களையெல்லாம் ஆக்கி, உலகம் அழியும் வரை இறுதி வழிகாட்டல் நூல் இதுதான் என அனைத்துலக மக்களுக்குமாக “அல்குர்ஆனை” நெறிநூலாக ஆக்கித்தந்துள்ளான். புரோகிதர்கள் சொல்வது போல் அல்குர்ஆன் வேதமோ, நடைமுறைச் சாத்தியமில்லா வேதாந்தமோ அல்ல; மாறாக அது நேர்வழி காட்டல் நூலே ஆகும். மனிதச் சட்டங்கள் மனிதனை மனிதனாக வாழ வைக்காது மிருகமாகவே வாழ வைக்கும். மனிதனைப் படைத்த இறைவன் வகுத்தளித்த சட்டமே மனிதனை மனிதனாக வாழ வைக்கும் என்பதை உலக மக்கள் அனைவரும் உணர்ந்தால் மட்டுமே உலகம் உய்ய வழி பிறக்கும்.

மக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து

மக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 20 பில்லியன் சவுதி ரியால் (சுமார் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.
இப்புதிய திட்டம் தரும் வசதியின்படி, மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன இரயிலில், 30 நிமிடத்தில் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கும், 2 மணிநேரத்தில் மதினாவிற்கும் செல்ல முடியும் என்று சவுதி
இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 கி.மீ புதிய அதிநவீன மின்சார இரயில் பாதை மக்கா-ஜித்தா-மதினாவிற்கு இடையே போடப்படும். இப்புதிய இரயில்பாதை அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தகவல் தொடர்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். சவுதி அரேபியாவின் நவீன போக்குவரத்தை இத்திட்டம் மேலும் அதிகப்படுத்தும் என்பதாகத் தெரிகிறது.
இரயில் பாதை அமையும் இடங்களுக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களை மதிப்பிட பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டு உரிய தொகையை நிலத்தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஜித்தா
அல்-ராஜி குழுமம், சவுதி பின்லாடின் குழுமம், சவுதி ஓஜர் குழுமம், சவுதி ஜப்பானிஸ் குழுமம், அல்ஷோலாஹ் குழுமம் மற்றும் OHL பன்னாட்டு குழுமம் ஆகிய ஆறு பெரிய குழுமங்கள் இத்திட்டத்திற்கான டென்டர்களில் போட்டியிடும் என்று தெரிகிறது.
இத்திட்டத்தின் கீழ் குறைந்த நேரத்தில் நவீன வசதியுடன் பாதுகாப்பான முறையில் சுமார் வருடத்திற்கு 10 மில்லியன் உம்ரா மற்றும் ஹஜ் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தினால் 2010-ல் சுமார் 500 மில்லியன் சவுதி ரியால்கள் ஆண்டு வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டமானது சவுதி அரேபியாவின் மிகப் பெரிய இரயில் திட்டங்களான (சுமார் 950 கி.மீ. தூரம்) ஜித்தா-ரியாத் மற்றும் (சுமார் 115 கி.மீ. தூரம்) தம்மாம்-ஜுபைல் இரயில் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

நன்றி: அரப் நியூஸ்
அரேபியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் ஜபாரா அல் ஸராய்ஸ்ரி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய துறைமுகம், மன்னர் அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் ராபிக் நகரில் உள்ள மன்னர் அப்துல்லாஹ் தொழிற்நுட்பப் பூங்கா ஆகிய இடங்களில் இதற்கான இரயில் நிலையங்கள் அமையும்.

மக்க மாநகரில் நாளை குர்ஆன் போட்டி ஆரம்பம்

மன்னர் அப்துல் அஸீஸ் குர்ஆன் மனனப் போட்டி நிகழ்ச்சி நாளை திங்கட் கிழமை அரபிய முஸ்லிம் நாடுகளிலிருந்து வருகை தரும் முக்கயஸ்தர்களின் வருகையுடன் ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் நூற்றி அறுபத்தைந்து போட்டியாளர்கள் 96 நாடுகளின் 71 இஸ்லாமிய நிலையங்கள் கலந்து கொள்வார்கள்.

இஸ்லாமிய விவகார அமைச்சு போட்டி ஏற்பாட்டுக்குழுக்களுக்கு புதிய தொழினுட்பங்களை பிரயோகித்து நடாத்தவிருக்கும் ஏழு நாட்கள் போட்டியில் சிறந்த குர்ஆன் ஹாபிழை தெரிவு செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளது.

இணையத்தளத்தி;ன் மூலம் தொடர்பு கொண்டு புதிய போட்டியாளர்கள் ஒவ்வொரு வருடமும் கலந்து கொள்வது வழக்கமாகும் என போட்டியின் பொதுச் செயளாளர் அப்துல் அஸீஸ் பின் அப்துர்ரஹமான் அவர்கள் தெரிவித்தார்கள். இணையத்தளத்தின் :மூலம் போட்டியளார்களுடன் தொடர்பு கொண்டு உரையாடல் மூலம் மொழிபெயர்ப்பு போட்டிகளை இலகுவாக நடாத்த முடிந்தது எனவும் கூறினார். இம் முறை மூலம் சரியான முடிவுகளை பெறக் கூடியதாகவுள்ளது எனவும் கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமான பிரச்சினைகளை முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இப்பிரச்சினையின் தீர்வுகள் குர்ஆனை சரியாக விளங்கிக் கொள்வதிலே இருக்கின்றது எனவும் கூறினார்.

அதிகமான நலன்புரிச் சங்கங்கள் இம்முறை போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன. ஜித்தா நலன்புரிச்சங்கம் இம்முறை கலந்து கொள்கின்றது.

மோசம் போகும் மனிதர்கள்

உலகில் பெரும் பெரும் அறிஞர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் மற்றும் பல துறை மன்னர்கள், அவர்களின் அறிவு ஆற்றலில் குறைவு இல்லை. ஆயினும் மனிதனை தெய்வமாக்குவதும், தெய்வத்தை மனிதனாக்குவதும் தெய்வத்தால் மன்னிக்கப்படாத குற்றம். கல்லை சிலையாக வடித்து அதனை தெய்வமாக வழிபடுவது தெய்வத்திற்கு இணை வைக்கும் செயல், மாபெறும் குற்றம் என்ற மறுக்க முடியாத உண்மையை அவர்களால் ஜீரணிக்க முடிகிறதா? கல்லை தெய்வமாக நம்பி மோசம் போகும் உலகியல் அறிஞர்களின் எண்ணிக்கை தெரியுமா?

    இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்; அவர்கள் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதாக நம்பி, அவர்களால் மற்றவர்களின் கோரிக்கைகளை கேட்க முடியும், கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முடியும் என்பது மூட நம்பிக்கையாகும் என்ற இறைவனின் அழகிய உபதேசத்தை ஜீரணிக்க முடியாத எஞ்சினியர்கள் மற்றும் பலதுறை அறிஞர்கள்களின் எண்ணிக்கை தெரியுமா?

    அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை மட்டுமே மார்க்கமாக எடுத்து நடக்க வேண்டும். மனித யூகங்களை மார்க்கமாக எடுத்து நடப்பது, நம்பிச் செயல்படுவது மோசம் போய் நரகில் கொண்டு சேர்க்கும்  செயலாகும் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தெரியுமா?

    இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறப்பிற்குப்பின் உண்டான மத்ஹபுகள், தரீக்காக்கள், மற்றும் பல சடங்குகள் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராதவை பின்பற்றக் கூடாதவை என்பதை உரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் நிலை நிறுத்தினாலும் அவற்றை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகள் எண்ணிக்கை தெரியுமா?

    அல்லாஹ் இந்த உம்மத்திற்கு கொடுத்த மார்க்கம் இஸ்லாம். பிரச்சார பணி புரிகிறவர்கள் தங்களை முஸ்லிம் என்றே அழைத்துக்கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் அழகிய உபதேசமாக இருந்தும் (41:33) அதனை ஜீரணிக்க முடியாமல் தங்கள் சொந்த கற்பனையில் தோன்றிய காரணங்களை  காட்டி பல இயக்கங்களாக பிரிந்து செயல்படுவதை நியாயப்படுத்தும் முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தெரியுமா?

    இப்படி எண்ணற்றோர், கோடிக்கணக்கானோர் சத்தியத்தை ஜீரணிக்க முடியாமல் அசத்தியத்தை அணைத்துக்கொள்ளக் காரணம் என்ன? காரணம், அவர்களின் உள்ளங்களில் ஏற்கனவே ஊறிப்போயிருக்கின்ற, புரையோடிப் போயிருக்கிற உண்மைக்கு புறம்பான தத்துவங்களேயாகும். உள்ளங்களில் புரையோடிப் போயிருக்கிற குருட்டுத் தத்தவங்களை விட நம்மைப் படைத்த எஜமானனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடி பணிவதே அடிமையாகிய நமது நீங்காக் கடமையாகும் என்பதை தெளிவாகக் புரிந்து கொண்டவர்களே வெற்றியடைவார்கள். அவர்களால் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளை என்று அறிந்த மாத்திரத்தில் அவர்களால் ஜீரணிக்க முடியாவிட்டாலும், தங்களின் மனோ இச்சைகளை தூக்கி எறிந்து விட்டு, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிய முடியும்.

    இப்ராஹீம் (அலை) அவர்களின் உள்ளம் ஜீரணித்தா அருமை மனைவியையும், பாசமுள்ள மகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்லத் துணிந்தார்கள்? எண்ணிப் பாருங்கள். துள்ளித் திரியும் அருமை மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தார்கள்? எண்ணிப் பாருங்கள். ஆம்! தங்கள் பகுத்தறிவை எஜமானனாகக் கொள்ளாமல், படைத்த அல்லாஹ்வை மட்டுமே தங்கள் எஜமானனாகக் கொண்டவர்களால் மட்டுமே இப்படிச் செயல்பட முடியும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஜீரணிக்க முடியாதவர்கள் தங்கள் பகுத்தறிவை தங்களின் எஜமானனாகக் கொண்டுள்ளார்கள் என்பதில் ஐயமுண்டா?

    பகுத்தறிவால் ஜீரணிக்க முடிந்த அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பவர்கள், பகுத்தறிவுக்கு அடி பணிந்தார்களா? அல்லது படைத்த அல்லாஹ்வுக்கு அடி பணிந்தார்களா? இதனை எப்படி அறிந்து கொள்வது? அதனால்தான் பகுத்தறிவால் ஜீரணிக்க முடியாத சில விஷயங்களையும் அல்லாஹ் கட்டளைகளாகக் கொடுத்து மனிதனைச் சோதிக்கிறான்.

    பகுத்தறிவை புறம் தள்ளி, அல்லாஹ்வின் தெளிவான கட்டளைக்கு அடி பணிகிறவன் வெற்றி பெறுகிறான், இப்றாஹீம்(அலை) அவர்கள் வெற்றி பெற்றது போல்.

    அல்லாஹ்வின் கட்டளையைப் புறந்தள்ளி, தனது பகுத்தறிவுக்கு அடிபணிகிறவன் தோல்வியடைந்து நரகம் புகுகின்றான், ஷைத்தானைப்போல்.     அல்லாஹ்வுக்கு மட்டுமே சுஜூது செய்ய வேண்டியவன், செய்து கொண்டிருந்தவன், நெருப்பால் படைக்கப்பட்ட தன்னைவிட, மண்ணால் படைக்கப்பட்ட படைப்பான ஆதமுக்கு சுஜூது செய்வதா? என்பதுதானே ஷைத்தானின் பகுத்தறிவின் வாதம்? ஆம்! தனது பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தான்; தன்னையும், ஆதத்தையும் படைத்த இறைவனின் கட்டளையைப் புறந்தள்ளினான்; விளைவு? நரகம் புகுந்தான். அதே போல் அல்லாஹ்வின் கட்டளையை ஜீரணிக்க முடியவில்லை என்பதற்காக பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாசமடைந்து நரகம் புக நேரிடும். அல்லாஹ் அதைவிட்டும் பாதுகாப்பானாக.