ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 工具 帮助

日志


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்காக 5 ஆண்டு முதுநிலை படிப்பு: பாரதியார் பல்கலைக்கழகம் திட்டம்


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலான 5 ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன்,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 5 ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தென்மாநில பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நவம்பர் 25 முதல் 30 வரை கோவையில் நடைபெறுகிறது. குன்னூரில் புதிய கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்பட இருக்கிறது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூலை உருவாக்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என்றார்.

விஜயகாந்தின் கேப்டன் டி.வி.

விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேப்டன் டி.வி.யை தொடங்க டி.வி. ஒளிபரப்புக்கான அனுமதிகேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து காத்திருந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து டி.வி. ஒளிபரப்புக்கான அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து டி.வி. தொடங்குவதற்கான பணிகள் விறு விறுப்படைந்துள்ளன.
 
விஜயகாந்த் சினிமாவில் பேசிய அரசியல் வசனங்களை தொகுத்து “கேப்டனின் சாட்டையாடி” என்ற தலைப்பில் புதிதாக நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது. தே.மு.தி.க. தொண்டர்களையும் மற்ற நேயர்களையும் கவரும் விதத்தில் புதுமையான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட உள்ளது.
 
தே.மு.தி.க.வினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த கேப்டன் டி.வி. ஒளிபரப்பை தமிழர் திருநாளான பொங்கல் முதல் தொடங்க விஜயகாந்த் முடிவு செய்திருந்தார்.


ஆனால் கேப்டன் டி.வி. அலுவலகத்திற்கான பணிகள் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாததால் கால அவகாசம் தேவைப்பட்டது.

அதனால் நலம் விரும்பிகளோடு ஆலோசனை நடத்திய அவர் கேப்டன் டி.வி. ஒளிபரப்பை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தார். அதன்படி, பழைய தமிழ்ப் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 முதல் கேப்டன் டி.வி. ஒளிபரப்பாக உள்ளது.
 
பெரும்பாலும் வெற்றிக்கொடி நாட்டிய சாட்டிலைட் சானல்கள் இந்த நாளில் தான் தொடங்கப்பட்டது என்ற சென்டிமெண்ட் காரணமாக அன்று முதல் கேப்டன் டி.வி. மக்களை சென்றடையும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

நுகர்வோர் சேவை மையம் தொடக்கம்

நுகர்வோர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தொலைபேசி, இ.மெயில் மூலம் புகார் தெரிவிக்க "நுகர்வோர் சேவை மையம்' தொடங்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

  இணையதள வணிகம், பரிசுத் திட்டங்கள், கலப்படம், எடைக் குறைவு, அதிகமான விலை, காலாவதியான பொருள்கள், பொய்யான விளம்பரங்கள் என்று பல்வேறு பிரச்னைகளை வெளிச்சந்தையில் நுகர்வோர்கள் இப்போது சந்தித்து வருகின்றனர்.

  எனவே வாங்கும் பொருளுக்கு ஐ.எஸ்.ஐ., அக்மார்க், எப்.பி.ஒ. போன்ற தர முத்திரைகள் உள்ளதா என்று நுகர்வோர்கள் சரிபார்க்க வேண்டும்.

    பொருள்கள் அடங்கிய பொட்டலத்தின் மீது அதிகபட்ச சில்லறை விலை, தயாரிப்பாளர் விவரம், காலாவதி தேதி ஆகியவை இல்லாத பொருள்களை தவிர்க்க வேண்டும்.

  பொருள்கள் வாங்கிய பிறகு தரப்படும் ரசீதில் விற்பனையாளர் முகவரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி, பதிவு எண் ஆகியவை உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும்.

  ரேஷன் கடை பிரச்னைகள்: ரேஷன் கடை குறித்த நேரத்தில் இயங்காதது, எடைக் குறைவு, அனைத்துப் பொருள்களும் கிடைக்காதது, குடும்ப அட்டை புதிதாக பெறுவது, விலாசம் மாற்றுவது போன்ற பிரச்னைகள் குறித்தும் இம்மையத்தில் புகார் தெரிவிக்கலாம். ஆலோசனை பெறலாம்.

  044 -2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும், ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ்ஃற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இ.மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.

  கடிதம் மூலம் புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி:

  மாநில நுகர்வோர் சேவை மையம், ஆணையாளர் அலுவலகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை. எழிலகம் 4-வது தளம், சேப்பாக்கம், சென்னை -5.

அறிவாற்றல் உள்ள மாணவர்கள் படிக்காவிட்டால் சமுதாயத்துக்கு இழப்பு: டி. கே. எஸ். இளங்கோவன்

 நல்ல மதிப்பெண் பெற்று அறிவாற்றலோடு உள்ள மாணவர்கள் படிக்காவிட்டால் சமுதாயத்துக்குதான் இழப்பு என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டி. கே. எஸ். இளங்கோவன்.

   வெளிச்சம் அமைப்பின் சார்பில் மாணவர்களின் சமூக மற்றும் உளவியல் குறித்த மாநில அளவிலான பிரசார பயணத் தொடக்க விழா சென்னை லயோலா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி. கே. எஸ். இளங்கோவன் பேசியது:

    சமுதாயத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. நம்மை உருவாக்கிய சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற கடமைதான் அது.

   எனவே வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு கல்வியை அளிக்க அனைவரும் முன் வர வேண்டும் என்றார் இளங்கோவன்.

   வெளிச்சம் அமைப்பானது முதல் தலைமுறை ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் படிப்புக்குத் தேவையான நிதியுதவியைத் திரட்டிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

   தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தின் மூலம் வெளிச்சம் அமைப்பைச் சார்ந்த ஆறு மாணவர்கள், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் படிக்க முடியாமல் உள்ள முதல் தலைமுறை மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் படிப்புக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் உதவி கோர உள்ளனர் என்றார் அமைப்பின் நிறுவனர் ஷெரீன். இளம் மாணவர்களின் மனதில் பொதுவாக எழும் சந்தேகங்கள் குறித்த கேள்வி, பதில் அடங்கிய கையேடும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

   ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சிவசங்கர், திரைப்பட இயக்குநர் எஸ். பி. ஜனநாதன், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உலக வலு தூக்கும் போட்டி: தஞ்சாவூர் பிஎஸ்என்எல் ஊழியர் சிறப்பிடம்

தில்லியில் நவம்பர் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்ற 2009-ம் ஆண்டிற்கான

39-வது உலக வலு தூக்கும் போட்டியில் தஞ்சாவூர் பிஎஸ்என்எல் விளையாட்டுப் பிரிவு உதவியாளரும்,

மன்னார்குடி பிஎஸ்என்எல் ஊழியருமான எஸ். விமல்ராஜா, 60 கிலோ எடை பிரிவில் ஸ்குவாட்

முறையில் நடைபெற்ற போட்டியில் 260 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாம்

இடத்தையும், ஒட்டுமொத்த தரவரிசையில் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளார். அகில உலக வலு தூக்கும்

சம்மேளனம், இவருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது

சீனாவை விட இந்தியா செழிப்பு ஓர் ஆய்வுத் தகவல்

செழு-மையான நாடுகள் பட்டி-யலில் இந்தியாவுக்கு 45ஆவது இடம் கிடைத்-துள்ளது. இந்தப் பட்டிய-லில் சீனா, 75ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவை விட சீனா ராணுவ ரீதியில் பலம் வாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் செழுமையான நாடுகள் வரிசையில் இந்தியா, சீனாவை விட மிக உயரத்-தில் உள்ளது.

லிகேட்டம் பிராஸ்பரி-டிட்டி இன்டெக்ஸ் இந்-தத் தகவலை தெரிவித்து உள்-ளது. இந்த ஆய்வில் இந்தியாவுக்கு 45ஆவது இடமும், சீனாவுக்கு 75-ஆவது இடமும் கிடைத்து ள்ளன.

உலகின் மக்கள் தொகை-யில் 90 சதவிகிதத்தைக் கொண்டுள்ள 104 நாடு-களின் வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றை தொகுத்து இந்த தரவரிசைப் பட்டி-யலை லிகேட்டம் வெளி-யிட்டுள்ளது. இது 3ஆவது ஆய்வாகும்.

பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்-தரம், மக்களின் மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்ப-ட-யாகக் கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது.

இதில் இந்தியாவை விட சீனா பல்வேறு பொருளாதாரப் பிரிவு-களில் எங்கேயோ உள்-ளது. ஆனால் சீனாவிடம் இல்லாத ஜனநாயகம், சகிப்புத்தன்மை, இனக் குழுக்களுக்கிடையிலான நல்லிணக்கம், மத சுதந்-திரம், பேச்சு சுதந்திரம், ஒருமைப்பாடு, சிறுபான்-மையினரை மதிக்கும் தன்மை, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவை காரணமாக, இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளி விட்டது.

இதுகுறித்து லிகேட்-டம் கழகத்தின் மூத்த துணைத் தலைவர் வில்-லி-யம் இன்போடன் கூறு-கையில், மிகச் சிறந்த சமூகக் கட்டமைப்பு மற்-றும் அருமையான வாழ்க்-கைத் தரம் ஆகியவற்-றைப் பேணுவதில் இந்-தியா மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதி-யில், சீனா பல மடங்கு உயரத்தில் இருந்தாலும் கூட, அங்கு ஜனநாயகம் இல்லாமை, பேச்சுச் சுதந்திரம், மத சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என எதுவுமே இல்லாததால், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்-னணி பெற்றுள்ளது என்றார்.

சமூகப் பிரிவில் இந்-தியா, அமெரிக்காவை விட முன்னுக்கு உள்ளது. அதாவது அய்ந்தாவது இடத்தைப் பிடித்துள்-ளது. அறிமுகம் இல்லாத-வர்களுக்கும் உதவும் தன்மை, இல்லாத-வர்-களுக்கு உதவுவது, தொண்-டுப் பணிகளில் அதிக அக்கறை காட்டு-வது, குடும்பத்தினர், நண்-பர்கள் என்று உறவு-முறைகளை வலுவாக வைத்துக் கொள்வது போன்றவற்றில் இந்தியா சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 6ஆவது இடத்திலும், இங்கிலாந்து 7ஆவது இடத்திலும், பின்லாந்து 8ஆவது இடத்-திலும் உள்ளன.

கல்வி, சுகாதாரத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. சுகாதா-ரத்தில் 88ஆவது இடத்-தை-யும், கல்வியில் 86ஆவது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.

நவீனமயமாக்கல், சிறு தொழில் பிரிவில் இந்-தியாவுக்கு கிடைத்திருக்-கும் தர வரிசை 55. இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் பின்-லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து.

சைப்ரஸ் சென்றிருந்த குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு அந்நாட்டு ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். உடன் சைப்ரஸ் அதிபர் டிமிட்ரிஸ் கிறிஸ்டோ பியாஸ் உள்ளார்

தஞ்சை, நாகையில் மீன்பிடி சீசன் 2,500 படகுகளில் கடலுக்கு சென்றனர்

தஞ்சை, நாகையில் மீன்பிடி சீசன் 2,500 படகுகளில் கடலுக்கு சென்றனர்

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், ஏரிப்புரக்கரை, கீழத்தோட்டம், கொள்-ளுக்-காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், மனோரா-காலனி, வள்ளவன் பட்-டினம், சோமநாதபட்டி-னம் உட்பட 37 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. 2,000 நாட்டுப்படகுகளும், 201 விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடு-பட்டுள்ளன. கடந்த வாரம் மீன் சீசன் தொடங்-கியது. வரும் பிப்ரவரி மாதம் வரை சீசன் நீடிக்கும். சீசன் தொடக்கத்திலேயே மீன்-கள், இறால்கள் அதிக-ளவில் காணப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி-யடைந்துள்ளனர். தற்-போது நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து பைபர் படகு-களும், விசைப்படகுகளும் தஞ்சை கடற்பகுதிக்கு வந்துள்ளன.

இதுகுறித்து மீனவர் முத்து பொதியன் கூறு-கையில், தஞ்சை கடற்-பகுதி-யில் மீன் சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனில் வாளை-மீன், சாளை மீன், வாவல் மீன், கற்றாலை மீன், திருக்கை மீன் மற்றும் இறால்கள் அதிகளவில் கிடைக்கும் என்றார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன். தூத்துக்குடி, ராமேஸ்-வரம், கன்னியாக்குமரி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்-கான மீனவர்கள் தங்கி-யிருந்து மீன்பிடிப்பதற்-காக நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்-கரை வந்துள்ளனர்.

கடந்த 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல-வில்லை. நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்-கியதால் கோடியக்கரை-யில் இருந்து 450 மீன-வர்கள், ஆறுகாட்டுத் துறையில் இருந்து 180 மீனவர்கள் விசைப்பட-கில் கடலுக்கு சென்றனர்.

நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது

 நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.11.2009 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊ‌தியம் ரூ.4400/- மற்றும் இலவச உணவுடன் ரூ.1000/-ற்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும். +2 ல் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ள

பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது

 ஓகஸ்டில் சனல் 4  தொலைக்காட்சி சேவை வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ பொய்யானது என அரசு கூறுகிறது. அது பொய்யானது, சித்தரிக்கப்பட்டது என்றெல்லாம் கூறும் சிறிலங்கா அரசு அதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் இவ்வாறு பொய்யென நிரூபிப்பதற்காக அரசு உண்மையான வீடியோவைப் பயன்படுத்தவில்லை. அதாவது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதைத் தாம் பதிவு செய்து அந்த வீடியோவையே பயன்படுத்தி தமது நிரூபித்தல்களைச் செய்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான் தமிழர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக இன அழிப்புக்கு எதிரான அமைப்பு அமெரிக்க நிபுணர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.  அமெரிக்க நிபுணர்கள் கொடுத்த ஆரம்பகட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன,  ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ .gp3 கோப்பாகும். ஆனால் சனல் 4 உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பயன்படுத்தியது வலை- ஒளிபரப்பு பதிவு என்னும் மாற்றப்பட்ட வடிவமாகும். அதாவது H263 (.gp3) வடிவத்திலிருந்து Flash-9, 10 இல் இயக்கக்கூடிய .avi வடிவமாக மாற்றப்பட்ட H264 வடிவத்தையே அரசு பயன்படுத்தியுள்ளது. ஒளி, ஒலி என்பவை சரியாக ஒத்திசையவில்லை என இலங்கையரசு சுட்டிக்காட்டியிருந்தது. இது இவ்வாறு வடிவம் மாற்றப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தியதால் தோன்றியது எனக் கூறுகின்றனர் அமெரிக்க நிபுணர்கள்.  ஆனால் கைத்தொலைபேசி .gp3 வீடியோ எடுக்கப்பட்டது ஜூலை 18 எனப் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஜனவரி மாதத்தில் ஒரு இராணுவ வீரரால் எடுக்கப்பட்டதென ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. இந்த திகதிச் சிக்கலைத் தீர்ப்பது பற்றியும் தாம் சிந்தித்து வருவதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு கூறியுள்ளது
 

கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்-வீடியோ இணைப்பு

 
 

கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்நாட்டிலே இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய பாவ காரியத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது. கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும். ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது. எனவே அனைத்து தரப்பினரும் தங்களது வழமையான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு எதிர்வரும் புதன்கிழமை 4ம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும். மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மாகாணசபை உறுப்பினருமான எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்

குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம்: கலைஞர்

சேமிக்கும் உணர்வை குழந்தைப் பருவம் முதலே உருவாக்கி வளர்ப்போம். குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம் என உலக சிக்கன நாள் செய்தியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில்,

பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகளில் சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு பலர் அல்லல்களுக்கு ஆளாவதை செய்தித்தாள்கள் வாயிலாக அறியும் பொழுது, நாம் வருந்த நேர்கிறது. பாடுபட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பு உணர்வோடு சேமிப்பது தானே முறை. அதற்கு தபால் நிலையங்கள், அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவை உதவும். அங்கு சேமிப்பதன் மூலம் சேமிக்கும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

சிறுகச் சிறுக சேமிக்கும் தொகை பெருந்தொகையாகி, அரசுக்கு கிடைக்கிறது. அந்த நிதி அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பயன்படுகிறது. வட்டியும், முதலும் சேர்ந்து கிடைப்பதால் சேமிப்பவர்களின் குடும்பத்தின் அவசர தேவைகளை நிறைவு செய்ய பெரிதும் உதவுகிறது. தனி மனிதரின் சேமிப்பு அவருக்கு பயன் தருவதுடன் அரசின் திட்டங்களை நடை முறைப்படுத்துவதிலும் துணை புரிகிறது.


எனவே, செலவுசெய்யும்போது சிந்திப்போம்; சிக்கனமாய் செலவுசெய்வோம். சமுதாயத்தில் சேமிக்கும் உணர்வை குழந்தைப் பருவம் முதலே உருவாக்கி வளர்ப்போம். குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம் என்று தெரிவித்துள்ளார்

Fattest Man in the world - Amazing Pictures

Fattest Man in the world - Amazing Pictures




















விண்டோஸ் 7 வெற்றியில் தமிழரின் பங்கு..

.

மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய இயங்கு மென்பொருளான விண்டோஸ் 7 (Windows 7) ஜ உலகம் பூராகவும் வெளியிட்டது தெரிந்த ஒன்றே. சற்று தோல்வி வெளியீடான விஸ்ராக்கு (Vista) பின் விண்டோஸ் 7 அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்குரிய பலனையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டுள்ளது.

இதில் நாம் பெருமைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், விண்டோஸ் 7யை உருவாக்கியதில் ஒரு தமிழ் கணிப்பொறியாளர் முக்கியப் பங்கு வகிக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 25 அதிகாரிகளில் 6 பேர் இந்தியர்களாம். சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவில் இந்த இந்தியர்கள் 6 பேருக்கும் மிக முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த சோமசேகர்என்பவர்தான் சாப்ட்வேர் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். அந்தப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் என்ற பதவியில் உள்ளார் அவர்.

சோமசேகர் தலைமையில் உலகம் முழுவதும் 4,000 பேர் பணிபுரிகிறார்கள்.
அண்மையில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சாப்ட்வேரும் இவரது தலைமையில் உருவானதுதான்.

சோமசேகர் அவர்களே, உங்கள் பணி மென் மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்....

கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 27-ம் தேதி முதல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

  மாநிலத்திலேயே மிக அதிக பட்சமாக சீர்காழியில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதர இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பெய்துள்ள மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

  பொன்னேரி 40, மயிலாடுதுறை 30, தாம்பரம், உத்திரமேரூர், பரங்கிப்பேட்டை, பாம்பன், ராமநாதபுரம், ராமேசுவரம், குன்னூர், சூளூர்பேட்டை (ஆந்திரம்) 20, மதுராந்தகம், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, தரங்கம்பாடி, நாங்குனேரி, சாத்தான்குளம், வந்தவாசி, ஆரணி, போளூர், வாழப்பாடி, திருவாடானை 10.

சென்னையில்...: சென்னையில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. நகரில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும்.

  பலத்த மழை எச்சரிக்கை: வங்கக் கடலில் தமிழகம்- இலங்கை இடையே தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுத்து வருகிறது.

  இதனால், அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும். தமிழகத்தின் உட்பகுதி மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும்.

மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது


 

கோவை, கோட்டைமேடு, சாமராவ் வீதியில் வசிப்பவர் இப்ராகிம்ஷா(35); ரெடிமேடு ஆடை விற்பனை மையம் வைத்துள்ளார். இவரது மனைவி நதீரா பானு(26). இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

 சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நதீராபானு கோபித்துக் கொண்டு, பெற்றோரிடம் சென்று விட்டார். ஜமாத்தில் நடந்த சமரசத்துக்குப் பின் நதீராபானு, மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.

 24ம் தேதி இரவு, இவர்களது குழந்தைகள் மூவரும் பாட்டி வீட்டுக்கு சென்றனர். அம்மா எங்கே இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை என கேட்டதற்கு, பதிலளித்த குழந்தைகள், அப்பா, சித்தப்பா, அத்தை மற்றும் பாட்டி ஆகியோர் அம்மாவுக்கு மொட்டை அடித்து விட்டனர். அதனால் வெளியில் வரவில்லை என சோகத்துடன் தெரிவித்தனர்.

குழந்தைகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நதிராபானுவின் பெற்றோர், உக்கடம் போலீசில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, நதீராபானுவுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த, கணவர் இப்ராகிம்ஷா, இவரது தம்பி பைரோஷ், மாமியார் சரீபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இக்கொடுமைக்கு தூபம் போட்ட நாத்தனார் ஆமினா தலைமறைவாகி விட்டார்.

அதிரை தாலுகா‍‍‍‍‍ உதயமாகவேண்டும்.

Adirampattinam New taluk -----இந்து ஆங்கில நாளிதழில் வெளியானது


Adirampattinam is the largest and fast-developing Town Panchayat in Thanjavur district. Formation of a new taluk with Adirampattnam as its headquarters is one of the long-awaiting demands of the people residing in and around the town. It may be done by bifurcating Pattukkotai Taluk. Some areas of Sethubavachatram Panchayat Union of Peravurani Taluk might also be joined to the new taluk. This will help to cater to the growing needs of the people and eventually get more amenities. Hence, the administrative authorities of the State government may consider creating a new taluk of Adirampattinam.

Pro.A. Haja Abdul Khader
KMC (CS)
Adirampattinam.

முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இருஇளைஞர்களும் இறந்தார்கள்

19-10-2009 anduru maalai சுமார் 6.00 மணியளவில் முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள்  அதிரை- முத்துப்பேட்டை ரோட்டில் பல்சர் என்னும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இருஇளைஞர்களும் இறந்தார்கள்.
முத்துப்பேட்டை குண்டான்குளத்தெரு புரோஸ்கான்(28),ஆஸாத்நகர் மரைக்கான்(22).
இருசக்கர வாகனத்தில் சென்றால் நமது இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.அன்பான நண்பர்களே..எனது வாசகர்களே...நமது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள்,பிள்ளைகள்,நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தயவுசெய்து மெதுவாக செல்ல சொல்லி அன்புடன் எச்சரிக்கை செய்யுங்கள்.ஏனென்றால் இன்றைய விபத்தில் ஒரு சகோதரரின் உடல் ஊறுப்புகள் தனித்தனியாக அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தது .


Photobucket Photobucket Photobucket

navas Kahan <navas_nsn@yahoo.co.in

தஞ்சாவூர் மாவட்டத்தில் 31 ஆயிரம் ரேஷன் கார்டுகள் போலியானவை

தஞ்சாவூர் கலெக்டர் சண்முகம் கூறியதாவது:இம்மாவட்டத்தில் ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 484 ரேஷன் கார்டுகள், ஆயிரத்து 79 ரேஷன் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் வரை நடந்த ரேஷன் கார்டு சரி பார்ப்பு பணியில் 31 ஆயிரம் ரேஷன் கார்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டு, அவற்றுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கார்டுகளில் எவரேனும் வெளியூர் சென்று இருத்தல், சோதனைக்கு வந்தபோது வீட்டில் ஆட்கள் இல்லாமல் இருத்தல் போன்ற நியாயமான காரணங்களால் ரேஷன் கார்டு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். ரேஷன்கார்டில் உள்ள முகவரியில் அவர்கள் குடியிருப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்து அந்த கார்டுகளுக்கு மீண்டும் பொருட்கள் வழங்க அனுமதி வழங்குவார்கள்.மற்ற போலி கார்டுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். இப்பணி இன்னும் ஓரிரு நாளில் 100 சதவீதம் நிறைவடையும். அதன்பின், மாவட்ட அளவில் எவ்வளவு போலி ரேஷன் கார்டுகள் உள்ளன என்ற விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு எம்.எல்.ஏ.ரெங்கராஜன் தகவல்.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு எம்.எல்.ஏ.ரெங்கராஜன் தகவல்.
காந்தி நகர் கடற்கரை சாலைக்கு மின்விளக்கு அமைக்க 2 லட்சம்,மாரியம்மன் கோயில் தெரு 5 வது வார்டில் பொது வினியோகம் கட்டிடம் அமைக்க 2.80 லட்சம்,மேலத்தெரு சவுக்கு கொல்லை பகுதியில் தார்சாலை அமைக்க 1.75 லட்சம்,ஹாஜா நகர் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க 2 லட்ச ரூபாயும்,புதுத்தெரு வடபுறம் தார்சாலை அமைக்க 1.50 லட்சம் மொத்தம் 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ,என்.ஆர்.ரெங்கராஜன் ஒதுக்கீடு செய்துள்ளார்.எம்.எல்.ஏ அவர்களுக்கு பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர்,வார்டு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

30 Daily RamadanPrayers



RAMADAN KAREEM! - Below are 30 Daily Ramadan Prayers (duas), reposted from 2007. Inshallah, they will make the fast easier, enlighten the mind, and ennoble the heart in this blessed month.
Ramadan Dua: DAY 1
ALLAH, on this day make my fasts the fasts of those who fast (sincerely), and my standing up in prayer of those who stand up in prayer (obediently), awaken me in it from the sleep of the heedless, and forgive me my sins , O God of the worlds, and forgive me, O one who forgives the sinners.
Ramadan Dua: DAY 2
ALLAH, on this day, take me closer towards Your pleasure, keep me away from Your anger and punishment, grant me the opportunity to recite Your verses (of the Qur’an), by Your mercy, O the most Merciful.
Ramadan Dua: DAY 3
ALLAH, on this day, grant me wisdom and awareness, keep me away from foolishness and pretension, grant me a share in every blessing You send down, by You generosity, O the most Generous.
Ramadan Dua: DAY 4
ALLAH, on this day, strengthen me in carrying out Your commands, let me taste the sweetness of Your remembrance, grant me, through Your graciousness, that I give thanks to You. Protect me, with Your protection and cover, O the most discerning of those who see.
Ramadan Dua: DAY 5
ALLAH, on this day, place me among those who seek forgiveness. Place me among Your righteous and obedient servants, and place me among Your close friends, by Your kindness, O the most Merciful.
Ramadan Dua: DAY 6
ALLAH, on this day, do not let me abase myself by incurring Your disobedience, and do not strike me with the whip of Your punishment, keep me away from the causes of Your anger, by and Your power, O the ultimate wish of those who desire.
Ramadan Dua: DAY 7
ALLAH, on this day, help me with its fasts and prayers, and keep me away from mistakes and sins of the day, grant me that I remember You continuously through the day, by Your assistance, O the Guide of those who stray.
Ramadan Dua: DAY 8
ALLAH, on this day, let me have mercy on the orphans, and feed [the hungry], and spread peace, and keep company with the noble-minded, O the shelter of the hopeful.
Ramadan Dua: DAY 9
ALLAH, on this day, grant me a share from Your mercy which is wide, guide me towards Your shining proofs, lead me to Your all encompassing pleasure, by Your love, O the hope of the desirous.
Ramadan Dua: DAY 10
ALLAH, on this day, make me, among those who rely on You, from those who You consider successful, and place me among those who are near to you, by Your favor, O goal of the seekers.
Ramadan Dua: DAY 11
ALLAH, on this day, make me love goodness, and dislike corruption and disobedience, bar me from anger and the fire, by Your help, O the helper of those who seek help
Ramadan Dua: DAY 12
ALLAH, on this day, beautify me with covering and chastity, cover me with the clothes of contentment and chastity, let me adhere to justice and fairness, and keep me safe from all that I fear, by Your protection, O the protector of the frightened.
Ramadan Dua: DAY 13
ALLAH, on this day, purify me from un-cleanliness and dirt, make me patient over events that are decreed, grant me the ability to be pious, and keep company with the good, by Your help, O the beloved of the destitute.
Ramadan Dua: DAY 14
ALLAH, on this day, do not condemn me for slips, make me decrease mistakes and errors, do not make me a target for afflictions and troubles, by Your honor, O the honor of the Muslims.
Ramadan Dua: DAY 15
O Allah, on this day, grant me the obedience of the humble, expand my chest through the repentance of the humble, by Your security, O the shelter of the fearful.
Ramadan Dua: DAY 16
ALLAH, on this day, grant me compatibility with the good, keep me away from patching up with the evil, lead me in it, by Your mercy, to the permanent abode, by Your Godship, O the God of the worlds.
Ramadan Dua: DAY 17
ALLAH, on this day, guide me towards righteous actions, fulfill my needs and hopes, O One who does not need explanations nor questions, O One who knows what is in the chests of the (people of the) world. Bless Muhammad and his family, the Pure.
Ramadan Dua: DAY 18
ALLAH, on this day, make me love goodness, and dislike corruption and disobedience, bar me from anger and the fire [of Hell], by Your help, O the helper of those who seek help.
Ramadan Dua: DAY 19
ALLAH, on this day, multiply for me its blessings, and ease my path towards its bounties, do not deprive me of the acceptance of its good deeds, O the Guide towards the clear truth.
Ramadan Dua: DAY 20
ALLAH, on this day, open for me the doors of the heavens, and lock the doors of Hell from me, help me to recite the Qur’an, O the One who sends down tranquility into the hearts of believers.
Ramadan Dua: DAY 21
ALLAH, on this day, show me the way to win Your pleasure, do not let Shaytan have a means over me, make Paradise an abode and a resting place for me, O the One who fulfills the requests of the needy.
Ramadan Dua: DAY 22
ALLAH, on this day, open for me the doors of Your Grace, send down on me its blessings, help me towards the causes of Your mercy, and give me a place in the comforts of Paradise, O the one who answers the call of the distressed.
Ramadan Dua: DAY 23
ALLAH, on this day, wash away my sins, purify me from all flaws, examine my heart with (for) the piety of the hearts, O One who overlooks the shortcomings of the sinners.
Ramadan Dua: DAY 24
ALLAH, on this day, I ask You for what pleases You, and I seek refuge in You from what displeases You, I ask You to grant me the opportunity to obey You and not disobey You, O One who is generous with those who ask
Ramadan Dua: DAY 25
ALLAH, on this day, make me among those who love Your friends, and hate Your enemies, following the way of Your last Prophet, O the Guardian of the hearts of the Prophets.
Ramadan Dua: DAY 26
ALLAH, on this day, make my efforts worthy of appreciation, and my sins forgiven, my deeds accepted, my flaws concealed, O the best of those who hear.
Ramadan Dua: DAY 27
ALLAH, on this day, bestow on me the blessings of Laylatul Qadr, change my affairs from (being) difficult to (being) easy, accept my apologies, and decrease for me [my] sins and burdens, O the Compassionate with His righteous servants.
Ramadan Dua: DAY 28
ALLAH, on this day, grant me a share in its nawafil (recommended prayers), honor me by attending to my problems, make closer the means to approach You, from all the means, O One who is not preoccupied by the requests of the beseechers.
Ramadan Dua: DAY 29
O ALLAH, on this day, cover me with Your mercy, grant me in it success and protection, purify my heart from the darkness of false accusations, O the Merciful to His believing servants.
Ramadan Dua: DAY 30
O ALLAH, on this day, make my fasts worthy of appreciation and acceptance, according to what pleases You, and pleases the Messenger, the branches being strengthened by the roots, for the sake of our leader, Muhammad, and his purified family. Praise be to ALLAH, the Lord of the worlds.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
Regards,
 
AL YAHYA
East Street
Adirampattinam
Thanjure Dist