ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 ![]() | 帮助 |
Khan Brothers.Adirampattinamகான் பிரதர்ஸ். அதிராம்பட்டினம். |
|||||||||
|
|
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்காக 5 ஆண்டு முதுநிலை படிப்பு: பாரதியார் பல்கலைக்கழகம் திட்டம்ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலான 5 ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 5 ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. விஜயகாந்தின் கேப்டன் டி.வி.விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
நுகர்வோர் சேவை மையம் தொடக்கம்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தொலைபேசி, இ.மெயில் மூலம் புகார் தெரிவிக்க "நுகர்வோர் சேவை மையம்' தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
இணையதள வணிகம், பரிசுத் திட்டங்கள், கலப்படம், எடைக் குறைவு, அதிகமான விலை, காலாவதியான பொருள்கள், பொய்யான விளம்பரங்கள் என்று பல்வேறு பிரச்னைகளை வெளிச்சந்தையில் நுகர்வோர்கள் இப்போது சந்தித்து வருகின்றனர்.
எனவே வாங்கும் பொருளுக்கு ஐ.எஸ்.ஐ., அக்மார்க், எப்.பி.ஒ. போன்ற தர முத்திரைகள் உள்ளதா என்று நுகர்வோர்கள் சரிபார்க்க வேண்டும்.
பொருள்கள் அடங்கிய பொட்டலத்தின் மீது அதிகபட்ச சில்லறை விலை, தயாரிப்பாளர் விவரம், காலாவதி தேதி ஆகியவை இல்லாத பொருள்களை தவிர்க்க வேண்டும்.
பொருள்கள் வாங்கிய பிறகு தரப்படும் ரசீதில் விற்பனையாளர் முகவரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி, பதிவு எண் ஆகியவை உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும்.
ரேஷன் கடை பிரச்னைகள்: ரேஷன் கடை குறித்த நேரத்தில் இயங்காதது, எடைக் குறைவு, அனைத்துப் பொருள்களும் கிடைக்காதது, குடும்ப அட்டை புதிதாக பெறுவது, விலாசம் மாற்றுவது போன்ற பிரச்னைகள் குறித்தும் இம்மையத்தில் புகார் தெரிவிக்கலாம். ஆலோசனை பெறலாம்.
044 -2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும், ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ்ஃற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இ.மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.
கடிதம் மூலம் புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி:
மாநில நுகர்வோர் சேவை மையம், ஆணையாளர் அலுவலகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை. எழிலகம் 4-வது தளம், சேப்பாக்கம், சென்னை -5. அறிவாற்றல் உள்ள மாணவர்கள் படிக்காவிட்டால் சமுதாயத்துக்கு இழப்பு: டி. கே. எஸ். இளங்கோவன் நல்ல மதிப்பெண் பெற்று அறிவாற்றலோடு உள்ள மாணவர்கள் படிக்காவிட்டால் சமுதாயத்துக்குதான் இழப்பு என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டி. கே. எஸ். இளங்கோவன்.
வெளிச்சம் அமைப்பின் சார்பில் மாணவர்களின் சமூக மற்றும் உளவியல் குறித்த மாநில அளவிலான பிரசார பயணத் தொடக்க விழா சென்னை லயோலா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி. கே. எஸ். இளங்கோவன் பேசியது:
சமுதாயத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. நம்மை உருவாக்கிய சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற கடமைதான் அது.
எனவே வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு கல்வியை அளிக்க அனைவரும் முன் வர வேண்டும் என்றார் இளங்கோவன்.
வெளிச்சம் அமைப்பானது முதல் தலைமுறை ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் படிப்புக்குத் தேவையான நிதியுதவியைத் திரட்டிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.
தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தின் மூலம் வெளிச்சம் அமைப்பைச் சார்ந்த ஆறு மாணவர்கள், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் படிக்க முடியாமல் உள்ள முதல் தலைமுறை மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் படிப்புக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் உதவி கோர உள்ளனர் என்றார் அமைப்பின் நிறுவனர் ஷெரீன். இளம் மாணவர்களின் மனதில் பொதுவாக எழும் சந்தேகங்கள் குறித்த கேள்வி, பதில் அடங்கிய கையேடும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சிவசங்கர், திரைப்பட இயக்குநர் எஸ். பி. ஜனநாதன், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உலக வலு தூக்கும் போட்டி: தஞ்சாவூர் பிஎஸ்என்எல் ஊழியர் சிறப்பிடம்தில்லியில் நவம்பர் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்ற 2009-ம் ஆண்டிற்கான
39-வது உலக வலு தூக்கும் போட்டியில் தஞ்சாவூர் பிஎஸ்என்எல் விளையாட்டுப் பிரிவு உதவியாளரும்,
மன்னார்குடி பிஎஸ்என்எல் ஊழியருமான எஸ். விமல்ராஜா, 60 கிலோ எடை பிரிவில் ஸ்குவாட்
முறையில் நடைபெற்ற போட்டியில் 260 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாம்
இடத்தையும், ஒட்டுமொத்த தரவரிசையில் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளார். அகில உலக வலு தூக்கும்
சம்மேளனம், இவருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது
|
உங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்
|
|||||||
|
|