ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 ![]() | 帮助 |
|
|
அறிவாற்றல் உள்ள மாணவர்கள் படிக்காவிட்டால் சமுதாயத்துக்கு இழப்பு: டி. கே. எஸ். இளங்கோவன் நல்ல மதிப்பெண் பெற்று அறிவாற்றலோடு உள்ள மாணவர்கள் படிக்காவிட்டால் சமுதாயத்துக்குதான் இழப்பு என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டி. கே. எஸ். இளங்கோவன்.
வெளிச்சம் அமைப்பின் சார்பில் மாணவர்களின் சமூக மற்றும் உளவியல் குறித்த மாநில அளவிலான பிரசார பயணத் தொடக்க விழா சென்னை லயோலா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி. கே. எஸ். இளங்கோவன் பேசியது:
சமுதாயத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. நம்மை உருவாக்கிய சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற கடமைதான் அது.
எனவே வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு கல்வியை அளிக்க அனைவரும் முன் வர வேண்டும் என்றார் இளங்கோவன்.
வெளிச்சம் அமைப்பானது முதல் தலைமுறை ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் படிப்புக்குத் தேவையான நிதியுதவியைத் திரட்டிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.
தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தின் மூலம் வெளிச்சம் அமைப்பைச் சார்ந்த ஆறு மாணவர்கள், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் படிக்க முடியாமல் உள்ள முதல் தலைமுறை மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் படிப்புக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் உதவி கோர உள்ளனர் என்றார் அமைப்பின் நிறுவனர் ஷெரீன். இளம் மாணவர்களின் மனதில் பொதுவாக எழும் சந்தேகங்கள் குறித்த கேள்வி, பதில் அடங்கிய கையேடும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சிவசங்கர், திரைப்பட இயக்குநர் எஸ். பி. ஜனநாதன், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செல்போன் ஒன் நிமிட்.. கவனம்!!!அண்மையில் அரபு நாடொன்றில் நடந்த சம்பவம் இது. தனது செல்போனை சார்ச் செய்யப் போட்டுவிட்டு உறங்கப்போன அவருக்கு சிறிது நேரத்தில் சிணுங்கிய செல்போன் எரிச்சலைக் கொடுத்தாலும் எடுத்துக் காதில் வைத்தார். ஆனால் அவர் அதனை சார்ச் செய்வதிலிருந்து கழற்றவில்லை.
சிறிது நேரம்தான் பேசியிருப்பார். திடீரென்று அதிகமாக பாய்ந்த மின்சாரம் அவருக்கு மின்அதிர்வை உண்டுபண்ணியதுடன் செல்போனும் வெடித்து எரியத் தோடங்கிவிட்டது.
எரிந்த படுக்கை
சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குறைவான இதயத்துடிப்புடன் சுயநினைவற்றுக்கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
கையில் தீக்காயம்
செல்போன் இன்று மிகவும் உபயோகமான சாதனம்தான். ஆனால் அதனால் உயிரைக்கூட எடுக்கமுடியும் பார்த்தீர்களா? ஒருபோதும் சார்ச் செய்யும்போது செல்போனில் பேசாதீர்கள். -- அன்புடன்... முஹம்மது இஸ்ஹாக் Ishaq KAM எல்லாமே இனிய செய்தி (ஒரு பெண்ணின் கதை )காலையில் எழுந்து செய்தி தாளை திறந்தாலே வெறுப்பும் கோபமும் தான் வருகிறது. அதிலும் தேர்தல் காலம் என்பதால் எல்லா பக்கமும் நீக்கமற அரசியல் தான். இன்றைக்கு அரசியல் என்பதன் அர்த்தம் துரோகம், அநியாயம் , அக்கிரமம், கொடுமை, ஏமாற்று வேலை, பித்தலாட்டம் என்று ஆகிவிட்டதால் , அந்த செய்திகளை பார்க்க ஆரம்பித்தாலே ஒரு வித அசூசை வந்துவிடுகிறது. இணையத்தில் ஏதேனும் நல்ல செய்திகள் அல்லது அதற்கென்றே ஏதேனும் வலைத்தளங்கள் உண்டா என்று தேடி பார்த்தேன். ஒரு அருமையான தளம் கிடைத்தது. அதன் வடிவமைப்பே மனதிற்கு இனியதாக இருந்தது. செய்திகளை வகை பிரித்திருந்தார்கள். எல்லாமே இனிய செய்திகள் என்பதால் தைரியமாக எல்லாவகை பக்கங்களுக்கும் போக முடிந்தது. முதலில் கண்ணில் பட்ட செய்தி , ஒரு இளம்பெண் தனது தன்னலமற்ற சேவைக்காக விருது வாங்கியிருக்கிறார். படித்தேன் , பல ஆச்சர்யங்கள் சந்தோசங்கள். முதல் ஆச்சர்யம் அவர் என் மகளின் பெயரான மீனாட்சியின் பெயரை கொண்டிருந்தது. அடுத்த ஆச்சர்யம் அவர் பின் தங்கிய மாநிலமான ஒரிசாவில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்து , கடும் புயலுக்கு பலியான தனது கிராமமான மங்கரஜ்பூர் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் , தன்னுடன் இன்னும் 12 பெண்களை சேர்த்துக்கொண்டு செய்திருக்கிறார். அப்போது அவருக்கு வயது இருபதுகளின் ஆரம்பம் தான்.
Meenakshi received CII Award பத்து வருடங்களுக்கும் மேலாக தன்னை இந்த சேவையில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அவரது சுய உதவி குழு , ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அந்த கிராமத்தையே பெரும் சரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுதிருகிறார்கள். இன்று அந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் சுயமாக பூர்த்தி செய்கிறது அவரின் குழு. கிராம நிர்வாகம், சுற்றுப்புற மேம்பாடு , கிராம வளர்ச்சி எல்லாவற்றையும் அவரது குழுவே முன்னின்று நடத்துகிறது. கிராம வருமானத்திற்கு ஆதாரமான விவசயாம், கோழி வளர்ப்பு , பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்பு என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தனது கிராமத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்கிறார். இவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி CII அமைப்பு தலைநகர் டெல்லி இல் கடந்த வாரம் வியாழன் அன்று நடந்த விழாவில் இவருக்கு விருதும் , 1 லட்ச ருபாய் சன்மானமும் அளித்து கௌரவித்து இருக்கிறது. இந்த விருதை வாங்கும்போது இவரின் வயது 32 மட்டுமே. இவர் போன்ற பெண்கள் நம் தேசத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவை . ஏற்கனவே இருக்கிறார்கள் அவர்களுக்கு தேவை தைரியமும் தன்னம்பிக்கையும் . அதற்கு இவரின் கதையை ஒரு உதாரணமாக எல்லோரிடமும் கொண்டு செல்வோம். குழந்தையாக இருக்கும் போது நம்மை சுற்றி உள்ள மனிதர்களும், இடங்களும் தான் நம் உலகம். அந்த வயதில் உலகம் என்பது சந்தோசமயமானது . பதின் பருவம் உலகத்தை கொஞ்சம் புரியவைக்கும். அப்போது நமக்கு பிடிக்காததை எல்லாம் மாற்றிவிட துடிக்கும். அநீதியை, துயரத்தை, பிரச்னையை எல்லாம் ஒரே நாளில் அகற்றி விட முயல்வோம். ஆனால் காலம் செல்ல செல்ல நம் சூழ்நிலையின் அழுத்தத்தாலும், குடும்ப பாரத்தாலும் நாம் அதனுடனே வாழ பழகிவிடுகிறோம். ஒரு சிலர் மட்டுமே அந்த பதின்பருவத்து ஆற்றலை , நற்செயல்களுக்கு முழுதுமாக கொடுத்து உலகத்தை மாற்றுகிறார்கள். அந்த ஒரு சிலரால் தான் உலகம் வாழ்கிறது. Note : அந்த இனிய செய்திகளின் வலைத்தளத்தை காண இங்கே சொடுக்குங்கள் தொலைக்காட்சியா? உயிர் கொல்லியா?சென்னைத் தலைநகரின் அருகில் உள்ள செங்குன்றத்தில் டி. மகேந்திரன் என்ற 10 வயது பாலகன் (மாணவன்) அடிக்கடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பழக்கமுடையவன்.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தேநீர் கடை வைத்து வாழும் அவன் தந்தை, ஏம்பா, இப்படி அடிக்கடி டி.வி. பார்த்துக்கொண்டே இருக்கிறாய் படிக்க வேண்டாமா? என்று சற்று கடிந்து கூறியிருக்கிறார்.
அவன் தந்தை வேலைக்குப் போன பிறகு உடனே ஒரு அறைக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாள் இட்டுக் கொண்டு மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளான். அவனது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தவரும் அக்கம்பக்கத்தவரும் ஓடோடி வந்து கதவை உடைத்து அவனை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அதிகமான அளவு உடற்காயங்கள் ஏற்பட்டதால் அவன் இறந்து போனான்!எவ்வளவு வேதனையான துயரம் நிறைந்த சம்பவம் பார்த்தீர்களா? தொலைக்காட்சி பார்க்காதே அளவுக்கதிகமாக என்று சொல்லிக் கண்டித்ததால் இப்படி ஒரு இளங்குருத்து எரிந்து நாசமாயிற்றே என்று நினைக்கையில் நமக்கு இந்தத் தொல்லைக்காட்சிகளாகிய இவை உயிர்க்கொல்லிகளாகவும் மாறி வருவது கொடுமையிலும் கொடுமை அல்லவா! இளம் பாலகர்களைக்கூட இந்தத் தொலைக்காட்சிப் போதை விட்டு வைக்கவில்லையே! தந்தையின் கடமை தடுத்து திருத்துவதல்லாமல் வேறு என்ன? மெல்லிய உள்ளத்திற்கேற்ப செய்திருக்கலாமே என்று சிலர் வாதிடக் கூடும். அய்ந்தில் வளைக்காவிட்டால் அய்ம்பதில் முடியுமா? தொலைக்காட்சி மயக்கத் தொத்து நோய் உலகளாவிய ஒரு நோய் - மற்ற நோய்களைப்போல! இதோ ஒரு செய்தி: டி.வி. பார்க்காதீர்கள்; அதற்குப் பதிலாக புத்தகம் படியுங்கள் - நன்றாகத் தூங்குங்கள். இப்படி ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நெல்சன் மண்டேலா மருத்துவ ஆராய்ச்சி மய்ய வல்லுநர்கள் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு கண்டறிந்த உண்மைகள் வருமாறு: வாரத்துக்கு 32 மணிநேரம்; ஆண்டுக்கு 1,700 மணிநேரம் - சராசரி அமெரிக்கர் டி.வி. பார்க்கும் நேரம். இத்தொலைக்காட்சி பார்க்கும் போதை ஏறுவதால், 1. நம்முடைய சாப்பிடும் பழக்கம் மாறுகிறது; 2. தூக்கம் கெடுகிறது; 3. உடல் எடை கூடுகிறது; 4. உடல் சோர்வு முதல் எல்லாக் கோளாறுகள் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. ஆண்களைவிட, பெண்கள்தான் அதிகம் டி.வி. பார்க்கின்றனர் (இங்கென்ன வாழ்கிறதாம்!) பெண்கள் குண்டாக இதுவும் ஒரு காரணமாகும். இதனை எதிர்த்து டி.வி.யை அணைக்கும் வாரம் என்று விசேஷமாக ஒரு வாரத்தைக் கடைப்பிடிக்கின்றனர் அங்குள்ள பல அமைப்பினர். டி.வி. பார்ப்பது அதிகரித்து வருவதால், சமுதாயப் பொது ஒழுக்கம் பாழாகின்றது! நமது தொலைக்காட்சிகளின் சீரியல்களில் மெகா தொடர்களில் வரும் பெண்களை - அவ்வினமே தலைகுனியும் வண்ணம் - வில்லிகளாக, சூழ்ச்சிக்காரிகளாக, அகம்பாவிகளாகக் காட்டுவது கண்டும், நவீன முறைகளிலும் கொலை, கொள்ளை நடத்திட கற்றுக் கொடுக்கும் வகுப்பறை போன்றும் பல அமைவதால் சமுதாயச் சீரழிவுக்குப் பெரிதும் அது வழிவகுப்பதாக உள்ளது! காட்சிப்படுத்துவது, கண்ணை, கருத்தை, உடலை, உலகையே கெடுக்கும் ஆபத்தினை உள்ளடக்கிய கொடுமையல்லவா! இங்கும் ஒரு விழிப்புணர்வு மக்களிடையே - குறிப்பாக இளைஞர்களிடையே தேவை! சில விதிவிலக்குகள் - டிஸ்கவரி அலைவரிசை (Channel), பூகோள அலைவரிசை (Geography Channel) இருக்கலாம். ஆனால், அவைகளை பார்ப்பவர்கள் எத்தனை பேர்? உயிர்க்கொல்லியாக ஊடகம் மாறலாமா?
பொங்கல் தமிழர்களின் அடையாளம்!மதப் பண்டிகைகளைப் புறந்தள்ளும் வண்ணம் தமிழர் திருநாளாம் பொங்கலை உலகத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று சென்னையில் கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழன் ஜாதிகளால் பிளவுபட்டு தமிழன் என்கிற ஓரினக் கோட்பாட்டை மறந்தான். பார்ப்பன மதத்தின்முன் மண்டியிட்டு, தமிழன் தன் இன அடையாளப் பண்பாட்டை மறந்தான். தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படும் 60 ஆண்டுகளின் பெயர்களைப் பார்க்கட்டும்; பிரபவ, விபவ என்று தொடங்கும் 60 பெயர்களும் அசல் சம°கிருதப் பெயர்கள்; தமிழ் ஆண்டுகள் பிறந்ததாகக் கூறப்படும் புராணக் கதையோ குடலைப் புரட்டக் கூடியது. நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்கிற ஆண் கடவுளுக்கும் பிறந்த இந்த அறுபது குழந்தைகளும்தான் தமிழ் வருடங்களாம்! தமிழன் இதனை ஒப்புக்கொண்டு ஆண்டுதோறும் வருஷப் பிறப்புக் கொண்டாடுகிறான். தமிழனுடைய பெயர்கள் தமிழில் இல்லை; தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களும் சம°கிருத மயம் ஆக்கப்பட்டுவிட்டன. தமிழன் கொண்டாடுபவை விழாக்கள் அல்ல; மாறாக ஆரியப் பண்டிகைகள்! தீபாவளிக்கும், தமிழனுக்கும் என்ன உறவு? கார்த்திகை பண்டிகையைத்தான் கொண்டாடுவதில் பொருள் இருக்கிறதா? சர°வதி பூஜையும், ஆயுதப் பூஜையும் எங்கிருந்து குதித்தன? நவராத்திரிக்கும், தமிழர் வாழ்வுக்கும் ஏதாவது ஒட்டு உறவு உண்டா? பண்டிகைகள் தான் பார்ப்பனியத்தைத் தழுவி நிற்கின்றன என்றால், தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் எந்த நிலைக்கு ஆளாகியிருக்கின்றன? தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்திட ஒரு தமிழனுக்குத் தகுதி கிடையாது; காரணம், ஆரிய தரும சா°திர விதிகளின்படி தமிழன் பிறப்பால் சூத்திரன் - ஒரு சூத்திரன் எந்த நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்கிட முடியாது. கல்யாணத்திலிருந்து கருமாதி வரை பார்ப்பனப் புரோகிதன் அழைக்கப்படுவான்; அவன் பாதங்களில் தட்சணையைக் கொட்டிக் கொடுத்து தனது சூத்திர அடிமைத்தன்மையை அன்றாடம் புதுப்பித்துக் கொள்கிறான். தமிழன் வீடு திறப்பு விழா கிரகப் பிரவேசம் ஆயிற்று. அதற்கும் ஆரியப் பார்ப்பான்தான் வரவேண்டும். இப்படி தமிழன் என்று கூறுவதற்கு எந்த அடையாளமும் இன்றித் தமிழன் திரிந்து போனான். இந்த நிலையில்தான் தந்தை பெரியார் என்ற வரலாற்று நாயகரின் மகத்தான பணி தமிழர் சமுதாயத்துக்குக் கிடைத்தது. ஆரியர் வேறு - திராவிடர் வேறு என்பதை விளக்கினார். பார்ப்பான் கற்பித்த கடவுளின் தோளில்கூட பூணூல் தொங்குவதைச் சுட்டிக்காட்டினார். கோயில் கட்டிய தமிழன் கோயில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே ஏன் என்ற வினாவை எழுப்பியவரும் அவரே! உம் வீட்டு நிகழ்ச்சிகளில் தமிழுக்கு இடம் இல்லையே - சிந்தித்ததுண்டா என்று கேட்டவரும் அவரே! கடவுளின் பெயரால் இந்த வேற்றுமை நடக்கிறது; மதத்தின் பெயரால் தமிழினம் ஒடுக்கப்பட்டுள்ளது; சாத்திரங்களின் பெயரால் தமிழன் இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறான் என்பதை எடுத்துச் சொல்லிச் சொல்லி மரத்துப் போய்க் கிடந்த தமிழனிடத்தில் சுயமரியாதைச் சூடு போட்டு விழித்தெழச் செய்த வரலாற்று மாற்றத்திற்குப் பெயர்தான் தந்தை பெரியார்; அவர் கண்ட அமைப்புக்குப் பெயர்தான் திராவிடர் கழகம். உலகம் முழுவதும் அறுவடைத் திருவிழா நடைபெறுகிறது. தமிழர்களின் அறுவடைத் திருவிழா தை முதல் நாளான பொங்கல்தான்! ஆம், அதுதான் தமிழன் விழா என்று அறுதியிட்டுக் கூறினார் அறிவுலக ஆசானாம் தந்தை பெரியார். பார்ப்பனர்களோ உழவுத் தொழிலைக் கேவலப்படுத்தி யுள்ளனர்; விவசாயம் பாவத் தொழில் என்பது அவர்களின் மனுதர்மக் கோட்பாடு. வேளாண் திருவிழாவான தமிழர் பண்பாட்டுப் பொங்கல் நாளை ``சங்கராந்தி’’ என்று மாற்றியது ஆரியம்! இவற்றையெல்லாம் தமிழர்கள் சிந்திக்கவேண்டாமா? தமிழன் என்கிற இனவுணர்வு பெறவேண்டாமா? அதனால்தான் திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழர்கள் பொங்கலைக் கொண்டாடவேண்டும்; மத விழாக்களைப் புறந்தள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழன் மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அடையாளம்தான் தமிழர்கள் பொங்கல் விழாவை தனித்தன்மையுடன் கொண்டாடுவதாகும். இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ஜன நாயகம் எங்கே ? நண்பர்களே,,,,, கடந்த வாரம் மும்பையில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தபோது, எனது ரத்தமே உறைந்துவிடும்போல இருந்தது. காரணம், AK47 வகையான பயங்கரமான ஆயுதங்களைக்கொண்டிருந்த இவர்களை எதிர்க்கப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்கள் கையிலிருந்ததோ பழங்காலத்து வெள்ளையர்காலத்தில் அளிக்கப்பட்ட துப்பாக்கி. இதைக்கொண்டு எந்த நம்பிக்கையிலும், தைரியத்திலும் இந்தப்படையினர் தீவிரவாதிகளை எதிர்கொள்கிறார்கள் என்று என்னைப்போலவே ஆயிரக்கணக்கானவர்கள் வியப்படைந்திருப்பார்கள். பாரதநாட்டில், மக்கள் நல்லவர்கள், அவர்களிடம் தேசபக்தியும் மிக்க உண்டு. இல்லாத ஒன்று நல்ல நிர்வாகிகளே. விஞ்ஞானம் அபரிமிதமாக வளர்ந்துள்ள இக்காலத்தில், அரசின் பாதுகாப்புத்துறையும், தங்களை முன்னோடியாக்கிக்கொள்ள வேண்டும். காரணம், அரசின் மீது நம்பிக்கை கொண்டுதான் மக்கள் வாழ்கிறார்கள். எல்லா விஷயத்திலும், லஞ்சம், ஊழல், அராஜகம், இடஒதுக்கீடு, சிக்கனம் என்று ஆகிவிட்டால், நாடு மற்றும் மக்களது பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பதை மும்பைச்சம்பவம் அப்பட்டமாக காட்டிவிட்டது. ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்தபின்னும் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதும், உதவித்தொகை அறிவிப்பதையும் விட, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத்தடுப்பதே சாலச்சிறந்தது. புதிய உளவு அமைப்பை ஏற்படுத்துவதை வரவேற்றாலும், அது வழக்கமான சம்பிரதாயமாக இல்லாமல், உண்மையான ஆபத்தை மனத்தில் கொண்டு செயல்பட அரசு வழிவகை செய்யவேண்டும். முக்கியமாக, இந்த அமைப்புகளுக்கு போதிய முடிவெடுக்கும் அதிகாரம், நிதி, பயிற்சி எல்லாம் வழங்கப்படவேண்டும். மும்பைச்சம்பவத்தால், 4000 கோடி இழப்பு என்பதை அறிகிறோம். இந்தளவு இழப்பதற்கு பதிலாக, சுமார் நூறு கோடியை செலவிட்டு, நாட்டின் பாதுகாப்புக்காக தரமான ஆயுதங்கள், ஹெலிகாப்டர், வாகனங்கள், தகவல் தொடர்புச்சாதனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றிற்குச்செலவழிப்பதில் தவறில்லை. எல்லாவற்றிற்கும், ஒருமித்த கருத்து என்று அரசு தப்பிப்பதற்கு பதில், துணிச்சலான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசும் அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும். இது நடக்காதவரையில், நாட்டின் பாதுகாப்பு பயங்கரவாதிகளின் தயவில் இருக்கவேண்டியதே. நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறை கிடையாது . நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான். ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்? யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது போன்று தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை. ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார். எக்ஸ்ட்ரா 'வரும்படி' இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான். இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை. இன்னொரு கொடுமையும் உண்டு. பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான். இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு. இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள். இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம். இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான். இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான். இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்... இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை. நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்? ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்... ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள். நம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். என்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர். நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம். நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு. தனிமனித ஓழுக்கம் இல்லை, எப்படி ஜன நாயாகம் ஜெயிக்கும். எதிலும் லஞ்சம், எங்கும் லஞ்சம், எதற்க்கெடுத்தாலும் லஞ்சம், Birth certificate வாங்குவதற்கு லஞ்சம், Death Certificate வாங்குவதற்கு லஞ்சம், Bank loan வாங்குவதற்கு லஞ்சம், passport verification வாங்குவதற்கு லஞ்சம், Gas connection வாங்குவதற்கு லஞ்சம், EB connection வாங்குவதற்கு லஞ்சம், Two wheeler license வாங்குவதற்கு லஞ்சம், house registration வாங்குவதற்கு லஞ்சம், school admission வாங்குவதற்கு லஞ்சம், Hospital admission வாங்குவதற்கு லஞ்சம், Insurance money வாங்குவதற்கு லஞ்சம், போங்கய்யா வாழ்க்கை வெறுத்து போச்சு..... இப்படி இந்தியா இன்றைக்கு இருக்கும்போது. எப்படி மனசாட்சி இல்லாமல் ஜன நாயகம் வென்றது, ஜன நாயகம் வாழ்க, ஜன நாயகம் இனிக்கிறது என்று சொல்லமுடிகிறது. கேவளம்.... மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு. வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார். முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி. தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ? இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை. இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும். இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும். இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும். இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும். மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது. ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும். ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்.. இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம். உளவுத்துறையின் இந்த நிலைக்கு காரணம் யார்? இத்துப்போன பழைய துப்பாக்கியை கொடுத்து போராட்டத்துக்கு அனுப்பினால் யாராவது போருக்கு செல்லத் துணிவார்களா? இல்லை அப்படியே நவீன ஆயுதங்கள் கொடுத்தாலும் அவர்களால் சுதந்திரமாக செயல் பட முடியுமா? நாட்டுக்காக உயிர் நீத்த ஒருவருக்கு இரங்கல் செய்தி வெளியிடக் கூட ஒரு முதலமைச்சருக்கு நேரம் இல்லை. எதிர் கட்சிகளில் கூக்குரலுக்கு பிறகு நேரில் வந்து ஆறுதல் கூறும் ஒரு ஸ்டண்ட். கர்நாடகாவில் சர்ச்சுகளின் மீது யார் தாக்குதல் நடத்தினார் என்று கண்டறிய உளவுத்துறை வேண்டும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறதென்றால் எதிர்கட்சியினரை கண்காணிக்க உளவுத்துறையினர் வேண்டும், இல்லை ஒவ்வொரு எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் கூட்டங்களை ஒட்டு கேட்பதற்கு உளவுத்துறையினர் வேண்டும். அப்போது தான் தேவைப் படும் நேரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்தலாம். இப்படி இவர்கள் குப்பை அரசியல் வாதிகளால் செருப்பு போல நடத்தப் படும் பொது எப்படி இவர்கள் மக்களுக்காக செயல் படமுடியும்? அப்படியே ஒருவேளை இவர்கள் வீரமாக செயல் பட்டால் இவர்களை எதிர்த்து குரல் கொடுக்க எதிர் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகள் இருக்கின்றதே. பல ஆண்டுகளாக பல அரசாங்கத்தினால் பிடிக்க முடியாத வீரப்பனை திரு விஜய குமார் சுட்டு பிடித்தார் (அல்லது பிடித்து சுட்டார்). இப்போது அவர்எங்கே இருக்கிறார் ? எப்படி நடத்தப் படுகிறார்? இப்படி போராடி பிடித்த பல திருடர்கள் மற்றும் தீவிரவாதிகள் அரசியல் காரணத்தாலோ, பிணைக் கைதி மிரட்டல் களாலோ விடுவிக்கப் பட்ட பல நிகழ்வுகள் இங்கு உண்டு. முதலில் இவர்கள் அரசியவாதிகளால் நடத்தப் படுவது கூடாது. அதன் பிறகு இவர்களில் சேவையை நல்ல முறையில் மதிக்கப் படவேண்டும். இன்று ராஜ் தாக்கரே ,பால் தாக்கரே மற்றும் காடுவெட்டி குருவை தெரிந்த அளவுக்கு கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் பெயர் கூட தெரியாது. ஒருவருடைய தியாகங்கள் மதிக்கப் படும் வரை, பாதுகாப்பு துறைகள் (காவல், உளவு மற்றும் இராணுவம்) சுதந்திரமாக செயல் படும் வரையில் இதே நிலைதான் தொடரும். சகித்துக் கொள்ள முடியாமல் உங்களில் ஒருவன் இவன் அன்புடன் ....மதன்... மற்றும் க.தமிழ். .. டென்ஷனை குறைக்க வழி உலகமானது இன்று விஞ்ஞான ரீதியில் எவ்வளவோ முன்னேறியிருப்பது உண்மை
தான். ஆனால், மக்கள் நிம்மதியில்லாமல், மாநிலங்களிடையே, பல்வேறு
நாடுகளிடையே போட்டி, கலவரங்கள், ஒருவருக்கு ஒருவர் ஆட்சி செய்ய முற்படுவது
போன்ற காரணங்களால் பதட்டமும், டென்ஷனுமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
சாதாரணமாக ஜலதோஷத்தை விட இந்நோய் அதிகம் பேரிடம் காணப்படும். தீராத பெருநோயாக இருக்கிறது. தேவையில்லாத ஒரு பயம், நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பீதி. ஆங்காங்கு நடைபெறும் சில விபத்துக்கள், ரயில் விபத்துகளில் பலபேர் மரணம் என்று ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைக் கண்டு நாமும் விபத்தில் சிக்கி இறந்துவிடுவோமோ என்ற தேவையற்ற அச்சம், ஓடி, ஆடி, கை நிறையச் சம்பாதித்தாலும், நாளை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் இதே மாதிரி சௌகரியமாக வாழ முடியுமா? மனைவி, மக்கள் , நம்மை, மதிப்பார்களா? வெளியில் கௌரவமாக இருக்க முடியுமா?… உடம்புக்கு திடீரென பாதிப்பு வந்து விட்டால் என்ன செய்வது? பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமே! அவர்கள் வேலையில் சேர்ந்து நம்மைப் பாதுகாப்பார்களா! பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமே! சத்திரத்தை “புக்” செய்த பின்பு தானே கல்யாணத்திற்கே நாள் குறிப்பிட வேண்டியிருக்கு. சத்திரம் கிடைக்குமா? நல்ல மாப்பிள்ளையாக அமைய வேண்டுமே? கொடுத்த இடத்தில் பெண் நிம்மதியாக இருப்பாளா? என்று பெற்றோருக்குக் கவலை. எங்கே நிம்மதி அங்கே உனக்கோர் இடம் வேண்டும் என்று தான் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான பேர் இப்படி டென்ஷன், ஹைபர்டென்சன் போன்ற நோயால் அதிகப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். சிட்டி பஸ்ஸூக்காக காத்துக் கொண்டிருப்போம். நாம் போக வேண்டிய பஸ்ஸைத் தவிர மற்றதெல்லாம் வரும் சே! எனக்கு அதிர்ஷ்டமே இல்லை. பஸ்ஸே வரமாட்டேன் என்கிறது. மினி பஸ்ஸில் போகலாம் என்றால், டிக்கெட் வசூல் தான், அவர்களது குறிக்கோளாக இருப்பதால், கண்ட, கண்ட இடங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதற்காக வெகு நேரம் காத்திருப்பதால், மினி பஸ் நமக்கு வசதியாக இல்லை. சரி ஒரு பஸ்ஸில் ஏறி, அடுத்த பஸ்ஸில் மாறிச் செல்வோம் என்றால் அதற்கு மனம் இடம் தரவில்லை. போதாக்குறைக்கு மனைவியுடன் பஸ் ஸ்டாப்பில் நின்றிருப்பது வேறு கஷ்டம். ஆட்டோவில் போகலாம் என்றால், உடனே மனைவி ‘பணம் என்ன கொட்டியா கிடக்கு. கொஞ்சங்கூட பொறுமையே கிடையாது. தம்முடைய பஸ் வரட்டும்” என்பார். நான்கு பேர் மத்தியில் மனைவியுடன் வாதாடிக் கொண்டிருக்க மனம் இல்லாமல் ஒரே சங்கடம். இது ஒரு டென்ஷன். இப்படிப் பல காரணங்களால் தேவையில்லாமல் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ஒரு சிறுகதை, கிராமவாசி ஒருவர் முதன் முறையாக ரயிலில் பிரயாணம் செய்தார். ஒருவர் 20 கிலோ எடைக்கு மேல் சுமை எடுத்துச் செல்லக்கூடாது என்பது ரயில்வே விதி. அவரிடமோ 30 கிலோ எடையுள்ளள மூட்டை இருக்கிறது. அதனை இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார். ரயில்வே டிக்கெட் பரிசோதகர் வந்து, இது என்ன மூட்டை கூடுதலாக சுமை இருக்கும் போல இருக்கே. இதற்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்றார். கிராமவாசிக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. டிக்கெட் பரிசோதகரிடம் வாதாடிக் கொண்டிருந்தார். “உங்களுடன் அதிக நேரம் நான் வாதாடிக் கொண்டிருக்க முடியாது. என் வேலையை கவனிக்க வேண்டும். ஒன்று கூடுதல் சுமைக்காக பணம் செலுத்துங்கள். இல்லை ரயிலில் இருந்து இறங்கிவிடுங்கள் என்றார். கிராமவாசி உடனே அந்த மூட்டையைத் தன் தலைமேல் வைத்துக் கொண்டார். பரிசோதகர் இது என்ன கூத்தாக இருக்கிறது. தலையில் தூக்கி வைத்துக்கொண்டால் டிக்கெட் வாங்காமல் இருக்க முடியுமா? “ஐயா! நான் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கியிருக்கிறேனே. ரயில் பெட்டியில் மூட்டை வைத்தால்தானே டிக்கெட் வாங்க வேண்டும். அதனால்தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டேன்” என்றார் அந்த கிராமவாசி. இது சிரிப்பதற்குரிய விஷயமல்ல அந்தக் கிராம வாசியைப் போலத்தான் நாமும் பல சந்தர்ப்பங்களில் தேவையில்லாமல் மனச்சுமையைச் சுமந்து கொண்டிருக்கிறோம். பிராங்களின பெலிமர் என்ற மேலைநாட்டு தத்துவ அறிஞர் “Main Currents of Western Thought” என்ற நூலில் நமது இன்றைய காலகட்டத்தை “கவலையும் பரபரப்புமான யுகம்” என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். யாரும் அமைதியாக இல்லை. மகிழ்ச்சியாக இல்லை. ஏதோ ஒரு நிர்பந்தத்திற்கு ஆளாகி தவிக்கவே செய்கிறார்கள். மனிதர்களின் வாங்கும் சக்தியோ, செல்வச் செழிப்போ வளர்ந்திருக்கும் அளவிற்கு மனதில் நிம்மதியில்லை; மகிழ்ச்சியில்லை. வசதி, வாய்ப்புகள் பெருகியும் மனநிறைவைத் தரவல்லை என்பதுதான் உண்மை. இங்கு எங்கு பார்த்தாலும் பதவி ஆசை. போட்டோ போட்டி, பணம் ஒன்றே குறி என்று அந்தப் பணம் எப்படிக் கிடைத்தாலும் அதை அடைந்தே தீர்வது என்ற வெறி என்று நமது டென்ஷனை அதிகரிக்கச் செய்தவற்கான காரணிகள ஏராளம். ஆன்மீகமே அருமருந்து என்று ஆன்றோர்கள் கூறியிருப்பதெல்லாம், இந்த கால கட்டத்திற்கு ஒவ்வாதது. பகுத்தறிவுக்கும் பொருந்தாது என்பது விதண்டாவாதம். ஆனால் பழங்காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழவில்லை. வாழ்வதன் சுவை திருப்தி குறைந்து போய்விட்டது. ஸ்விடன் நாடு தான் உலகிலேயே தனிநபர் வருமானம் அதிகமுள்ள நாடாகும். சகலவசதிகளும் உள்ள இந்த நாட்டில் தான் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் தன்மை, விழிப்புணர்வு, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை போன்ற தார்மீகப் பண்புகள் எல்லாம் குறைந்து விட்டன. அரசியல்வாதிகள் - தங்கள் சுயநலத்திற்காக மக்களைச் சண்டைக் கோழிகளாக்கி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் நாட்டில் அதிகமாகிவிட்டது. பந்த், மறியல், ஸ்டிரைக் என்று ஏதாவது பிரச்னைகளுக்காக மக்களைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். டென்ஷன் தான் பல்வேறு நோய்களுக்கும் மூலகாரணம் என்பது ஏனோ யாரும் புரிந்து கொள்ளவில்லை. இதனால் தூக்கத்தைப் பறிகொடுத்துவிட்டு பறிதவிக்க வேண்டியிருக்கிறது. இது மேலும் நமது உடல் நலனை பாதிக்கிறது. சரி! இந்த டென்ஷனலிருந்து விடுபடுவது எப்படி? இதோ சில யோசனைகள். முதலில் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே அன்றி கவலைபடுபவதற்கல்ல என்று நினையுங்கள். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அதனால் பிரச்னையே வாழ்க்கையாவது தான் சிலரது சோகம். நீங்களே உங்களுக்கு உற்ற நண்பர்கள். நீங்களே உங்களுக்குப் பகை என்று கீதை சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். நமது மேன்மைக்கும், தாழ்வுக்கும் நாமே தான் காரணமேயன்றி, யாரும் பொறுப்பல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள். விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்லுங்கள். ஒரு போதும் பிறரைக் குறைசொல்லாதீர்கள். முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் சும்மா இருந்துவிடுங்கள். நீங்கள் உலகத்தைத் திருத்தப் போகும் தலைவனாக ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். பிறருக்கு வலியச் சென்று ஆலோசனை கூறுகிறேன் என்று வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள். கேட்டால் மட்டும் சொல்லுங்கள். அதுவும் இது என்னுடைய கருத்து உங்களுக்கு உதவுமானால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பேசுங்கள். Mind your own Business, உங்கள் வேலைகளை நீங்கள் பார்த்துக் கொண்டு செல்லுங்கள் அனாவிசயமாகப் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள். Don’t Poke Your Nose Unnessarily. எதிர்மறையான எண்ணங்களை விட்டொழியுங்கள். நல்லதையே நினையுங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று நம்புங்கள். நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். இயற்கை நியதி என்னவென்றால் நல்லதை நினைத்தால் நல்லபடியே எல்லாம் நடக்கும். ஆகவே ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். மனிதப் பிறவி இறைவன் கொடுத்த பிரசாதம். லாபமாகக் கருதுங்கள். வளமோடு வாழ முற்படுங்கள். சுற்றுச்சூழலும், உங்களது குடும்பத்தாரும், நண்பர்களும் மற்றவர்களும் ஏடாகூடமாக நடந்து கொண்டாலும் அதனால் நீங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். Take it Easy. நமக்கு ஏதாவது கஷ்டம் வந்து விடுமோ என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்கு கஷ்டம் வருகிறது என்றால் நமக்கு வரக்கூடாதா? கஷ்டமும், நஷ்டமும், இன்ப, துன்பமும் இல்லாத வாழ்க்கை இல்லையே. சுழற்சி வட்டம் போல மாறி, மாறி வந்து கொண்டு தான் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். Better Never Trouble Until Trouble Troubles You என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தையைப் போல மனம் இருந்தால் உங்களுக்கு ஒரு போதும் துன்பம் இல்லை. உங்கள் வழி நேர்மையாக இருந்தால் அந்த வழியிலேயே தொடர்ந்து செல்லுங்கள். பிறர் யோசனை கூறினால், மறுக்காமல், எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முடிவே உங்களுக்கு நன்மை பயக்கும். Take your own Decision and stick on to it. அமைதியாக எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். யாருக்கும் வராத பிரச்சனை நமக்கு வந்துவிடவில்லை. அதனை தைரியமாக சமாளிக்கலாம் என்று நம்புங்கள். மன உறுதியுடன் அந்தப் பிரசனையை எதிர்கொள்ளுங்கள். காலம் மனப் புண்ணை ஆற்றும் அருமருந்தாகும். அதனால் ஆறப்போடுங்கள். பின்பு அந்தப் பிரச்சனை பிரச்சனையாகவே தோன்றாது. இதற்குப் போய் வீணாக அலட்டிக் கொண்டோமே என்று எண்ணத் தோன்றும். இயற்கை உணவுகள் பரபரப்பையும், டென்ஷனையும் குறைக்கும் பழரசங்கள் குறிப்பாக மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ், இளநீர் நன்மை பயக்கும். ஆசனங்கள், பிராணயாமம், தியானம் செய்யப் பழகுங்கள். இவை பலன் தரும். தினசரி காலை, மாலை இரு நேரமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது தியானத்தில் அமருங்கள். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தியானம் செய்ய பழகும் போது மனம் எளிதில் வசப்படும். ஆரம்பத்தில் எண்ண ஓட்டத்தில் மனம் அடங்காமல் உளைச்சல் அதிகமாகத் தான் இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் வெறும் குப்பை அவற்றைப் புறம் தள்ளுங்கள். இந்த எண்ணங்களுக்கு நான் ஆட்பட மாட்டேன் என்று உறுதியாக நம்புங்கள். கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்ப, கவலை போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் புறம் தள்ளுங்கள். எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். அமைதியாக இருப்பேன். என்பது போன்று எண்ணத் தொடங்குங்கள். இதை நிறைவான எண்ணங்கள் ஆழ்மனதில் பதியப் பதிய டென்ஷனும், பரபரப்பும் குறைந்து நிம்மதி அடைவீர்கள். இனிய இசை கேட்டல், நம்பிக்கை தரும் நூல்களை வாசித்தல், சற்று நேரம் வெளியே உலாவி வருதல், சமவயதுடைய நண்பர்களுடன் அளவளாவுதல், குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுதல், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடல் இவையாவும் டென்ஷனைக் குறைக்க உதவும். யோக நித்திரை என்ற மனதையும், உடலையும் இளைப்பாறச் செய்யும் (Relaxation Therapy) பயிற்சியை மேற்கொள்வது நலன்தரும். இவையாவும் பலன் தராமல் போனால் மனநல மருத்துவரை நாடி தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே...!
அழிவுப் பாதையில் மனிதன்! இன்று உலகில் காணப்படும் அனைத்துப்
பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.
மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது
மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல்
அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும்
மேன்மை அடைந்துள்ளன.
அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான். ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம். பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது. ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா? இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை. ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின. மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான். இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை. இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான். மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம். அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம். இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்? அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள். இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான். உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும். மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் - நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும் ரவுடியிசம், பயங்கரவாதம், தீவிரவாதம்...ரவுடியிசம், பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகிய
இம்மூன்றின் கருத்துரு எதுவாக இருப்பினும், செயலுரு வன்முறை என்பது
தெளிவு. ஒன்றை அடைய, அல்லது அடைய முடியாததை வெளிப்படுத்த, மனிதர்களில்
சிலர் மற்றவர் மேல் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுதல் இதன் செயல்
விளக்கம். தொடக்கத்தில் தம் விவகாரத்தோடு தொடர்புடையவர் மேல் வன்முறை
செய்தல் என்ற நிலை, மேலும் பரிணாமமுற்றுத் தொடர் பற்ற குழந்தைகள்,
பெண்கள், பொதுமக்கள் இன்ன பிற உயிர்கள் ஆகியோரையும் பாதிக்கச் செய்தலாக
இவை இன்று வடிவமெடுத் துள்ளன. உலகெங்கும்
பெரிய அறைகூவலாக இருக்கும் இவை, இந்திய அளவில் பரிணமித்ததற்கு நியாயங்கள்
இல்லை எனினும், காரணங்கள் இருக்கின்றன. அக்காரணங்களுக்கு உரிய
கர்த்தாக்களே, முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். அக்காரணங்களை எண்ணிப்
பார்ப்போம். பல்கலைக்கழக விவகாரமொன்றில், ஒழுக்கக்கேடாக நடந்துகொண்ட ஒரு
மாணவர் மீது, முறையான நடவடிக்கை எடுத்தபோது, அம்மாணவரின் ஜாதியைச் சேர்ந்த
ஒரு கட்சித் தலைவர் குறுக்கிட்டார். அது தொடர்பான நபரை நேரில் சென்று,
அந்தக் கட்சித் தலைவரைப் பார்த்து உண்மை நிலையை விளக்கக் கேட்டுக்
கொண்டபோது, அவர் நேரில் சென்று மிகப் பவ்வியத்துடன், நிலைமையை அந்தக்
கட்சித் தலைவரிடம் விளக்கினார். அவரை முழுமையாக விளக்கிச் சொல்ல விடாமல்
தடுத்ததுடன், ஆட்களை விட்டு "உன்னை உதைக்கச் சொன்னேனே, இன்னும்
உதைக்கவில்லையா?' என்றும் கேட்டார். இது நடந்த நிகழ்ச்சி. நம் நாட்டில்
வன்முறையின் ரிஷிமூலம் எங்கே இருக்கிறது? என்பதை, இந்நிகழ்ச்சி நமக்கு
எடுத்துச் சொல்கிறது. இதை வலுப்படுத்த இன்னொரு எடுத்துக்காட்டு:
எனக்கு முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பழக்கமான படித்த, பணியிலிருந்து ஓய்வு
பெற்று ஒரு கட்சியில் இருக்கிற அவரிடம் ஒரு நாள் நான் சொன்னேன்...
"நீங்கள் உங்கள் தலைவரிடம் சொல்லி, நீண்ட நாள் கட்சியில் இருப்பதைச்
சுட்டிக்காட்டி எங்கேனும் எம்.எல்.ஏ., தேர்தலில் நிற்கலாமே? பொதுச்
சேவையில் ஆர்வமுள்ள நீங்கள் வெற்றி பெற நிறைய வாய்ப்பிருக்கிறது' என்று
தெரிவித்தேன். உடனே அவர் சொன்னார்... "நீங்க ஒண்ணு, தேர்தலில் நிற்கணும்னா
கோடிக்கணக்கா பணம் வேணும், கூடவே ஒரு பெரிய ரவுடிக் கூட்டம் வேண்டும்;
இரண்டுமே என்னிடம் இல்லை.' இது அவருடைய பதில். இந்த
இரண்டு நிகழ்வுகளிலிருந்து நாம் ஒரு தெளிவிற்கு வரலாம். ரவுடியிசத்தின்
தொட்டிலாக இருப்பது இந்திய அரசியல் தான். அதற்குப் பின்னணியில் இருப்பது,
நம் நாட்டுத் தேர்தல் முறை. இந்த ரவுடியிசத்தை இந்தியாவில் உள்ள
பெரும்பான்மையான கட்சிகள் பின்பற்றுகின்றன; வளர்க்கின்றன. "நரிக்கு
நாட்டாண்மை கொடுத்தால் கிடைக்கு எட்டு ஆடு கொடுக்க வேண்டும்' என்று
தமிழில் ஒரு பழமொழி உண்டு. "தேளுக்கு ஆளும் பொறுப்பைக் கொடுத்தால் ஒவ்வொரு
நிமிஷமும் கொட்டிக் கொண்டிருக்கும்' என்று அரேபிய மொழியில் இன்னொரு பழமொழி
உண்டு. கிட்டத்தட்ட இந்திய அரசியலின் நடப்பியல் இதுதான். "அண்ணன்,
தம்பியால் ஆகாததை, அடிதடி ஆக்கிக் கொடுத்துவிடும்' என்பது நம்மூரில்
வழங்கும் ஒரு சொலவடை. இது சொலவடை மட்டுமன்று, நிஜமான நிலமையும் கூட; எனவே
தான், எப்பாகத்திலும் இல்லாத அளவிற்கு கட்டப் பஞ்சாயத்து, நம் ஊர்ப்
பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கிறது. இதன் பின்னணியில் வன்மம் இருக்கிறது.
நியாயத்திற்குக் கட்டுப்படுவதை விட நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்படுவது
யதார்த்தமாகி விட்டது. இதை வளர்த்தது நம் அரசியல் உலகம் மட்டுமல்ல; நம்
திரைப்படங்கள் தொடர்ந்து வளர்த்து வந்திருக்கின்றன; இன்றும் வளர்த்து
வருகின்றன. முற்காலத் திரைப்படங் களில் வாளும், வேலும், அம்பும் ஏந் திய
கதாநாயகன் எதிரிகள் அத்தனை பேரையும் சாய்த்து வெற்றி கொள் வான். இன்று
அத்தகு கருவிகளுக்குப் பதிலாக, வேறு கருவிகள் கையாளப் படுகின்றன; அல்லது
அடிதடிகள் காட்டப்படுகின்றன. கதையில் வரும் ஒருவரைக் கதாநாயகராக
உயர்த்துவது, அவரிடம் உள்ள சண்டை போடும் திறமையே என்று நம் திரைக் கதைகள்
அமைந்திருக் கின்றன. ஆக, வன்முறையை வளர்த்து விட்டுவிட்டு,
ரவுடியிசத்திற்கு வழிகால் அமைத்துவிட்டு, இன்று நாம் பயங்கரவாதம்
ஒழிக்கப்பட வேண் டும் என்று உரத்துக் கூவுகிறோம். இவ்விரண் டும்
ரவுடியிசம் என்ற ஒன்றின் பரிணாமங்களே. பயங்கரவாதம்,
ஒன்றை அடைய அமைதியான வழிமுறை அல்ல. ஆனால், அமைதியான முறையில் ஒன்றை அடைய
முடியாதபோது, பயங்கரவாதம் தலைதூக்குகின்றன. நம் நாட்டில் மேற்கண்ட இரு
நிலைகளுக்கும் பின்வருவன தலைமைக் காரணங்களாக இருக் கின்றன. அவை வரிசைப்படி
பின் வருமாறு: 1. இந்திய ஜனநாயக முறையில் அடைய முடியாத நிலை 2. மதம் 3. பொருளாதாரம் 4. மொழி 5. அயல்நாட்டார் உதவி மதுரையைச்
சேர்ந்த சமயக் கல்வியைப் போதிக்கும் கல்வி நிறுவனம் ஒன்று, ஒரு காலத்தில்
நக்சலைட்டு பயங்கரவாதம் இருந்த தர்மபுரி பகுதிக்குத் தம்
ஆராய்ச்சியாளர்களை அனுப்பிக் கள ஆய்வு செய்து பயங்கரவாதிகளை நேரில்
சந்தித்துப் பேட்டி கண்டு, தம் முடிவுகளை அறிக்கையாக வழங்குமாறு பணித்தது.
அவ்வறிக்கையின் சாரம் இதுதான் தர்மபுரி பகுதியில் பயங்கரவாதச் செயல்களில்
ஈடுபடுவோர் அனைவரும் இளைஞர்களே. இவர்கள் அனைவரும் படித்தவர்கள்,
பட்டதாரிகள், வேலையில்லாதவர்கள்; நம்பிக்கையுடன் படித்த இவர்களுக்கு வேலை
கிடைக்கவில்லை. மறுதலையாகப் படிக்காத சிலர், அவர்கள் சார்ந்த அரசியல்,
முறைகேடான வழிகள், முறைகேடான வணிக முறைகள், இடைத்தரகர் பணி முதலானவற்றால்
பணக்காரர்களாக இருக்கின்றனர். அவர்களை, ஆட்சி கண்டு கொள்வதுமில்லை;
கண்டிப்பதுமில்லை. மறுதலையாக அந்தச் சிலருக்கு அரசியலும், ஆட்சியும் துணை
போகின்றன; மிக ஆதரவாக இருக்கின்றன. இவையே அந்த இளைஞர்களை ஆயுதங்கள் ஏந்த
வைத்தன. தென்னாற்காடு மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் ஆயுதங்கள் ஏந்திய
இளைஞர்கள், பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்பட்டோரே. நம்
நாட்டில் வன்முறையின் வியாபகத்திற்கு மிகப்பெரிய காரணம், பொருளாதார
அரசியல். நாம் கடைப்பிடிக்கும் ஜனநாயகம், எல்லா மக்களின் பரிதாபக் குரலைச்
செவிமடுப்பதாக இல்லை. பாதிக் கப்பட்ட மக்கள் அனுப்புகிற மனுக் கள்,
குப்பைக் கூடைக்குப் போ கின்றன. ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை.
மேலதிகாரிகளை யோ, அமைச்சர்களையோ பாதிக்கப் பட்ட மக்கள் நேரில் சந்தித்து
முறையிட வாய்ப்பும் இல்லை. நாட்டில் உலவும் தலைவர்கள் தொலைக்காட்சியில்
தோன்றுவதன் மூலம், மிக அருகில் இருப்பது போல ஒரு பாவனை செயற்கையாகக் கட்டி
எழுப்பப்படுகிறதே தவிர, அவர்கள் உண்மையாகக் காட்சிக்கு எளியராக
இருப்பதில்லை. ஜனநாயக வடிவில் ஒருவித சர்வாதிகாரிகளாக அவர்கள்
இருக்கின்றனர் என்பதுதான் நிஜம். மக்கள்
பிரதிநிதித்துவத்தை நிஜப்படுத்துகிறது தேர்தல் என்பது இமாலயப் பொய்.
தேர்தல் வெற்றி பணத்தின் மூலமும், அன்பளிப்புகளின் மூலமும்,
நிர்ப்பந்தங்களின் மூலமும் வாங்கப்படுகிறது என்பதுதான் மெய். இந்திய
ஜனநாயகத்தின் தோல்வியே பயங்கரவாதமாக பரிணமிக்கிறது. தமக்குரிய வாக்குகளைக்
கொண்டு அநியாய ஆட்சியை மாற்ற முடியாத நிலையிலும், அதற்காகக் காத்திருக்க
முடியாத நிலையிலும், இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுக்கின்றனர். மதம்,
மொழி ஆகியன பற்றி நமக்குத் திட்டவட்டமான கருத்தில் லை. நம் அரசியல்
சாசனத்திலும் திட்டவட்டமான கருத்தில்லை. மதச்சார்பின்மை (செக்யூலரிசம்)
எனும் பெயரில் எல்லா மதங்களையும் வெறிகொள்ள வைத்தோம். பல மொழிகளும், பல
பண்பாடுகளும் உடைய நாட்டில் சிங்கப்பூர், சுவிட்சர் லாந்து, கனடா,
பெல்ஜியம் முதலான நாடுகளைப் போல நாட்டில் வழங்கும் அனைத்து மொழிகளுக்கும்
சம அந்தஸ்து வழங்காமல் ஏக மொழிக்குத் தனி <உரிமை கொடுத்தமையால், ஒரே
மொழி தம் மேல் திணிக்கப்படும் ஆதிக்க மொழியாக மாநில மக்கள் கருதத்
தொடங்கினர். இதன் விளைவே, மொழி அடிப் படை பயங்கரவாதமாக அசாம் பகுதியில்
இளைஞர்களால் எடுத்து நடத்தப்படுகிறது. தம் மாநிலத்தில் பீகாரிகளும்,
வங்காளிகளும், இந்தி மொழியும், பேராதிக்கம் செலுத்துவதாக அவர்கள்
நம்புகின்றனர். அதில் உண்மை இல்லாமலில்லை. இந்திய
சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரம் பெற்ற பின்பும், மிகச் சிறந்த
மாநிலமாக விளங்கிய பஞ்சாப் மாநிலத்தில், பஞ்சாபி மொழியைப் புறக்கணித்து,
ஏகமொழித் தத்துவத்தைப் பின்பற்றி இந்தியைத் திணித்ததன் விளைவாக, பஞ்சாபை
இரண்டாகப் பிளக்க வேண்டியதாயிற்று. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த,
ராஜாஜியின் தலைமையிலேயே இந்திய அரசின் மொழிக் கொள்கையை எதிர்த்து 1965ல்
இயக்கம் நடக்க நேர்ந்தது நம் மதம் சார்ந்த கொள்கை சரியாக இல்லை
என்பதனாலேயே, பாகிஸ்தான், வங்கதேசம், காஷ்மீர் பிரச்னை ஆகியன உருவாயின.
தொடர்ந்து மத அடிப்படையில் (சீக்கியப்) பஞ்சாபிலும், வங்கத்திலும்
கலவரங்கள் நிகழ்ந்தன. இன்றும் ஒரிசா, குஜராத், டில்லி ஆகிய மாநிலங்களில்
மத அடிப்படையிலேயே கலவரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை நம்மால்
தவிர்க்க முடியும். தெளிவான, உறுதியான கொள்கையும், வலிமையான
நடவடிக்கைகளும் தான் தேவை. சுதந்திரம்
அடைந்த அறுபது ஆண்டுகளில் நாம் வலிமைமிக்க நாடாகத் தலைமையிடத்தைப்
பிடித்திருக்க வேண்டும். மனிதவளம், நிலவளம், நீர்வளம், கனிமவளம்,
இயற்கைவளம் முதலானவை இருந்தும் நாம் தலைமையிடத்தைப் பெறாதது மிக
வருந்தக்தக்கது. நமக்குப் பின்பு விடுதலை அடைந்த சீனா, விடுதலை அடைவதற்கு
முன்பிருந்து தொடர்ந்து உலக வரைபடத்தில் அஞ்சத்தகும் நாடாக இருந்து
வருகிறது. உலகம், கவனத்தில் கொண்டே தீரவேண்டிய நாடாக இடம்பிடித்து
விட்டது. இத்தகு இடத்தை நாமும் பிடித்திருக்க வேண்டும். நம் அயல்நாட்டுக்
கொள்கைகளில் உள்ள "வழவழா கொழகொழாத்தனமும்,' "கூட்டுச் சேரா கொள்கை' என்று
சொல்லிக் கொண்டு, குறிப்பிட்ட அணிகளுடன் கூட்டு வைத்திருப்பதும்,
ஏமாளித்தனமும், எடுபிடித்தனமும் உலக அரங்கில் நம்மைத் தலைமையிடத்திற்குக்
கொண்டு வரவில்லை. நம்மிடம் உள்ள
112 கோடி மக்கள் தொகை, வளர்ந்த நாடுகளுக்குத் தம் நாட்டுப் பொருள்களை
விற்கின்ற ஒரு சந்தைக்காடாகத் தோன்றுகிறதே தவிர, கவனிக்கத்தக்க நாடாகத்
தோன்றவில்லை. பாகிஸ்தான் அகதி, வங்கதேச அகதி, பர்மிய அகதி, இலங்கை அகதி,
மலேசிய அகதி என அகதிகள் குடியேறும் இடமாக மாற்றிவிட்டோம். நம்
கைவிரல்களைக் கொண்டு நம் கண்களையே குத்துகின்றனர். சாந்தமாக ஏற்றுக்
கொள்கிறோம். க.ப.அறவாணன் முன்னாள் துணைவேந்தர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தீராத வெளிநாட்டு வேலை மோகம்உள்ளூரில் வேலை இல்லை,
வறுமை, அதிக சம்பளம் ஆசை போன்ற காரணங்களால் தமிழக இளைஞர்கள் பலர்
வெளிநாடுகளில் வேலைக்கு செல்லத் துடிக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்த வேலை
கிடைக்காமல் ஒட்டகம் மேய்த்தல், கோழிக்கறி வெட்டுதல், துணி சலவை செய்தல்,
முடி திருத்துதல், மருத்துவ கழிவுகளை அகற்றுதல், கனரக வாகனங்கள் ஓட்டுதல்,
சுமை தூக்குதல், உயரமான கட்டடங்களுக்கு பெயின்ட் அடித்தல், சமையல்
உதவியாளர் போன்ற உடல் உழைப்பு வேலைகளை செய்து வயிற்றை கழுவுகிறார்கள்.
இதற்காக வீடு, நிலம், மனைவியின் நகைகளை விற்று சில போலி தனியார்
ஏஜென்சிகளையும், அதன் ஏஜென்ட்களையும் நம்பி பணத்தை கொடுத்து விடுகின்றனர். அவர்களில்
ஒரு சிலர் மட்டுமே "சிறிய' காகிதத்தில் பணம் கொடுத்த விபரத்தை தேதியுடன்
எழுதி வைத்துள்ளனர். மற்றவர்கள் பணம்வாங்கிய ஏஜென்ட்டிடம் கையெழுத்து கூட
பெறுவதில்லை. இதற்கு ஏஜென்ட்களும் உடன்படுவதில்லை. இதில் தான்
ஏஜென்ட்டுகளின் "தொழில் ரகசியம்' உள்ளது. "ஒரு மாதத்தில் வெளிநாட்டுக்கு
விசா வந்து விடும், 20 நாளில் வந்து விடும்' எனக்கூறும் ஏஜென்ட்களின்
பேச்சை நம்பி, பணம் கொடுத்தவர்கள் தினமும் தபால் நிலையங்களில் காத்து
கிடந்து ஏமாற்றமடைகின்றனர். இன்னும் சில போலி ஏஜென்ட்டுகள் வெளிநாட்டு
வேலை கேட்டு வருவோரிடம் பணம் வாங்கியதும், அவர்களை குறிப்பிட்ட நாளில்
சூட்கேஸ் சகிதமாக வரவழைத்து ரயில் அல்லது ஆம்னி பஸ்களில் சென்னை அழைத்து
செல்கின்றனர். அங்கிருந்து விமானத்தில் மும்பைக்கு அழைத்து சென்று ஒரு
வீட்டில் தங்க வைக்கின்றனர். ஓரிரு நாளில் "விசா' வந்ததும் வெளிநாடு பயணம்
தான் என கூறி வேறு சிலரிடம் ஒப்படைத்து விட்டு ஏஜென்ட்கள் கிளம்பி
விடுகின்றனர். கையில் இருக்கும் சிறிய தொகையில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு
பணம் கொடுத்தவர்கள் 3 நாட்கள் வரை காத்திருக்கின்றனர். அவ்வப்போது ஏஜென்ட்
போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்பர். அப்போது "விசா' இன்று
வந்துவிடும்...என ஒரே பதிலையே சொல்வார். ஒரு
வாரத்திற்கு பின் ஏஜென்ட் கொடுத்த போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியாதபோது
தான் ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்ட விபரமே அந்த தொழிலாளர்களுக்கு தெரிய வரும்.
அதன்பிறகு,சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொடுத்த பணத்தை வாங்க முடியாமல்
கஷ்டப்படுகின்றனர். சிலர் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் தற்கொலை செய்து
கொள்கின்றனர். சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி மன நோயாளிகளாக மாறுகின்றனர்.
இன்னும் சிலரோ உறவினர்களுடன் சென்று மோசடி ஏஜென்ட்டிடம் தகராறு செய்தோ,
மிரட்டியோ பணத்தை பெற முயற்சிக்கின்றனர். இதில் ஒரு சிலருக்கு மட்டும்
பலன் கிடைக்கிறது. எந்த வழியும் தெரியாத சிலரே கடைசியாக போலீசில்
புகார்செய்கிறார்கள். போலீசார் அது போன்ற புகார்களுக்கு தகுந்த ஆதாரங்கள்
இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறார்கள். அப்படியே ஆதாரங்கள்
இருந்தாலும் உடனே வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பல சுற்று
கட்டப்பஞ்சாயத்துக்கள் நடத்தப்படுகின்றன. பின்னர்
போலீசாரின் நெருக்குதலால் சில போலி ஏஜென்ட்கள், வாங்கிய பணத்தை,
குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக உடன்பாடு ஏற்பட்டது போல்
வெற்றுத்தாளில் எழுதிக்கொடுத்து விட்டு போலீஸ் தலையீட்டை தவிர்த்துக் கொள்
கின்றனர். அதன்பிறகு வழக்கம் போல் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம்
கொடுத்தவர்களை அலையவிடுகின்றனர். பின்னர், "வெளிநாட்டுக்கு ஆட்களை
அனுப்பும்படி கேட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசிய வகையிலும்,
அதற்காக ஏற்பாடுகளை செய்த வகையிலும் ஏற்பட்ட செலவுக்காக ஒரு குறிப்பிட்ட
தொகையை பிடித்தம் செய்து கொண்டு மீதத்தொகையை மட்டுமே தர முடியும்'
என்கின்றனர். வாங்கிய கடனுக்கு
வட்டி அதிகரிப்பதாலும், வீடு, நிலம்,நகையை இழந்த குடும்பத்தினரின்
குமுறலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் ஏமாற்றப்பட்டவர்கள்,
இந்த தொகையாவது கிடைத்ததே என்று மனதை தேற்றிக்கொண்டு போலி ஏஜென்ட் தரும்
குறைந்த தொகையை பெற்றுக் கொள்கின்றனர். அதை கொடுக்கும்போது கூட போலி
ஏஜென்ட்கள் சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளாதபடி தங்களுக்கும், பணம்
கொடுத்து ஏமாந்தவர்களுக்கும் இனி எந்த பிரச்னையும் இல்லை, பண விவகாரத்தை
சுமுகமாக முடித்துகொண்டதாக எழுதி வாங்கிக்கொள்கின்றனர். போலி ஏஜென்ட்களின்
மோசடியில் சிக்காமல் ஒரு வழியாக வெளிநாடுகளுக்கு வெல்டிங், பிட்டர்,
பிளம்பர் போன்ற பணிக்கு செல்வோரில் சிலருக்கு மட்டுமே அந்தந்த பணிகள்
கிடைக்கின்றன. உதாரணமாக வெல்டிங் படித்தவர்களுக்கு ஒட்டகங்கள் மேய்த்தல்
போன்ற எதிர்பாராத, வேலைகளை செய்யும் நிலை ஏற்படுகிறது. சிலர் அந்த
பணியையும் ஏற்று சிரமங்களை தாங்கிக்கொண்டு ஒப்பந்தப்படி பணிபுரிந்து
விட்டு சொந்த ஊர் திரும்புகிறார்கள். ஒரு சிலர் அந்த வேலை பிடிக்காமல்
சொந்த ஊர் திரும்புகிறார்கள். வெளிநாடுகளுக்கு
வேலைக்கு சென்ற பலருக்கு அங்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி சம்பளம்
தருவதில்லை. குறைவாக சம்பளம் தருவதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் பல
நாடுகளில் நேரடி சித்ரவதை, பொய் புகாரின் பேரில் சிறை தண்டனை, அதிகமான
வேலைப்பளு போன்றவைகளுக்கு ஆளாகுகின்றன. பொறுமை இழந்த பல தொழிலாளர்கள்
அங்குள்ள இந்திய தூதரகங்களில் புகார் செய்தால், அவர்கள் உரிய நடவடிக்கை
எடுக்கும் காலம் வரை புகார் கொடுத்த தொழிலாளர்கள் வசதி குறைவான தங்கும்
இடத்திற்கு மாற்றம், இரவுப்பணிகளில் மட்டுமே பணியாற்றும் நிலை, போதிய
ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலை போன்ற மறைமுக சித்ரவதைக்கு ஆளாக
நேரிடுகிறது. ஏஜென்ட்டிடம்
இதை தெரிவித்தபோது, "கொரியா என்ன... அடுத்து லண்டனுக்கு அனுப்பி
வைக்கிறோம்' எனக் கூறி மொத்தம் ரூ.மூன்றரை லட்சம் வரை கறந்துள்ளார். இதை
நம்பி லண்டன் சென்றபோது அங்கும் விமான நிலையத்திலேயே தவறான விசா என
கண்டுபிடித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதுகுறித்து
செந்தில்குமார் எஸ்.பி., கூறுகையில், வெளிநாடு வேலைக்கு செல்ல
விரும்புபவர்கள் தாங்கள் அணுகும் ஏஜென்ட் நேர்மையானவரா; அவர் மூலம் நல்ல
வேலை கிடைக்குமா என்பதை விசாரித்து உறுதி செய்து தெரிந்து கொண்ட பின்
வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்க வேண்டும் என்றார். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் முன்கூட்டியே கவனிக்க வேண்டியவை: வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன! இன்சூரன்ஸ் அவசியம்: அதிக வேலைபாலியல் தொல்லை: வெளிநாட்டு
வேலைக்கு செல்வோர் பலர் குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் இருந்து விடுபடவே
சில நாட்கள் ஆகும். அதற்கு பிறகு வேலைக்கு வந்த நாட்டில் தங்கும் இடம்,
உணவு, தட்பவெப்ப நிலை போன்றவற்றுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சில
நாட்கள் ஆகும். ஆனால் அதற் குள்ளாகவே வேலை சிர மங் கள், சம்பள பிரச்னை,
அந்தந்த நாடுகளின் மொழி மற்றும் சட்ட திட்டங்கள் போன்றவற்றால் கடும் மன
உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் கள்ளத்தனமாக தப்பி வந்தால் போதும்
என கருதி, ஏதாவது சட்டச்சிக்கலில் சிக்கி சிறைக்கு செல்கின்றனர். அவர் களை
மீட்க குடும்பத்தினர் யார் உதவியை நாடுவது என்று தெரியாமல்
தவிக்கிறார்கள். நர்ஸ், வீட்டு வேலை போன்ற வேலைக்கு செல்லும் பெண்களில் பலர் கொத்தடிமைகள் போல் ஓய்வின்றி அதிக நேரம் உழைத்தல், பாலியல் தொல்லை போன்ற இன்னல்களுக்கு ஆளாகி இறந்து விடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வர குடும்பத்தினர் படும் கஷ்ட ங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதன்பிறகு வேலை கொடுத்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவோ, நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரவோ பாதிக்கப் பட்டவர்களின் குடும் பத்தினருக்கு எந்த வழியும் தெரியாமல் போய் விடுகிறது. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு; எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே திங்களொடு செழும்பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல் கடல் வற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூது சங்கே பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள் கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம் வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம் -பாவேந்தர் பாரதிதாசன் எனது மகன் சாகவில்லை, 6 பேருக்கு உயிர் கொடுத்து வாழ்கிறான்எனது மகன் சாகவில்லை, 6 பேருக்கு உயிர் கொடுத்து வாழ்கிறான்
டாக்டர்
தந்தை உருக்கமான பேட்டி இறந்த இதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன் கண்
கலங்கியபடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதயம், சிறுநீரகம், கல்லீரல்
போன்றவைகள் பாதிக்கப்பட்டு, எத்தனையோ பேர் மாற்று உறுப்புகள் கிடைக்காமல்
தவிக் கிறார்கள். நாங்கள் டாக்டர் என்பதால் இதன் வலி எங்களுக்கு நன்றாக
தெரியும். இதனால்தான் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தோம்.
என் மகன் மறைந்து விட்டாலும், அவன் மற்றவர்கள் மூலம் உயிர் வாழ்வதாக
நினைத்து நானும், எனது மனைவியும் மகிழ்ச்சி அடைவோம். 'வைபி' தொழில்நுட்ப இன்டர்நெட் இணைப்பு வைத்திருக்கிறீர்களா?உங்களின் வீட்டுக் கதவை போலீசார் தட்டலாம் உஷாரய்யா... உஷார்! உங்கள் வீட்டில் அல் லது அலுவலகத்தில், "வைபி'
தொழில் நுட்பத் தில் இயங்கும் இன்டர் நெட் இணைப்பு வைத்திருக்கிறீர்களா?
அதை பாஸ் வேர்டு உபயோகித்து பயன்படுத்தும் வகையில், பாதுகாப்பாக
வைத்திருங்கள். இல்லையெனில், போலீசார் உங்கள் வீட்டு கதவைத்
தட்டுவர்.தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி மூலம், மக்கள் பல நன்மைகளை அடைந்
தாலும், சதி வேலைகளில், ஈடுபடுவோர் இவற்றை தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக,
ஆமதாபாத் மற்றும் டில்லி குண்டு வெடிப்புகளின் போது, அதுதொடர்பாக
தகவல்களை, பத் திரிகைகள் மற் றும் தொலைக் காட்சிகளுக்கு இ-மெயில் மூலம்
பயங்கரவாதிகள் அனுப்பியிருந்தனர்."வைபி' என்ற ஒயர் லெஸ் தொழில்நுட்பத்தில்
இயங்கும், மற்றொருவரின் இன்டர்நெட் இணைப் பில் புகுந்து, அதன் மூல மாக
அந்த இ-மெயில்கள் அனுப்பப்பட்டிருந்தன. இதன்மூலம், அப்பாவிகள் சிலர்
போலீஸ் விசாரணை உட்பட பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய நிலைமைக்கு
ஆளாகியுள்ளனர்.அதனால், "வைபி' என்ற ஒயர்லெஸ் தொழில் நுட் பத்தில்
இயங்கும், இன்டர் நெட் இணைப்பு வைத்திருப்போர், அதை பாஸ் வேர்டு கொடுத்து
பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில்,
சதி வேலைகளில் ஈடுபடுவோர் உங்களின் இணைப் பை தவறாக பயன்படுத்த வாய்ப்பு
உள்ளது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இதுமட்டுமின்றி,
டில்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஓட் டல்கள், வீடுகள்
மற்றும் அலுவலகங்களில் எந் தெந்த இடங்களில், "வைபி' தொழில் நுட்பத்தில்
இயங் கும் இன்டர் நெட் இணைப் புகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை
சேகரித்து வருகின்றனர்.அப்படி சேகரித்த பின்னர், சம்பந்தப்பட்ட பகுதியில்
உள்ள போலீஸ் நிலையங்களுக்கு இந்த பட்டியலை அனுப்பி,
சம்பந்தப்பட்டவர்களிடம் இன்டர்நெட் இணைப்பை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி
கேட்டுக் கொள்ள உள்ளனர். மேலும், இது தொடர் பான விழிப்புணர்வு பிரச்
சாரங்களையும் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.இது மட்டுமின்றி, தொலை தொடர்பு
ஒழுங்கு முறை ஆணையமான டிராயும், "பாதுகாப் பாக வைத்திருக்காத "வைபி'
இணைப்பால் ஏற் படும் அபாயத்தை தவிர்ப் பது எப்படி ' என்பது தொடர்பான
வழிகாட்டிக் குறிப்புகளையும், தொலை தொடர்பு துறைக்கு அனுப்பியுள்ளது. "டிராய்' அமைப்பின் தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா இது தொடர்பாக கூறியதாவது:
இன்டர்நெட் சேவை அளிப்போர், தங்களின் வாடிக்கையாளர்களில் "வைபி' இணைப்பு
வைத் திருப்போர் யார் யார் என்ற பட்டியலை தயாரிக்க வேண்டும். அந்த
வாடிக்கையாளர் களை தொடர்பு கொண்டு, இன்டர்நெட் இணைப்பை பாஸ்வேர்டு மூலம்
எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பாக
வைத்திருக்கா விட்டால், உருவாகும் அபாயம் பற்றியும் விவரிக்க வேண் டும்
என, உத்தரவிட்டுள்ளோம்.ஒருவர் தன் வீட்டிற்கு, "வைபி' தொழில் நுட்பத்தில்
இயங்கும் இன்டர் நெட் இணைப்பு பெற, எந்த தொழில்நுட்ப நிபுணத்துவமும்
பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லது யாரிடம் இருந்தும் எந்த
உரிமமும் பெற வேண்டிய தேவையில்லை. எந்த
ஒரு நபரும் சிக்னல் பாக்சை வாங்கி, அதன்மூலம் "வைபி' இன்டர்நெட் இணைப்பை
பெறலாம். ஆயிரம் ரூபாய் இருந்தால், இந்த வகை இன்டர்நெட் இணைப்பை பெறுவது
எளிது.ஒருவர் தன் வீட்டிற்கு பெற்றுள்ள இன்டர்நெட் இணைப்பில் போலீசார்
தலையிட்டு அது பாதுகாப் பாக இருக்கும் வகையில், "லாக்' செய்ய முடியும்.
அப்படி செய்தால், அது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகி
விடும். அதனால், ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு,
அவர்கள் தங்களின் இன்டர்நெட் இணைப்பை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி
அறிவுறுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளோம்.இவ்வாறு "டிராய்' தலைவர்
கூறினார். உங்களின் இணைப்பை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நான்கு யோசனைகள்: 1.
இன்டர்நெட் பயன்படுத்த துவங்கும் போது, பயன்படுத்துவோரின் பெயர் மற்றும்
பாஸ்வேர்டு கொடுத்து பயன்படுத்த துவங்குங்கள். இந்த பாஸ்வேர்டை
குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுங்கள். 2. இன்டர்நெட் பயன்படுத்தாத போது, உங்களின் "வைபி' இணைப்பை சுவிட்ச் ஆப் செய்து வையுங்கள். 3.
உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கும் சர்வீஸ் இன்ஜினியரை, அதைப்
பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு தெரியாமல், உங்களின் இணைப்பை யாராவது தவறாகப்
பயன்படுத்துகிறார்களா என்பதை அவ்வப்போது, சர்வீஸ் இன்ஜினியர் மூலம் உறுதி
செய்து கொள்ளுங்கள். 4. உங்களின் இன்டர்நெட் இணைப்புடன் வேறு எந்த கம்ப்யூட்டராவது இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். இந்துத்துவா கும்பலின் மறைமுகச் செயல்பாடுகள் இந்திய அரசு மதச்சார்பற்ற தன்மை கொண்டது - இது இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் நிலைப்பாடும்கூட! ஆனால், நடைமுறையில் குறிப்பிட்ட இந்துமத
சம்பந்தமான சம்பிர தாயங்கள் நிறைந்ததாகவே அதன் செயல்பாடு அமைந்துள்ளது. ஒரு அரசு விழா என்றால், அதில் மேற்கொள்ளப்படுவது அத்தனையும் இந்துமத ஆச்சாரங்கள்தான். பூமி பூஜை என்று சொல்லி பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து ஹோமம் வளர்த்து, எல்லாவிதமான இந்து மதச் சடங்குகளையெல்லாம் பின்பற்றுகிறார்கள் - அரசு அலுவலகத் தில் குறிப்பிட்ட இந்துமதக்காரர்கள் மட்டும்தான் பணியாற்று கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அடுத்த மதக்காரர்களைச் சீண்டும், சங்கடப்படுத்தும் அநாகரிகமான செயல்முறை இது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்ற பெயரால் அலுவலக வளாகங்களுக்குள் தடபுடலாக பூஜைகளைச் செய்து வருகின்றனர். அதுபோலவே, அரசு அலுவலகம், வளாகங்களுக்குள்ளும் இந்துமத வழிபாட்டுப் படங்களையும், கோயில்களையும் எழுப்பி வருகிறார்கள். இது ஒரு ஆபத்தான போக்காகும். இந்து மதவாத அரசியல் நடத்தும் ஒரு அமைப்பும், அதன் துணைக் கிரகங்களும் இந்த நாட்டில் இந்துவெறியைத் தீயாக வளர்த்து வருகிறார்கள். பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் பச்சையான இந்துத்துவா ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது. பி.ஜே.பி. வேர்ப்பிடிக்காத மாநிலங்களில், அரசு அலுவல கங்களை தங்கள் கைக்குள் வைத்திட இதுபோன்ற செயல் களைத் திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றனர். அரசு அலுவலக வளாகங்களுக்குள் மத மாச்சரியம் என்னும் விஷத்தைத் தூவும் நயவஞ்சக ஏற்பாடு இது. பி.ஜே.பி.யை எதிர்ப்பது மட்டும் மதச்சார்பற்ற தன்மை உடையது ஆகாது. பி.ஜே.பி. சொல்லும், விரும்பும் அந்தக் காரியம் தங்குதடையின்றி நடைபெறும்போது, அவர்களின் எண்ணங்கள், நோக்கங்கள் ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அரசு அலுவலகங்களுக்குள்ளோ, வளாகங்களுக்குள்ளோ, நடைபாதைகளிலோ மதச் சின்னங்களை நிறுவக் கூடாது என்கிற சுற்றறிக்கையை - ஆணையை மாநில, மத்திய அரசுகள் அனுப்பி உள்ளன. ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் அரசு அலுவலர்கள் பொருட்படுத்துவதே இல்லை. அதுபோலவே, நடைபாதைகளில் எல்லாம் கோயில்கள், உண்டியல்கள் - இரவு நேரங்களில் சீரழிவுச் செயல்பாடுகள் தாம்-தூம் என்று நடக்கின்றன. அனுமதியில்லாமல் பொது இடங்களில் கோயில்களைக் கட்டக்கூடாது என்று தெளிவாக மத்திய - மாநில அரசுகளின் ஆணைகள் தெளிவாகவே இருக்கின்றன. அவற்றை மீறித்தான் நடைபாதையில் கோயில்களை எழுப்பி வருகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை ஒவ்வொரு சாலையின் - தெருவின் நுழைவுகளில் மதச்சின்னங்கள் அமைந்த வளைவுகளைக் கட்டி வருகின்றனர். இவற்றை மாநகராட்சி எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. கோயில் திருவிழாக்களையும், இந்து முன்னணி வகையறாக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பாமர மக்களின் பக்தியை, உணர்ச்சியைத் தங்களின் கட்சி வளர்ச்சிக்குத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அலுவலகங்கள், வளாகங்கள், நடைபாதைகள் இவற்றில் இந்துமதச் சின்னங்களை நிறுவுதல், நடைபாதைகளில் கோயில்களைக் கட்டுதல், கோயில் திருவிழாக்களை இந்து முன்னணியினர் முன்னின்று நடத்துதல் எல்லாமே ஒரு திட்டமிட்ட வகையில்தான் சங் பரிவார்க் கும்பலால் நடத்தப் படுகின்றன. இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது; முளை யிலேயே கிள்ளி எறியாவிட்டால், நச்சு மரமாக வளர்ந்து, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றக் கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு இந்தக் கண்ணோட் டத்தில் அரிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. உளவுத் துறையும் இதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அவாள் நமக்கு சவால் - (சோ) ராமசாமியுடன் ஒரு பேட்டி இங்கே பல அம்பிகள் கலைஞரிடம் பேட்டி காண்கிறார்கள் அதே மாதிரி ஒரு
உடன்பிறப்பு அம்பிகளின் குருநாதரான சோ ராமசாமியிடம் பேட்டி எடுத்தால்
எப்படி இருக்கும் என்று கற்பனை உடன்பிறப்பு: கலைஞருக்கு வயது ஆகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? (சோ) ராமசாமி: அம்பி! வாஜ்பேயியை பார் ஏற்கனவே ரிடையர் ஆகி கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறார், அத்வானி பிரதமர் ஆவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். அது போல் கலைஞரும் அத்வானி போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் உடன்பிறப்பு: கலைஞர் ஏதாவது சொன்னால் உடன் கார்டூன் போடும் நீங்கள் ரஜினி மன்னிப்பு விஷயம் பற்றி இன்னும் எனக்கு தெரியாது என்று சொல்கிறீர்களே (சோ) ராமசாமி: உண்மை தான் அம்பி! நான் எப்போதும் முரசொலி மட்டும் தான் வெளிவந்த உடனேயே படித்துவிடுவேன். மற்ற தினசரிகளை எல்லாம் பழைய பேப்பர் கடையில் தான் வாங்குவேன் உடன்பிறப்பு: ஸ்டாலின் லண்டன் போனது மற்றும் ஜெயலலிதா கொடநாடு போய் ஓய்வு எடுத்தது பற்றி உங்கள் கருத்து (சோ) ராமசாமி: அம்பி! ஸ்டாலின் லண்டனுக்கு என்னையும் அழைத்தால் கூட போயிருக்கமாட்டேன் ஏனென்றால் எனக்கு பஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஆனால் ஜெயலலிதா உள்ளூர் கொடநாட்டுக்கு கூட என்னை அழைக்காததில் கொஞ்சம் வருத்தமே. அப்படி என்ன குறை கண்டுவிட்டார் என் ஜால்ராவில் என்று தெரியவில்லை உடன்பிறப்பு: உங்களை போன்ற ஒத்த கருத்து உடைய ஞாநி மற்றும் மதன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் (சோ) ராமசாமி: அம்பி! நீ என்ன கேட்க வருகிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஞாநி ஒரு பொழைக்க தெரியாத மனிதர் அவர் இப்படி குமுதத்தில் மாங்கு மாங்கு என்று எழுதுவதற்கு பதில் அம்மாவிடம் சரணடைந்தால் அவர் காலத்துக்கும் செட்டில் ஆகிவிடலாம். என்னை தொடர்பு கொண்டால் நல்ல டீலாக முடித்து கொடுப்பேன் அதில் எனக்கு ஒரு கட்டிங் கொடுத்து விட வேண்டும். மதனை பற்றி நினைக்கும் போது எனக்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல அம்பி இருக்கிறான் என்று பெருமிதமாக இருக்கிறது உடன்பிறப்பு: ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? (சோ) ராமசாமி: அது பற்றி கணிக்க நான் ஆருடம் சொல்பவன் அல்ல உடன்பிறப்பு: மோடி பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? (சோ) ராமசாமி: இது ஜனநாயக நாடு அவர் பிரதமாராக வரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது உடன்பிறப்பு: கலைஞர் அவாள் நமக்கு சவால் என்று கவிதை பாடி இருக்கிறாரே (சோ) ராமசாமி: பாவம் அவரால் கவிதை தான் எழுத முடியும் என்னை போல் கேணை தனமாக கார்ட்டூன் போட முடியுமா? உடன்பிறப்பு: அப்போ அவர் செஞ்சா நீங்களும் செவீங்களா? (சோ) ராமசாமி: வேற வழி இல்லை அம்பி, அவர் கவிதை எழுத அதை நக்கல் நையாண்டி பண்ணி தான் பொழப்பு ஓடுது அவர் முரசொலியில் எழுதவில்லை என்றால் துக்ளக்கை இழுத்து மூடிவிட்டு அம்மா சரணம் பாட போக வேண்டியது தான் உடன்பிறப்புக்கு இப்போது லேசாக கண்ணை கட்ட ராம்ஸ் மாமியிடம் சாரி சோ ராமசாமியிடம் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார் http://kalaignarkarunanidhi.blogspot.com/ இணைய தளத்தில் மாணவர்கள் செய்யக்கூடியது; செய்யக்கூடாதது என்ன?போலீஸ் அறிவுரைகள்"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்ற
பழமொழியின் அர்த்தம், எந்தவொரு காரியத்தையும் பிஞ்சு மனதில் விதைத்தால்
பலன் கிடைக்கும் என்பது தான். தமிழக போலீசார், இந்த சூத்திரத்தைக் கையில்
எடுத்துள்ளனர்.இணைய தள பயன்பாட்டால் பெருகி வரும் "சைபர் கிரைம்'
குற்றங்களைத் தடுக்க, பள்ளி மாணவர்கள் மனதில் இணைய தளத்தில் உள்ள நல்ல
விஷயங்களை எடுத்துக் கூறும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த, சென்னை மாநகர
போலீசார் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக சென்னையில் மூன்றாயிரம்
பள்ளி மாணவர்களுக்கு, இணைய தள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு தகவல்
சென்றடைந்துள்ளது. பள்ளி குழந்தைகள் செய்யக்கூடியது; செய்யக் கூடாதது என்பது குறித்து "சைபர் கிரைம்' போலீசார் வழங்கி வரும் அறிவுரைகள்: *
பெற்றோரின் அனுமதியின்றி தனது தனிப்பட்ட தகவல்களான வீட்டின் முகவரி,
போட்டோ, மொபைல் போன் எண், பெற்றோர் அலுவலக முகவரி மற்றும் போன் எண்,
பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. * முறையற்ற தகவல்கள் ஏதேனும் இணைய தளத்தில் தெரிய வரும் போது, பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். *
இணைய தளத்தில் "சாட்டிங்' சந்திப்பில் பழக்கம் ஏற்பட்டு, அந்த நபரை நேரில்
சந்திப் பதற்கு முன், பெற்றோரின் அனுமதி பெற்று, சந்திக்கும் நபரின்
விவரங்களைத் தெரிந்து கொண்ட பின், பொது இடங்களில் சந்திக்கலாம். *
இணைய தள முகவரிக்கு முறையற்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றால், அதற்கான
பொறுப்பை நான் ஏற்க முடியாது என்ற விவரத்தை பெற்றோருக்கு
தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உதவியுடன், இணைய தள சேவை மையத்தை தொடர்பு
கொள்ள வேண்டும். * இணைய தளத்தில்
நீங்கள் செல்லும் பகுதிகள், அதில் எவ்வளவு மணி நேரம் செலவு செய்கிறீர்கள்,
எந்த நாள் என்பதை பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோர்
அனுமதியின்றி வேறு பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும். * இணைய தள ரகசிய குறியீட்டு எண்ணை (பாஸ்வேர்டு), பெற்றோர் இன்றி நெருங்கிய நண்பரிடம் கூட தெரிவிக்க வேண்டாம். * எவரையும் புண்படுத்துவதோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ இல்லாமல் சிறந்த இணைய தளத்தை பயன்படுத்துவது நல்லது. *
ஆபாச படம், பணம் வைத்து விளையாடுவது (கேம்பிளிங்), அருவருக்கத்தக்க
பேச்சு, போதைப் பொருள் மற்றும் குடிபோதை தளங்களில் இருந்து பள்ளிக்
குழந்தைகளைக் காப்பாற்ற, சிறந்த மென்பொருள் (சாப்ட்வேர்) தடுப்பான் களை
பயன்படுத்த வேண்டும். * இணைய
தளத்தில் குழந்தைகள் பயன்படுத்திய பகுதிகளை, பல மணி நேரத்திற்கு பிறகு
குழந்தைகள் பார்த்த அதே தளங்களை பெற்றோர் பார்க்கக்கூடிய வகையிலான
"சாப்ட்வேர்' பயன்படுத்த வேண்டும். * இணைய தளத்தில் ஆபாச படங்களைத் தடுக்கும் வகையில், சைபர் பெட்ரோல், நெட்கானி, சைபர் சில்டர், வெப்வென்ஸ், சர்ப்வான், N2H2BESS ஆகிய நவீன சாப்ட்வேர்களைப் பயன்படுத்த, பெற்றோர் முன்வர வேண்டும். *
குழந்தைகள் கம்ப்யூட்டர் வழி குற்றங்களில் ஈடுபடுவது பெற்றோர் கவனத்திற்கு
தெரிய வந்தால், உடனடியாக காவல் துறையினர் உதவியை அணுக வேண்டும். இது
குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சேகர் கூறுகையில், ""இணைய தளத்தில்
குழந்தை களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல் படும் பொறுப்பு,
பெற்றோர், சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து காவல் துறைக்கும் உண்டு. இந்த நோக்கத்தில் தான் மாணவர்களுக்கு "பிநெட் ஸ்மார்ட்' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளோம். சென்னையில் முதல்கட்டமாக ஆறு பள்ளிகளில் மூன்றாயிரம் பள்ளிக் குழந்தைகள் இணைய தள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சென்றடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இவை சென்றடைய வேண் டும் என்பதே எங்கள் குறிக்கோள்,'' என்றார். http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=6146&cls=row4&ncat=TN முடிவுரை எழுதுக! 1992 டிசம்பர் 6 இல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டாலும்
இடிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து நாடெங்கும் மதக் கலவரங்கள் வெடித்துக்
கிளம்பி மக்களின் அன்றாட வாழ்வைக் கொலைக் களமாக்கிவிட்டது. அதற்குப் பத்தாண்டுகள் கழித்து குஜராத்தில் நரேந்திர மோடி (பா.ஜ.க.) ஆட்சியில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அரசே முன்னின்று வன்முறையைத் தூண்டி, ஆயிரக்கணக் கான சிறுபான்மை மக்களை வேட்டையாடி, மதவாதம் தன் பசி வெறியைத் தீர்த்துக்கொண்டது. இப்பொழுது ஒரிசா மாநிலத்தில் அதே குஜராத் பாணி வேட்டையை, பா.ஜ.க., சங் பரிவார் கும்பல் தொடங்கி, சிறுபான்மை மக்களின் உயிர் வாழ்வையே கேள்விக் குரியதாக்கிவிட்டது! என்னே கொடுமை! சொந்த வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் பாதுகாப்பைத் தேடி கிறிஸ்துவ மக்கள் ஒளிகிறார்கள் என்றால், இது நாடல்ல - காடு என்பது உறுதியாகிவிட்டது. அம்மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் என்ற கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறது. முதலமைச்சர் நவீன்பட் நாயக் பாரதீய ஜனதாவின் கைக்குள் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அரசு என்ற ஒரு அமைப்பே முற்றிலும் அங்கு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டி ருப்பது மிகப்பெரிய ஆபத்தாகும். விசுவ இந்துபரிசத் சாமியார் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த வன்முறை வெறியாட்டங்கள் தலைவிரி கோலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அவரைக் கொன்றதற்கும், கிறித்தவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பிறகும், ஆடு - ஓநாய் கதைபோல, கிறித்தவர்களை வேட்டையாட இந்தச் சந்தர்ப்பத்தை விசுவ இந்துபரிசத் உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பல் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை எப்படி குஜராத் அரசு பயன்படுத்தி சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களை வேட்டையாடியதோ அதுபோலவே சாமியார் ஒருவரின் படுகொலையைப் பயன்படுத்தி கிறித்துவ மக்களைக் குறி வைத்துக் கிளம்பியிருக்கிறது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி முழு அடைப்புக்கு விசுவ இந்துபரிசத் அழைப்பு விடுத்தது. அதனைத் தொடர்ந்து வெடித்த கலவரத் தீ இன்னும் அணைந்தபாடில்லை. வேலை நிறுத்தம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்று என்று. உச்சநீதிமன்றம் கூறி, செய்யாத வேலை நிறுத்தத்துக்காக தமிழக முதலமைச்சர் மீது உச்சநீதிமன்றம் சீறிப் பாய்கிறது. இப்பொழுது ஒரிசாவில் அறிவிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை உச்சநீதிமன்றம்? உச்சநீதிமன்றம் நினைத்தால் வேறு யாரும் வழக்குத் தொடுக்காத நிலையில் தானாகவேகூட இழுத்துப் போட்டுக் கொண்டு வழக்கைப் பதிவு செய்துகொள்ளலாமே! பா.ஜ.க. என்கிற மதவெறி அமைப்பின் கையில் ஆட்சி அதிகாரம் சென்றால், அந்த நாட்டில் மனிதர்கள் வாழ முடியாது; காட்டுக்குக் குடியேறவேண்டியதுதான் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் கண்முன் நடந்துகொண்டிருக்கும் ஒரிசா நிகழ்வுகள்! இராணுவத்தை அனுப்பி கலவரத்தை ஒழுக்க இந்திய அரசு முயற்சிப்பது சரியான நடவடிக்கையே! அத்துடன் அதன் கடமை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இப்படி இந்துத்துவா பெயரில் ஒரு பாசிசக் கும்பல் தொடர்ந்து சிறுபான்மை மக்களைக் குறி வைத்துத் தாக்குகிறதே - கொன்று குவிக்கிறதே - இதற்கு என்னதான் முடிவு? இதன் விளைவாக சிறுபான்மை மக்கள் மத்தியிலும் எதிர் நடவடிக்கைகளுக்குத் தயாராகும் ஒரு நிலையைக் குற்றம் கூற முடியுமா? இப்படி ஒரு நிலை உருவாகும்போது பொதுமக்களின் நிலைமை என்ன? நொடிக்கு நொடி செத்துப் பிழைக்க வேண்டிய அபாயகரமான சூழல் அல்லவா இது! இந்தக் கும்பலின் மூலக்கருவான ஆர்.எஸ்.எஸை எத்தனை முறை தடை செய்வது? எத்தனை முறை தடையை நீக்குவது? ஒருமுறை தடையை நீக்கிய பலனை நாடு அனுபவித்த நிலையில், மறுபடியும் மறுபடியும் தடைகள் - நீக்கங்கள் என்றால் தடை என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடவில்லையா? இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல - பொதுவான மக்கள் பிரச்சினை - மதவாதப் பாசிச சக்திகளுக்குச் சட்ட ரீதியாக முடிவுரை எழுதவேண்டும் - மத்திய அரசு சிந்திக்கட்டும்! நன்றி : விடுதலை |
||||||||||||
|
|