ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 ![]() | 帮助 |
குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம்: கலைஞர்சேமிக்கும் உணர்வை குழந்தைப் பருவம் முதலே உருவாக்கி வளர்ப்போம். குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம் என உலக சிக்கன நாள் செய்தியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகளில் சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு பலர் அல்லல்களுக்கு ஆளாவதை செய்தித்தாள்கள் வாயிலாக அறியும் பொழுது, நாம் வருந்த நேர்கிறது. பாடுபட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பு உணர்வோடு சேமிப்பது தானே முறை. அதற்கு தபால் நிலையங்கள், அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவை உதவும். அங்கு சேமிப்பதன் மூலம் சேமிக்கும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும். சிறுகச் சிறுக சேமிக்கும் தொகை பெருந்தொகையாகி, அரசுக்கு கிடைக்கிறது. அந்த நிதி அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பயன்படுகிறது. வட்டியும், முதலும் சேர்ந்து கிடைப்பதால் சேமிப்பவர்களின் குடும்பத்தின் அவசர தேவைகளை நிறைவு செய்ய பெரிதும் உதவுகிறது. தனி மனிதரின் சேமிப்பு அவருக்கு பயன் தருவதுடன் அரசின் திட்டங்களை நடை முறைப்படுத்துவதிலும் துணை புரிகிறது.
விண்டோஸ் 7 வெற்றியில் தமிழரின் பங்கு... மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய இயங்கு மென்பொருளான விண்டோஸ் 7 (Windows 7) ஜ உலகம் பூராகவும் வெளியிட்டது தெரிந்த ஒன்றே. சற்று தோல்வி வெளியீடான விஸ்ராக்கு (Vista) பின் விண்டோஸ் 7 அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்குரிய பலனையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டுள்ளது.இதில் நாம் பெருமைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், விண்டோஸ் 7யை உருவாக்கியதில் ஒரு தமிழ் கணிப்பொறியாளர் முக்கியப் பங்கு வகிக்கும் தகவல் தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 25 அதிகாரிகளில் 6 பேர் இந்தியர்களாம். சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவில் இந்த இந்தியர்கள் 6 பேருக்கும் மிக முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த சோமசேகர்என்பவர்தான் சாப்ட்வேர் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். அந்தப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் என்ற பதவியில் உள்ளார் அவர். சோமசேகர் தலைமையில் உலகம் முழுவதும் 4,000 பேர் பணிபுரிகிறார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சாப்ட்வேரும் இவரது தலைமையில் உருவானதுதான். சோமசேகர் அவர்களே, உங்கள் பணி மென் மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்.... கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 27-ம் தேதி முதல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. மாநிலத்திலேயே மிக அதிக பட்சமாக சீர்காழியில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதர இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பெய்துள்ள மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): பொன்னேரி 40, மயிலாடுதுறை 30, தாம்பரம், உத்திரமேரூர், பரங்கிப்பேட்டை, பாம்பன், ராமநாதபுரம், ராமேசுவரம், குன்னூர், சூளூர்பேட்டை (ஆந்திரம்) 20, மதுராந்தகம், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, தரங்கம்பாடி, நாங்குனேரி, சாத்தான்குளம், வந்தவாசி, ஆரணி, போளூர், வாழப்பாடி, திருவாடானை 10.சென்னையில்...: சென்னையில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. நகரில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும். பலத்த மழை எச்சரிக்கை: வங்கக் கடலில் தமிழகம்- இலங்கை இடையே தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுத்து வருகிறது. இதனால், அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும். தமிழகத்தின் உட்பகுதி மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும். மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது
கோவை, கோட்டைமேடு, சாமராவ் வீதியில் வசிப்பவர் இப்ராகிம்ஷா(35); ரெடிமேடு ஆடை விற்பனை மையம் வைத்துள்ளார். இவரது மனைவி நதீரா பானு(26). இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நதீராபானு கோபித்துக் கொண்டு, பெற்றோரிடம் சென்று விட்டார். ஜமாத்தில் நடந்த சமரசத்துக்குப் பின் நதீராபானு, மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். 24ம் தேதி இரவு, இவர்களது குழந்தைகள் மூவரும் பாட்டி வீட்டுக்கு சென்றனர். அம்மா எங்கே இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை என கேட்டதற்கு, பதிலளித்த குழந்தைகள், அப்பா, சித்தப்பா, அத்தை மற்றும் பாட்டி ஆகியோர் அம்மாவுக்கு மொட்டை அடித்து விட்டனர். அதனால் வெளியில் வரவில்லை என சோகத்துடன் தெரிவித்தனர். குழந்தைகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நதிராபானுவின் பெற்றோர், உக்கடம் போலீசில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, நதீராபானுவுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த, கணவர் இப்ராகிம்ஷா, இவரது தம்பி பைரோஷ், மாமியார் சரீபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக்கொடுமைக்கு தூபம் போட்ட நாத்தனார் ஆமினா தலைமறைவாகி விட்டார். அதிரை தாலுகா உதயமாகவேண்டும்.Adirampattinam New taluk -----இந்து ஆங்கில நாளிதழில் வெளியானது
Adirampattinam is the largest and fast-developing Town Panchayat in Thanjavur district. Formation of a new taluk with Adirampattnam as its headquarters is one of the long-awaiting demands of the people residing in and around the town. It may be done by bifurcating Pattukkotai Taluk. Some areas of Sethubavachatram Panchayat Union of Peravurani Taluk might also be joined to the new taluk. This will help to cater to the growing needs of the people and eventually get more amenities. Hence, the administrative authorities of the State government may consider creating a new taluk of Adirampattinam. Pro.A. Haja Abdul Khader KMC (CS) Adirampattinam. முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இருஇளைஞர்களும் இறந்தார்கள்19-10-2009 anduru maalai சுமார் 6.00 மணியளவில் முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் அதிரை- முத்துப்பேட்டை ரோட்டில் பல்சர் என்னும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இருஇளைஞர்களும் இறந்தார்கள். முத்துப்பேட்டை குண்டான்குளத்தெரு புரோஸ்கான்(28),ஆஸாத்நகர் மரைக்கான்(22). இருசக்கர வாகனத்தில் சென்றால் நமது இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.அன்பான நண்பர்களே..எனது வாசகர்களே...நமது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள்,பிள்ளைகள்,நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தயவுசெய்து மெதுவாக செல்ல சொல்லி அன்புடன் எச்சரிக்கை செய்யுங்கள்.ஏனென்றால் இன்றைய விபத்தில் ஒரு சகோதரரின் உடல் ஊறுப்புகள் தனித்தனியாக அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தது .
navas Kahan <navas_nsn@yahoo.co.in தஞ்சாவூர் மாவட்டத்தில் 31 ஆயிரம் ரேஷன் கார்டுகள் போலியானவைதஞ்சாவூர் கலெக்டர் சண்முகம் கூறியதாவது:இம்மாவட்டத்தில் ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 484 ரேஷன் கார்டுகள், ஆயிரத்து 79 ரேஷன் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் வரை நடந்த ரேஷன் கார்டு சரி பார்ப்பு பணியில் 31 ஆயிரம் ரேஷன் கார்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டு, அவற்றுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கார்டுகளில் எவரேனும் வெளியூர் சென்று இருத்தல், சோதனைக்கு வந்தபோது வீட்டில் ஆட்கள் இல்லாமல் இருத்தல் போன்ற நியாயமான காரணங்களால் ரேஷன் கார்டு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். ரேஷன்கார்டில் உள்ள முகவரியில் அவர்கள் குடியிருப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்து அந்த கார்டுகளுக்கு மீண்டும் பொருட்கள் வழங்க அனுமதி வழங்குவார்கள்.மற்ற போலி கார்டுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். இப்பணி இன்னும் ஓரிரு நாளில் 100 சதவீதம் நிறைவடையும். அதன்பின், மாவட்ட அளவில் எவ்வளவு போலி ரேஷன் கார்டுகள் உள்ளன என்ற விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார். அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு எம்.எல்.ஏ.ரெங்கராஜன் தகவல்.அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு எம்.எல்.ஏ.ரெங்கராஜன் தகவல்.
காந்தி நகர் கடற்கரை சாலைக்கு மின்விளக்கு அமைக்க 2 லட்சம்,மாரியம்மன் கோயில் தெரு 5 வது வார்டில் பொது வினியோகம் கட்டிடம் அமைக்க 2.80 லட்சம்,மேலத்தெரு சவுக்கு கொல்லை பகுதியில் தார்சாலை அமைக்க 1.75 லட்சம்,ஹாஜா நகர் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க 2 லட்ச ரூபாயும்,புதுத்தெரு வடபுறம் தார்சாலை அமைக்க 1.50 லட்சம் மொத்தம் 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ,என்.ஆர்.ரெங்கராஜன் ஒதுக்கீடு செய்துள்ளார்.எம்.எல்.ஏ அவர்களுக்கு பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர்,வார்டு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 30 Daily RamadanPrayersRAMADAN KAREEM! - Below are 30 Daily Ramadan Prayers (duas), reposted from 2007. Inshallah, they will make the fast easier, enlighten the mind, and ennoble the heart in this blessed month.
Ramadan Dua: DAY 1
ALLAH, on this day make my fasts the fasts of those who fast (sincerely), and my standing up in prayer of those who stand up in prayer (obediently), awaken me in it from the sleep of the heedless, and forgive me my sins , O God of the worlds, and forgive me, O one who forgives the sinners.
Ramadan Dua: DAY 2
ALLAH, on this day, take me closer towards Your pleasure, keep me away from Your anger and punishment, grant me the opportunity to recite Your verses (of the Qur’an), by Your mercy, O the most Merciful.
Ramadan Dua: DAY 3
ALLAH, on this day, grant me wisdom and awareness, keep me away from foolishness and pretension, grant me a share in every blessing You send down, by You generosity, O the most Generous.
Ramadan Dua: DAY 4
ALLAH, on this day, strengthen me in carrying out Your commands, let me taste the sweetness of Your remembrance, grant me, through Your graciousness, that I give thanks to You. Protect me, with Your protection and cover, O the most discerning of those who see.
Ramadan Dua: DAY 5
ALLAH, on this day, place me among those who seek forgiveness. Place me among Your righteous and obedient servants, and place me among Your close friends, by Your kindness, O the most Merciful.
Ramadan Dua: DAY 6
ALLAH, on this day, do not let me abase myself by incurring Your disobedience, and do not strike me with the whip of Your punishment, keep me away from the causes of Your anger, by and Your power, O the ultimate wish of those who desire.
Ramadan Dua: DAY 7
ALLAH, on this day, help me with its fasts and prayers, and keep me away from mistakes and sins of the day, grant me that I remember You continuously through the day, by Your assistance, O the Guide of those who stray.
Ramadan Dua: DAY 8
ALLAH, on this day, let me have mercy on the orphans, and feed [the hungry], and spread peace, and keep company with the noble-minded, O the shelter of the hopeful.
Ramadan Dua: DAY 9
ALLAH, on this day, grant me a share from Your mercy which is wide, guide me towards Your shining proofs, lead me to Your all encompassing pleasure, by Your love, O the hope of the desirous.
Ramadan Dua: DAY 10
ALLAH, on this day, make me, among those who rely on You, from those who You consider successful, and place me among those who are near to you, by Your favor, O goal of the seekers.
Ramadan Dua: DAY 11
ALLAH, on this day, make me love goodness, and dislike corruption and disobedience, bar me from anger and the fire, by Your help, O the helper of those who seek help
Ramadan Dua: DAY 12
ALLAH, on this day, beautify me with covering and chastity, cover me with the clothes of contentment and chastity, let me adhere to justice and fairness, and keep me safe from all that I fear, by Your protection, O the protector of the frightened.
Ramadan Dua: DAY 13
ALLAH, on this day, purify me from un-cleanliness and dirt, make me patient over events that are decreed, grant me the ability to be pious, and keep company with the good, by Your help, O the beloved of the destitute.
Ramadan Dua: DAY 14
ALLAH, on this day, do not condemn me for slips, make me decrease mistakes and errors, do not make me a target for afflictions and troubles, by Your honor, O the honor of the Muslims.
Ramadan Dua: DAY 15
O Allah, on this day, grant me the obedience of the humble, expand my chest through the repentance of the humble, by Your security, O the shelter of the fearful.
Ramadan Dua: DAY 16
ALLAH, on this day, grant me compatibility with the good, keep me away from patching up with the evil, lead me in it, by Your mercy, to the permanent abode, by Your Godship, O the God of the worlds.
Ramadan Dua: DAY 17
ALLAH, on this day, guide me towards righteous actions, fulfill my needs and hopes, O One who does not need explanations nor questions, O One who knows what is in the chests of the (people of the) world. Bless Muhammad and his family, the Pure.
Ramadan Dua: DAY 18
ALLAH, on this day, make me love goodness, and dislike corruption and disobedience, bar me from anger and the fire [of Hell], by Your help, O the helper of those who seek help.
Ramadan Dua: DAY 19
ALLAH, on this day, multiply for me its blessings, and ease my path towards its bounties, do not deprive me of the acceptance of its good deeds, O the Guide towards the clear truth.
Ramadan Dua: DAY 20
ALLAH, on this day, open for me the doors of the heavens, and lock the doors of Hell from me, help me to recite the Qur’an, O the One who sends down tranquility into the hearts of believers.
Ramadan Dua: DAY 21
ALLAH, on this day, show me the way to win Your pleasure, do not let Shaytan have a means over me, make Paradise an abode and a resting place for me, O the One who fulfills the requests of the needy.
Ramadan Dua: DAY 22
ALLAH, on this day, open for me the doors of Your Grace, send down on me its blessings, help me towards the causes of Your mercy, and give me a place in the comforts of Paradise, O the one who answers the call of the distressed.
Ramadan Dua: DAY 23
ALLAH, on this day, wash away my sins, purify me from all flaws, examine my heart with (for) the piety of the hearts, O One who overlooks the shortcomings of the sinners.
Ramadan Dua: DAY 24
ALLAH, on this day, I ask You for what pleases You, and I seek refuge in You from what displeases You, I ask You to grant me the opportunity to obey You and not disobey You, O One who is generous with those who ask
Ramadan Dua: DAY 25
ALLAH, on this day, make me among those who love Your friends, and hate Your enemies, following the way of Your last Prophet, O the Guardian of the hearts of the Prophets.
Ramadan Dua: DAY 26
ALLAH, on this day, make my efforts worthy of appreciation, and my sins forgiven, my deeds accepted, my flaws concealed, O the best of those who hear.
Ramadan Dua: DAY 27
ALLAH, on this day, bestow on me the blessings of Laylatul Qadr, change my affairs from (being) difficult to (being) easy, accept my apologies, and decrease for me [my] sins and burdens, O the Compassionate with His righteous servants.
Ramadan Dua: DAY 28
ALLAH, on this day, grant me a share in its nawafil (recommended prayers), honor me by attending to my problems, make closer the means to approach You, from all the means, O One who is not preoccupied by the requests of the beseechers.
Ramadan Dua: DAY 29
O ALLAH, on this day, cover me with Your mercy, grant me in it success and protection, purify my heart from the darkness of false accusations, O the Merciful to His believing servants.
Ramadan Dua: DAY 30
O ALLAH, on this day, make my fasts worthy of appreciation and acceptance, according to what pleases You, and pleases the Messenger, the branches being strengthened by the roots, for the sake of our leader, Muhammad, and his purified family. Praise be to ALLAH, the Lord of the worlds.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Regards,
AL YAHYA
East Street
Adirampattinam
Thanjure Dist ரமளானின் மகிமைரமளானின் மகிமை
( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=144
புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும். ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது. இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும். நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக: ’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’ ’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’ ’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’ ’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’ நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன. ‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’ ‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’ ‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’ எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக! நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும். நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான். நோன்பின் நிய்யத் நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும். தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்: நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன். உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது. நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். ஸஹர் – நோன்புபிடிப்பது ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும். ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது. இஃப்தார் – நோன்பு திறப்பது சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும். மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும். நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும். இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி – பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும். நோன்பு திறக்கும் துஆ அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி. ’’யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக! நோன்பின் முறித்தல்கள் 1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது. வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களா’ செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும். நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது. தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும். நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும். நோன்பை முறிக்காதவைகள் 1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது. நோன்பின் மக்ருஹ்கள் 1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது. இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது. நோன்பு வைக்காமலிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் 1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும். 2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும். 3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும். 4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது. பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும். 5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும். 6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும். 7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும். 8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும். தராவீஹின் சட்டங்கள் புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும். எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும். குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம். இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும். வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம். தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது. ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது. குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் – மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும். இஃதிகாப் புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள். ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும். இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது. இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும். ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும். 1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது. 2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது. அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும். HAPPY INDEPENDENCE DAYHappy INDEPENDENCE Day VANDE MATARAM JAI H ........Let' s be the INDIAN's first...!!! HAPPY INDEPENDENCE DAY
ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் காய்ச்சலுக்கு இந்திய முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்குமிடங்கள்GOVERNMENT AUTHORIZED HOSPITALS FOR TREATMENT OF SWINE FLU City Hospital Address Contact Chennai King Institute of Preventive Medicine (24/7 Service) Guindy, Chennai – 32 (044) 22501520, 22501521 & 22501522 Communicable Diseases Hospital Thondiarpet, Chennai (044) 25912686/87/88, 9444459543 Government General Hospital Opp. Central Railway Station, Chennai – 03 (044) 25305000, 25305723, 25305721, 25330300 Pune Naidu Hospital Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01 (020) 26058243 National Institute of Virology 20A Ambedkar Road , Pune – 11 (020) 26006290 Kolkata ID Hospital 57,Beliaghata, Beliaghata Road , Kolkata - 10 (033) 23701252 Coimbatore Government General Hospital Near Railway Station, Trichy Road, Coimbatore – 18 (0422) 2301393, 2301394, 2301395, 2301396 Hyderabad Govt. General and Chest Diseases Hospital , Erragadda, Hyderabad (040) 23814939 Mumbai Kasturba Gandhi Hospital Arthur Road, N M Joshi Marg, Jacob Circle , Mumbai - 11 (022) 23083901, 23092458, 23004512 Sir J J Hospital J J Marg, Byculla, Mumbai - 08 (022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366 Haffkine Institute Acharya Donde Marg, Parel, Mumbai – 12 (022) 24160947, 24160961, 24160962 Kochi Government Medical College Gandhi Nagar P O, Kottayam - 08 (0481) 2597311,2597312 Government Medical College Vandanam P O, Allapuzha - 05 (0477) 2282015 Taluk Hospital Railway Station Road , Alwaye, Ernakulam (0484) 2624040 Sathyajit - 09847840051 Taluk Hospital Perumbavoor PO , Ernakulam 542 (0484) 2523138 Vipin - 09447305200 Gurgaon & Delhi All India Institute of Medical Sciences (AIIMS) Ansari Nagar, Aurobindo Marg Ring Road , New Delhi – 29 (011) 26594404, 26861698 Prof. R C Deka - 9868397464 National Institute for Communicable Diseases 22, Sham Nath Marg, New Delhi – 54 (011) 23971272/060/344/524/449/326 Dr. Ram Manohar Lohia Hospital Kharak Singh Marg, New Delhi – 01 (011) 23741640, 23741649, 23741639 Dr. N K Chaturvedi – 9811101704 Vallabhai Patel Chest Institute University Enclave, New Delhi- 07 (011) 27667102, 27667441, 27667667, 27666182 Bangalore Victoria Hospital K R Market, Kalasipalayam, Bangalore – 02 (080) 26703294 Dr. Gangadhar - 94480-49863 SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29 (080) 26631923 Dr. Shivaraj - 99801-48780 PL. PASS ON THIS INFO. TO ALL THE PERSON YOU CARE STAY ALERT! PREVENT AGAINST SWINE FLU அதிராம்பட்டினம் அல்மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாஅதிராம்பட்டினம் அல்மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று 01/08/2009,காலை 9 மணி அளவில் நடைபெற்றது.இவ்விழாவில் மார்க்க அறிஞர்களும்,அரபிக்கல்லூரியின் உஸ்தாது மார்களும் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.இதில் ஏரளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை அரபிக்கல்லூரியின் மாணவர்கள் மற்றும் அரபிக்கல்லூரி டிரஸ்ட் ஆகியவை செய்திருந்தது.மேலும் நமதூரி வருகிற அதாவது நோன்புக்கு பிறகு கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள்,வியாபாரிகள்,வேலை செய்பவர்கள் ஆகிய அனைவருக்கும் சிறப்பு இஸ்லாத்தினை முழுமையாக அறிந்து கொள்வதற்காக சிறப்பு வகுப்புகள் நடைபெற இருக்கிறது.இதில் அனைவரும் தங்களினை உட்படுத்தி கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது அல்மதரஸத்தூர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி அதிராம்பட்டினம்.
புனித மிக்க பராஅத் இரவு ஷாபான் மாதம் பிறை 15 ஷபே பராஅத் இரவு ஆகும்.இன்ஷா அல்லாஹ் இந்த புனித மிக்க ஷபே பராஅத் முன்னிட்டு 06/08/2009 வியாழக்கிழமை பின்நேரம் வெள்ளி இரவு சரியாக மஃரீபு தொழுகைக்கு பிறகு நமதூரி பெரிய ஜும்மாபள்ளியின் மூன்று யாசின் ஓதி துவாச் செய்வதுடன்,நமக்கு முன்னால் மரணித்த் முஸ்லீம்களுக்கும் துவா செய்யப்படுகிறது. இஷா தொழுகைக்கு பின் ஆயுளில் ஒரு முறையாவது தொழ வேண்டிய தஸ்பிஹ் தொழுகையும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும்.துஆவுக்கு பிறகு தப்ரூக் வழங்கப்படும்.
சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துபவர்: ஹாபீஸ் காரி மெளலவி எச்.அப்துல் ரஹமான்,பாகவி,தேவ்பந்த். பேராசிரியர்: ஜாமியா மிஸ்பாஹுல்ஹுதா,அரபிக்கல்லூரி,நீடூர்.
அதிராம்பட்டினம் ஸலாஹியா அரபிக்கல்லூரியின் 110வது பட்டமளிப்பு விழாஅதிராம்பட்டினம் ஸலாஹியா அரபிக்கல்லூரியின் 110வது பட்டமளிப்பு விழா இன்று 30/07/2009,காலை 9 மணிக்கு ஆரம்பமாகி லுஹர் தொழுகையுடன் முடிவுடைந்தது.இதில் கண்ணியத்திற்குரிய மெளவிகள்,உலமாக்கள்,மார்க்க அறிஞர்கள்,ஊர் பொதுமக்கள் மற்றும் பட்டம் பெறும் ஸலாஹியா அரபிக்கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இப்பட்டமளிப்பு விழாவினை ஸலாஹியா அரபிக்கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
''சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்தே ஆகவேண்டும். வராவிட்டால் மழையின்றி தஞ்சாவூர் பாலைவனமாகும்''''சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்தே ஆகவேண்டும். வராவிட்டால் மழையின்றி தஞ்சாவூர் பாலைவனமாகும்'' என்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் நெல்லைப் பேராசிரியர் ஒருவர். ``சேதுக் கால்வாயை எதிர்ப்பவர்கள் தமிழ்த் துரோகிகள்!'' என்றும் சாடியிருக்கிறார் அவர். - அ.துரைசாமி தமிழகத்திலும் டாடா டோகோமா சேவை
To get a taste of TATA DOCOMO GSM Mobile services, a subscriber can opt to Prepaid Starter Pack.’ For Rs. 49, The Starter pack comes with life Time Validity.The Postpaid service will be launch from 1 july 2009.
Here is the details TATA DoCoMo GSM Prepaid Starter Pack Price Rs.49 அரபு நாடுகளுக்கு 1 நொடிக்கு 17 காசு மட்டுமே
Text Messaging:-
Note: These are base-line tariffs offered without any add-on subscriptions whatsoever, and so does not reflect the complete tariff offerings of Tata DoCoMo. TATA DoCoMo Customer Care Number Tamil Nadu-9043012345 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட மத்திய அரசு பரிசீலனை!புதுடெல்லி, ஜூன் 25 : மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வு முறையை கைவிடுவதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தற்போது பத்தாம் வகுப்புத் தேர்வுகள் பொதுத்தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தங்களது பிடித்தமான பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே அடிப்படையாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நம் நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெரும் மாணவர்கள், தோல்வியடையும் மாணவர்கள் விரக்தியடைத்து தங்களது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அவலநிலையும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முறை மாற்றம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல், "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது அவசியமா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும் விரிவாக கூறுகையில், "கல்வி முறை என்பது அறிவை வளர்ப்பதாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைய வேண்டுமே தவிர, அதுவே மாணவர்களுக்குச் சுமையாக இருந்துவிடக் கூடாது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிடுவது குறித்து மாநிலக் கல்வி வாரியங்கள், பள்ளிகள் மற்றும் பெற்றோர்களுடனும் தீவிர ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதால் மாணவ, மாணவியர் மன நெருக்கடிக்கு ஆளாவது தவிர்க்கப்படும். அத்துடன், படிப்பை ஆர்வத்துடனும், விருப்பத்துடனும் தொடர வழி வகுக்கும்," என்றார் அமைச்சர் கபில் சிபல். |
|
|